PERL/C3/Exception-and-error-handling-in-PERL/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:07, 22 February 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
Narration
00:01 PERLலில், Exception மற்றும் error ஐ கையாளுதல் குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது:

errorகளை Catch செய்வது மற்றும் exceptionகளை கையாளுவது.

00:12 இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது:

Ubuntu Linux 12.04 இயங்கு தளம் Perl 5.14.2 மற்றும் gedit Text Editor.

00:23 உங்களுக்கு விருப்பமான எந்த text editorயும் பயன்படுத்தலாம்.
00:27 இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, Perl Programmingல் வேலை செய்ய தெரிந்து இருக்க வேண்டும்.
00:32 இல்லையெனில், அதற்கான Perl ஸ்போகன் டுடோரியல்களுக்கு, எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும்.
00:39 ஒரு error நிகழும் போது, சாதாரண பாதையிலிருந்து, programன் இயக்கத்தை Exception handling மாற்றுகிறது.
00:47 Applicationஐ நிறுத்தாமல், programஐ மீட்க, Error handling உதவுகிறது.
00:53 ஒரு errorஐ நாம் பல வழிகளில் அடையாளம் கண்டு, தடுக்கலாம். Perlலில் பயன்படுத்தப்படும் சில பொதுவான முறைகளைக் காண்போம்.
01:01 Warn function, நடவடிக்கை எதுவும் எடுக்காமல், எச்சரிக்கை messageஐ மட்டுமே எழுப்புகிறது.
01:07 Die function, உடனடியாக இயக்கத்தை நிறுத்தி, error messageஐ காட்டுகிறது.
01:13 நான் ஏற்கெனவே சேமித்து வைத்திருந்த ஒரு மாதிரி programஐ பயன்படுத்தி die functionஐ புரிந்து கொள்வோம்.
01:20 Terminalக்கு சென்று, டைப் செய்க: gedit die dot pl ampersand , பின் Enterஐ அழுத்தவும்.
01:29 'Die.pl' fileலில் இருக்கும் code இது தான். இப்போது codeஐ புரிந்து கொள்வோம்.
01:35 இங்கு, இரண்டு input parameterகளை எடுத்துக் கொள்ளும் divide என்கிற functionஐ வரையறுத்துள்ளோம். அவை dollar numerator மற்றும் dollar denominator
01:46 Parameter listஐ, functionக்கு தருவதற்கு பயன்படுத்தப்படும் At the rate underscore (@_), ஒரு special variable ஆகும்.
01:53 Denominator, பூஜ்ஜியமாக இருந்தால், die function, scriptஐ விட்டு வெளியேறும்.
01:57 User படிப்பதற்கு error messageஐயும் காட்டும். இல்லையெனில், outputஐ print செய்யும்.
02:05 இவை, function call statementகள் எனப்படும்.
02:08 இரண்டாவது parameter பூஜ்ஜியமாக இல்லாததனால், முதல் இரண்டு தடவை, function இயக்கப்படுகிறது.
02:15 மூன்றாவது முறை denominatorன் மதிப்பு பூஜ்ஜியமாகுகிறது. அதனால், die function இயக்கப்படுகிறது.
02:23 Die function, scriptஐ விட்டு வெளியேறுவதால், இறுதி divide function இயக்கப்படமாட்டாது.
02:29 Programஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும்.
02:32 Programஐ இயக்குவோம்.
02:35 Terminalக்கு திரும்பி, டைப் செய்க: perl die dot pl, பின் Enterஐ அழுத்தவும்.
02:43 இங்கு காட்டப்பட்டுள்ளபடி, output தெரியும். "Can't divide by zero!"
02:49 இந்த error messageஐ தான் நாம் programன் die statementல் கொடுத்துள்ளோம்.
02:54 அடுத்து, errorஐ கையாளுவதில், eval functionஐ பயன்படுத்தக் கற்போம்.
03:00 Run-time errorகள் அல்லது exceptionகளை கையாள eval function பயன்படுத்தப்படுகிறது.
03:06 உதாரணத்திற்கு, built-in errorகளான, out of memory, divide by zero அல்லது user defined errorகள்.
03:14 Eval functionனுக்கான பொதுவான syntax இங்கு காட்டப்பட்டுள்ளது.
03:19 Error message ஏதேனும் இருந்தால், அதை dollar exclamation($!) special variable கொண்டிருக்கும்.
03:25 இல்லையெனில், dollar exclamation( $!) காலி stringஐ கொண்டிருக்கும். அப்படியெனில், அது false என மதிப்பிடபடுகிறது என்று பொருள்.
03:33 ஒரு மாதிரி programஐ பயன்படுத்தி, eval functionஐ புரிந்து கொள்வோம். Terminalக்கு திரும்பவும்.
03:40 டைப் செய்க: gedit eval dot pl ampersand , பின் Enterஐ அழுத்தவும்.
03:47 Eval dot pl fileலில், திரையில் தெரியும் பின்வரும் codeஐ டைப் செய்யவும். இப்போது, அதை விளக்குகிறேன்.
03:54 இங்கு, நம் உதாரணத்தில், open FILEக்கு, “test.dat” fileஐ திறப்பதில் பிரச்சனை இருந்தால், அது die statementஐ தூண்டுகிறது.
04:05 இறுதி eval blockல் இருந்து , dollar exclamation( $!) variable வரைக்கும், Perl, system error messageஐ தருகிறது.
04:13 Fileஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும்.
04:17 Terminalக்கு திரும்பி, டைப் செய்க: perl eval dot pl, பின் Enterஐ அழுத்தவும்.
04:25 இங்கு காட்டப்பட்டுள்ளபடி, system error message தெரியும்.
04:30 மற்றொரு உதாரணத்தை காண்போம். இம்முறை, '$@' (dollar at the rate)ஐ பயன்படுத்தி, eval functionல் இருந்து ஒரு error message பெறுவதைக் காணலாம்.
04:40 Eval dot pl fileக்கு திரும்புவோம்.
04:44 திரையில் காட்டப்பட்டுள்ளபடி codeஐ டைப் செய்யவும்.
04:48 Average functionக்கு input parameterகளாக, $total மற்றும் $countஐ தருகிறோம்.
04:56 Count பூஜ்ஜியமாக இருந்தால், ஒரு errorஐ பெறக்கூடிய சாத்தியம் இருக்கிறது.
05:00 இங்கு, அது die statement மூலம் கையாளப்படுகிறது.
05:04 Evalல் இருந்து திரும்பப் பெறப்படும் error message, $@ ( dollar at the rate)ஐ பயன்படுத்தி காட்டப்படுகிறது.
05:11 இல்லையெனில், அது Average மதிப்பை print செய்யும்.
05:15 Fileஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும். Programஐ இயக்குவோம்.
05:22 Terminalக்கு திரும்பி, டைப் செய்க: perl eval dot pl, பின் Enterஐ அழுத்தவும்.
05:31 இங்கு காட்டப்பட்டுள்ளபடி, output தெரியும்.
05:35 இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கசொல்ல,
05:41 இந்த டுடோரியலில் நாம் கற்றது:

errorகளை Catch செய்வது மற்றும் exceptionகளை கையாளுவது.

05:47 பயிற்சியாக பின்வருவனவற்றை செய்யவும்.

உங்கள் Linux machineல், 5 employee பெயர்களுடன் ஒரு 'emp.txt' fileஐ உருவாக்கவும்.

05:57 'Emp.txt'ன் permissionஐ READ onlyக்கு மாற்றவும்.
06:02 கவனிக்கவும்: change permission optionக்கு, spoken tutorial வலைத்தளத்தில் உள்ள, அதற்கான Linux டுடோரியல்களைப் பார்க்கவும்.
06:10 'Emp.txt' fileஐ, WRITE modeல் திறந்து, அதற்கு சில employee பெயர்களைச் சேர்க்க, ஒரு Perl programஐ எழுதவும்.
06:19 Open அல்லது write operation தோல்வியடைந்தால், "eval"ஐ பயன்படுத்தி, தகுந்த error messageஐ print செய்யவும்.
06:26 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
06:33 Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
06:42 மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
06:46 இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது.
06:53 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
06:58 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst