Drupal/C2/Installation-of-Drupal/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:40, 7 October 2016 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம் Drupalஐ நிறுவுதல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில், உபுண்டு லினக்ஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களில் ட்ரூபலை தரவிறக்கி நிறுவக் கற்போம்.
00:17 இந்த டுடோரியலைத் தொடரத் தேவையானவை-

ட்ரூபலின் சமீபத்திய பதிப்பை இணையத்திலிருந்து தரவிறக்கி நிறுவ இணைய இணைப்பு அல்லது நிறுவ தேவையான fileகள் உங்களுக்கு தரப்பட்டிருக்கலாம்.

00:30 உபுண்டு லினக்ஸ் அல்லது விண்டோஸ் இயங்குதளம் நிறுவப்பட்ட ஒரு கணினியும் தேவை.
00:38 இந்த டுடோரியலைத் தொடர, ஏதேனும் ஒரு இயங்குத்தளத்தைக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.
00:45 ட்ரூபலை நிறுவ பல வழிகள் உள்ளன.
00:48 இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது Bitnami Drupal Stack. ஏனெனில் இது நிறுவ மிக சுலபமானது.
00:57 Bitnami Drupal Stackஐ நிறுவ தேவையானவை:

Intel x86 அல்லது compatible processor

01:05 குறைந்தது 256 MB RAM
01:08 குறைந்தது 150 MB hard drive மற்றும்
01:13 TCP/IP protocol.
01:16 பின்வரும் இயங்குத்தளங்களில் மட்டும் இது வேலைசெய்யும்:
01:20 x86 லினக்ஸ் இயங்குதளம்
01:24 பின்வருவனபோன்ற 32-bit விண்டோஸ் இயங்குதளங்கள் Windows Vista, Windows 7, Windows 8, Windows 10, Windows Server 2008 அல்லது Windows Server 2012.
01:41 OS X இயங்குதளம் x86.
01:46 ஏதேனும் ஒரு web browserஐ திறந்து, காட்டப்படும் URLக்கு செல்லவும்.
01:53 கீழே வந்து Windows மற்றும் Linux இயங்குதளங்களுக்கான installerகளைக் காணவும்.
02:01 உங்களுக்குத் தேவையான installerஐத் தேர்ந்தெடுக்கவும்.
02:06 நான் Linux user என்பதால், Linux installerஐத் தேர்ந்தெடுக்கிறேன்.
02:11 நீங்கள் Windows user எனில், Windowsக்கான Drupal installerஐத் தேர்ந்தெடுக்கவும்.
02:17 இங்கே Drupalக்கான பல பதிப்புகளைக் காணலாம்.
02:22 எந்த பதிப்பைத் தரவிறக்கவேண்டும் என்பது தெரியவில்லை எனில் Recommended பதிப்பைத் தரவிறக்கவும்.
02:29 இந்த டுடோரியலைப் பதிவுசெய்யும்போது, Recommended பதிப்பு Drupal 8.1.3.
02:36 நீங்கள் பார்க்கும்போது பதிப்பு மாறியிருக்கலாம்.
02:39 வலதுப்பக்கம் Download buttonஐ க்ளிக் செய்யவும்.
02:43 Bitnami websiteக்கு ஒரு account ஐ உருவாக்க சொல்லி ஒரு popup window தோன்றுகிறது.
02:50 இப்போதைக்கு “No thanks”ஐ க்ளிக் செய்வோம்.
02:53 உடனே, அது installerஐ தரவிறக்க ஆரம்பிக்கும். சேமிக்க OK button ஐ க்ளிக் செய்க.
03:01 பின்வரும் நிறுவல் படிநிலைகள் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்கதளங்குக்குப் பொதுவானது.
03:07 உங்களுக்கு Bitnami installer file கொடுக்கப்பட்டிருந்தால், தரவிறக்குவதற்கு பதிலாக அதைப் பயன்படுத்தவும்.
03:15 அந்த installer fileஐ தரவிறக்கிய Downloads folderக்கு செல்வோம்.
03:20 இந்த installer fileஐ இயக்க, admin access இருக்க வேண்டும்
03:25 நீங்கள் Windows user எனில், installer fileஐ right click செய்து Run as administrator optionஐத் தேர்ந்தெடுக்கவும்.
03:33 Linux user எனில், installer fileஐ right click செய்து Propertiesஐ தேர்ந்தெடுக்கவும்.
03:40 பின் Permissions tabஐ க்ளிக் செய்து Allow executing file as program optionன் check-boxஐ க்ளிக் செய்யவும்.
03:48 இந்த விண்டோவை மூட Close buttonஐ க்ளிக் செய்யவும்.
03:52 இப்போது installer fileஐ double-click செய்யவும்.
03:55 installation ஆரம்பிக்கிறது. Next buttonஐ க்ளிக் செய்யவும்.
04:01 இங்கே நமக்கு தேவையான componentகளைத் தேர்ந்தெடுக்கவும்.
04:06 முதலில் ஒவ்வொரு component மீதும் க்ளிக் செய்து அது பற்றி தெரிந்துகொள்ளவும்.
04:12 நான் அனைத்து componentகளையும் தேர்ந்தெடுக்கிறேன். Next buttonஐ க்ளிக் செய்க.
04:18 இந்த windowல், Drupalஐ நிறுவ folder ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.
04:24 நான் Home folderஐ தேர்ந்தெடுக்கிறேன்.
04:27 Windowsல் முன்னிருப்பாக C colon அல்லது main driveல் நிறுவப்படும்.
04:34 Next buttonஐ க்ளிக் செய்யவும்.
04:36 இப்போது Drupal admin accountஐ உருவாக்க வேண்டும்
04:40 real nameஐ "Priya" என டைப் செய்கிறேன். இந்த பெயர் applicationல் காட்டப்படும்.
04:47 இங்கு உங்கள் பெயரை டைப் செய்யவும்.
04:50 Email Address fieldல், "priyaspoken@gmail.com" என டைப் செய்கிறேன்.
04:56 உங்கள் சரியான email addressஐ பயன்படுத்தவும்.
05:00 அடுத்து administratorக்கான username மற்றும் password ஐ கொடுக்க வேண்டும்.
05:07 Login user nameல் "admin" என டைப் செய்கிறேன்.
05:11 Passwordல் என் passwordஐ டைப் செய்கிறேன். உறுதிப்படுத்த மீண்டும் passwordஐ டைப் செய்கிறேன்.
05:17 உங்கள் விருப்பம் போல login name மற்றும் passwordஐத் தேர்ந்தெடுக்கலாம்.
05:22 Next buttonஐ க்ளிக் செய்க.
05:24 Linuxல், Apacheக்கான default listening port 8080 மற்றும் MySQL க்கு 3306.
05:34 Windowsல், அது 80 மற்றும் 3306.
05:39 ஏற்கனவே வேறு applicationகளால் அந்த portகள் பயன்படுத்தப்பட்டால் வேறு portகளை பயன்படுத்த வேண்டும்.
05:47 நான் ஏற்கனவே MySQLஐ என் கணினியில் நிறுவியுள்ளேன். எனவே வேறு portஐ கொடுக்க சொல்லி கேட்கிறது.
05:54 3307 என கொடுக்கிறேன்.
05:57 Next buttonஐ க்ளிக் செய்க.
05:59 இப்போது நம் Drupal siteக்கு ஒரு பெயர் கொடுக்க வேண்டும். நான் கொடுப்பது Drupal 8.
06:06 உங்கள் விருப்பத்திற்கேற்ப பெயரைக் கொடுக்கலாம்.
06:10 Next buttonஐ க்ளிக் செய்க.
06:12 இங்கே Bitnami Cloud Hostingக்கு கேட்கிறது. இப்போதைக்கு இது தேவையில்லை.
06:19 எனவே, அதை தேர்வுநீக்க இந்த check-boxஐ க்ளிக் செய்யவும்.
06:23 பின் Next buttonஐ க்ளிக் செய்யவும்.
06:26 இப்போது Drupal நிறுவ தயராக உள்ளது. Next buttonஐ க்ளிக் செய்க.
06:31 நிறுவல் முடிய சில நிமிடங்கள் ஆகலாம்.
06:36 installation முடிந்தவுடன், Launch Bitnami Drupal Stack தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்யவும்.
06:43 பின் Finish buttonஐ க்ளிக் செய்க.
06:46 Bitnami Drupal Stack control window தானாக திறக்கிறது.
06:51 அனைத்து running serviceகளையும் காண Manage Servers tab ஐ க்ளிக் செய்க.
06:56 இங்கே MySQL Database மற்றும் Apache Web Server இயங்கிக்கொண்டிருப்பதைக் காணலாம்.
07:02 Drupalல் வேலை செய்ய நமக்கு தேவையானவை MySQL, PostgreSQL அல்லது Oracle போன்ற ஒரு database
07:11 மற்றும் Apache அல்லது Nginx போன்ற ஒரு web server
07:16 முன்னிருப்பாக, Bitnami Drupal Stack, MySQL database மற்றும் Apache web serverஉடன் வருகிறது.
07:23 control windowக்கு வருவோம்.
07:26 serviceகளை start, stop மற்றும் restart செய்ய அவற்றிற்கான buttonகளை பயன்படுத்தலாம்
07:33 Welcome tabஐ க்ளிக் செய்வோம்
07:36 Drupalஐ துவக்க, வலப்பக்கம் உள்ள Go to Application buttonஐ க்ளிக் செய்க.
07:42 bitnami page உடன் ஒரு browser தானாக திறக்கப்படுகிறது
07:46 இப்போது, Access Drupal linkஐ க்ளிக் செய்க. நம் Drupal websiteக்கு செல்கிறோம்.
07:54 நம் website பெயர் Drupal 8 என்பதைக் காண்க.
07:58 websiteல் login செய்ய, மேல் வலது மூலையில் உள்ள Log in linkஐ க்ளிக் செய்க.
08:03 நாம் முன்னர் உருவாக்கிய user name மற்றும் password ஐ டைப் செய்வோம்.
08:11 இப்போது Login buttonஐ க்ளிக் செய்க.
08:14 address barல், நம் websiteன் web address http://localhost:8080/drupal/user/1 என காணலாம்.
08:27 அடுத்த டுடோரியலில், /user/1 பற்றி கற்போம்
08:32 இங்கே localhostக்கு பதிலாக 127.0.0.1 எனவும் காணலாம். இது உங்கள் system configurationஐ பொருத்தது.
08:42 இதன் பின், Drupalஐ பின்வரும் web address மூலம் அனுகலாம்

localhost colon 8080 slash drupal அல்லது

Apacheன் port 80 எனில் localhost slash drupal .

08:57 அடுத்து, Bitnami Drupal Stack control windowஐ திறக்க கற்போம்.
09:03 நீங்கள் Linux user எனில், பின்வரும் படிகளைத் தொடரவும்.
09:07 File browserக்கு வரவும்.
09:10 பின் இடது sidebarல், Placesல் Homeஐ க்ளிக் செய்க.
09:15 இப்போது, drupal hyphen 8.1.3 hyphen 0 folderஐ double-click செய்க.
09:23 இங்கே manager hyphen linux hyphen x64.run fileஐ காணலாம். அதை திறக்க double-click செய்க.
09:33 நீங்கள் Windows user எனில், Start Menu -> All Programs -> Bitnami Drupal Stack -> Bitnami Drupal Stack Manager Toolக்கு செல்க.
09:44 Bitnami Drupal Stack control window திறக்கப்படும்.
09:48 ஒவ்வொருமுறை Drupalஐ திறக்கும் முன்பும், அனைத்து serverகளும் இயங்குவதை உறுதிசெய்க.
09:54 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
09:57 சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் உபுண்டு லினக்ஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களில் ட்ரூபலை நிறுவ கற்றோம்.
10:07 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
10:14 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
10:25 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின்

NMEICT, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம்.

10:36 இந்த டுடோரியலைத் தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst