Drupal/C2/Creating-New-Content-Types/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:49, 7 October 2016 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம், புது Content Typeகளை உருவாக்குதல் குறித்த Spoken tutorialக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது:

ஒரு புது Content typeஐ உருவாக்குதல் மற்றும் Content typeக்கு fieldகளை சேர்த்தல்.

00:15 இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:

Ubuntu இயங்குதளம் Drupal 8 மற்றும் Firefox web browser. உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம்.

00:29 நாம் ஏற்கனவே உருவாக்கிய websiteஐ திறப்போம்.
00:34 இப்போது built-in Content typeகள் பற்றியும், சில custom Content typeகளை உருவாக்கவும் கற்போம்.
00:41 Content typeக்கான அறிமுகத்தை நினைவுக்கு கொண்டுவரவும்.
00:45 bodyல் அனைத்தையும் வைக்கக்கூடாது என்பதை பார்த்தோம்
00:49 இப்போது custom Content typeஐ உருவாக்க கற்போம்
00:55 உலகத்தில் நடக்கும் அனைத்து drupal நிகழ்ச்சிகளையும் காட்டும்படியான ஒரு Events Content typeஐ உருவாக்குவோம்.
01:02 முதலில், இந்த Content typeக்கு நாம் பயன்படுத்தப்போகும் fieldகளை ஒரு paper ல் வடிவமைப்போம்.
01:09 Drupalல் ஒரு Content typeஐ உருவாக்கும் முன் இவ்வாறு செய்வது ஒரு நல்ல பழக்கம்.
01:16 Field Name, Field Type, மற்றும் Purpose என்ற columnகளை கொண்ட ஒரு tableஐ உருவாக்கவும்.
01:23 அனைத்து Drupal nodeலும் முன்னிருப்பாக Title மற்றும் Body fieldகள் இருக்கும்.
01:29 Event Nameஐ தனித்துக் காண அதற்கு Title fieldஐ பயன்படுத்தலாம்.
01:36 நிகழ்ச்சி பற்றிய விளக்கம் கொடுக்க Event Descriptionக்கு Body fieldஐ பயன்படுத்தலாம்.
01:43 அந்த நிகழ்ச்சிக்கு logoஐ காட்ட Event Logo க்கு Imageஐ பயன்படுத்தலாம்.
01:50 நிகழ்ச்சியின் ஆரம்ப மற்றும் முடிவு தேதிகளைக் காட்ட Date typeல் ஒரு Event Date தேவை.
01:58 நிகழ்ச்சிக்கு ஒரு Event Website இருக்கலாம். அது ஒரு URL link.
02:07 இந்த ஐந்து fieldகளை மட்டும் இப்போது காண்போம், பின்வரும் டுடோரியலில் இந்த fieldகளை சேர்க்க காண்போம்.
02:17 ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு User Group ஆல் வழங்கப்படும். User Group என்ற ஒரு Content typeஐ அடுத்த டுடோரியலில் உருவாக்க கற்போம்.
02:27 இரு வெவ்வேறு content typeன் nodeகள் Entity Reference fieldஐ பயன்படுத்தி இணைக்கப்படுகிறது.
02:35 Event Topic ஒரு Taxonomy field. இது அந்த நிகழ்ச்சியை பல்வேறு keywordகள் மூலம் வகைப்படுத்த உதவுகிறது.
02:44 இப்போது Structure ல் க்ளிக் செய்து பின் Content typesல் க்ளிக் செய்க
02:50 இவை இரண்டும் அடிப்படை Content typeகள்
02:53 Add content type buttonஐ க்ளிக் செய்க
02:57 இந்த புது Content type Events என்போம்
03:02 Descriptionல் டைப் செய்க -"This is where we track all the Drupal events from around the world".
03:11 உங்கள் விருப்பம் போல இங்கே டைப் செய்யலாம்.
03:15 இந்த Description அந்த Content type pageல் தோன்றும்.
03:20 Drupal இதற்கு ஒரு Machine name கொடுப்பதையும் காணலாம் இங்கே அது events.
03:28 அடிப்படையில் அந்த contentக்கு Drupal assign செய்த databaseல் உள்ள tableன் பெயர்தான் இந்த Machine name.
03:36 Submission form settingsல் Title Event Name என மாற்றுவோம்
03:43 Publishing optionsல் Create new revisionக்கு ஒரு checkmarkஐ கொடுப்போம்
03:49 அதாவது ஒவ்வொரு முறையும் node மாற்றப்படும்போது ஒரு புது பதிப்பு உருவாக்கப்படும்.
03:55 மற்ற அமைப்புகளை அவ்வாறே விடுகிறேன். Display author and date informationல் checkmarkஐ நீக்குவோம்
04:02 இப்போதைக்கு இது தேவையில்லை. இங்கே ஒவ்வொரு Content typeக்கும் நான் ஒன்றை பரிந்துரைக்கிறேன்
04:09 Menu settingsஐ க்ளிக் செய்து Available menusல், அனைத்து optionகளிலும் checkmarkஐ நீக்குவோம்.
04:17 இது ஆயிரக்கணக்கான event'களை நம் menu structureக்கு content editor மூலம் சேர்ப்பதை தவிர்க்கும்
04:24 நம் menu item க்கு ஒரு eventஐ சேர்க்க மற்றவர்களுக்கு அனுமதி இல்லை என்பதை உறுதிசெய்கிறது.
04:31 பின்னர் ஒரு eventஐ சேர்க்கவேண்டுமெனில் நாமாகவே அதை செய்யவேண்டும்.
04:37 Save and manage fieldsஐ க்ளிக் செய்க
04:40 Events Content typeஐ சேமித்த பின் Body fieldஐ காண்போம்.
04:45 வலப்பக்கம் Edit ஐ க்ளிக் செய்க. Label Event Description என மாற்றுவோம்
04:55 அடியில் Save settings buttonஐ க்ளிக் செய்க.
04:59 Drupalல் நம் முதல் Custom Content typeஐ உருவாக்கியுள்ளோம்.
05:04 இப்போதைக்கு basic pageக்கு உள்ளது போல அடிப்படையான Title மற்றும் Body fieldகள் மட்டும் உள்ளன
05:13 அடுத்து, நாம் paper ல் வடிவமைத்தது போல பல fieldகளை சேர்ப்போம்.
05:23 மேலே Add field buttonஐ க்ளிக் செய்க.
05:27 Select a field type drop-downல் Imageஐ தேர்ந்தெடுக்கவும். Label fieldல் டைப் செய்க "Event Logo".
05:36 Save and continueஐ க்ளிக் செய்க
05:39 நமக்கு தேவையெனில் இங்கே Choose file button மூலம் ஒரு default imageஐ upload செய்யலாம், .
05:48 தேவையெனில் default Alternative textஐயும் சேர்க்கலாம்.
05:54 eventக்கும் ஒரே ஒரு logo தான் upload செய்ய வேண்டும் என்போம். Save field settingsல் க்ளிக் செய்க
06:02 இப்போது, Event logo fieldக்கான அனைத்து settingகளையும் செய்ய வேண்டும்.
06:07 இவற்றில் பல இவை இருக்கும் இடம் மற்றும் field typeஐ பொருத்தது.
06:11 இங்கு நாம் content editorsக்கு சில text ஐ சேர்க்கலாம்.
06:18 இந்த Required field checkboxயில் குறியிடுவதன் மூலம் ஒரு event logoஐ சேர்த்த பின்தான் content item அல்லது nodeஐ சேமிக்கமுடியும் என்றபடி அமைக்கலாம்.
06:30 அனுமதிக்கப்படும் file extensionகளை இங்கு சேர்க்கலாம். இங்கு bitmapஐ தவிர்ப்பது நல்லது.
06:38 முன்னிருப்பாக file directory ல் ஒரு வருடம் மற்றும் மாதம் இருக்கும். தேவையெனில் இதை மாற்றிக்கொள்ளலாம்.
06:47 உதாரணமாக நீங்கள் imageகளுடன் பல Content typeகளை கொண்டிருக்கலாம்.
06:53 ஒரு prefix eventsஐயும் சேர்க்கலாம் எனவே Events Content typeன் imageகள் ஒரே file directoryல் இருக்கும்.
07:04 உங்கள் விருப்பம் போல இதை நீங்கள் மாற்றலாம். ஆனால் இதை மீண்டும் சுலபமாக மாற்றமுடியாது என்பதால் இதில் கவனமாக இருக்கவும்.
07:14 Maximum மற்றும் Minimum image resolutionஐயும் ஒரு Maximum upload sizeஐயும் அமைக்கலாம்
07:21 நன்கு யோசித்து பின் மாற்றங்களை செய்யவும். 2 அல்லது 3 megapixel imageகளை upload செய்கிறீர்கள் எனில்.
07:28 wysiwyg editor மூலம் அதன் அளவை சில நூறு pixelகளுக்கு குறைக்கிறீர்கள்.
07:35 இருப்பினும் Drupal அந்த 2 megapixel imageஐ தான் load செய்யும். இது நல்லதல்ல
07:41 உதாரணமாக இந்த websiteஐ mobile மூலம் மக்கள் பார்க்கிறார்கள் எனில் அவர்களுக்கு இந்த 2 megabytes data தேவையில்லாமல் download ஆகும்.
07:51 Imageகளை upload செய்வதற்கு முன் அவை சரியாக உள்ளதா என உறுதிசெய்ய வேண்டும்.
07:57 Upload செய்யப்படும் imageன் அதிகபட்ச மற்றும் குறைந்த பட்ச அளவு என்னவாக இருக்கவேண்டும்?
08:03 குறிப்பாக Minimum Image resolution மிக முக்கியமானது.
08:08 நாம் காட்டும் imageன் அதிகபட்ச அளவை விட இது இந்த field சிறியதாக இருக்க கூடாது.
08:14 இதனால் imageஐ scale செய்யும்போது அது pixelate ஆகும்.
08:21 Maximum Image resolution க்கு 1000 x 1000 என்போம்.
08:26 Minimum Image resolution க்கு 100 x 100.
08:31 பின் Maximum upload size க்கு 80 kb.
08:36 ஒரு Imageஐ 1000 by 1000 resolutionல் மாற்றி அதை 80 kilo bytesக்கு குறைக்கவேண்டும் என்றால் Drupal என்ன செய்யும்.
08:44 அதை செய்ய முடியாது அந்த imageஐ Drupal நிராகரித்துவிடும்.
08:48 இதை 600 by 600 pixelகளாக மாற்றுவது நியாயமானது.
08:56 Enable Alt field மற்றும் Alt field required check-boxகளுக்கு குறியிடுவோம்.
09:02 பின் Save settingsஐ க்ளிக் செய்க
09:05 நம் Content typeக்கு Event Logo field உள்ளது
09:09 மற்றொரு fieldஐ சேர்க்க Add fieldஐ க்ளிக் செய்க.
09:12 Add a new field drop-downல், Linkஐ தேர்ந்தெடுக்கவும். Label fieldல் டைப் செய்க "Event Website".
09:22 Save and continueஐ க்ளிக் செய்க
09:25 உடனே, Allowed number of valuesஐ கொடுக்கசொல்லி கேட்கிறது. இதற்கு 1 என்போம்.
09:34 Save Field Settingsஐ க்ளிக் செய்க. இப்போது இது நம் Link fieldக்கு contextual settingsஐ காட்டுகிறது .
09:43 Allowed Link typeல், உள்ள optionகள்

Internal links only External links only மற்றும் Both internal and external links.

09:54 அடுத்து, Allow link text ஐ நிர்ணயிக்கவேண்டும் இங்குள்ளவை Disabled, Optional மற்றும் Required.
10:04 இப்போதைக்கு இதை Optional என வைத்து நடப்பதைக் காண்போம்.
10:09 Save settingsஐ க்ளிக் செய்க. மீண்டும் Add fieldஐ க்ளிக் செய்க
10:15 இம்முறை Date fieldஐ தேர்ந்தெடுப்போம்
10:20 Label ல் டைப் செய்க Event Date.
10:24 Save and continueஐ க்ளிக் செய்க
10:26 இப்போதைக்கு value ல் 1 இருக்கட்டும். Date type drop-downல், Date only optionஐ தேர்ந்தெடுக்கவும்.
10:34 Save field settingsஐ க்ளிக் செய்க மீண்டும் contextual settings pageஐ காண்கிறோம்.
10:43 இங்கே, Default date Current dateக்கு மாற்றுவோம்.
10:47 Save settingsஐ க்ளிக் செய்க
10:49 இங்கே இன்னும் இருfieldகளை சேர்க்க வேண்டும்.
10:55 இவை பற்றி பின்வரும் டுடோரியல்களில் கற்போம். இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
11:03 சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது ஒரு புது Content typeஐ உருவாக்குதல் மற்றும் அந்த Content typeக்கு fieldகளை சேர்த்தல்.
11:28 இந்த வீடியோ 'Acquia' மற்றும் 'OSTraining' இல் இருந்து எடுக்கப்பட்டு ஸ்போகன் டுடோரியல் திட்டம், ஐஐடி பாம்பே-ஆல் மாற்றப்பட்டது.
11:39 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
11:46 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி பரிட்சையில் தேர்வோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
11:55 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின்

NMEICT, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம்.

12:09 இந்த டுடொரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst