Introduction-to-Computers/C2/Compose-Options-for-Email/Tamil
From Script | Spoken-Tutorial
| Time | Narration |
| 00:01 | மின்னஞ்சல் எழுதுவது குறித்த ஸ்போக்கன் டுட்டோரியலுக்கு நல்வரவு |
| 00:07 | இதில் நாம் கற்கப்போவது |
| 00:10 | மின்னஞ்சல் பெறுநர்களான To, Cc, Bcc |
| 00:16 | உரைகளை வடிவமைத்தல் |
| 00:19 | File'களை இணைத்தல் |
| 00:22 | File'களை Google Drive வழியாக பகிர்தல் |
| 00:25 | புகைப்படம் அல்லது இணைய தொடுப்பை இணைத்தல் |
| 00:29 | மேலும் Compose window’ல் உள்ள தேர்வுகள் |
| 00:33 | இதைக் கற்க நமக்கு இணைய இணைப்பு |
| 00:38 | மற்றும் Web browser தேவை |
| 00:40 | பயிற்சிக்காக நான் Firefox’ஐ பயன்படுத்துகிறேன் |
| 00:46 | பயிற்சியை துவங்கலாம். Web browser'ஐ திறந்து, gmail.com என உள்ளிடவும் |
| 00:55 | login பக்கம் திறக்கப்படுகிறது |
| 00:58 | username மற்றும் password’ஐ அதற்கான பெட்டிகளில் உள்ளிடவும் |
| 01:04 | login பக்கம் தங்கள் username உடன் திறக்கப்பட்டிருந்தால், இந்த கணினியில் நீங்கள் முன்னதாக இந்த பக்கத்தை அணுகியுள்ளீர்கள் |
| 01:12 | password ஐ உள்ளிடுவோம் |
| 01:15 | பின் Sign in button மீது click செய்யவும் |
| 01:18 | நாம் gmail பக்கத்தில் உள்ளோம் |
| 01:21 | மின்னஞ்சல் எழுத உதவும் தேர்வுகளை பற்றி காணலாம் |
| 01:26 | முதலில் Compose button மீது click செய்யவும் |
| 01:31 | Compose window திறக்கப்படுகிறது |
| 01:34 | To பகுதி பெறுநரின் முகவரியிட |
| 01:38 | இதில் மூன்று தேர்வுகள் உள்ளன To, Cc, Bcc |
| 01:44 | Cc என்பது Carbon copy மற்றும் Bcc என்பது Blind carbon copy’ஐ குறிக்கும் |
| 01:51 | நாம் யாருக்கு மின்னஞ்சல் அனுப்ப உள்ளோமோ அவரின் முகவரியை To'வில் உள்ளிட வேண்டும் |
| 01:58 | இதோ உதாரணம் |
| 02:01 | ஒன்றிற்கும் மேற்பட்டோருக்கு அனுப்ப வேண்டுமா அதையும் To'வில் உள்ளிட வேண்டும் |
| 02:09 | இதோ உதாரணம் |
| 02:12 | Cc என்பது பிறருக்கு இந்த மின்னஞ்சலின் பிரதியை அனுப்புவதற்கு |
| 02:18 | To மற்றும் Cc'ல் உள்ளிடப்பட்ட பெறுநர்கள் பிற பெறுநரின் முகவரிகளை காணலாம். |
| 02:25 | இதோ உதாரணம் |
| 02:28 | Bcc மூலம் பிரதியை மறைமுகமாக பிறருக்கு அனுப்பலாம் |
| 02:34 | "இதன் மூலம் To, Cc'ல் உள்ள பெறுநர்கள் Bcc'ல் உள்ள பெறுநர்களை காண இயலாது" |
| 02:42 | "Bcc'ல் இருப்பவர்கள் To, Cc'ல் உள்ள பெறுநர்களை காணலாம்" |
| 02:47 | ஆனால் Bcc'ல் உள்ள பிற பெறுநர்களை காண இயலாது |
| 02:51 | அனுப்புநர் அனைத்து பெறுநர்களையும் காணலாம் |
| 02:55 | இதோ உதாரணம் |
| 02:58 | முக்கியக் குறிப்பு |
| 03:00 | "To, Cc, Bcc'ல் எத்தனை பெறுநர்கள் வேண்டுமானாலும் சேர்க்கலாம்" |
| 03:08 | ஆனால் நாள் ஒன்றுக்கு அதிக பட்சமாக 500 நபர்களுக்கு மட்டுமே அனுப்ப இயலும் |
| 03:13 | ஒவ்வொரு முகவரிக்கு இடையிலும் Comma, Colon அல்லது Space இருக்கவேண்டும் |
| 03:20 | Gmail Compose window'விற்குச் செல்வோம் |
| 03:25 | முன்னிருப்பாக Cursor, To'வில் இருக்கும் |
| 03:29 | பெறுநரின் முகவரியை உள்ளிடலாம் |
| 03:33 | To'வில் ray.becky.0808@gmail.com என்ற மின்னஞ்சலை தரலாம் |
| 03:46 | Cc'ல் 0808iambecky@gmail.com |
| 03:55 | Bcc'ல் stlibreoffice@gmail.com மற்றும் info@spoken-tutorial.org |
| 04:10 | Subject மீது click செய்து, மின்னஞ்சலின் விவரத்தைச் சுருக்கமாக உள்ளிடவும் |
| 04:15 | நான் Partner with us என உள்ளிடுகிறேன் |
| 04:19 | Content பகுதியில், நமது செய்தியை உள்ளிடலாம் |
| 04:24 | Spoken Tutorial Project is helping to bridge the digital divide |
| 04:29 | gmail நமது செய்தியை வடிவமைக்க சில வசதிகளைக் கொண்டுள்ளது |
| 04:35 | அவை Compose window'வின் கீழ்ப் புறத்தில் உள்ளது |
| 04:41 | இல்லை எனில், formatting toolbarஐ அணுக Formatting options மீது click செய்யவும் |
| 04:47 | இங்கே fonts,sizes, bold, italic, underline, text color,align, numbered and bulleted lists மற்றும் indentation போன்ற தேர்வுகள் உள்ளன |
| 05:03 | இந்த தேர்வுகள் ஒரு word processor applicationல் உள்ளவை போன்றதே |
| 05:08 | இவைகளை நீங்களே கற்று தெரிந்துகொள்ளுங்கள் |
| 05:12 | நான் எனது செய்தியை இப்படி வடிவமைத்துள்ளேன் |
| 05:16 | Formatting toolbar'ஐ மறைக்க formatting options மீது click செய்யவும் |
| 05:22 | Compose window'வில் files, photos, links மற்றும் emoticonsஐ இணைக்க சில தேர்வுகளும் உள்ளன |
| 05:32 | பிறருக்கு documentகள் மற்றும் file'களை பகிர |
| 05:35 | நாம் Attach files அல்லது Insert files using Drive'ஐ பயன்படுத்தலாம் |
| 05:41 | அனைத்து மின்னஞ்சல் நிறுவனங்களும் இந்த வசதியை வழங்குகின்றனர் |
| 05:46 | நாம் 25mb அளவு வரை இணைப்புகளை அனுப்பலாம் |
| 05:51 | அதற்கு மேல் அளவு உள்ளவற்றை Insert files using Drive மூலம் அனுப்பலாம் |
| 05:59 | 1mb'க்கு குறைவான ஒரு 'pdf file'ஐ இணைப்போம் |
| 06:04 | paper clip போன்றுள்ள Attach file மீது click செய்யவும் |
| 06:09 | இது file browser'ஐ திறக்கிறது |
| 06:12 | இணைக்க விரும்பும் fileஐ தேர்ந்தெடுக்கவும் |
| 06:16 | Desktop'ல் உள்ள myscript.pdf'ஐ தேர்ந்தெடுத்து, Open மீது click செய்யவும் |
| 06:23 | நமது file இணைக்கப்படுவதைக் காணலாம் |
| 06:27 | Attach file மூலம் பல file'களையும் இணைக்கலாம் |
| 06:34 | ஒரு இணைக்கப்பட்ட file'ஐ நீக்க, அருகில் உள்ள பெருக்கல் குறி மீது click செய்யவும் |
| 06:41 | இப்பொழுது 30mb அளவு உள்ள ஒரு file ஐ இணைக்கலாம் |
| 06:46 | என்னிடம் 30mb அளவு கொண்ட ஒரு zip file, Desktop'ல் உள்ளது |
| 06:52 | மீண்டும் ஒரு முறை Attach file'ஐ click செய்யவும் |
| 06:56 | 30mb zip file'ஐ தேர்ந்தெடுத்து Open மீது click செய்யவும் |
| 07:02 | ஒரு செய்தி தோன்றுகிறது |
| 07:04 | The file you are trying to send exceeds the 25mb attachment limit |
| 07:09 | மேலும் Send using Google drive என்ற வசதியையும் அளிக்கிறது |
| 07:14 | Send using Google drive மீது click செய்யவும் |
| 07:18 | தற்போதைக்கு இதை மூடுகிறேன் |
| 07:21 | Insert files using Drive மீது click செய்யவும், தற்போது கண்ட அதே window'வை காணலாம் |
| 07:28 | இதில் மூன்று Tab'கள் உள்ளன |
| 07:31 | My Drive, Shared with me மற்றும் Upload |
| 07:36 | முன்னிருப்பாக ஏற்கனவே பதிவேற்றிய file'கள் My Drive'ன் கீழ் இருக்கும் |
| 07:43 | இதோ ஒரு file உள்ளது |
| 07:46 | இது Google Team'ஆல் கணக்கு உருவாக்கும் போது நம்முடன் பகிரப்பட்டது |
| 07:51 | Shared with me மீது click செய்யவும் |
| 07:55 | No one’s shared any files with you yet என்ற செய்தியைக் காணலாம் |
| 08:00 | "யாராவது நமக்கு கோப்பை பகிர்ந்தால், அது Shared with me'ல் இடம் பெற்றிருக்கும்" |
| 08:06 | இப்பொழுது Upload'ன் மீது click செய்து, ஒரு புதிய file ஐ பதிவேற்றலாம் |
| 08:12 | Select files from your computer மீது click செய்யவும் |
| 08:16 | பதிவேற்ற வேண்டிய fileஐ கணினியில் தேர்ந்தெடுத்து Open மீது click செய்யவும் |
| 08:23 | பல file'களை பதிவேற்ற Add more files மீது click செய்யவும் |
| 08:27 | தற்போதைக்கு இதைத் தவிர்த்து ஒரு fileஐ பதிவேற்றுகிறேன் |
| 08:33 | fileஐ பதிவேற்றியபின் மின்னஞ்சலுடன் எப்படி இணைக்க வேண்டும் என குறிப்பிடவும் |
| 08:40 | கீழ் வலது புறத்தில் இரண்டு buttonகள் உள்ளத்தை கவனிக்கவும் |
| 08:44 | Insert as Drive link மற்றும் |
| 08:46 | Attachment |
| 08:48 | முன்னிருப்பாக Insert as Drive link தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் |
| 08:52 | Attachment'ஐ தேர்ந்தெடுத்தால், file ஒரு attachment ஆக சேர்க்கப்படும் |
| 08:57 | இதை இப்படியே விட்டுவிடலாம் |
| 09:00 | கீழ் இடது புறத்தில் உள்ள Upload button மீது click செய்யவும் |
| 09:05 | இது பதிவேற்ற துவங்குகிறது, இணைய வேகத்திற்கு ஏற்ப சற்றே தாமதமாகலாம் |
| 09:11 | முடிந்தபின் Content area'வில் அந்த fileன் தொடுப்பைக் காணலாம் |
| 09:17 | மின்னஞ்சலுடன் imagesஐ இணைக்க Insert Photo மீது click செய்யவும் |
| 09:24 | Upload photos window திறக்கப்படுகிறது |
| 09:27 | நம் கணினியில் உள்ள புகைப்படம் அல்லது imageன் website addressஐ இங்கு தரலாம் |
| 09:34 | தற்போதைக்கு புகைப்படத்தை இணைக்க விரும்பவில்லை |
| 09:38 | எனவே Cancel மீது click செய்கிறேன் |
| 09:41 | இதை நீங்களே கற்று தெரிந்துகொள்ளுங்கள் |
| 09:44 | அடுத்து Insert Link மீது click செய்யவும் |
| 09:49 | Edit Link dialog box திறக்கிறது |
| 09:53 | Text to display'வில் தொடுப்பாக மாற்றவேண்டிய உரையை உள்ளிடவும் |
| 09:58 | நான் Spoken Tutorial என உள்ளிடுகிறேன் |
| 10:02 | Link to பிரிவில் முன்னிருப்பாக இணைய முகவரி தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் |
| 10:08 | text field'ல் http://spoken-tutorial.org என்ற முகவரியை உள்ளிடவும் |
| 10:20 | பின் OK மீது click செய்யவும் |
| 10:23 | Content area'வில் Spoken Tutorial என்ற உரை தொடுப்பாக மாறியதைக் காணலாம் |
| 10:29 | அதன் மீது click செய்கிறேன் |
| 10:32 | அதன் கீழ் ஒரு சிறிய pop window திறக்கப்படுகிறது |
| 10:35 | அது Go to link என சொல்கிறது |
| 10:38 | அந்த முகவரியை click செய்ய, அது நம்மை Spoken Tutorial இணையத்தின் Homepageக்கு கொண்டு செல்கிறது |
| 10:45 | இந்த முகவரியை மாற்ற அல்லது நீக்க Change அல்லது Remove தேர்வுகள் மீது click செய்யவும் |
| 10:53 | மேலும் emoticon உதவியுடன் உணர்ச்சிகளை குறிக்கும் புகைப்படங்களையும் இணைக்கலாம் |
| 10:59 | தேவைப்பட்டால் மட்டும் இந்த வசதியை பயன்படுத்தவும் |
| 11:04 | கவனித்தால் Trash அருகில் Saved என்ற உரையைக் காணலாம் |
| 11:08 | ஒவ்வொரு முறை நாம் உள்ளடக்கத்தை சேர்க்கும் போதோ அல்லது நீக்கும் போதோ நமது மின்னஞ்சல் தானாகவே Drafts folder'ல் சேமிக்கப்படும் |
| 11:16 | இணையமோ அல்லது மின்சாரமோ துண்டிக்கப்பட்டால், நாம் செய்தியை திரும்பப் பெற நமக்கு இது உதவுகிறது |
| 11:24 | இந்த செய்தியை நீக்க Trash மீது click செய்யவும் |
| 11:28 | இது இந்த மின்னஞ்சலை Drafts folder'ல் இருந்து நீக்கிவிடும் |
| 11:34 | Trash அருகில் உள்ள More options மீது click செய்யவும் |
| 11:39 | Default to full-screen வசதி Compose window'வை பெரியதாக்க உதவும் |
| 11:44 | Label இதைப் பற்றி பின் வரும் ட்யூடோரியலில் காணலாம் |
| 11:49 | Plain text mode இது உரையின் வடிவமைப்புகளை நீக்கி சாதாரண உரையாக மாற்ற உதவுகிறது |
| 11:57 | Print தேர்வு நாம் எழுதிய மின்னஞ்சலை அச்சிட உதவுகிறது |
| 12:03 | Check Spelling நமது செய்தியில் உள்ள எழுத்துப் பிழைகளை சரி செய்ய |
| 12:07 | மின்னஞ்சல் அனுப்ப தயாராகிவிட்டது |
| 12:09 | Send மீது click செய்யவும் |
| 12:12 | திரையில் ஒரு செய்தி தோன்றும் |
| 12:15 | This Drive file isn't shared with all recipients. |
| 12:19 | ஏனென்றால் நாம் அந்த கோப்பை இந்த மின்னஞ்சல் பெறுநர்களுக்கு இன்னும் பகிரவில்லை |
| 12:25 | Share & Send மீது click செய்யவும் |
| 12:29 | திரையில் இந்த இரண்டு செய்தியில் ஒன்றைக் காணலாம் |
| 12:32 | sending அல்லது |
| 12:34 | Your message has been sent |
| 12:38 | அனுப்பிய மின்னஞ்சலை பார்க்க View message என்ற தொடுப்பை click செய்யவும் |
| 12:43 | மின்னஞ்சலின் உள்ளடக்கத்தை இங்கு காணலாம் |
| 12:47 | ஒவ்வொன்றாக சரிபார்க்கலாம் |
| 12:50 | இதோ attachments |
| 12:52 | மற்றும் URL link. |
| 12:55 | மின்னஞ்சல் முகவரியின் கீழே ஒரு தலை கீழ் முக்கோணத்தைக் காணலாம் |
| 13:00 | அதை click செய்கிறேன் |
| 13:03 | "நாம் பெறுநர்களான To, Cc, Bcc'ன் முகவரிகளைக் காணலாம்" |
| 13:11 | பெறுநர்களுக்கு எப்படி மின்னஞ்சல் தெரிகிறது என பார்க்கலாம் |
| 13:16 | இது Cc'ல் உள்ள ஒரு பெறுநரின் mail-id |
| 13:21 | நாம் அனுப்பிய செய்தியை இங்கு காணலாம். அதை திறக்கிறேன் |
| 13:27 | Show Details மீது click செய்யவும் |
| 13:29 | இது Bcc'ஐ தவிர்த்து, To மற்றும் Cc பெறுநர்களைக் காட்டுகிறது |
| 13:35 | இது bCC பெறுநரின் mail-id |
| 13:41 | இதோ நமது செய்தி |
| 13:43 | அதை திறக்கிறேன் |
| 13:46 | Show Details மீது click செய்யவும் |
| 13:49 | இங்கு To, Cc மற்றும் Bcc பெறுநர்களைக் காணலாம் |
| 13:55 | அனுப்புநரின் மின்னஞ்சல் கணக்கிற்கு வருவோம் |
| 13:59 | இங்கே கவனித்தால் Bcc'ல் இரண்டு பெறுநர்கள் உள்ளன |
| 14:04 | ஆனால், இதில் ஒன்றை மட்டுமே காண இயல்கிறது |
| 14:10 | Bcc'ன் செயல்பாடு இது தான் |
| 14:13 | வேற்றுமையை நன்கு புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன் |
| 14:17 | இந்த ட்யூடோரியல்'ன் முடிவிற்கு வந்து விட்டோம் |
| 14:22 | இதில் நாம் கற்றது |
| 14:25 | மின்னஞ்சல் பெறுநர்களான To, Cc, Bcc |
| 14:30 | மின்னஞ்சலின் உரையை வடிவமைப்பது |
| 14:33 | மின்னஞ்சலுடன் file'களை இணைப்பது |
| 14:36 | file'களை Google Drive வழியாக பகிர்வது |
| 14:39 | புகைப்படம் அல்லது இணைய தொடுப்பை இணைப்பது |
| 14:43 | மேலும் Compose window'ன் தேர்வுகள் |
| 14:47 | இந்த இணையதளத்தில் உள்ள வீடியோ, Spoken Tutorial projectஐ எடுத்துரைக்கிறது. |
| 14:52 | இதை தரவிறக்கம் செய்து பார்க்கவும் |
| 14:55 | நாங்கள் பயிற்சிகள் நடத்தி தேர்வில், தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்குகின்றோம் |
| 15:01 | மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும் |
| 15:04 | ஸ்போகன் டுட்டோரியலிற்கு ஆதரவு NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது |
| 15:11 | மேற்கொண்டு விவரங்கள் இந்த இணையதள முகவரியில் உள்ளது |
| 15:16 | உங்களிடம் இருந்து விடை பெறுவது பிரவின் ஐஐடி மும்பையிலிருந்து நன்றி. |