Inkscape/C2/Layers-and-Boolean-operations/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Inkscapeல் “Layerகள் மற்றும் boolean செயல்பாடுகள்” குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் கற்க போவது Layerகள் |
00:11 | Filterகள், Boolean செயல்பாடுகள். |
00:15 | இந்த டுடோரியலுக்காக நான் பயன்படுத்துவது |
00:18 | Ubuntu Linux 12.04 |
00:21 | Inkscape பதிப்பு 0.48.4 |
00:25 | Inkscapeஐ திறக்கலாம். Dash home க்கு சென்று Inkscape என டைப் செய்க. |
00:30 | Inkscape logo ல் க்ளிக் செய்க. |
00:32 | நாம் ஏற்கனவே உருவாக்கிய Assignment_2.svg file ஐ திறப்போம். |
00:38 | அதை documents folderல் சேமித்துள்ளேன். |
00:41 | முதலில், Inkscapeல் Layerகள் பற்றி அறிவோம் |
00:45 | 'Layer menu க்கு சென்று Layers option'ல் க்ளிக் செய்க |
00:50 | இப்போது interfaceன் இடப்பக்கம் Layer palette திறக்கிறது. |
00:55 | முன்னிருப்பாக அங்கு ஒரு layer உள்ளது. அதன் பெயர் Layer 1 என காணலாம். |
01:01 | ஒரு புது layerஐ சேர்க்கவோ உருவாக்கவோ, Layer paletteல் கூட்டல் icon ஐ க்ளிக் செய்க. |
01:07 | Add layer என்ற ஒரு dialog box திறக்கிறது. |
01:10 | Layer name text boxல், layerக்கு ஒரு பெயரைக் கொடுக்கலாம். |
01:15 | இந்த layerஐ நான் eye என்கிறேன் |
01:18 | இப்போது, Position drop down listஐ க்ளிக் செய்து layer ன் இடத்தை நிர்ணயிக்கலாம். |
01:25 | இங்கே 3 தேர்வுகள் உள்ளன. |
01:27 | Above current இந்த layer ஐ நடப்பு layerன் மேலே வைக்கும். |
01:32 | Below current இந்த layer ஐ நடப்பு layerக்கு கீழே வைக்கும். |
01:36 | As sublayer of current என்பது நடப்பு layerன் ஒரு பகுதியாக இது இருக்கும் என்கிறது. |
01:41 | இதை Above current என வைத்து Add button என க்ளிக் செய்கிறேன். |
01:47 | eye என்ற ஒரு புது layer இப்போது Layer palette ல் தெரிவதைக் காண்க |
01:52 | இதேபோல, bow என்ற மற்றொரு layer ஐயும் உருவாக்கவும் |
02:00 | இப்போது Layer paletteல் 3 layerகள் உள்ளன |
02:04 | அடுத்து, layerன் பெயரை மாற்றக் கற்போம் |
02:08 | முதலில் Layer 1ஐ டபுள் க்ளிக் செய்து பின் அதன் பெயரை circle என மாற்றி Enterஐ அழுத்துக |
02:16 | நம் canvasக்கு மீண்டும் வருவோம். இரு கண்கள் மற்றும் ஒரு சுழல் முடிச்சு உள்ளன. |
02:20 | இந்த வடிவங்களை நாம் உருவாக்கிய இரு வெவ்வேறு layerகளுக்கு நகர்த்துவோம். |
02:25 | mouseஐ இழுத்து இரு கண்களையும் தேர்ந்தெடுப்போம். |
02:28 | இப்போது Ctrl + X ஐ அழுத்தவும். கண்கள் மறைந்துவிட்டன. |
02:34 | Layer Paletteல் இப்போது eye layerஐ க்ளிக் செய்க |
02:38 | canvas க்கு வந்து Ctrl + Alt + Vஐ அழுத்துக |
02:44 | இதே செயலை சுழல்முடிச்சு வடிவத்திற்கும் செய்யவும். |
02:52 | objectகளை தேர்வு நீக்க canvas ன் காலி இடத்தில் எங்கேனும் க்ளிக் செய்க. |
03:00 | layerகளை மறைக்கவும் பூட்டவும் eye மற்றும் lock iconகள் உதவுகின்றன. |
03:04 | ஒரு layerஐ மறைக்கும்போது, அதனை தொடர்ந்து வரும் கீழ் layerகளில் உள்ள objectகளை தெளிவாக காணமுடியும். |
03:11 | ஒரு layerஐ பூட்டும் போது, அந்த குறிப்பிட்ட layerஐ தற்செயலான edit களில் இருந்து காக்கலாம். |
03:18 | பெரிய சிக்கலான graphic வேலைகளை செய்யும்போது குறிப்பாக இவை இரண்டும் மிக பயனுள்ளதாக இருக்கும். |
03:25 | ஒவ்வொரு layerன் இடப்பக்கமும் eye மற்றும் lock என்ற இரு iconகளைக் காணலாம் |
03:32 | இப்போது இவற்றை பயன்படுத்த கற்போம். |
03:35 | layerகளை பூட்டவோ பூட்டை நீக்கவோ, lock iconஐ க்ளிக் செய்க. bow layerஐ இப்போது பூட்டியுள்ளேன் |
03:42 | ஒரு layer பூட்டியிருந்தால், அந்த layerல் நாம் எந்த மாற்றமும் செய்ய முடியாது. |
03:47 | canvas ல் சுழல் முடிச்சுயை தேர்ந்தெடுக்க முயற்சிப்போம். அதை செய்ய முடியவில்லை என காணலாம். |
03:58 | இப்போது, bow layerன் பூட்டை நீக்குகிறேன். |
04:01 | bow objectஐ இப்போது தேர்ந்தெடுக்க முடிகிறது அதன் propertiesஐயும் மாற்ற முடிகிறது. |
04:07 | canvasல் ஒரு layer ஐ காட்டவோ மறைக்கவோ, layerன் இடப்பக்கமுள்ள eye iconஐ க்ளிக் செய்க. |
04:15 | bow layerக்கான eye iconஐ க்ளிக் செய்கிறேன் |
04:18 | canvasல் நடப்பதை கவனிக்கவும். |
04:23 | இப்போது bow layerஐ நகல் எடுக்கிறேன் |
04:26 | Layer menu க்கு சென்று Duplicate Current Layer தேர்வை க்ளிக் செய்க. |
04:32 | Layer Palette window ல் ஒரு புது layer bow copy உருவாக்கப்பட்டிருப்பதைக் கவனிக்கவும். |
04:41 | ஆனால் canvasல் புது சுழல்முடிச்சு ஏதும் இல்லை. ஏனெனில் சுழல்முடிச்சானது முந்தைய layerன் மேலே அமைந்துள்ளது . |
04:50 | இரு சுழல்முடிச்சுகளையும் காண மேல் layer ல் உள்ள சுழல்முடிச்சை நகர்த்தி வைக்கவும். |
04:56 | circle layerஐ தேர்ந்தெடுக்கவும் |
04:58 | கண்கள் மற்றும் சுழல்முடிச்சுகளை மூடுமாறு ஒரு நீள்வட்டத்தை canvasல் வரையவும். அதற்கு orange நிறம்கொடுக்கவும். |
05:05 | அந்த நீள்வட்டம் பின்புறத்திலும் மற்ற objectகள் அதற்கு மேலேயும் காணப்படுகின்றன. |
05:10 | Layers Paletteல் plus icon க்கு அடுத்துள்ள நான்கு iconகள் தேர்ந்தெடுக்கப்பட்ட layerஐ நிலையில் வைக்க உதவுகின்றன. |
05:17 | தேர்ந்தெடுக்கப்பட்ட layer ஐ, முதல் icon உயர்மட்ட layerஆக வைக்கிறது. |
05:23 | தற்போது circle layer தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. |
05:25 | இந்த icon ஐ க்ளிக் செய்யும்போது circle layer இப்போது உயர்மட்ட layer ஆக மாறுவதைக் காணலாம் |
05:33 | கடைசி icon தேர்ந்தெடுக்கப்பட்ட layer ஐ அடிமட்ட layer ஆக்கும் |
05:38 | இந்த iconஐ க்ளிக் செய்க. circle layer இப்போது அடிமட்ட layer ஆக மாறுவதைக் கவனிக்கவும் |
05:44 | இரண்டாம் icon தேர்ந்தெடுக்கப்பட்ட layer ஐ ஒரு layer மேலே அனுப்புகிறது. |
05:48 | இந்த iconஐ க்ளிக் செய்க. eye layerக்கு மேலே circle layer நகர்ந்துள்ளது எனவே கண்கள் தெரியவில்லை. |
05:57 | மூன்றாம் icon தேர்ந்தெடுக்கப்பட்ட layer ஐ ஒரு layer கீழே நகர்த்துகிறது. |
06:01 | இந்த iconஐ க்ளிக் செய்க. இப்போது eye layerக்கு கீழே circle layer நகர்ந்துள்ளது |
06:07 | எனவே, இவ்வாறுதான் இந்த நான்கு iconகளும் பயன்படுத்தப்படுகின்றன. |
06:13 | கடைசியில் உள்ள minus icon தேர்ந்தெடுக்கப்பட்ட layerஐ நீக்குகிறது. bow copy layer ஐ தேர்ந்தெடுத்து அதன் மீது க்ளிக் செய்க. |
06:21 | இப்போது bow copy layer தெரியவில்லை என்பதை காணலாம். |
06:27 | Blend mode என்பது Blend filterஐ ஒரு layer முழுதும் பயன்படுத்துவதற்கான shortcut ஆகும். |
06:31 | அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட layerகளில் objectகள் ஒன்றன் மேல் ஒன்று இருந்தால், Inkscape அந்த இரு objectகளையும் pixel-by-pixelஆக கலக்கும். |
06:41 | எனவே, filterகளை தெரியவைக்க circle layerஐ மேலே வைப்போம். |
06:46 | Blend modeன் drop down listஐ க்ளிக் செய்க இங்கு 5 தேர்வுகள் இருப்பதைக் காண்க |
06:52 | முதல் தேர்வு Normal, அது layerக்கு எந்த filterஐயும் சேர்க்காது. |
06:57 | அதை க்ளிக் செய்கிறேன். layerக்கு எந்த filter உம் சேர்க்கப்படவில்லை என்பதைக் கவனிக்கவும். |
07:03 | அடுத்து Multiply ஐ க்ளிக் செய்க |
07:06 | உயர்மட்ட layerல் உள்ள objectகள், lightஐ filterசெய்வதால் கீழ் layerகளில் உள்ள objectகள் தெரிகின்றன. |
07:14 | அதே நேரத்தில், ஒன்றன் மேல் ஒன்று உள்ள பகுதிகளில், அடர்த்தியான நிறங்களை உருவாக்க நிறங்களை கலக்கின்றன. |
07:21 | அடுத்த தேர்வு Screen. |
07:25 | மேல் objectகளை கவனிக்கவும்; அவை கீழ் objectகளுக்கு lightnessஐ சேர்க்கின்றன. |
07:30 | எனவே, ஒன்றன் மேல் ஒன்று உள்ள பகுதிகளில் லேசான நிறங்களை உருவாக்க நிறங்களை கலக்கின்றன. |
07:36 | Darken மீது க்ளிக் செய்க மேல் layerல் உள்ள objectகள், கீழ் layerகளில் உள்ள objectகளை அடர்த்தியாக்குகின்றன. |
07:44 | இப்போது, கடைசி தேர்வான Lighten மீது க்ளிக் செய்க இங்கே மேல் objectகள் கீழ் objectகளை லேசாக்குகின்றன. |
07:53 | Blend mode ல் Normalக்கு வந்தால், இதுவரை பயன்படுத்தப்பட்ட blend filterகள் மறைகின்றன. |
08:00 | மேலும் பல filterகளை Filters menuல் காணலாம் |
08:04 | ஒரு குறிப்பிட்ட filterஐ பயன்படுத்த, முதலில் objectஐ தேர்ந்தெடுத்து பின் தேவையான filter மீது க்ளிக் செய்யவும். |
08:12 | circle layer ஐ மீண்டும் கீழே நகர்த்துவோம். |
08:16 | ஒரு கண்ணை தேர்ந்தெடுக்கிறேன். Filters menuக்கு சென்று Blurs பின் Fancy blur ஐ தேர்ந்தெடுக்கிறேன் |
08:26 | கண்ணின் மாற்றத்தை கவனிக்கவும். |
08:29 | மற்றொரு கண்ணை தேர்ந்தெடுக்கிறேன். Filters menu க்கு சென்று Bevels பின் Smart jelly ஐ தேர்ந்தெடுக்கிறேன் |
08:39 | கண்ணின் மாற்றத்தை மீண்டும் கவனிக்கவும். |
08:44 | இப்போது சுழல்முடிச்சை தேர்ந்தெடுப்போம். Filters menuக்கு சென்று Scatter பின் Air sprayஐ தேர்ந்தெடுப்போம் |
08:51 | காற்று தெளிக்கப்பட்டது போல சுழல் முடிச்சு தோன்றுகிறது. |
08:55 | Blend modeக்கு கீழ் உள்ள Opacity தேர்வு தேர்ந்தெடுக்கப்பட்ட layerன் Opacityஐ குறைக்க உதவுகிறது. |
09:01 | circle layerஐ தேர்ந்தெடுக்கவும் |
09:03 | Opacity levelமாற்றி.... ellipseன் மாற்றத்தை கவனிக்கவும். |
09:10 | அடுத்து boolean செயல்பாடுகள் பற்றி அறிவோம் |
09:13 | Path menuக்கு செல்லவும் இவைதான் boolean செயல்பாடுகள். |
09:21 | இந்த வடிவங்களை ஒரு ஓரமாக வைப்போம். |
09:26 | ஒரு பச்சை நிற சதுரம்... மற்றும் ஒரு சிவப்பு நிற வட்டத்தை வரைவோம். இந்த வட்டத்தை சதுரத்தின் மேல் ஒரு பக்கமாக வைப்போம். |
09:36 | இரண்டையும் தேர்ந்தெடுக்கவும். Path menuக்கு சென்று Union மீது க்ளிக் செய்க. இரு வடிவங்களும் இப்போது ஒன்றாக இணைந்திருப்பதைக் காணலாம் |
09:46 | இந்த செயல்பாட்டை undo செய்ய கீபோர்டில் Ctrl + Zஐ அழுத்துக. |
09:51 | மீண்டும் இரண்டையும் தேர்ந்தெடுத்து... Path menuக்கு சென்று... |
09:55 | Difference மீது க்ளிக் செய்து நடப்பதை கவனிக்கவும். |
09:59 | இந்த செயல்பாட்டை undo செய்ய Ctrl + Zஐ அழுத்துக. |
10:03 | மீண்டும் இரு objectகளையும் தேர்ந்தெடுக்கவும். Path menuக்கு சென்று Intersection மீது க்ளிக் செய்து வடிவத்தின் மாற்றத்தை காணவும். |
10:11 | இந்த செயல்பாட்டை undo செய்ய Ctrl + Zஐ அழுத்துக. |
10:16 | மீண்டும் இரு objectகளையும் தேர்ந்தெடுக்கவும். Path menu க்கு சென்று Exclusion ஐ க்ளிக் செய்க |
10:22 | வடிவத்தின் மாற்றத்தை கவனிக்கவும். |
10:24 | மீண்டும் Ctrl + Zஐ அழுத்துக |
10:27 | மீண்டும் இரு objectகளையும் தேர்ந்தெடுத்து Path menu க்கு சென்று Division மீது க்ளிக் செய்க |
10:34 | பிரிக்கப்பட்ட வட்டத்தை க்ளிக் செய்து முடிவை காண அதை தனியே நகர்த்தவும். |
10:39 | இந்த செயல்பாடுகளை undo செய்ய இருமுறை Ctrl + Zஐ அழுத்துக. |
10:44 | மீண்டும் இரு objectகளையும் தேர்ந்தெடுத்து Path menu க்கு சென்று Cut path மீது க்ளிக் செய்க |
10:50 | வடிவத்தின் மாற்றத்தை கவனிக்கவும். |
10:53 | objectல் stroke இருந்தால் மட்டுமே Cut path தேர்வு வேலைசெய்யும். முதலில் வடிவங்களை தேர்வுநீக்குவோம். |
10:59 | இப்போது, cut path ஐ காண ஏதேனும் ஒரு strokeஐ தேர்ந்தெடுத்து தனியே நகர்த்தவும். |
11:05 | சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது |
11:10 | Layerகள், Filterகள் மற்றும் Boolean செயல்பாடுகள். |
11:14 | இங்கே உங்களுக்கு நான்கு பயிற்சிகள் உள்ளன |
11:16 | ஒரு ஊதா நிற செவ்வகம் மற்றும் ஒரு பச்சை நிற முக்கோணத்தை வரையவும். |
11:21 | செவ்வகத்தின் உச்சியில் முக்கோணத்தை வைக்கவும். |
11:24 | இரண்டையும் தேர்ந்தெடுத்து Unionஐ பயன்படுத்தவும் அது ஒரு வீடு போன்று இருக்க வேண்டும். |
11:30 | அந்த layerக்கு home என பெயரிடவும் |
11:32 | இரு வட்டங்களை வரையவும். |
11:34 | அவற்றை ஒன்றன் மேல் ஒன்று அருகருகே வைக்கவும். |
11:36 | இரண்டையும் தேர்ந்தெடுத்து Differenceஐ பயன்படுத்தவும். |
11:39 | அது ஒரு பிறைச்சந்திரன் போல இருக்க வேண்டும். |
11:42 | ஒரு நீள்வட்டத்தை வரையவும். |
11:44 | 10 மூலைகள் கொண்ட ஒரு நட்சத்திரத்தை வரையவும். |
11:46 | அதை நீள்வட்டத்தின் மையத்தில் வைக்கவும். |
11:49 | இரண்டையும் தேர்ந்தெடுத்து Exclusionஐ பயன்படுத்தவும் |
11:52 | crescent மற்றும் star என்ற இரு layerகளை உருவாக்கவும். |
11:57 | பிறைச்சந்திர வடிவத்தை வெட்டி crescent layerல் ஒட்டவும். |
12:00 | அதே போல நட்சத்திர வடிவத்திற்கும் செய்யவும். |
12:03 | நீங்கள் செய்து முடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும். |
12:07 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளி ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும். |
12:16 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
12:23 | மேலும் தகவல்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
12:27 | இந்த திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசின் MHRD,NMEICT மூலம் கிடைக்கிறது. |
12:34 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும். |
12:39 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
12:42 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |