Drupal/C3/Styling-a-Page-using-Themes/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:25, 7 October 2016 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம், Themeகள் மூலம் பக்கத்தை வடிவமைத்தல் குறித்த Spoken tutorialக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது

themeகளுக்கு அறிமுகம் themeகளை தேடுதல் மற்றும் ஒரு basic themeஐ நிறுவுதல்.

00:16 இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:

Ubuntu இயங்குதளம் Drupal 8 மற்றும் Firefox Web browser.

உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம்.
00:30 ஏற்கனவே நாம் சொன்னதுபோல, Drupal website ஐ நமக்கு தேவையானவாறு காட்டலாம்.
00:36 இவை சில Drupal siteகளின் தோற்றம்.
00:42 அவை ஒவ்வொன்றும் முற்றிலும் வித்தியாசமாக இருப்பதைக் காண்க.
00:45 இவை Theme மூலம் செய்யப்படுகின்றன.
00:48 Themeகள் மூலம் site ஐ நமக்கு தேவையானவாறு காட்டலாம்.
00:51 இங்கு Themesல் நினைவில் வைக்கவேண்டிய சில உள்ளன.
00:55 நாம் சில இடங்களில் இருந்து Themesஐ பெறலாம்.

drupal.org ல் இலவசமாக Themes கிடைக்கும் அவை Contributed Themes எனப்படும் அல்லது, விற்பனையாளர்களிடமிருந்து காசு கொடுத்தும் வாங்கலாம்.

01:11 அல்லது, Artisteer.comல் இருந்து Artisteer போன்ற Themeஐ நாமே உருவாக்கிகொள்ளலாம்
01:19 Contributed Themeகள் drupal.org/project/themes ல் கிடைக்கும்.
01:26 Theme மூலம் Block Regions நிர்ணயிக்கப்படுகின்றன
01:29 எனவே websiteல் எங்கு Blocksஐ வைக்கிறோம் என்பது theming processன் ஒரு பகுதி.
01:36 தேவையான region இல்லையெனில் அது Theme ன் பிரச்சனை, Blockன் பிரச்சனை இல்லை.
01:42 இப்போது Themes பற்றி மேலும் அறிந்துகொள்வோம்.
01:46 drupal.orgல் சில சிறப்பான இலவச themeகளை நாம் பெறலாம்.
01:51 drupal.org/project/themesக்கு செல்க.
01:56 இங்கு கிடைக்கும் சில Themesஐ காண்போம்.
02:01 முன்னர் Modules டுடோரியலில் நாம் பயன்படுத்தும் Drupal பதிப்பிற்கு பொருந்தும் Core compatibility ஐ நாம் filter செய்தோம் என்பதை நினைவுகொள்க.
02:10 இங்கு 2000க்கும் மேற்பட்ட Themes உள்ளன. இந்த டுடோரியலை பதிவு செய்யும் போது Drupal 8 க்கு எண்ணிக்கை குறைவு.
02:18 ஆனால் நீங்கள் பார்க்கும்போது எண்ணிக்கை அதிகரித்திருக்கும்.
02:25 அடுத்து Themeகளை தேடி மதிப்பிட கற்போம்.
02:30 இவையும் Moduleகள் போன்றதே
02:33 இங்கு drupal.orgல் ஆரம்பிப்போம்.
02:36 இப்போது Core compatibility மூலம் filte செய்தால், அவை Most Installed மூலம் sort செய்யப்படுகின்றன.
02:43 எனக்கு Adaptive Theme முதலில் வருகிறது
02:46 பின்னர் Bootstrap வருகிறது.
02:50 Bootstrapஐ க்ளிக் செய்க
02:53 Module tutorialகளில் நாம் பார்த்த DMVஐ நினைவுகொள்க. இங்கேயும் அதையே பயன்படுத்த வேணடும்.
02:59 முதலில் documentationஐ படிக்கவும்.
03:02 பின் Maintainersஐ பார்க்கவும்.
03:05 அதன் பின் versions மற்றும் project informationsஐ காண்க
03:08 இந்த டுடோரியலை பதிவு செய்யும் போது இந்த Themeக்கு Drupal 8 x 3.0 alpha 1 version இருக்கிறது
03:16 ஒரு development version உம் உள்ளது.
03:20 நீங்கள் காணும்போது இந்த Themeன் Drupal 8 பதிப்பு இந்த பச்சை பகுதியில் காணலாம்.
03:27 Contributed Themeல் மூன்று வகை Themeகள் உள்ளன.
03:34 முதலாவது simple Contributed Theme இதை நீங்கள் configure செய்யலாம்.
03:40 இரண்டாவது Bootstrap அல்லது Zen போன்ற Starter Themes
03:46 இது நம் CSS ஐ சேர்க்க ஒரு காலி screen ஐயும் சிறிய frameworkஐயும் கொடுக்கும்.
03:52 மூன்றாவது Base Theme. இதில் மற்ற Sub-Themeகளையும் சேர்க்கலாம். இதற்கு உதாரணம் Adaptive Theme..
04:02 ஆனால் அனைத்திற்கும் கட்டளைகள் பொதுவானது.
04:05 documentationஐ படிக்கவும் Maintainersஐ காணவும் versionsஐ கவனிக்கவும்.
04:11 இப்போது ஒரு Contributed Themeஐ நிறுவுவோம்.
04:13 drupal.org/projects/zirconக்கு செல்வோம்.
04:20 கீழே வரவும். இது குறிப்பாக Drupal 7 மற்றும் 8க்காக உருவாக்கப்பட்ட ஒரு நல்ல Theme.
04:28 இது பல siteகளில் பயன்படுத்தப்படவில்லை.
04:31 இது Drupal 8க்கு தயாராக உள்ளது இதை நாம் பயன்படுத்துவோம்.
04:37 tar.gz ல் right-click செய்து அந்த linkஐ copy செய்க. இது Moduleகளை நிறுவுவது போன்றதே. நம் siteக்கு வருவோம்.
04:47 இம்முறை க்ளிக் செய்க Appearance பின் Install new theme.
04:52 மீண்டும் Modulesல் செய்தது போலவே.
04:56 URLஐ paste செய்து Installஐ க்ளிக் செய்க.
05:00 அந்த Theme நம் web serverல் download ஆகிவிட்டது அதை செயலுக்கு கொண்டுவருவோம்.
05:06 Install newly added themesஐ க்ளிக் செய்க
05:09 கீழே அடியில்
05:12 Zirconஐ காணலாம்.

"A flexible, recolorable theme with many regions and a responsive mobile first layout".

05:21 Install and set as defaultஐ க்ளிக் செய்க.
05:25 ஏற்கனவே நாம் சொன்னது போல-

புது Themesஐ நிறுவினால் contentல் மாற்றம் ஏதும் இருக்காது Blocksஐ மட்டும் இடம் மாற்றவேண்டியதாக இருக்கும்.

05:38 அடுத்து settings பற்றி சற்று காண்போம்
05:42 இங்கு Settingsஐ க்ளிக் செய்க.
05:45 இங்கு Zirconன் TOGGLE DISPLAY மற்றும்
05:49 shortcut iconன் settingsஐ காணலாம்.
05:51 logo ஐ மாற்ற வேண்டுமெனில் அதற்கு Global settingsக்கு சென்று
05:56 LOGO IMAGE SETTINGSல் மாற்றலாம்
05:59 Saveஐ க்ளிக் செய்க
06:02 பின் நம் siteக்கு வருவோம்.
06:04 இதுதான் Zircon - Drupal க்கான சுலபமான சிறப்பான ஒரு Theme.
06:11 க்ளிக் செய்க Structure பின் Blocks.
06:15 Demonstrate block regions for Zirconஐ க்ளிக் செய்க
06:19 இங்கு பல Block regionsஐ காணலாம்.
06:22 ஒரு Header region. Main menu Block Regionல் Main menuஐ வைக்க வேண்டும். அப்போது தான் அது சரியாக தோன்றும்
06:32 ஒரு Slideshow region உள்ளது, View Slideshow போன்று ஏதேனும் இருந்தால் இதை பயன்படுத்தலாம்.
06:37 ஒரு Featured block region,
06:39 Help,

Sidebar First, Sidebar Second, Content,

06:44 Panel First,

Panel Secondல் column 1, 2, 3 மற்றும் 4. பின் Footer region.

06:53 நம் default Themeல் இருந்த சில regionகள் இதில் இல்லை என்பதைக் காண்க.
07:00 இதில் என்னென்ன செய்யவேண்டும் என்பதைக் காணலாம்.
07:03 Header regionல் பல உள்ளன. "Powered by Drupal" blockஐ Footer regionல் முன்னர் வைத்தோம். இப்போது அது headerல் உள்ளது.
07:14 மீண்டும் அதை Footerல் வைப்போம்
07:17 உடனே அது Headerல் இருந்து சென்றுவிடுகிறது
07:20 Status messages Header ல் இருந்து Messagesக்கு மாற்றுவோம்.
07:26 Footer menuஐ மீண்டும் Footerல் வைப்போம்.
07:30 Search, Site branding, User account menu ஆகியவை அங்கேயே இருக்கட்டும்.
07:36 Primary menu தவறான இடத்தில் உள்ளது. அதை சரிபார்ப்போம்.
07:42 Save blocksஐ க்ளிக் செய்க
07:44 நம் siteக்கு வருவோம்.
07:47 இங்கு Main menu காணவில்லை. ஏனெனில் இந்த Themeல் Primary menu இல்லை.
07:55 எனவே நம் Main navigationஐ எடுத்து அதை Main menuக்கு மாற்றுவோம்.
08:01 கீழே வந்து அனைத்தையும் ஒருமுறை சரிபார்ப்போம்
08:05 Content areaல், Help block உள்ளது.
08:09 அதை Helpல் வைப்போம்.
08:12 Page title, Primary admin actions மற்றும் Page Tabs சரியாக உள்ளன.
08:18 Sidebar firstல் Welcome to Drupalville, Book navigation, Recent Events Added மற்றும் Tools உள்ளன.
08:26 Tools menu Sidebar secondல் வைப்போம்

இதை முன்னர் செய்யவில்லை.

08:34 இங்கு நான்கு Panel regions உள்ளன. அவற்றில் நாம் தேவையானவற்றை வைக்கலாம்.
08:39 Save blocksஐ க்ளிக் செய்க
08:41 நாம் மாற்றியவற்றை சரிபார்ப்போம்.
08:44 இப்போது சரியாக உள்ளது.
08:47 Main menu block regionல் நம் menuஐ சரியாக வைத்துள்ளோம்

சில வண்ணங்களை சேர்த்து ஒரு in-line menu CSS கொடுக்கிறது.

08:58 BOOK NAVIGATION, RECENTLY ADDED EVENTS இடப்பக்கம் உள்ளன.
09:03 TOOLS வலப்பக்கம் உள்ளது. இடப்பக்கம் Sidebar first வலப்பக்கம் Sidebar second உள்ளது
09:10 அனைத்து content ம் நடுவில் உள்ளன.
09:12 இங்கு மேலும் சிலவற்றை தெரிந்துகொள்ள வேண்டும்.
09:15 நம் themesஐ மாற்றினால் contentஐ தவிர அனைத்தும் மாறிவிடும்.
09:20 புது fonts, புது font styles, புது H3 tags, புது Block regions, layouts மற்றும் புது Footer area.
09:31 ஆனால் நம் content மற்றும் contentன் layout மாறுவதில்லை.
09:37 அவற்றை மாற்ற, Panels அல்லது Display fieldsஐ பயன்படுத்த வேண்டும்

அவை drupal.orgல் கிடைக்கும் add-on Moduleகள் ஆகும்.

09:48 Themeகள் அற்புதமானவை. இப்போது இது ஒரு simple theme.

ஆனால் Drupalக்கு சில சிக்கலான themeகளும் உள்ளன.

09:58 drupal.org/project/themesக்கு வருவோம். சில Drupal 8 themeகளைக் காண்போம்.
10:08 உங்களுக்கு விருப்பமான சில themeகளை நிறுவி அவற்றில் வேலை செய்து பார்க்கவும்.
10:13 themeகள் ஒரு siteல் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என அறிய இதுசிறந்த வழி.
10:21 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
10:24 சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது:

themeகளுக்கு அறிமுகம் themeகளை தேடுதல் மற்றும் ஒரு basic themeஐ நிறுவுதல்.

10:45 இந்த வீடியோ 'Acquia' மற்றும் 'OSTraining' இல் இருந்து எடுக்கப்பட்டு ஸ்போகன் டுடோரியல் திட்டம், ஐஐடி பாம்பே-ஆல் மாற்றப்பட்டது.
10:54 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
11:00 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி பரிட்சையில் தேர்வோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
11:08 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின்

NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம்.

11: 19 இந்த டுடொரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst