Drupal/C3/Menu-and-Endpoints/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 16:01, 25 September 2016 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம், Menu மற்றும் Endpointsகுறித்த Spoken tutorialக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் URL patternsஐ அமைக்க கற்போம். மேலும் Menuஐ நிர்வகிக்கவும் கற்போம்.
00:15 இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:
  • Ubuntu இயங்குதளம்
  • Drupal 8 மற்றும்
  • Firefox Web browser.
உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம்.
00:29 இந்த டுடோரியலில் நம் websiteக்கு தேவையான URL pathsஐ உருவாக்கும் செயல்முறையைக் கற்போம்.
00:36 முதலில் Endpoints மற்றும் aliasesஐ காண்போம்- Endpoints என்பவை குறிப்பிட்ட content ஐ காட்டும் URL paths.
00:45 முன்னிருப்பாக Drupalல், ஒரு nodeன் endpoint ஆனது node/[node:id].
00:53 இதை ஒரு serverக்கு அனுப்பினால் அந்த nodeன் content காட்டப்படும். IDல் உள்ள எண் புரியும்படி இருக்காது
01:02 உதாரணமாக node/278162 என்பது எந்த content என்பதை நம்மால் கண்டுபிடுக்கமுடியாது

ஒரு aliasஐ உருவாக்குவதன் மூலம் அதன் endpointஐ கண்டுபிடிக்கலாம்.

01:19 Alias ஆனது ஒரே contentக்கான ஒரு மாற்று URL path. அந்த contentஐ காட்ட நாம் original URL அல்லது அதற்கான பல aliasகளை பயன்படுத்தலாம்.
01:34 உதாரணமாக, node/278162 மற்றும் content/drupal-camp-mumbai-2015.
01:47 இவை இரண்டும ஒரே contentஏ குறிக்கும். ஆனால் இரண்டாவது சுலபமாக நினைவில் இருக்கும்.
01:54 இப்போது நம் site ல் உள்ள அனைத்து contentகளுக்கும் URL patternsஐ உருவாக்குவோம்.
01:59 URL pathsஐ அமைக்க நமக்கு மூன்று moduleகள் தேவை.
02:04 அவை Pathauto, Token மற்றும் CTools.
02:13 முதலில் Pathautoஐ நிறுவவும்.
02:18 இங்கு Pathauto project பக்கத்தில் Pathauto க்கு Token மற்றும் CTools தேவை என காணலாம்
02:27 Token மற்றும் CToolsஐ நிறுவவும். இந்த moduleகளை நிறுவப்பின் அவற்றை செயலுக்கு கொண்டுவருவோம்.
02:37 அதை செய்தபின் நம் site தயாராகிவிடும்.
02:40 Configurationஐ க்ளிக் செய்க. இங்கு கீழே இடப்பக்கம் SEARCH AND METADATA sectionல், URL aliasesஐ காணலாம்.
02:52 முன்னிருப்பாக URL aliases காலியாக உள்ளது.
02:58 Patterns tabல் க்ளிக் செய்க. Add Pathauto pattern buttonஐ க்ளிக் செய்க.
03:05 Pattern type drop-downஐ க்ளிக் செய்க.
03:09 இங்கு Forum, Content, Taxonomy term மற்றும் Userக்கு patternகளை உருவாக்கலாம்.
03:17 உதாரணமாக Contentஐ தேர்ந்தெடுப்போம்.

Path pattern fieldல், pattern templateஐ கொடுக்க வேண்டும்.

03:27 Template variableகள் tokens எனப்படும். அவை ஒவ்வொரு entityக்கும் தானாக உருவாக்கப்படும்.
03:36 Token module இந்த variableகளைக் கொடுக்கிறது. எதாவது input formல் Browse available tokensஐ பார்த்தால் அதற்கு predefined tokensஐ உள்நுழைக்கலாம்.
03:49 tokenஐ சேர்க்க Path pattern boxல் க்ளிக் செய்து
03:55 டைப் செய்க "content/". பின் Browse available tokens linkஐ க்ளிக் செய்க.
04:02 "Available tokens"ஐ காட்ட ஒரு popup window திறக்கிறது.
04:07 உதாரணமாக content/[title of the page] என ஒரு pattern வேண்டுமெனில், Nodes sectionல் page ன் titleக்கான token உள்ளது.
04:18 Nodes sectionன் right arrow buttonஐ க்ளிக் செய்க.
04:23 [node:title] என்ற tokenஐ தேர்க இது pageன் Title க்கு பதிலாக காட்டப்படும்.
04:32 form boxல் cursor உள்ள இடத்தில் இந்த [node:title] சேர்க்கப்படும்.
04:38 token அந்த இடத்தில் சேர்க்கப்படவில்லை எனில் form box ல் சரியான இடத்தில் க்ளிக் செய்து cursorஐ வைத்து பின் tokenஐ மீண்டும் தேர்ந்தெடுக்கவும்.
04:49 Content typeல், எந்த entity typeக்கு இந்த pattern பயன்படுத்த வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கவும்.
04:56 அனைத்து typeகளையும் தேர்ந்தெடுப்போம் இதனால் இந்த pattern அனைத்திற்கும் முன்னிருப்பாக இருக்கும்.
05:04 ஒரு குறிப்பிட்ட typeக்கு மட்டும் கூட இதுபோல செய்யலாம்.

உதாரணமாக: User Group typeக்கு மட்டும் பொருந்துமாறு usergroup/[node:title] என உருவாக்கலாம்

05:18 Label fieldல் டைப் செய்க "Content Title". பின் Save buttonஐ க்ளிக் செய்க. இங்கு நாம் உருவாக்கிய புது patternஐ காணலாம்.
05:31 புதிதாக சேர்க்கப்பட்ட contentகளுக்கான URL aliasesஐ உருவாக்க இந்த pattern பயன்படுத்தப்படும். ஆனால் ஏற்கனவே உள்ள contentகளுக்கு இது URL aliasesஐ உருவாக்காது.
05:45 பழைய contentகளுக்கும் இதை பயன்படுத்த, Bulk generate tabஐ க்ளிக் செய்க. Content typeஐ தேர்ந்தெடுத்து பின் Update buttonஐ க்ளிக் செய்க.
05:58 இது URL aliasesஐ உருவாக்க ஆரம்பிக்கிறது. இது பழைய contentகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நேரம் எடுக்கும்.
06:08 இப்போது List tabஐ க்ளிக் செய்க. நம் contentக்கான URL aliasesஐ காணலாம்.
06:15 நம் site ல் உள்ள ஒவ்வொரு nodeஉம் /node/nodeid என்ற ஒரு system pathஐ கொண்டுள்ளது.
06:24 முதல் Alias columnல் புதிதாக உருவாக்கப்பட்ட URL alias ஐ காணலாம்.
06:30 அனைத்து aliasகளும் ஒரே patternல் இருப்பதைக் காணலாம். புது Content typeஐ உருவாக்கும் ஒவ்வொரு முறையும் இதை செய்ய வேண்டும்
06:41 புது patternகளை உருவாக்க பின்வருவனவற்றை பின்பற்றவும்-
  • lower case வார்த்தைகளை பயன்படுத்தவும்
  • வார்த்தைகளுக்கு இடையே இடைவெளி விட வேண்டாம்
06:52
  • hyphen மூலம் வார்த்தைகளை பிரிக்கவும் underscoreஐ தவிர்க்கவும்
  • search engine optimization (SEO)க்கு உதவும் வகையில் URLல் அர்த்தமுள்ள வார்த்தைகளை பயன்படுத்தவும்
07:07
  • நேரம் மூலம் வகைப்படுத்தப்படும் contentsகளுக்கு date tokens ஐ பயன்படுத்தவும்.
07:12 URL alias patternஐ கட்டுப்படுத்த மேலும் தேர்வுகள் Settings tabல் உள்ளன.

இங்கு default Separator, length போன்றவற்றைக் காணலாம்.

07:26 இங்கு patternல் இருந்து முன்னிருப்பாக நீக்கப்படும் சில பொதுவான வார்த்தைகளையும் காணலம்.

இது endpoint அர்த்தமுள்ளதாகவும் சிறியதாகவும் இருக்க உதவும்.

07:38 Pathauto மற்றும் Token moduleகள் URL patternsஐ அமைக்க,
07:46 aliasகளை நீக்க மற்றும் aliasகளை மொத்தமாக உருவாக்க பயன்படுகின்றன.
07:52 இப்போதிலிந்து, நாம் உருவாக்கிய patternகளை ஒவ்வொரு node உம் பயன்படுத்தும்.
07:59 அடுத்து Menus பற்றி கற்போம்.
08:03 நம் siteல் Views மற்றும் basic pageகளுக்கு தேவையான பல menuகளை வரிசை ஏதும் இல்லாமல் சேர்த்துள்ளோம்.
08:10 இப்போது நம் menuகளை நிர்வகிக்க கற்போம்.
08:15 Structureக்கு சென்று கீழே வந்து Menusஐ க்ளிக் செய்க
08:21 இங்கு Drupalல் முன்னிருப்பாக வரும் பல menuகளை காணலாம்.

இங்கு ஆறு menuகள் உள்ளன.

08:31 முதலில் Main navigation menuஐ மாற்றுவோம். எனவே அதன் Edit menuஐ க்ளிக் செய்க
08:38 இங்கு, நம் Menu linkகளை க்ளிக் செய்து அவற்றை தேவையான இடத்திற்கு இழுத்து வைக்கலாம்.
08:44 Home மற்றும் Upcoming Eventsஐ இழுத்து மேலே வைப்போம்.
08:49 இவற்றை நமக்கு தேவையான வரிசையில் மாற்றி வைக்கலாம். அது முடிந்ததும் Saveஐ க்ளிக் செய்க.
08:56 இப்போது Events மற்றும் Upcoming Eventsஐ மாற்றுவோம்

Eventsஐ க்ளிக் செய்து அதை மேலே வைப்போம் பின் Upcoming Events ஐ வலப்பக்கமாக இழுப்போம்.

09:07 இது ஒரு sub menuஐ உருவாக்கும்.
09:10 இது மிக சுலபம். Saveஐ க்ளிக் செய்து இது சரியாக வந்துள்ளதா என காண்போம்.
09:15 இப்போது நான்கு menuகள் இருப்பதைக் கவனிக்கவும்.
09:19 ஆனால் 'Event' sub-menuஐ காணவில்லை
09:23 Drupalன் எல்லா themeகளிலும் sub-menus அல்லது drop-down menus வேலைசெய்வதில்லை. அவற்றில் 'Bartick theme ம் ஒன்று.
09:32 இப்போதைக்கு Structure பின் Menusக்கு சென்று Main menuஐ மாற்றுவோம்
Upcoming Eventஐ மீண்டும் பின்னோக்கி இழுப்போம் பின்  Saveஐ க்ளிக் செய்க
09:44 ஒரு குறிப்பிட்ட node அல்லது sectionக்கு ஒரு link தேவையெனில் என்ன செய்வது?
09:51 உதாரணமாக, Forumsக்கு ஒரு menu link வேண்டுமெனில் முதலில் siteக்கு சென்று
09:58 பின் Forums pageல் அதன் URL அதாவது /forumஐ copy செய்க.
10:05 பின் இங்கு Edit menu ஐ க்ளிக் செய்து Add linkஐ க்ளிக் செய்க.
10:12 title ஐ "Forum" என்போம். copy செய்யப்பட்ட linkஐ இங்கு paste செய்வோம்.
10:17 ஒரு குறிப்பிட்ட contentக்கு link வேண்டுமெனில் அதன் முதல் எழுத்தை டைப் செய்ய வேண்டும் .

அந்த எழுத்தில் ஆரம்பிக்கும் அனைத்து nodeகளும் காட்டப்படும்.

10:28 உதாரணமாக 'a' ஐ கொடுக்கிறேன், titleல் 'a' உள்ள அனைத்து nodeகளும் காட்டப்படுகின்றன.
10:38 இதில் நமக்கு தேவையான ஒன்றை தேர்ந்தெடுப்போம் இது அதன் node id number 1 என்கிறது
10:46 ஒரு nodeஐ சேர்க்குமாறு ஒரு internal path வேண்டுமெனில், அது /node/add என இருக்கும்
10:56 Homepageக்கு அதை இணைக்க வேண்டுமெனில் அதற்கு front.

ஆனால் இப்போது இங்கே Forumக்கு linkஐ உருவாக்கும் /forumஐ கொடுப்போம்

11:08 Saveஐ க்ளிக் செய்க இப்போது Forumக்கு ஒரு link வந்துவிட்டது.
11:14 Save ஐ க்ளிக் செய்க. நமக்குத் தேவையானவாறு அது வந்துவிட்டதா என்பதை காண்போம்
11:21 இதை மேலும் புரிந்துகொள்ள இங்கு சற்று நேரம் செலவிடவும்.

இவ்வாறு நம் menu systemல் View அல்லது Content Typeக்கு Menu item ஐ உருவாக்கலாம்

11:34 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
11:38 சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது:
  • URL Patternsஐ அமைத்தல் மற்றும்
  • Menu ஐ நிர்வகித்தல்.
11:59 இந்த வீடியோ 'Acquia' மற்றும் 'OSTraining' இல் இருந்து எடுக்கப்பட்டு ஸ்போகன் டுடோரியல் திட்டம், ஐஐடி பாம்பே-ஆல் மாற்றப்பட்டது.
12:09 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
12:17 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி பரிட்சையில் தேர்வோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
12:26 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின்
  • NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும்
  • NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம்.
12:39 இந்த டுடொரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst