Digital-Divide/C2/How-to-buy-the-train-ticket/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | இணையத்தில் ரயில் பயணச்சீட்டை முன்பதிவு செய்வது குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:08 | இந்த டுடோரியலில் கற்கப் போவது irctc ல் எவ்வாறு ஒரு பயணச்சீட்டை தேர்ந்தெடுப்பது. |
00:13 | பயணப்பிரிவை தேர்வு செய்வது |
00:16 | ரயில் மற்றும் பயண வகுப்பைத் தேர்வு செய்வது |
00:19 | பயனர் தகவலை உள்ளிடுவது E-ticket ஆ I-ticket ஆ என முடிவெடுப்பது. |
00:24 | மேலும் debit card ஐ பயன்படுத்தி முதல்முறையாக இணையத்தில் பயணச்சீட்டை வாங்கக் கற்கப் போகிறோம். |
00:32 | பின்வரும் பணம் செலுத்தும் வழி ஏதாவது ஒன்றின் மூலம் பயணச்சீட்டை வாங்கலாம்; |
00:36 | ATM card உடன் வங்கிக் கணக்கு |
00:39 | online transaction திறனுடன் வங்கிக் கணக்கு, credit card. |
00:44 | மேலும் இணைய இணப்புடன் கணினியும் தேவை! |
00:48 | பின்வரும் வழியை நான் தேர்ந்தெடுக்கிறேன். |
00:50 | ஒரு ICICI ATM card ஐ கொண்டுள்ளேன்; |
00:53 | அது ஒரு visa debit card ம் ஆகும். |
00:56 | இப்போது ஒரு பயணச்சீட்டை வாங்கலாம். |
00:59 | username kannan underscore Mou, எனத் டைப் செய்து Password உள்ளிட்டு login செய்கிறேன். |
01:12 | ஒருவேளை Mumbaiயிலிருந்து செல்ல விரும்பினால், 4 characterகளை டைப் செய்யும்போது அதன் பரிந்துரையில் mumbai central ஐ தேர்ந்தெடுக்கிறேன்.SURA 4 characterகளை டைப் செய்துகாத்திருக்கவும். |
01:26 | நாம் சூரத் செல்லவேண்டும் . |
01:28 | Bombay Central க்கு station code BCT Suratக்கு STஎன்பதைக் கவனிக்கவும் . . |
01:35 | இனி நாம் BCT மற்றும் ST என்றே டைப் செய்யலாம். உதாரணமாக இதை நீக்கி BCT எனத் டைப் செய்து மீதி உள்ளதை அவ்வாறே விடுவோம். |
01:47 | Date 23 December ஐ தேர்வு செய்கிறேன், மற்றவை E-ticket மற்றும் general எனவே இருக்கட்டும். |
01:55 | E-ticket அல்லது I-ticket என்றால் என்ன... அந்த தேர்வுகள் யாவை... |
01:59 | இவற்றின் வித்தியாசங்களைப் பின்னர் விளக்குவேன். |
02:02 | வலப்பக்கம் நகர்ந்து, place,Train name ஐ காணலாம். |
02:08 | நிறைய ரயில்கள் உள்ளன. முடிந்தவரை font அளவை சிறிதாக்கலாம். |
02:11 | இப்போது அனைத்தையும் பார்க்கலாம் , |
02:15 | ஒருவேளை இந்த வண்டி எண் 12935இல் போக விரும்பினால் . |
02:19 | second sitting … two s'இல் டிக்கெட் இருக்கிறதா என பார்ப்போம். |
02:24 | கொஞ்சம் கீழே வந்ததுமே அது wait listed என்கிறது . |
02:29 | அதனால் பரவாயில்லை. wait listedஆக இருந்தாலும் வாங்கலாம். |
02:34 | இதை க்ளிக் செய்தால் கிடைக்கும் செய்தி நான் தேர்ந்தெடுத்த From station இந்த வழியில் இல்லை இவற்றில் ஒற்றை தேர்ந்தெடுக்கவும். |
02:44 | Bandra Terminusஐ தேர்வு செய்யலாம். இப்போது book மீது க்ளிக் செய்கிறேன் |
02:57 | Name Kannan Moudgalya, Age-53, Male, Berth preference – Window Seat ஐ தேர்வு செய்யலாம். |
03:12 | senior citizen button ஐ க்ளிக் செய்கிறேன் The passengers age should be 60 years or more என செய்தி வர ok ஐ க்ளிக் செய்கிறேன். |
03:22 | ஒருவேளை female senior citizen எனில் passengers age should be 58 years or more என்கிறது. |
03:31 | ஆகவே பெண்ணுக்கு 58 வயதும், ஆணுக்கு 60 வயதும் ஆனால் senior citizens (மூத்த குடிமக்கள்) எனலாம் . |
03:39 | senior citizen எனில் தள்ளுபடி உண்டு.. |
03:41 | மீண்டும் male, window seat என்போம். |
03;45 | இவை எதையும் குறித்துக் கவலைப்படாமல் இந்த image இல் உள்ள'E37745Aஐ உள்ளிடவும். |
03:58 | go ஐ அழுத்துகிறோம். |
04:03 | இது தகவல்களை கொடுக்கிறது total amount 99 என சொல்கிறது . |
04:11 | இப்போது make payment மீது க்ளிக் செய்கிறேன். |
04:20 | இதில் எதையும் பயன்படுத்தலாம், |
04:22 | என்னிடம் credit card உள்ளது. net banking வசதி, debit card, cash card போன்றவற்றை பயன்படுத்தலாம் . |
04:29 | பெரும்பாலோர் அணுகும்படியாக, debit card ஐ பயன்படுத்திப் பார்க்கலாம் . |
04:38 | இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும், துரதிருஷ்டவசமாக அதாவது ICICI bank card இங்கில்லை . |
04:46 | ஆனால் இங்குள்ள பட்டியலில் இல்லாத visa அல்லது master debit cardஆக இருந்தால் |
04:55 | Click here என்கிறது இங்கே க்ளிக் செய்கிறேன் the following banks visa / master debit cards can be used to make online transaction as on date என்ற செய்தியை பெறுகிறேன். |
05:09 | பட்டியலில் ICICI bank உள்ளது. இதை மூடிவிட்டு இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுப்போம் . |
05:16 | visa masterஎனத் தேர்வு செய்வோம் |
05:20 | எனவே card type Visa . |
05:23 | என்னிடம் உள்ள ATM card எண்ணைக் காட்டப்போவதில்லை . |
05:27 | Debit card ல் உள்ள 16 இலக்க எண்ணை உள்ளிட்டுப் பின் credit card expiry dateஅதன் பின் CVV number அதாவது card இன் பின் பக்கமுள்ள கடைசி மூன்றிலக்க எண்ணை உள்ளிடவும். |
05:44 | அடுத்து நம் signature, இவற்றை உள்ளிட்டதும், buy button ஐ அழுத்தவேண்டும் . |
05:52 | ICICI வங்கியிலிருந்து கீழுள்ள செய்தியை பெறுகிறேன் |
05:57 | இந்த card ஐ online transaction க்குப் பதிவு செய்ய validity date , Date Of Birth பின் ATM pin number' ஐ உள்ளிடவேண்டும் . |
06:09 | நன்கு பார்க்க இதனைப் பெரிதாக்குகிறேன். |
06:14 | இவற்றை உள்ளிடுகிறேன், ஆனால் அதை காட்ட மாட்டேன் |
06:21 | இதை நான் செய்யும் போது இங்குள்ள செய்தியை பெறுகிறேன். |
06:26 | 6 இலக்க எண்ணை இப்போது உள்ளிடுவோம், எனக்கு நினைவு கூர எளிதாகவும், மற்றவர்க்குக் கடினமாகவும் சரியாக இதை தேர்ந்தெடுக்க வேண்டும் . |
06:36 | password சரியாக உள்ளிட்டிருப்பதை உறுதி செய்யவும் தட்டச்சு பிழையை தவிர்க்கவும் இருமுறை டைப் செய்ய வேண்டும். |
06:45 | நினைவு கொள்க ஒரே முறைதான் password ஐ உருவாக்க முடியும் |
06:48 | இனி இந்த password ஐ உங்கள் debit card க்குப் பயன்படுத்தலாம். அதை உறுதி செய்ய submit கொடுப்போம் . |
07:00 | பெறும் செய்தி Congratulations! the ticket has been booked. |
07:06 | PNR எண் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் தரப்பட்டிருப்பதைக் கவனிக்கவும் . |
07:13 | wait list இல் உள்ள நம் பயணச்சீட்டு பயணம் தொடரும் முன் உறுதுபடுத்தப்படுகிறதா என PNR எண் கொண்டு கவனிக்க வேண்டும். |
07:21 | இப்போது பார்ப்பது IRCTC தானியங்கியாக அனுப்பிய e-mail. பயணச் சீட்டின் விபரங்கள் இங்கு உள்ளன . |
07:29 | தேவையானால் print out எடுக்கலாம். slide களுக்கு திரும்பச் செல்வோம் . |
07:36 | slideகளுக்கு திரும்பி வந்துவிட்டோம். அடுத்து என்ன? |
07:39 | பயணச்சீட்டை print out எடுக்கலாம் . |
07:42 | பயணத்துக்கு முன் wait listed ticket உறுதி செய்யப்படவேண்டும். |
07:47 | wait listed ticketஇல் எடுத்த print out போதுமானது . |
07:51 | மீண்டும் print out எடுக்க வேண்டியதில்லை. |
07:53 | பயணச் சீட்டு உறுதி செய்யப்பட்டுவிட்டால் பிரச்னை இல்லை. |
07:58 | இந்த டுடோரியலில் காட்டப்பட்ட வழிமுறைகள் பொதுவானது. |
08:03 | வெவ்வேறு ATM cardகளில் சிறிய மாறுபாடுகள் இருக்கலாம் . |
08:07 | credit card, online bank transaction இரண்டிற்கும் ஒரே முறைதான். |
08:14 | அனைத்திலும் ஒட்டுமொத்தமாக ஒரே நடைமுறைதான் . |
08:20 | account information க்காக அட்டையை உள்ளிடவும் |
08:23 | password ஐ உள்ளிட சிலருக்குத் தாற்காலிக code … mobile phone க்கு அனுப்பப்படும் . |
08:31 | அடுத்த கேள்வி.... E-ticket அல்லது I-ticketஎதை வாங்கலாம்? . |
08:36 | முதலில் E-ticket குறித்துப் பார்ப்போம். கடைசி நிமிடங்களில் கூட இதை வாங்க முடியும் . |
08:41 | printer அல்லது ஒரு smart phone தேவை. print out ஐ தொலைத்தாலும் கவலை இல்லை . |
08:48 | நாம் இன்னொரு print out எடுக்கலாம். |
08:51 | பயணம் செய்கையில் அடையாள அட்டை அவசியம் தேவை , |
08:55 | I-Ticket வாங்கினால் courierமூலம் அனுப்பப்படும். இதற்கு ரூபாய் 50 கொடுக்க வேண்டும் . |
09:03 | இது தபாலில் வந்து சேர 2-3 நாட்கள் ஆகலாம். |
09:07 | எல்லா நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இந்த சேவை கிடைப்பதில்லை. |
09:11 | பயணச்சீட்டை ticket counter களில் மட்டுமே ரத்து செய்யலாம். |
09:15 | I-ticket மூலம் பயணித்தால் “அடையாள அட்டை” தேவையில்லை. |
09:22 | “அடையாள அட்டை” என்றால் என்ன? அரசால் அளிக்கப்பட்ட உங்கள் புகைப்படம் உள்ள எந்த அட்டையாகவும் இருக்கலாம் ; |
09:27 | Pan அட்டை, தேர்தல் அடையாள அட்டை |
09:29 | ஓட்டுநர் உரிமம் அல்லது passport இவற்றில் ஏதேனும் ஒன்று . |
09:33 | முழுத் தகவல்களும் உள்ள ஒரு தளத்தைத் திறக்கிறேன். உங்கள் புகைப்படத்துடன் கூடிய இவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்லவேண்டும். |
09:41 | slideகளுக்கு திரும்ப வருவோம், |
09:43 | பயணச்சீட்டுகளுக்கு சலுகைகளும் கிடைக்கின்றன . |
09:46 | இந்த தளத்தில் அந்த பட்டியல் உள்ளது. இந்தத் தளத்தைப் பார்வையிடுவோம் . |
09:55 | Slide களுக்கு மீண்டும் வருவோம், (மூத்த குடிமக்கள்) Senior citizen களுக்கு 40 சதவீத சலுகை உள்ளது. |
10:01 | எவர் senior citizen? ஆண்களில்” 60 வயதும் அதற்கு மேலும் பெண்களில் 58 வயதும்அதற்கு மேலும் உள்ளோர் . |
10:09 | எந்த சலுகையும் பெறும் ஒருவருக்குப் பயணத்தின் போது அடையாள அட்டை தேவை! |
10:15 | பயணத்தின் போது எடுத்துச் செல்லவேண்டியவை E-ticket ஐ முன்பதிவு செய்திருந்தால் உங்கள் பயணச்சீட்டின் ஏதேனும் ஒரு அடையாளமாக - smart phone ல் ஒரு E-copy அல்லது ஒரு print out மேலும் ஒரு அடையாள அட்டை |
10:29 | அல்லது i-ticket. |
10:32 | ஒருவேளை I-Ticket ஆக இருந்தால் முன்னர் சொன்னது போல் அடையாள அட்டை தேவையில்லை . |
10:37 | உங்களுக்கான சில முக்கிய உதவிக்குறிப்புகள் . |
10:40 | முன்கூட்டியே முன்பதிவு செய்யவும். |
10:42 | பயணம் செய்யும் வாய்ப்புக் குறைவாக இருந்தாலும் முன்பதிவு செய்யவும் . |
10:46 | எப்போதும் பயணச்சீட்டை ரத்து செய்யலாம். எனினும் ரத்து செய்கையில் பணத்தில் சிறிது கழிக்கப்படும் |
10:51 | பயணச்சீட்டு இல்லாமல் இருப்பதைவிட இது பரவாயில்லை. |
10:55 | கடைசி நிமிடத்தில் ஒரு பயணச்சீட்டை வாங்க இயலாது . |
10:57 | IRCTC இணையத்தளம் வேகமாய் இயங்கும்போது முன்பதிவு செய்யவும். |
11:01 | பொதுவாக மதியவேளை அல்லது இரவில் வேகமாக இயங்கும் . |
11:06 | இயன்றால் காலை 8 முதல் 10 மணி வரை தவிர்க்கவும் . |
11:10 | அடுத்த டுடோரியலில் பார்க்கபோவது IRCTC மூலம் முன்பதிவு செய்த பயணச்சீட்டுகளை எவ்வாறு கையாளுவது. |
11:18 | பழைய முன்பதிவுகளை பார்ப்பது |
11:20 | PNR status ஐ சோதிப்பது |
11:23 | பயணச்சீட்டை ரத்து செய்வது. |
11:25 | இப்போது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி காண்போம். |
11:28 | http://spoken-tutorial.org /What\_is\_a\_Spoken\_Tutorial என்ற இணைப்பில் உள்ள காணொளியை காணவும். |
11:35 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்கசொல்கிறது. |
11:38 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
11:43 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
11:48 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
11:51 | மேலும் தகவல்களுக்கு எங்களை அணுகவும் |
11:54 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
11:58 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
12:03 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro ல் கிடைக்கும் |
12:15 | இந்த டுடோரியலை தமிழாக்கம் கீதா சாம்பசிவம் குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |