Git/C2/Merging-and-Deleting-branches/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 16:00, 23 December 2016 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
Narration
00:01 Branchகளை சேர்ப்பது மற்றும் நீக்குவது குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது, Merging.
00:10 mergingஐ திரும்ப பெறுவது, மற்றும்branchகளை நீக்குவது.
00:14 இந்த டுடோரியலுக்கு, நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 14.04
00:20 Git 2.3.2 மற்றும் 'gedit' Text Editor.
00:26 உங்களுக்கு விருப்பமான editorரை பயன்படுத்தலாம்.
00:29 இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, Gitன் அடிப்படை commandகள், மற்றும், Gitல் branching பற்றிய தெரிந்து இருக்க வேண்டும்.
00:37 இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைதளத்தை பார்க்கவும்.
00:42 முன்னர், இந்த தொடரில், branchகளை உருவாக்க கற்றோம்.
00:47 இப்போது, இரண்டு branchகளை சேர்க்க கற்போம்.
00:51 "master" branch உடன், "new-module" branch எப்படி சேர்க்கப்படுகிறது என்று, இந்த வரைபடம் விளக்குகிறது.
00:58 C9 commitல் new-module branch merge ஆகிறது.
01:01 merge ஆன பிறகு, new-moduleன் commit கள், master branchக்கு சேர்க்கப்படுகின்றன.
01:06 அதை எவ்வாறு செய்வது என பார்ப்போம்.
01:09 முதலில், நாம் முன்னதாக உருவாக்கிய, Git repository mywebpageஐ திறக்கவும்.
01:16 Terminalஐ திறக்க, Ctrl+Alt+Tஐ ஒன்றாக அழுத்தவும்.
01:20 நமது Git repositoryக்கு செல்ல, டைப் செய்க: cd space mywebpage, பின் Enterஐ அழுத்தவும்.
01:29 செயல் விளக்கத்திற்கு,html fileகளையே தொடர்ந்து பயன்படுத்துகிறேன்.
01:33 உங்களுக்கு விருப்பமான எந்த file வகையையும் பயன்படுத்தலாம்.
01:38 இப்போதிலிருந்து, terminalலில், எந்த command டைப் செய்த பிறகும், Enter key ஐ அழுத்த நினைவில் கொள்க.
01:45 git branch பட்டியலை பார்க்க, டைப் செய்க: git space branch.
01:51 masterமற்றும் new-chapter என்று இரண்டு branchகள் இருப்பதைக் காணலாம்.
01:57 இத்தொடரில், முன்னதாக உருவாக்கப்பட்ட branch new-chapter, master என்பது முன்னிருப்பான branch.
02:05 தற்போது, நாம் master' branchல் உள்ளோம்.
02:08 Git log ஐ சரி பார்க்க , டைப் செய்க: git space log space hyphen hyphen oneline
02:17 new-chapter branchக்கு சென்று, Git log ஐ பார்க்கவும்.
02:21 டைப் செய்க: git space checkout space new-chapter
02:27 டைப் செய்க: git space log space hyphen hyphen oneline
02:33 இப்போது , master, மற்றும் new-chapter branchன், commitகளை ஒப்பிடுவோம்.
02:38 இந்த நான்கு commitகளும், இரண்டு branchகளுக்கும் பொதுவாக உள்ளதன.
02:42 "Added story.html in new-chapter branch", new-chapter branchல் உள்ளது.
02:48 மற்றும், "Added chapter two in history.html", master branchல் உள்ளது.
02:54 mergingக்கு பிறகு, “Added story.html in new-chapter branch” commit , master branchஉடன் சேர்க்கப்படும்.
03:02 இப்போது,merge செய்வதை விளக்குகிறேன்.
03:05 டைப் செய்க: git space merge space master
03:09 commit messageஐ பெறுவதற்கு, Gedit தானாகத் திறக்கும்.
03:14 Gitன் core editorஆக, geditஐ அமைத்துள்ளோம் என்பதை நினைவில் கொள்க.
03:20 நீங்கள் வேறு editorஐ அமைத்திருந்தால், அது திறக்கும்.
03:26 1.9க்கு கீழே உள்ள Git versionஐ நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் எனில், editor திறக்காமல் போகலாம்.
03:33 ஆதலால் , அடுத்த படியை நீங்கள் தவிர்க்கலாம்.
03:36 நான் முன்னிருப்பான commit messageஐயே பயன்படுத்துகிறேன்.
03:40 mergingக்கு தொடர்புள்ள வேறு தகவலைக் கொடுக்க வேண்டுமெனில், அதை இங்கு டைப் செய்யவும்.
03:46 இப்போது, editorஐ, சேமித்து மூடவும்.
03:50 மறுபடியும், Git log ஐ சரி பார்க்கவும்.
03:54 master branchன் commitகள் யாவும், new-chapter branchஉடன் merge செய்யப்பட்டு விட்டதை காணலாம்.
04:00 mergingக்கு, ஒரு commit messageஐயும் காணலாம்.
04:04 அடுத்து master branchக்கு சென்று commitகளை சோதிப்போம்
04:09 டைப் செய்க: git space checkout space master
04:14 Git log ஐ சரி பார்க்கவும்.
04:17 இங்கு, new-chapter commitகளுடன், master branch commitகளையும் பார்த்திருக்க வேண்டும்.
04:22 ஆனால், Git log , master branch commitகளை மட்டுமே காட்டுகிறது.
04:27 நாம், master branchஉடன், new-chapter branchஐ சேர்த்திருக்க வேண்டும்.
04:32 ஆனால், நாம், எதிர்மறையாக சேர்த்துவிட்டோம்.
04:36 அதனால் தான், master branchல், merging commit ஐ காண முடியவில்லை.
04:41 அதனால், இந்த mergingஐ எப்படி திரும்ப பெறுவது?
04:45 அதற்கு, new-chapter branchக்கு திரும்பச் செல்ல வேண்டும்.
04:50 டைப் செய்க: git space checkout space new-chapter
04:54 mergeஐ திரும்ப பெற, டைப் செய்க: git space reset space hyphen hyphen hard space HEAD tilde
05:04 HEAD என்பது சமீபத்திய revision, மற்றும், HEAD tilde என்பது சமீபத்திய minus 1 revision என்பதை நினைவில் கொள்க.
05:12 அதனால்,mergingன் முந்திய revision ஐ பெற நாம் HEAD tildeஐ பயன்படுத்தியுள்ளோம்.
05:18 மீண்டும், Git log ஐ சரி பார்க்கவும்.
05:22 merging புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
05:26 இப்போது, master branchக்கு, new-chapter branchஐ, merge செய்வோம்.
05:31 master branchக்கு செல்ல, டைப் செய்க: git space checkout space master
05:38 மறுபடியும், Git log ஐ சரி பார்க்கவும்.
05:42 merge செய்ய, டைப் செய்க: git space merge space new-chapter.
05:48 geditல், merging commit messageஐ கொடுக்கவும்.
05:52 பிறகு, editorஐ, சேமித்து மூடவும்.
05:55 மீண்டும், Git log ஐ சரி பார்க்கவும்.
05:58 master branchக்கு, new-chapter branch வெற்றிகரமாகக் merge செய்யப்பட்டிருப்பதைக் காணலாம்.
06:05 மீண்டும், merge செய்ய முயலுவோம்.
06:08 டைப் செய்க: git space merge space new-chapter
06:13 “Already up-to-date” என்ற தகவலைக் காணலாம்.
06:17 நாம் merge செய்துவிட்டோமா என்பதைக் கண்டறிய இது ஒரு நல்ல வழி.
06:22 merging, செய்த பிறகு, new-chapter branchஐ, Git repositoryலிருந்து நீக்கிவிடலாம்.
06:28 branchஐ நீக்க, டைப் செய்க: git space branch space hyphen d space new-chapter
06:36 மறுபடியும், branch listஐ சரி பார்க்க, டைப் செய்க: git space branch
06:43 new-chapter branchஐ இனி காண முடியாது, ஏனெனில், அது நீக்கப்பட்டுவிட்டது.
06:48 merging செய்யாமல் branchஐ நீக்க, lowercaseல் hyphen d கு பதிலாக uppercaseல் hyphen Dஐ பயன்படுத்தவும்.
06:56 இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்து விட்டோம்.
07:00 சுருங்கசொல்ல,
07:02 இந்த டுடோரியலில் நாம் கற்றது, Merging, mergingஐ திரும்ப பெறுவது, மற்றும்branchகளை நீக்குவது.
07:09 பயிற்சியாக, நாம் முந்தைய பயிற்சியில் உருவாக்கிய, branch chapter-two ன், commitகளை சரி பார்க்கவும்.
07:16 அதை master branch உடன் merge செய்து, chapter-two branchஐ நீக்கவும்.
07:22 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது.
07:27 அதை தரவிறக்கி காணவும்.
07:30 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
07:38 மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
07:41 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது.
07:48 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
07:53 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst