Drupal/C2/Overview-of-Drupal/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | வணக்கம், “Drupal” மீதான ஒரு மேலோட்ட பார்வை குறித்த tutorialக்கு நல்வரவு. |
00:06 | இந்த tutorial லில் நாம் கற்கபோவது Content Management System, Drupal |
00:13 | Drupalன் முக்கிய அம்சங்கள் மற்றும் இந்த முழுத்தொடரின் மீதான ஒரு மேலோட்ட பார்வை |
00:19 | முதலில் Drupal என்றால் என்ன என பார்ப்போம். Drupal ஒரு கட்டற்ற open source Content Management System (CMS). |
00:30 | CMS என்றால் என்ன? Web வந்த முதல் காலத்தில் websiteன் உள்ளடக்கத்தை serverல் நிறைய html files ஆக வைத்திருந்தோம் |
00:40 | அப்போது ஒவ்வொரு webpageக்கும் தனியாக ஒரு html file இருக்கும் |
00:47 | இப்போது அதெல்லாம் மாறிவிட்டது. ஒவ்வொரு page உம் வெவ்வேறு componentகளை சேர்த்து காட்டப்படுகிறது |
00:55 | இந்த componentகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு இடங்களில் இருந்து வரலாம். |
01:00 | இந்த componentகள் எல்லாம் சில programming logic ஆல் சேர்க்கப்படுகின்றன |
01:06 | நீங்கள் பார்க்கும் ஒரே page, desktop ல் ஒருமாதிரியும் mobileலில் வேறு மாதிரியும் இருக்கலாம் |
01:14 | அதுமட்டும் இல்லாது, யார் எங்கிருந்து பார்க்கிறார்களோ அது பொருத்தும் இது மாறும். உதாரணமாக நீங்கள் இந்தியால் இருந்து பாக்கலாம் |
01:23 | அல்லது சிங்கப்பூரில் இருந்தும் பாக்கலாம். ஆனால் நீங்கள் பார்க்கும் இடத்தைபொருத்து ஒரே page வேறுவேறு மாதிரி தெரியும் |
01:32 | இதற்கு பின்னால் இருக்கும் logicதான் CMS. |
01:37 | இது PHP, Ajax, Javascript போல வெவ்வேறு programகளை வைத்து கட்டப்படுகிறது. |
01:47 | வழக்கமாக எல்லா CMSஉம் websiteன் உள்ளடக்கத்தை ஒரு databaseல் சேமித்து வைக்கும் |
01:55 | நாம் webpage ல் பார்க்கும் layout, database ல் இருக்காது. அது தனியாக செய்யப்படும் |
02:00 | Programming தெரியாதவர்கள்கூட CMS மூலம் websiteஐ சுலபமாக நிர்வகிக்கலாம் |
02:07 | இது போல ஒரு கட்டற்ற open source CMSதான் Drupal |
02:15 | இதை யார்வேண்டுமானாலும் download செய்து code ஐ மாற்றலாம் |
02:18 | Dries Buytaert 2000ல் அவர் மாணவராக இருந்தபோது Drupalஐ உருவாக்கினார் |
02:24 | இது open source ஆக இருப்பதால் லட்சக்கணக்கான மக்கள் இதை எடுத்து மாற்ற முடிந்தது |
02:32 | அந்த ஒவ்வொருவரும் சிறுசிறு மேம்பாடுகள் செய்து Drupal communityக்கு தருகின்றனர் |
02:37 | மிகப்பெரிய நெருக்கமாக உள்ள open source communityகளில் Drupal community ம் ஒன்று |
02:43 | இந்த communityல் உள்ள developerகள், site-builderகள், volunteerகளால் உருவாக்கப்பட்டதுதான் இந்த Drupal 8 |
02:51 | Drupal பற்றி இப்படி சொல்வதுண்டு “Come for the code, stay for the community” |
02:58 | நீங்களும் இதே காரணத்துக்காக இந்த சமூகத்தில் இணையக்கூடும். |
03:02 | அடுத்து Drupal இன் 10 சிறப்பு அம்சங்களைக் காண்போம் |
03:06 | Number 1: Drupal இலவசமானது. இது முழுக்க முழுக்க open source. |
03:11 | யார் வேண்டுமானாலும் source codeஐ தரவிறக்கி மாற்றிக்கொள்ளலாம். |
03:15 | நீங்கள் ஒரு developer ஆக இருந்தாலும் ட்ருபல் மிகவும் பயனுள்ளது. |
03:20 | Number 2: Drupal நெகிழ்ந்து கொடுக்கும். |
03:24 | இன்றைய adaptive systemகளில் Drupalஉம் ஒன்று. |
03:28 | ட்ருபல் தனிப்பட்ட டேடாபேஸ்களை கொண்ட மிக நவீன website களுடன் நன்கு வேலை செய்கிறது. |
03:35 | Developerகள் இதை CMS ஆகவும் web development platform ஆகவும் பயன்படுத்துகிறார்கள். |
03:42 | Number 3: Drupal mobileக்கு பொருத்தமானது. |
03:46 | நம் ட்ருபல் site இன் எந்த பக்கத்தையும் எந்த mobileல் இருந்தும் பார்த்து மேலாள முடியும். |
03:54 | Number 4: Drupal பெரிய project களுக்கு பிரமாதமானது. |
04:00 | whitehouse.gov முதல் weather.com மற்றும் Dallas Cowboys வரை எந்த project ஆனாலும் ட்ருபல் ஆல் கையாள முடியும். |
04:08 | Drupal சிக்கலான பெரிய websiteகளுக்கும் பொருத்தமானது. |
04:12 | பல அம்சங்களை கொண்ட websiteஐ பெற நினைப்பவர்களுக்கு இது சிறந்த தீர்வுகளில் ஒன்று. |
04:19 | பெரிய வியாபாரிகளுக்கும் இது பொருத்தமானது. |
04:24 | Number 5: Drupal சுலபமானது, தேடலுக்கும் இடம் தரும். |
04:29 | என் site ஐயும் contentஐயும் கண்டுபிடிக்க ட்ருபல் மக்களுக்கு உதவுகிறது |
04:34 | tagகள், description, keywords, மனிதருக்கு இசைவான URL களை சேர்க்கவும் site editorகளுக்கு அனுமதி தருகிறது. |
04:45 | Number 6: Drupal மிகவும் பாதுகாப்பானது. |
04:50 | Drupal நம் site ஐ பாதுகாப்பாக வைக்கிறது. இதற்கு security updates, hash passwords, |
04:57 | permissions மாறும் போது மாறும் session IDs , |
05:01 | பயனர் உள்ளிடுவதை கட்டுப்படுத்த text format permissions போன்றவை பயனாகும். |
05:07 | Drupal க்கு பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. |
05:11 | Number 7: Drupal site ஐ எளிதாக விரிக்கலாம். site இன் அம்சங்களை மேம்படுத்த ஆயிரக்கணக்கான Modules உள்ளன |
05:18 | எந்த அம்சத்தை நினைத்தாலும் பெரும்பாலும் யாரோ ஒருவர் அதற்கான 'Module' ஐ இலவசமாக கிடைக்க உருவாக்கியிருப்பார். |
05:27 | ஒரே siteல் பல 'Theme' கள் ஒரு 'Theme' இன் பல பதிப்புகள் இருக்கலாம். இருந்தாலும், உங்கள் website data வின் visual presentation கட்டுப்பாட்டில் இருக்கும். |
05:40 | Number 8: உதவி தேவையானால் உதவ Drupal ச் சுற்றி ஒரு பெரிய சமூகம் உள்ளது! |
05:48 | 'Drupal நிகழ்வுகள் உலகம் முழுவதும் நடக்கின்றன. |
05:52 | உள்ளூர் நிகழ்வுகள் 'Drupal முகாம் எனப்படும். |
05:55 | ஒவ்வொரு ஆண்டும் முக்கிய DrupalCons உலகம் முழுவதும் நடக்கின்றன. |
06:01 | சுறுசுறுப்பான Forums, User Groups மற்றும் IRC chats ஆகியன Drupal உதவிக்கு அர்ப்பணிக்கப்பட்டவையாக உள்ளன. |
06:08 | Number 9: சில மிகப் பெரிய, அனுபவமுள்ள நிறுவனங்கள் Drupal ஐ சுற்றி உள்ளன. |
06:15 | இந்த தொடருக்கு பங்குதாரரான 'Acquia' ஒரு பெரிய 'ட்ருபல்' நிறுவனம் ஆகும். |
06:21 | இந்தியாவில் அறுபது Drupal சேவை நிறுவனங்கள் உள்ளன. மேலும் Drupal அறிந்த நூற்றுக்கணக்கானோர் உள்ளனர். |
06:32 | Number 10: Drupal எங்கும் உள்ளது. இந்த பதிவு நேரத்தில் 1.2 மில்லியன் வலைத்தளங்கள் உள்ளன. |
06:40 | 'முழு web இல் 3 சதவீதமும் முதல் பத்தாயிரம் வலைத்தளங்களில் 15 சதவீதமும் Drupal இல் இயங்குகின்றன. |
06:50 | Drupal அரசாங்கங்கள், கல்வி, இலாபமில்லாத மற்றும் பெரிய நிறுவனங்கள் இடையே மிகவும் பிரபலமாக உள்ளது. |
06:58 | இந்த tutorial தொடரில், நாம் பின்வருவனவற்றை கற்போம். Drupal ஐ எவ்வாறு நிறுவுவது |
07:04 | இதில் Drupal ஐயும் மற்றும் பிற தொடர்புடைய softwareஐயும் நிறுவ கற்போம் |
07:10 | கிட்டத்தட்ட யார் வேண்டுமானாலும் இதை செய்யலாம். நீங்கள் Linux அல்லது Windows adminஆக இருக்க தேவையில்லை. |
07:18 | content workflow - Drupalல் ஒரு websiteன் அடிப்படை உள்ளடக்கத்தை ஒழுங்கு செய்ய இதில் கற்போம். |
07:26 | ஒரு word processor இல் edit செய்வது போல எளிய website contentஐ உருவாக்குவோம். |
07:34 | Drupal ஐ தனித்த சக்தி வாய்ந்ததாக ஆக்கும் அம்சங்கள் சிலதை கற்போம். |
07:40 | அவை content, program ஆல் வடிவமைக்கப்பட்ட பல contentகளின் display இவற்றுள் உறவுகள் முதலியன. |
07:49 | Drupal ஐ எவ்வாறு ' extend செய்வது, Drupal இன் இரண்டாவது மிக சக்தி வாய்ந்த அம்சம் Modules அல்லது Extensions. |
07:56 | முன்பே குறிப்பிட்டது போல் உங்களுக்கு தேவையான எல்லாவற்றுக்கும் ஒரு Module , ஒரு app போல உண்டு. |
08:05 | ஆயிரக்கணக்கில் உள்ள 'Module' களில் எப்படி நம் நோக்கத்திற்காக ஒரு 'Module' ஐ தேர்வு செய்வது என்று கற்போம். |
08:13 | site இல் எப்படி 'layout' செய்வது, அடிப்படை உள்ளடக்கம் மற்றும் அம்சங்கள் தயாரான பின் அதை ஒரு அழகான காட்சியாக செய்ய வேண்டும். |
08:24 | 'layout' பகுதியில் website இன் தோற்றத்தை மாற்றவது எவ்வளவு எளிது என காண்போம். |
08:31 | 'Module' கள் போலவே layout அல்லது Themeகள் சமூக பங்களிப்பால் கிடைக்கின்றன. |
08:38 | 'people' ஐ எப்படி நிர்வகிப்பது |
08:40 | ஒற்றை பயனர் சார்ந்த 'CMS' போலல்லாமல் WordPress, Drupal போன்றவற்றில் பல பயனர்கள் website இல் பலதையும் செய்யலாம் |
08:53 | 'people' management பகுதியில் வெவ்வேறு roleகள் அமைத்து அவற்றிற்கு வெவ்வேறு permissions கொடுக்க கற்போம். |
09:01 | site ஐ எவ்வாறு manage செய்வது; இந்த கடைசி பகுதியில் நாம் Drupal'ன் code ஐ நிர்வகிக்க கற்போம் |
09:11 | பாதுகாப்பு, நிரந்தரத்தன்மைக்கு site ஐ அடிக்கடி update செய்தல் முக்கியம். |
09:17 | புதிய அம்சங்களை siteல் அமைப்பது சுலபமாக பயன்படுத்த உதவும். |
09:24 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
09:28 | சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது: Drupalக்கு அறிமுகம், Drupal ன் முக்கிய அம்சங்கள் மற்றும் இந்த முழுத்தொடரின் மீதான ஒரு மேலோட்ட பார்வை |
09:41 | இந்த வீடியோ 'Acquia' மற்றும் 'OSTraining' இல் இருந்து எடுக்கப்பட்டு ஸ்போகன் டுடோரியல் திட்டம், ஐஐடி பாம்பே-ஆல் மாற்றப்பட்டது. |
09:51 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
09:59 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி பரிட்சையில் தேர்வோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
10:11 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம். |
10:24 | இந்த டுடொரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி. |