ExpEYES/C2/Introduction-to-ExpEYES-Junior/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | வணக்கம். ExpEYES Juniorக்கு அறிமுகம் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: ExpEYES Junior கருவி பற்றி, அதன் அம்சங்கள், கருவியை எப்படி வாங்குவது, வேறுபட்ட operating systemகளில், அந்த softwareஐ நிறுவுவது. |
00:19 | மேலும், கற்கபோவது system உடன் கருவியை இணைப்பது, மற்றும் எளிய சோதனையை செய்து காட்டுவது. |
00:26 | இங்கு நான் பயன்படுத்துவது: ExpEYES பதிப்பு 3.1.0, Ubuntu Linux OS பதிப்பு 14.04 |
00:35 | Andriod பதிப்பு 5.0.2, Windows பதிப்பு 7, Firefox browser பதிப்பு 35.0.1. |
00:45 | இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, அடிப்படை உயர்நிலைப்பள்ளி இயற்பியல் பற்றி தெரிந்திருக்க வேண்டும். |
00:51 | முதலில், ExpEYES என்றால் என்ன என்று காண்போம். ExpEYES என்றால், Experiments for Young Engineers and Scientists என்று பொருள். அடிப்படை இயற்பியல் மற்றும் மின்னணுவியல் சோதனைகளை செய்ய இது பயன்படுகிறது. |
01:06 | ExpEYES கருவி, பார்க்க இவ்வாறு இருக்கும். அது, 8.6 x 5.8 x 1.6 cm cube (cm3) பரிமாணங்களுடன் கூடிய, ஒரு, சிறிய, கச்சிதமான, செவ்வக பெட்டி ஆகும். அதன் எடை, கிட்டத்தட்ட சுமார் 60g இருக்கும். |
01:24 | USB port வழியாக, கருவியை கணினியுடன் இணைக்கலாம். |
01:28 | ExpEYES Juniorன், சில முக்கிய அம்சங்களின் பட்டியலைக் காணலாம். |
01:33 | இந்த கருவியைப் பயன்படுத்தி, voltageகளை அளவிடவும், plotகள் மற்றும் waveformகளை உருவாக்கவும் முடியும். இது குறைந்த விலையுடையது, மற்றும், துல்லியமான அளவுகளையும் கொடுக்கும். இக்கருவியில், Signal Generator மற்றும் Oscilloscope பொருத்தப்பட்டுள்ளது. |
01:48 | இது, 12 bit input/output analog resolution பெற்றுள்ளது. மேலும், Microsecond நேர resolution பெற்றுள்ளது. இதன் Software, Bootable ISO imageல் உள்ளது. |
02:00 | Onlineல் இக்கருவியை எப்படி வாங்குவது என பார்க்கலாம். |
02:03 | Firefox web browserஐ திறந்து, address barல், டைப் செய்க: http://expeyes.in/hardware-availability, பின் Enterஐ அழுத்தவும். |
02:18 | கருவியை வாங்குவதற்கு வேண்டிய எல்லா விவரங்களுடன், ஒரு வலைப்பக்கம் திறக்கும். |
02:22 | வேறுபட்ட operating systemகளில், இந்த software கிடைக்கிறதா என பார்ப்போம். |
02:28 | ExpEYES Juniorன் software, Python மொழியில் code செய்யப்பட்டுள்ளது. அது இலவச மற்றும் open source ஆகும். GNU General Public Licenseன் கீழ் அது விநியோகிக்கப்படுகிறது. |
02:41 | இந்த software , GNU/Linux, Netbook, Android மற்றும் Windowsல் வேலை செய்யும். |
02:48 | முதலில், Ubuntu Linux OSல் நிறுவுவோம். |
02:52 | Ubuntu Software Centerல் இருந்து நேராக, இந்த softwareஐ நிறுவலாம். |
02:57 | மாறாக, Firefox web browserஐ திறந்து, address barல், டைப் செய்க:http://expeyes.in. |
03:08 | அந்த பக்கத்தில், SOFTWARE tabஐ க்ளிக் செய்யவும். Software Installation பக்கம் திறக்கும். |
03:15 | expeyes.deb இணைப்பை க்ளிக் செய்யவும். Save File dialogue-box திறக்கும். Save Fileஐ தேர்ந்தெடுத்து, OK மீது க்ளிக் செய்யவும். |
03:26 | தரவிறக்கப்பட்ட fileஐ க்ளிக் செய்யவும். |
03:29 | Ubuntu Software Centreல் file திறக்கும். Install பட்டனை க்ளிக் செய்யவும். |
03:35 | Authenticate dialogue-box தோன்றும். System password ஐ டைப் செய்து, Authenticate பட்டனை க்ளிக் செய்யவும். |
03:42 | நிறுவுதலுக்கு சில நிமிடங்கள் ஆகும். |
03:45 | Software interfaceஐ திறக்க, Dash Homeஐ க்ளிக் செய்யவும். search barல், டைப் செய்க: "expeyes junior". |
03:54 | ExpEYES Junior icon தோன்றும். interfaceஐ திறக்க, அதை க்ளிக் செய்யவும். |
04:00 | Netbookல் softwareஐ நிறுவுவோம். |
04:03 | Lubuntu Software Centerஐ பயன்படுத்தி, Netbookல், ExpEYES Junior softwareஐ நிறுவலாம். |
04:10 | Software Center iconஐ ரைட்-க்ளிக் செய்து Openஐ தேர்ந்தெடுக்கவும். Lubuntu Software Center window திறக்கும். |
04:19 | Search a package பெட்டியில், டைப் செய்க: "expeyes". Expeyes icon தோன்றும். அதை தேர்ந்தெடுக்கவும். |
04:28 | Status barல், Add to the Apps Basket பட்டனை க்ளிக் செய்யவும். |
04:33 | Menu bar'ல், Apps Basket பட்டனை க்ளிக் செய்யவும். Apps Basket window திறக்கும். |
04:41 | Package பட்டியலில் இருந்து, Expeyesஐ தேர்ந்தெடுக்கவும். Install Packages பட்டனை க்ளிக் செய்யவும். |
04:48 | Authenticate dialogue-box தோன்றும். System password ஐ டைப் செய்து, Authenticate பட்டனை க்ளிக் செய்யவும். |
04:56 | Installing packages dialogue-box தோன்றும். நிறுவுதலுக்கு சில நிமிடங்கள் ஆகும். |
05:03 | USB cable ஐ பயன்படுத்தி, கருவியைப் netbookக்கு இணைக்கவும். |
05:08 | Netbookல், software interfaceஐ திறக்க, க்ளிக் செய்யவும், Start பட்டன்>> Educationக்கு செல்லவும்>> |
05:15 | ExpEYES Juniorஐ தேர்ந்தெடுக்கவும். software interface திறக்கும். |
05:21 | Androidல் softwareஐ நிறுவுவோம். |
05:25 | உங்கள் Android கருவியில், Wi Fi அல்லது Data pack உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும். |
05:31 | OTG cable வழியாக, உங்கள் mobileலுக்கு, ExpEYES Junior கருவியை இணைக்கலாம். |
05:38 | உங்கள் mobileலில், Home பட்டனை க்ளிக் செய்யவும்>>Google Play Storeக்கு செல்லவும்>> |
05:44 | APPSஐ க்ளிக் செய்யவும். APPS பக்கம் திறக்கும். |
05:48 | மேல் வலது பக்க ஓரத்தில் இருக்கும், பூதக்கண்ணாடியை க்ளிக் செய்யவும். |
05:53 | டைப் செய்க: "expeyes". ExpEYESஐ க்ளிக் செய்யவும். INSTALLஐ க்ளிக் செய்யவும். |
05:59 | license agreementஐ ஒப்புக் கொள்ளவும். தரவிறங்க ஆரம்பிக்கும். |
06:05 | தரவிறக்கிய பின், OPENஐ க்ளிக் செய்யவும். |
06:09 | ExpEYES Experiments dialogue-box திறக்கும். |
06:12 | Use by default for this USB device check-boxஐ க்ளிக் செய்யவும். |
06:17 | OKஐ க்ளிக் செய்யவும். Interface திறக்கும். |
06:21 | Windows Operating Systemல் softwareஐ நிறுவுவோம். |
06:27 | முன்னிருப்பான web browserஐ திறக்கவும். address barல், URL ஐ டைப் செய்க: "expeyes.in", பின் Enterஐ அழுத்தவும். ExpEYES பக்கம் திறக்கும். |
06:40 | SOFTWARE tabஐ க்ளிக் செய்யவும். கீழே MS Windowsக்கு வரவும். |
06:45 | Windows நிறுவுதலுக்கு, Python interpreter மற்றும் அதற்க்குரிய librariesஐ நிறுவ வேண்டும். |
06:52 | கீழ்கண்ட driverகள் மற்றும் fileகளை தரவிறக்கி, நிறுவவும்: http://www.ftdichip.com/Drivers/CDM/CDM20814_Setup.exe |
06:57 | என் Downloads libraryல், எல்லா fileகளையும் தரவிறக்கிவிட்டேன். |
07:02 | expeyes-3.0.0 zip fileஐ ரைட்-க்ளிக் செய்து, Extract Here optionஐ க்ளிக் செய்யவும். File extract செய்யப்படுகிறது. |
07:14 | expeyes-3.0.0 folderஐ டபுள் க்ளிக் செய்யவும். |
07:21 | eyes-junior folder ஐ டபுள் க்ளிக் செய்யவும். Fileகளின் பட்டியல் ஒன்று திறக்கும். |
07:27 | croplus fileலுக்கு செல்லவும். ரைட்-க்ளிக் செய்து, Propertiesஐ தேர்ந்தெடுக்கவும். croplus Properties window திறக்கும். |
07:36 | Change பட்டனை க்ளிக் செய்யவும். Python'ஐ தேர்ந்தெடுத்து, OKஐ க்ளிக் செய்யவும். |
07:44 | Properties windowவில், OKஐ க்ளிக் செய்யவும். croplus fileஐ டபுள் க்ளிக் செய்யவும். |
07:51 | Python exe file ஓடிக் கொண்டிருப்பதைக் காணலாம். Software interface திறக்கும். |
07:59 | கவனிக்கவும்: Windows 8/8.1ல், softwareஐ நிறுவும் போது, settingsல், unsigned driver installationஐ enable செய்யவும். |
08:10 | USB port வழியாக, கருவியை, கணினியுடன் இணைக்கலாம். அதன் பிறகு, software interface திறக்கும். |
08:19 | இப்போது, கருவி மற்றும் interfaceஐ பயன்படுத்தி, ஒரு அடிப்படை சோதனையை செய்து காட்டுகிறேன். |
08:25 | இந்த சோதனையில், வெளிப்புற மட்டும் உட்புற sourceகளின், voltageகளை, அளவிட்டு ஒப்பிடுவோம். |
08:33 | சோதனையை காட்ட, வெளிப்புற sourceஆக ஒரு battery தேவைப்படுகிறது. Batteryன் Voltage, “3V” ஆகும். |
08:44 | இந்த சோதனைக்கு, Ground (GND) terminal லும், A1 terminalலும், batteryஉடன் இணைக்கப்பட்டுள்ளன. |
08:50 | Interfaceல், A1 terminalலில் உள்ள voltageஐ காட்ட, A1ஐ க்ளிக் செய்யவும். “+3.15V” என voltageஐ காட்டும். |
09:00 | இணைப்பை எதிர்ப்பக்கம் திருப்பினால், voltage “-3.14V” ஆகும். |
09:06 | Batteryக்கு பதிலாக, voltageன் உட்புற sourceஆக, PVSஐ பயன்படுத்தலாம். இந்த சோதனைக்குக்கு,A1, PVSஉடன் இணைக்கப்பட்டுள்ளது. |
09:17 | Interfaceன் வலது பக்கத்தில், Set PVS மதிப்பு= 3V, பின் Enterஐ அழுத்தவும். PVSன் voltageஐ, 3.001V என காட்டும். |
09:31 | மேல் இடது பக்க ஓரத்தில் இருக்கும்,A1ஐ க்ளிக் செய்யவும். A1ன் voltageஐ, “3.008V” என காட்டும். |
09:40 | சுருங்கசொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது: ExpEYES Junior கருவி, அதன் அம்சங்கள், கருவியை எப்படி வாங்குவது |
09:49 | Linux, Netbook, Android மற்றும் Windowsகளில், softwareஐ எப்படி நிறுவுவது, கணினியுடன் கருவியை எப்படி இணைப்பது, மற்றும் எளிய சோதனையை செய்து காட்டுவது. |
10:03 | பயிற்சியாக- உங்கள் Operating Systemல், softwareஐ நிறுவவும். |
10:09 | Inter-University Accelerator Centre, New Delhiன், PHOENIX project, ExpEYES Juniorஐ, வடிவமைத்து, மேம்படுத்துகிறது. |
10:17 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கி காணவும். |
10:25 | ஸ்போகன் டுடொரியலை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும். |
10:32 | இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது. |
10:43 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது காஞ்சனா. நன்றி. |