Git/C3/Working-with-Remote-Repositories/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:01 | Remote repositoryகளுடன் வேலை செய்வது குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00: 06 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Remote repository என்றால் என்ன, மற்றும் |
00:12 | Remote repositoryக்கு dataவை எப்படி ஒருங்கிணைப்பது. |
00:16 | இந்த டுடோரியலுக்கு, நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 14.04 |
00:22 | Git 2.3.2, |
00:25 | gedit Text Editor, மற்றும் |
00:28 | Firefox web browser |
00:30 | உங்களுக்கு விருப்பமான editor மற்றும் web browserரை பயன்படுத்தலாம். |
00:36 | இந்த டுடோரியலுக்கு, உங்களுக்கு internet இணைப்பு வேண்டும். |
00:41 | மேலும், அடிப்படை Git commandகள் பற்றியும் தெரிந்து இருக்க வேண்டும். |
00:46 | இல்லையெனில், அதற்கான Git டுடோரியல்களுக்கு எங்கள் வலைதளத்தை பார்க்கவும். |
00:52 | முதலில், Remote repositoryஐ புரிந்து கொள்வோம். |
00:56 | internet அல்லது ஏதேனும் network ல் host செய்யப்படும் ஒரு repository, Remote repository எனப்படும். |
01:04 | இந்த மையப்படுத்தப்பட்ட repositoryஐ பயன்படுத்தி, மக்கள் எந்நேரத்திலும், உலகின் எந்தப் பகுதியிலிருந்தும், ஒரு projectல் வேலை செய்யலாம். |
01:13 | உதாரணத்திற்கு, 3 userகள், ஒரே repositoryயில் கூட்டாக பணி புரிய வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். |
01:21 | தங்கள் கணிணியில், Remote repositoryயின் ஒரு பிரதியை வைத்துக் கொள்ள, Git அனுமதிக்கிறது. |
01:28 | Clone commandஐ பயன்படுத்தி, இதைச் செய்யலாம். |
01:31 | பிறகு, local repositoryயுடன், அவர்கள் offlineல் வேலை செய்யலாம். |
01:36 | வேலை திருப்திகரமாக முடிந்தவுடன், அதை, main repositoryயுடன், திரும்ப ஒருங்கிணைக்க வேண்டும். |
01:43 | Push மற்றும் pull commandகளை பயன்படுத்தி, இதைச் செய்யலாம். |
01:48 | இந்த டுடோரியலின் முடிவில், முழு செயல்முறையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். |
01:53 | நாம் முன்னதாக உருவாக்கிய GitHub repositoryஐ முதலில், திறப்போம். |
01:59 | வலது பக்கத்தில், இந்த repositoryயின், URLஐ காணலாம். |
02:05 | இந்த, URLஐ, copy செய்வோம். |
02:08 | ஒரு local repositoryஐ உருவாக்க, URLஐ பயன்படுத்தி, இந்த repositoryயின் ஒரு பிரதி எடுக்க போகிறோம். |
02:16 | Terminalஐ திறக்கவும். |
02:18 | ஒரே Remote repositoryயில், எப்படி இரண்டு userகள் வேலை செய்யலாம் என்பதை இப்போது புரிந்து கொள்வோம். |
02:24 | இதற்கு, User1 மற்றும் User2 என்று இரண்டு directoryகளை, எனது Desktopல், நான் முன்பே உருவாக்கிவிட்டேன். |
02:33 | உங்கள் Desktopலும் அவ்வாறே செய்யவும். |
02:36 | அதே terminalலில், directoryகளை, இரண்டு வேறுபட்ட tabகளில் திறக்கிறேன். |
02:43 | முதல் tabல், டைப் செய்க: cd space User1 |
02:49 | இரண்டாவது tabஐ திறக்க, File menuஐ க்ளிக் செய்து, Open Tabஐ தேர்ந்தெடுக்கவும். |
02:55 | இரண்டாவது tabல், டைப் செய்க: cd User2 |
03:00 | Tab User1க்கு செல்வோம். |
03:03 | இப்போது, Remote repositoryன் ஒரு பிரதியை எடுப்போம். |
03:08 | டைப் செய்க: git space clone, பிறகு, copy செய்யப்பட்டURL ஐ paste செய்வோம், space இந்த commandன் முடிவில் ஒரு dot ஐ வைக்கவும். |
03:17 | அதே directoryயினுள், அதாவது, User1ல், repositoryஐ copy செய்யப் போகிறோம் என்பதனை Dot குறிக்கும். |
03:25 | இல்லையெனில், stories என்ற repository பெயரைக் கொண்ட ஒரு புது directoryஐ அது உருவாக்கிவிடும். |
03:31 | இப்போது, Enterஐ அழுத்தவும். |
03:33 | Clone command, முழு central folderஐ copy செய்து, அதை, ஒரு local repository ஆக்கிவிடும். |
03:40 | டைப் செய்க: ls. Remote repositoryயின் content, இங்கு copy செய்யப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம். |
03:48 | அடுத்து, நன்றாகப் புரிவதற்கு, இந்த repositoryயின், user name மற்றும் email idஐ நான் மாற்றுகிறேன். |
03:55 | செயல்விளக்க நோக்கத்திற்கு, priya-spoken1 மற்றும் kaushik-spoken என்று மேலும் இரு GitHub userகளை நான் முன்பே உருவாக்கிவிட்டேன். |
04:04 | அவற்றை நான் இங்கு பயன்படுத்துகிறேன். |
04:14 | Git logஐ சரி பார்க்கவும். |
04:16 | Remote repositoryயின் அதே commitகளை நீங்கள் காணலாம். |
04:21 | அதே போல், இரண்டாம் tabல் இருக்கும் directory User2க்கு repositoryஐ clone செய்கிறேன். |
04:28 | இங்கேயும், முன்பு User1க்கு செய்தது போல், user name மற்றும் email idஐ மாற்றுகிறேன். |
04:35 | அடுத்து, இந்த userகள், Remote repositoryயில் எப்படி வேலை செய்வார்கள் என புரிந்து கொள்வோம். |
04:41 | lion-and-mouse.html என்ற fileலில், User1 வேலை செய்வார் என்று வைத்துக் கொள்வோம். |
04:48 | அந்த fileஐ உருவாக்க, டைப் செய்க: gedit lion-and-mouse.html. |
04:54 | முன்னர் சேமித்து வைத்திருந்த, Writer documentலிருந்து, சில வரிகளை, இந்த fileலினுள், copy மற்றும் paste செய்கிறேன். |
05:02 | இவ்வாறே, உங்கள் fileலினுள், சில வரிகளை, நீங்கள் சேர்க்கலாம். |
05:06 | Staging areaவிற்கு fileஐ சேர்ப்போம். |
05:11 | டைப் செய்க: git add lion-and-mouse.html |
05:17 | அடுத்து, புதிதாக சேர்க்கப்பட்ட fileஐ commit செய்வோம். |
05:21 | டைப் செய்க: git commit hyphen m மேற்கோள்களுக்குள் Added lion-and-mouse.html. |
05:29 | அடுத்து, local repositoryஐ, main Remote repositoryஉடன் ஒருங்கிணைக்க வேண்டும். |
05:35 | Repositoryஐ ஒருங்கிணைப்பதற்கு முன், remoteகள் பற்றி கற்போம் |
05:40 | Remote repositoryயின் URL, Remote எனப்படும். |
05:45 | நாம் URLக்கு ஒரு nickname அதாவது புனைப்பெயரை கொடுக்கலாம். |
05:49 | நாம் பல Remote repositoryகளில் வேலை செய்யும் போது, இது பயனுள்ளதாக இருக்கும். |
05:54 | Repositoryஐ ஒருங்கிணைக்கும் போது, முழு URLஐ டைப் செய்வதற்கு பதிலாக, nicknameஐ பயன்படுத்தலாம். |
06:01 | ஒரு Remoteன் முன்னிருப்பான nickname, எப்போதும் origin ஆகும். |
06:06 | இப்போது, ஒரு Remote ஐ சேர்க்கக் கற்போம். |
06:10 | Terminalலுக்கு திரும்பவும். |
06:13 | டைப் செய்க: git remote. முன்னிருப்பாக, Remoteன் பெயர், origin என்பதை நீங்கள் காணலாம். |
06:20 | அடுத்து, ஒரு Remoteக்கு nicknameஐ எவ்வாறு சேர்ப்பது எனக் காண்போம். |
06:25 | டைப் செய்க: git remote add stories, பின் Remote repositoryயின் URLஐ டைப் செய்க. |
06:32 | இங்கு, Remote repositoryயின் பெயராகிய storiesஐ, Remoteன் பெயராக வைக்கிறேன். |
06:38 | இப்போது, Enter keyஐ அழுத்தவும். |
06:41 | மீண்டும், Remote பட்டியலை சரி பார்க்க, டைப் செய்க: git remote. |
06:46 | பட்டியலில், Remote சேர்க்கப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம். |
06:50 | இப்போது, local repositoryஐ, main Remote repositoryஉடன் ஒருங்கிணைக்கலாம். |
06:55 | அவ்வாறு செய்ய, டைப் செய்க: git push stories master |
07:00 | இங்கு, stories என்பது Remoteன் பெயர், மற்றும், master என்பது நாம் மாற்றங்களை update செய்யும் branch ஆகும். |
07:07 | இப்போது, Enterஐ அழுத்தவும். |
07:09 | User1ன், usernameஐ, priya-spoken1 என டைப் செய்து, பின் Enterஐ அழுத்துகிறேன். |
07: 17 | User1ன் passwordஐ டைப் செய்யவும். |
07:21 | செயல்விளக்க நோக்கத்திற்காக, இந்த usernameஐ நான் முன்பே உருவாக்கியதை நினைவு கூறவும். |
07:27 | உங்கள் username மற்றும் passwordஐ இங்கு பயன்படுத்தவும். |
07:31 | Unable to access என்ற errorஐ அது காட்டும். |
07:35 | ஏன் இந்த error ஏற்பட்டது? ஏனெனில், நமக்கு, Remote repositoryஐ அணுக அனுமதி கிடையாது. |
07:42 | அதனால், இப்போது, contributorகளுக்கு அணுகல் அனுமதி வழங்கக் கற்போம். |
07:48 | GitHub repositoryக்கு திரும்பவும். |
07:51 | மேல் panelலில் இருக்கும் கடைசி tabஆன Settingsஐ க்ளிக் செய்யவும். |
07:55 | இடது பக்க பெட்டியில் இருக்கும், Collaborators இணைப்பை க்ளிக் செய்யவும். |
08:00 | உறுதிப்படுத்துவதற்கு, GitHub account passwordஐ டைப் செய்யவும். |
08:04 | இங்கு text boxல், collaboratorகளின் பெயர்களை சேர்க்கலாம். |
08:10 | இந்த GitHub repositoryஐ யார் வேண்டுமானாலும், clone செய்யலாம் |
08:15 | ஆனால், நாம், collaboratorகளாக சேர்ப்பவர்கள் மட்டும்தான் repositoryக்கு push செய்ய முடியும் என்பதை புரிந்து கொள்க. |
08:21 | இப்போது, priya-spoken1 மற்றும் kaushik-spoken என்ற இரு userகளை நான் இங்கு சேர்க்கிறேன். |
08:27 | நான் text boxல் டைப் செய்யும் போது, user name பட்டியலிடப்படுவதை காணலாம். |
08:33 | Userஐ, colloboratorஆக சேர்க்க, Add Collaborator பட்டனை க்ளிக் செய்யவும். |
08:38 | kaushik-spoken userஐயும் நான் சேர்க்கிறேன். |
08:43 | சேர்க்கப்பட்ட பெயர்கள் பட்டியலிடப்பட்டு இருப்பதை நீங்கள் காணலாம். |
08:47 | இப்போது, Remote repositoryக்கு push செய்ய முயலுவோம். |
08:51 | Terminalக்கு திரும்பவும். |
08:54 | டைப் செய்க: git push stories master |
08:58 | Repositoryஐ அணுகக்கூடிய userன் username மற்றும் passwordஐ கொடுக்கவும். |
09:04 | நாம் அதை வெற்றிகரமாக push செய்திருப்பதை நீங்கள் காணலாம். |
09:08 | அடுத்து, நமது மாற்றங்கள் update ஆகிவிட்டனவா என்பதை அறிய, GitHub repositoryஐ சரி பார்க்கவும். |
09:14 | GitHub repositoryக்கு திரும்பவும். |
09:17 | Code tabஐ க்ளிக் செய்யவும். |
09:20 | Commit list'ஐ சரி பார்க்கவும். |
09:23 | Collaboratorன் commit, இங்கு பட்டியலிடப்பட்டு இருப்பதை நீங்கள் காணலாம். |
09:28 | அடுத்து, User2, எவ்வாறு Remote repositoryஉடன் colloborate செய்வார் என காண்போம். |
09:34 | Terminalக்கு திரும்பவும். |
09:37 | Friends.html fileலில், User2 வேலை செய்வதாக வைத்துக் கொள்வோம். |
09:43 | அந்த fileஐ உருவாக்க, டைப் செய்க: gedit friends.html. |
09:49 | என் writer documentலிருந்து, சில வரிகளை, இந்த fileலினுள் copy மற்றும் paste செய்கிறேன். |
09:54 | இவ்வாறே, உங்கள் fileலினுள்ளும், சில வரிகளை, நீங்கள் சேர்க்கலாம். |
09:59 | Staging areaவிற்கு fileஐ சேர்ப்போம். |
10:03 | அடுத்து, புதிதாக சேர்க்கப்பட்ட fileஐ, commit செய்வோம். |
10:07 | டைப் செய்க: git commit hyphen m மேற்கோள்களுக்குள் Added friends.html. |
10:15 | அடுத்து, local repositoryஉடன், main Remote repositoryஐ ஒருங்கிணைக்க வேண்டும். |
10:21 | டைப் செய்க: git push origin master |
10:25 | இந்தlocal repositoryக்கு, Remoteஐ நாம் சேர்க்கவில்லை என்பதை நினைவில் கொள்க. |
10:30 | அதனால், இங்கு, முன்னிருப்பான Remote பெயராகிய, originஐ பயன்படுத்துகிறோம். |
10:34 | இப்போது, Enterஐ அழுத்தவும். |
10:37 | User2ன், GitHub username மற்றும் passwordஐ டைப் செய்யவும். |
10:42 | Failed to push என்ற errorஐ அது காட்டும். |
10:46 | மேலும், errorற்கான காரணத்தையும் அது காட்டும்: the remote contains work that you do not have locally. |
10:53 | User1, முன்பே ஒரு commitஐ push செய்துள்ளார் என்பதை நினைவில் கொள்க. |
10:58 | ஆனால், User2ன் local repositoryல், User1ன் வேலை இல்லை. |
11:04 | Errorஐ திருத்த, git pull commandஐ run செய்யுமாறு அது ஆலோசனையும் தருகிறது. |
11:10 | அதனால், முதலில், User1ன் வேலையை pull செய்து, அதை, User2ன், local repositoryனுள் இணைக்க வேண்டும். அதை இப்போது செய்வோம். |
11:21 | டைப் செய்க: git pull origin master |
11:25 | முதலில், அது dataஐ Remote repositoryயிலிருந்து எடுத்து, பின், அதை, local repositoryஉடன் merge செய்துவிடும். |
11:32 | அதனால், mergingக்கு, message கொடுக்க, அது ஒரு editorஐ திறக்கும். |
11:36 | Ctrl + Xஐ அழுத்தி, அதே messageஐ தக்க வைத்து, editorஐ மூடுவோம். |
11:42 | இப்போது, மீண்டும் dataஐ push செய்ய முயலுவோம். டைப் செய்க: git push origin master. |
11:50 | User2ன், username மற்றும் passwordஐ கொடுக்கவும். |
11:54 | நாம் dataஐ வெற்றிகரமாக push செய்திருப்பதை நீங்கள் காணலாம். |
11:59 | அடுத்து, நமது மாற்றங்கள் update ஆகிவிட்டனவா என்பதை அறிய, GitHub repositoryஐ சரி பார்க்கவும். |
12:05 | GitHub repositoryக்கு திரும்பவும். |
12:08 | Stories என்ற repositoryஐ க்ளிக் செய்யவும். |
12:12 | Friends.html file, repositoryக்கு சேர்க்கப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம். |
12:18 | இப்போது, commit list ஐ சரி பார்க்கவும். |
12:21 | User2ன், commitம், இங்கு பட்டியலிடப்பட்டு இருப்பதை நீங்கள் காணலாம். |
12:26 | இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்து விட்டோம். |
12:30 | சுருங்கசொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது- |
12:35 | Remote repository மற்றும் |
12:38 | Remote repositoryக்கு dataவை எப்படி ஒருங்கிணைப்பது. |
12:42 | பயிற்சியாக, User3 என்ற வேறொரு userஐ உருவாக்கவும். |
12:47 | User3க்கு dataஐ clone செய்யவும். |
12:50 | User3ன், local repository ல் வேலை செய்ய தொடங்கவும், மேலும், |
12:54 | User3ல் இருந்து dataஐ push செய்ய முயலவும். |
12:58 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
13:03 | அதை தரவிறக்கி காணவும். |
13:05 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
13:12 | மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
13:16 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் அளிக்கிறது. |
13:22 | மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
13:27 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |