GChemPaint/C3/Features-and-Color-Schemes/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | வணக்கம். ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) ல் அம்சங்கள் மற்றும் Color Schemeகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்க போவது, |
00:12 | ஜிகெம்டேபுள் (GChemTable), எலிமெண்டல் விண்டோ (Elemental window) மற்றும் Color schemeகள். |
00:16 | இங்கே நான் பயன்படுத்துவது |
00:19 | உபுண்டு லினக்ஸ் இயங்குதளம் பதிப்பு 12.04. |
00:22 | ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) பதிப்பு 0.12.10. மற்றும் |
00:27 | ஜிகெம்டேபுள் (GChemTable) பதிப்பு 0.12.10. |
00:32 | இந்த டுடோரியலை தொடர உங்களுக்கு |
00:35 | தனிமங்களின் ஆவர்த்தண அட்டவணை மற்றும் ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) பற்றி தெரிந்திருக்க வேண்டும். |
00:41 | இல்லையெனில் அதற்கான ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும். |
00:46 | இப்போது ஜிகெம்டேபுள் (GChemTable) அப்ளிகேஷன் பற்றி கற்போம். |
00:50 | ஜிகெம்டேபுள் (GChemTable) ஐ ஜிகெம்பெய்ண்ட் ன் ஒரு பயன்பாட்டு மென்பொருளாக சினாப்டிக் பேக்கேஜ் மேனஜர் (Synaptic Package Manager) ஐ பயன்படுத்தி நிறுவலாம் |
00:58 | ஜிகெம்டேபுள் (GChemTable) என்பது வேதியியல் தனிமங்களின் தனிமவரிசை அட்டவணை (Periodic table) அப்ளிகேஷன் ஆகும். |
01:03 | இது தனிமங்கள் பற்றிய அறிவியல் பூர்வ தகவல்களை தருகிறது. |
01:08 | இது வெவ்வேறு Color scheme களில் தனிமவரிசை அட்டவணையை காட்டுகிறது. |
01:13 | ஜிகெம்டேபுள் (GChemTable) ஐ திறக்க, Dash Home ல் க்ளிக் செய்க. |
01:17 | தோன்றும் search bar ல் டைப் செய்க "gchemtable". |
01:21 | Periodic table of the elements ஐகான் மீது க்ளிக் செய்க. |
01:26 | Periodic table of the elements விண்டோ திறக்கிறது. |
01:30 | மற்ற விண்டோ சார்ந்த அப்ளிகேஷன்களை போலவே GChemTable விண்டோ Menubar ஐ கொண்டுள்ளது. |
01:36 | GChemTable உடன் நீங்கள் வேலைசெய்ய தேவையான அனைத்து கட்டளைகளையும் Menubar கொண்டுள்ளது. |
01:41 | இது ஒரு தனிமங்களின் அட்டவணை, இங்கே தனிம பட்டன்களை காணலாம். |
01:49 | தனிமத்தின் பெயரைப் பெற, அந்த தனிமத்தின் மீது கர்சரை வைக்கவும். |
01:52 | பட்டன்களுக்கு பயன்படுத்தப்பட்ட நிறங்கள் அந்த தனிமங்களின் வழக்கமான நிறங்கள் ஆகும். |
01:58 | இந்த அட்டவணை தனிமவரிசை அட்டவணையின் பிரதி ஆகும். |
02:02 | இப்போது எலிமெண்டல் விண்டோ (Elemental window) பற்றி கற்போம். |
02:05 | அதை காட்ட, தனிம வரிசை அட்டவணையில் ஒரு தனிமத்தின் மீது க்ளிக் செய்க. |
02:10 | கார்பன் (Carbon)(C) மீது க்ளிக் செய்கிறேன் |
02:13 | கார்பனின் எலிமெண்டல் விண்டோ திறக்கிறது. |
02:16 | எலிமெண்டல் விண்டோ நான்கு பக்கவாட்டு tabகளை கொண்டுள்ளது |
02:21 | Main, Electronic Properties, |
02:24 | Radii, Thermodynamics |
02:26 | ஒவ்வொரு tab பற்றியும் விளக்குகிறேன் |
02:30 | முன்னிருப்பாக Main tab தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. |
02:33 | இது தனிமத்தின் குறியீடு, |
02:36 | Atomic number, |
02:38 | Atomic weight மற்றும் |
02:40 | Electronic configuration ஆகியவற்றை கொண்டுள்ளது. |
02:43 | இது Lang மற்றும் Name என தலைப்புகளைக்கொண்ட ஒரு அட்டவணையைக் கொண்டுள்ளது |
02:47 | இந்த அட்டவணை கார்பனின் பெயரை வெவ்வேறு மொழிகளில் காட்டுகிறது. |
02:53 | அடுத்து Electronic properties tab மீது க்ளிக் செய்க |
02:56 | இந்த tab காட்டும் தகவல்களாவன |
03:00 | Pauling electro-negativity மதிப்பு. |
03:02 | Ionization energies, |
03:05 | MJ per mol ல் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது Ionization energies. |
03:10 | KJ per mol ல் Electronic affinities. |
03:15 | வலப்பக்கத்தில் அதற்கான Show curve பட்டன்கள் காணப்படுகின்றன. |
03:20 | வரைப்படத்தைக் காண Show curve பட்டன் மீது க்ளிக் செய்க. |
03:24 | இது Electronegativity க்கு எதிரான Atomic number(Z) ன் வரைப்படமாகும். இந்த வரைப்படத்தை மூடுகிறேன் |
03:31 | Radii tab மீது க்ளிக் செய்க |
03:34 | இந்த tab காட்டுவது Covalent, |
03:36 | Van der Waals மற்றும் Metallic radii மதிப்புகள், அனைத்தும் 'pm' ல். |
03:41 | 'pm' என்பது pico metre= 10 ன் அடுக்கு minus 12 மீட்டர்கள். |
03:47 | கார்பன் ஒரு அலோகம் என்பதால் இதற்கு Metallic radius மதிப்பு இல்லை. |
03:53 | Carbon விண்டோவை மூடுகிறேன். |
03:56 | Periodic table of the elements விண்டோவுக்கு வருவோம். |
04:00 | சோடியம் (Sodium)(Na) பட்டன் மீது க்ளிக் செய்வோம். |
04:04 | Radii tab மீது க்ளிக் செய்க. |
04:07 | Metallic radii மதிப்பு இங்கே காட்டப்படுகிறது. |
04:11 | Ionic radii ன் அட்டவணையை Radii tab காட்டுகிறது. |
04:15 | இந்த அட்டவணை கொண்டுள்ள columnகள் Ion, C.N, மற்றும் Value |
04:22 | அட்டவணையில் கீழே வருவோம். |
04:24 | இந்த அட்டவணை கொண்டுள்ள தகவல்களாவன சோடியத்தின் வெவ்வேறு அயனி நிலைகள். |
04:31 | அதன் Coordination number(CN) மற்றும் 'pm' ல் Ionic radii மதிப்பு. |
04:37 | க்ரோமியம் (Chromium), மாங்கனீஸ் (Manganese), இரும்பு (Iron), கோபால்ட் (Cobalt), நிக்கல் (Nickel) மற்றும் காப்பர் (Copper) போன்ற தனிமங்கள் பெரிய சேர்மங்களை உருவாக்கும் தன்மை கொண்டவை. |
04:48 | இரும்பு (Iron)(Fe) பட்டன் மீது க்ளிக் செய்க |
04:51 | இதன் எலிமெண்டல் விண்டோ திறக்கிறது |
04:54 | Radii tab மீது க்ளிக் செய்க. |
04:56 | Ionic radii அட்டவணை Spin என்ற ஒரு கூடுதல் column ஐ கொண்டுள்ளது |
05:02 | Spin column இரும்பின் complex formation பற்றிய கருத்தைத் தருகிறது. |
05:07 | இங்கே High என்பது தனித்த எலக்ட்ரான்கள் உள்ள spin free complexes. |
05:13 | Low என்பது ஜோடி சேர்ந்துள்ள எலக்ட்ரான்கள் உள்ள spin paired complexes. |
05:20 | இரும்பின் (Iron)(Fe) எலிமெண்டல் விண்டோவை மூடுகிறேன். |
05:23 | complex formation குறித்த மேலும் தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும் http://en.wikipedia.org/wiki/Spin_states_d_electrons. |
05:28 | கார்பனின் எலிமெண்டல் விண்டோ மீது மீண்டும் க்ளிக் செய்க. |
05:33 | Thermodynamics tab மீது க்ளிக் செய்க |
05:36 | இந்த tab கார்பனின் Melting Point (உருகுநிலை) மற்றும் Boiling point (கொதிநிலை) ஐ காட்டுகிறது. |
05:40 | Show curve பட்டனை நீங்களே ஆராய்ந்தறிக. |
05:45 | கார்பன் எலிமெண்டல் விண்டோவை மூடுகிறேன். |
05:48 | இப்போது Color scheme களுக்கு செல்வோம். |
05:52 | View menu க்கு சென்று Color schemes ஐ தேர்ந்தெடுக்கவும். |
05:57 | Color scheme களின் ஒரு பட்டியலுடன் ஒரு துணை menu திறக்கிறது. |
06:01 | No colors மீது க்ளிக் செய்க. |
06:04 | தனிம பட்டன்கள் சாம்பல் நிறமாக மாறுகின்றன. |
06:09 | Color Schemes ல் க்ளிக் செய்து Physical states ஐ தேர்ந்தெடுக்கவும். |
06:13 | தனிம பட்டன்களை நீல நிறத்தில் கொண்ட ஒரு புதிய தனிம வரிசை அட்டவணை திறக்கிறது. |
06:18 | ஆனால் கருப்பில் உள்ள சிலவற்றை தவிர. |
06:21 | மேலே பூஜ்ஜியத்தை குறைந்தபட்ச மதிப்பாக கொண்ட Temperature(K): என்ற ஒரு ஸ்கேல் ஸ்லைடரைக் காணலாம். |
06:28 | கீழே "திடம்-நீலம்", "திரவம்-பச்சை" மற்றும் "வாயு-சிவப்பு" என்ற நிறங்களைக் காணலாம். |
06:36 | பூஜ்ஜிய degree Kelvin ல் அனைத்து தனிமங்களும் திட நிலையில் உள்ளன. |
06:41 | எனவே அவை நீல நிறத்தில் உள்ளன. |
06:44 | வெப்பத்தை அதிகரிக்க அந்த ஸ்லைடரை சற்று இழுப்போம். |
06:48 | தனிமங்கள் அவற்றின் இயற்பியல் நிலையில் இருந்து மாறுகின்றன என்பதை கவனிக்க. |
06:52 | பச்சை(திரவம்) மற்றும் சிவப்பு(வாயு) நிறங்களால் "நீல" நிறம் மாற்றப்படுகிறது. |
07:00 | 6010 degree Kelvin ல் அனைத்து தனிமங்களும் வாயு நிலைக்கு மாறுகின்றன. |
07:04 | அனைத்து பட்டன்களும் "சிவப்பு" நிறத்தில் மாறுகின்றன. |
07:09 | சில தனிமங்கள் "கருப்பு" பின்புலத்தில் காட்டப்படுகின்றன. |
07:12 | இந்த வெப்பநிலையில் அவற்றின் நிலை தெரியவில்லை. |
07:16 | அடுத்து Family ஐ தேர்ந்தெடுப்போம். |
07:19 | Selected Family கீழிறங்கு பட்டன் தெரிகிறது. |
07:23 | கீழிறங்கு பட்டியல் பல்வேறு family களை அவற்றுக்கான நிறங்களுடன் கொண்டுள்ளது. |
07:27 | முன்னிருப்பாக All தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. |
07:31 | தனிமங்களின் ஒவ்வொரு Family உம் ஒரு குறிப்பிட்ட Family நிறத்தில் தோன்றுகின்றன. |
07:36 | கீழிறங்கு பட்டியலை க்ளிக் செய்து Metalloids ஐ தேர்ந்தெடுக்கவும். |
07:40 | உலோகப்போலிகள் (Metalloids) பச்சை பின்புல நிறத்தில் தோன்றுகின்றன. |
07:45 | மற்ற அனைத்து தனிமங்களும் "கருப்பு" பின்புலத்தில் தோன்றுகின்றன. |
07:49 | Color Scheme க்கு திரும்ப சென்று, Electronegativity color scheme ஐ தேர்ந்தெடுக்கவும். |
07:57 | சிவப்பு நிறத்தில் உள்ள தனிமங்கள் குறைந்தபட்ச (Electronegativity) மின்னெதிர்தன்மை மதிப்புகளை கொண்டுள்ளன. |
08:01 | நீல நிறத்தில் உள்ள தனிமங்கள் அதிகபட்ச (Electronegativity)மின்னெதிர்தன்மை மதிப்புகளை கொண்டுள்ளன. |
08:06 | இது சிவப்பு முதல் நீல நிறம் வரையான படிப்படியான மாற்றம் ஆகும். |
08:12 | இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள தனிமங்கள் இடைப்பட்ட மின்னெதிர்தன்மை (Electronegativity) மதிப்புகளை கொண்டுள்ளன. |
08:18 | இந்த தரவுத்தளத்தில் தகவல் ஏதும் இல்லையெனில், அந்த தனிமம் "கருப்பு" பின்புலத்தைக் கொண்டிருக்கும். |
08:23 | Block ஐ தேர்ந்தெடுப்போம். |
08:27 | ஒவ்வொரு தொகுதி தனிமங்களும் அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி நிறத்தில் தோன்றுகின்றன. |
08:31 | 's' தொகுதி – நீலம் |
08:34 | 'p' தொகுதி – சிவப்பு கலந்த பழுப்பு |
08:37 | 'd' தொகுதி – பச்சை மற்றும் |
08:40 | 'f' தொகுதி – ஊதா. |
08:43 | நாம் கற்றதை சுருங்க காண்போம். |
08:46 | இந்த டுடோரியலில் நாம் கற்றது |
08:48 | எலிமெண்டல் விண்டோக்கள் பற்றிய விவரங்கள். |
08:51 | 1.Physical State |
08:53 | 2.Family 3.Electronegativity மற்றும் |
08:56 | 4.Block ஆகியவற்றின் Color Schemeகள் |
08:58 | பயிற்சியாக, |
09:01 | ஆராய்க கோபால்ட் (Cobalt), நிக்கல் (Nickel), காப்பர் (Copper) மற்றும் பலவற்றின் எலிமெண்டல் விண்டோக்கள். |
09:06 | வெவ்வேறு Family Color schemeகள் |
09:08 | Atomic radius Color scheme. |
09:11 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial |
09:15 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
09:18 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
09:22 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
09:28 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
09:32 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
09:38 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
09:42 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
09:49 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro |
09:55 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |