K3b/C2/Introduction-to-K3b/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:26, 8 January 2016 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 K3bக்கு அறிமுகம் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம கற்கபோவது
00:08 K3b interface மற்றும் பல்வேறு toolbarகள்
00:12 Ubuntu Linux இயங்குதளத்தில் K3b ஐ எவ்வாறு தரவிறக்கி நிறுவுதல்
00:20 K3bஐ பயன்படுத்தி ஒரு உதாரண file ஐ Burn செய்தல்.
00:24 K3b என்பது என்ன?
00:27 K3b ஒரு CD/DVD burning software.
00:31 ஒரு CDஐ burn செய்வது போன்ற எளிய வேலை முதல் sueMovix CDகளை burn செய்வது போன்ற சிக்கலான வேலைகள் வரை இது செய்யும்.
00:39 இதன் மூலம் data, audio அல்லது video CD/DVD ஐ உருவாக்கலாம்.
00:45 ".html", ".txt" போன்ற எல்லா data formatகளையும் K3b ஆதரிக்கிறது.
00:54 இது mp3, MPEG போன்ற audio மறறும் video formatகளையும் ஆதரிக்கிறது.
01:03 K3b பற்றிய மேலதிக தகவல்களுக்கு 'www.k3b.org' செல்லவும்.
01:11 இங்கு நாம் பயன்படுத்துவது K3b 2.0.2 மற்றும் Ubuntu Linux 12.04.
01:20 இந்த டுடோரியலைத் தொடர நீங்கள் ஒரு CD அல்லது DVD ஐ drive ல் உள்நுழைத்திருக்க வேண்டும்.
01:28 K3b நிறுவவில்லை எனில், Ubuntu Software Centre மூலம் அதை நிறுவவும்.
01:34 Ubuntu Software Centre பற்றி அறிந்துகொள்ள spoken tutorial இணையதளத்தைக் காணவும்.
01:41 இந்த செயல்விளக்கத்திற்காக Desktopல் "Myk3bCD" என்ற folder ஐ உருவாக்கியுள்ளேன்.
01:50 இந்த folder ல் 4 Writer, 1 Impress மற்றும் 2 Calc fileகளை சேமித்துள்ளேன்.
01:58 பயிற்சிக்கு folder அல்லது file எதையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
02:03 இப்போது K3bஐ திறக்கலாம்.
02:06 முதலில் desktop ன் மேல் இடது மூலையில் உள்ள வட்டவடிவ Dash Home buttonஐ க்ளிக் செய்க.
02:14 Search box தோன்றுகிறது.
02:16 டைப் செய்க k3b.
02:19 K3b icon தோன்றுகிறது.
02:22 அந்த applicationஐ திறக்க அதை க்ளிக் செய்க.
02:26 "K3b" window திறக்கிறது.
02:29 இப்போது K3b interface பற்றி காண்போம்.
02:34 பல்வேறு தேர்வுகளுடன் ஒரு main menuK3b interface கொண்டுள்ளது.
02:40 main menuக்கு கீழே சில shortcut iconகள் உள்ளன-
02:45 New Project, Open, Save, Format மற்றும் Filter.
02:50 K3b இரு main panelகளாக பிரிக்கப்படுகிறது அவை மேல் மற்றும் கீழ் panelகள்.
02:57 மேல் panel மேலும் இரு panelகளாக பிரிக்கப்படுகிறது.
03:01 உங்கள் கணினியில் main folderகளை இடது panel காட்டுகிறது...
03:06 அவற்றின் sub-folderகளை வலது panel காட்டுகிறது.
03:13 K3bல் பயன்படுத்தப்படும் பொதுவான processகளின் shortcut iconகளை கீழ் panel காட்டுகிறது.
03:21 நீங்கள் பொதுவாக பயன்படுத்தும் processகளின் shortcut iconகளையும் இந்த panelக்கு சேர்க்கலாம்.
03:28 ஒரு புது video CD projectஐ உருவாக்க ஒரு shortcut iconஐ சேர்ப்போம்
03:34 கீழ் panelல் cursor ஐ வைப்போம்.
03:38 context menuஐ காண ரைட் க்ளிக் செய்க.
03:41 New Video CD Project மீது க்ளிக் செய்க.
03:45 New Video CD Projectக்கான shortcut icon... panelல் தோன்றுகிறது.
03:51 இப்போது, ஒரு Data CDburn செய்வோம்.
03:54 கீழ் paneல், New Data Project மீது டபுள் க்ளிக் செய்க.
03:59 மாறாக, New Projectக்கு சென்று drop-down listஐ க்ளிக் செய்து
04:04 New Data Projectஐ தேர்ந்தெடுக்கலாம்
04:07 இடது panelல் Home பின் Desktopஐ தேர்ந்தெடுக்கவும்.
04:13 இப்போதூ "Myk3bCD" folderஐ தேர்ந்தெடுக்கவும்.
04:18 அனைத்து fileகள் மற்றும் folderகளை இது மேல் வலது panelல் காட்டுகிறது.
04:24 burn செய்ய data fileஐ தேர்ந்தெடுப்போம்.
04:29 இந்த folderல் file Writer4ஐ தேர்ந்தெடுப்போம்.
04:33 Writer4ஐ கீழ் panelக்கு இழுத்துவிடுவோம்.
04:39 மேலும் தொடர்வதற்கு முன் ஒரு CD அல்லது DVDஐ driveல் உள்நுழைத்திருப்பதை உறுதி செய்க.
04:47 Burnல் க்ளிக் செய்க.
04:49 மீண்டும் Burnல் க்ளிக் செய்க.
04:53 3 வெவ்வேறு tabகளுடன் ஒரு window தோன்றுகிறது.
04:56 default settingsஐ அப்படியே விடுவோம்.
04:59 Default Settingsல் க்ளிக் செய்க.
05:02 இப்போது burning status மற்றும் progress statusஐ காணலாம்.
05:08 burning முடிந்தவுடன், CD தானாக வெளியேவரும்.
05:13 இது மிகவும் சுலபமாக இருக்கிறதல்லவா?
05:16 இத்துடன் K3b மீதான இந்த டுடோரியல் முடிகிறது.
05:21 இந்த டுடோரியலில் நாம் கற்றது K3b interface மற்றும் அதன் toolbarகள்.
05:27 K3bஐ தரவிறக்கு நிறுவுதல்,
05:32 K3bன் பல்வேறு அம்சங்களை பயன்படுத்துதல்,
05:35 ஒரு file ஐ CDல் burn செய்தல்.
05:39 இங்கே உங்களுக்கான பயிற்சி.
05:41 ஒரு CD ல் Audio fileஐ Burn செய்யவும்.
05:45 இந்த இணைப்பில் உள்ள video ஐ காணவும்
05:48 இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது
05:51 உங்கள் இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள்.
05:56 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
06:01 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
06:05 மேலும் அறிய மின்னஞ்சல் செய்யவும்.... contact at spoken hyphen tutorial dot org
06:11 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்
06:15 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
06:23 மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பில் உள்ளன : http://spoken-tutorial.org\NMEICT-Intro.
06:34 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி

Contributors and Content Editors

Priyacst