Inkscape/C2/Align-and-distribute-objects/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 18:30, 3 December 2015 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
Narration
00:01 Inkscapeல் “objectகளை align மற்றும் distribute செய்தல் ” குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் கற்க போவது
00:09 வெவ்வேறு objectகளை align மற்றும் distribute செய்தல்
00:12 objectகளை rowகள் மற்றும் columnகளில் அடுக்குதல்
00:16 objectகளுக்கு இடைவெளியை அமைத்தல் மற்றும் ஒரு tile patternஐ உருவாக்குதல்.
00:22 இந்த டுடோரியலுக்காக நான் பயன்படுத்துவது
00:24 Ubuntu Linux 12.04
00:27 Inkscape பதிப்பு 0.48.4
00:31 Dash home க்கு சென்று டைப் செய்க Inkscape.
00:35 அதன் logoஐ க்ளிக் செய்க.
00:37 ஏற்கனவே சேமித்த Inkscape documentஐ திறக்கிறேன்.
00:44 இங்கே canvasல் 5 வெவ்வேறு வடிவங்கள் ஆங்காங்கே உள்ளன.
00:50 உங்கள் Inkscape canvasல், 5 வடிவங்களை வரைந்து அவற்றை இங்குள்ளது போல வைக்கவும்.
00:55 இப்போது, objectகளை align செய்ய ஆரம்பிக்கலாம்.
00:59 Object menu க்கு சென்று Align and distributeஐ க்ளிக் செய்க
01:04 interfaceன் வலப்பக்கம் Align and distribute dialog box திறக்கிறது.
01:09 இங்கே இருவகை நிலைப்படுத்துதல் உள்ளன.
01:12 objectகளின் மையங்கள் அல்லது முனைகள் Align ல் ஒன்றுக்கு ஒன்று align செய்யப்படுகிறது.
01:18 Distribute ல் objectகள் அவற்றின் மையங்கள் அல்லது முனைகளைப் பொருத்து கிடைமட்டம் அல்லது செங்குத்து திசைகளில் distribute செய்யப்படுகின்றன.
01:29 இந்த தேர்வுகள் மற்றும் இவற்றின் துணைத் தேர்வுகளைப் பயன்படுத்தி பல்வேறு வழிகளில் நாம் objectகளை align செய்யலாம்.
01:36 இங்கே மற்றொரு முக்கிய அம்சம் உள்ளது: Relative to.
01:39 இதை பயன்படுத்தி, குறிப்பாக objectகளை align செய்யலாம்.
01:44 இங்குள்ள தேர்வுகளைக் காண இந்த drop down listஐ க்ளிக் செய்வோம்.
01:47 இங்குள்ளவை, Last selected, First selected, Biggest object, Smallest object, Page, Drawing மற்றும் Selection.
02:00 முன்னிருப்பாக, objectகள் Page ஐ பொருத்து align செய்யப்படுகின்றன
02:04 அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட objectகள் உங்கள் Page பரிமாணங்களுக்கு ஏற்ப Align and Distribute செயல்பாடுகளுக்கு வேலைசெய்யும்.
02:13 canvasல் உள்ள அனைத்து objectகளையும் தேர்ந்தெடுக்க Ctrl + A ஐ அழுத்துக
02:17 முதல் 5 iconகள் objectகளை செங்குத்து திசையில் align செய்யும்.
02:22 முதல் iconஐ க்ளிக் செய்கிறேன்.
02:25 tool tip சொல்வது போல, objectகளின் வலது முனைகள் anchorன் இடது முனைக்கு align செய்யப்படுகின்றன.
02:32 Relative to ஆனது Page என்பதால் anchor point ஆனது page ஆகும்
02:38 இப்போது இரு objectகள் ஒன்றன் மேல் ஒன்று உள்ளன.
02:43 முன் ஒழுங்கமைப்பில் objectகளின் நெருக்கத்தைப் பொருத்து ஒன்றன் மீது ஒன்று அமையலாம்.
02:48 Distribute தேர்வுக்கு கீழ் உள்ள Remove overlaps தேர்வை க்ளிக் செய்து இதை சரிசெய்யலாம்.
02:56 இப்போது, இது சரிசெய்யப்படுகிறது.
02:58 கிடைமட்டம் மற்றும் செங்குத்து திசைகளில் objectகளுக்கு இடைவெளிகளை சரிசெய்ய H மற்றும் V தேர்வுகளைப் பயன்படுத்தவும்.
03:06 இப்போது, Align ல் உள்ள தேர்வுகளை க்ளிக் செய்து objectகள் align ஆவதை கவனிக்கவும்.
03:14 alignmentகளை தெளிவாக கவனிக்க undo தேர்வு CTRL + Z ஐ பயன்படுத்தவும்.
03:21 alignmentகளை புரிந்துகொள்ள tool tipகள் மிகவும் பயன்படுகின்றன.
03:28 கடைசி icon உரைகளில் மட்டும் பயன்படும். அதை மற்றொரு டுடோரியலில் கற்போம்.
03:35 அடுத்து, Distribute தேர்வை பயன்படுத்தி objectகளுக்கு இடைவெளிகளை சரிசெய்வோம்.
03:40 objectகள் செங்குத்தாக இருப்பதால் Distribute தேர்வில் உள்ள கடைசி நான்கு iconகளை பயன்படுத்த வேண்டும்.
03:48 அவற்றை முதலில் மையத்துக்கு align செய்கிறேன்.
03:51 இப்போது Distribute ன் தேர்வுகளை க்ளிக் செய்து objectகள் align ஆவதை கவனிக்கவும்.
03:58 மீண்டும் alignmentகளை சரியாக புரிந்துகொள்ள undo தேர்வு CTRL + Zஐ பயன்படுத்தவும்.
04:07 alignmentகளை புரிந்துகொள்ள tool tipகளை கவனிக்கவும்.
04:13 Relative toக்கு கீழே, Treat selection as group தேர்வை கவனிக்கவும்
04:19 இது objectகளை ஒரு குழுவாக align செய்யும்.
04:22 இந்த check boxஐ க்ளிக் செய்க.
04:24 இப்போது, iconகளை ஒவ்வொன்றாக க்ளிக் செய்து objectகள் தனித்தனியாக அல்லாமல் குழுவாக align செய்யப்படுவதைக் கவனிக்கவும்.
04:34 இந்த box ஐ குறிநீக்குகிறேன்.
04:36 இப்போது, objectகள் தனித்தனியாக align செய்யப்படும்.
04:40 அடுத்து, objectகளை Last selected ஐ பொருத்து align மற்றும் distribute செய்யலாம்
04:45 Relative toLast selectedஆக மாற்றுவோம்
04:49 எனவே, அனைத்து objectகளையும் canvasக்கு கொண்டுவந்து அவற்றை ஆங்காங்கே வைப்போம்.
05:01 ஒவ்வொரு object ஆக தேர்ந்தெடுப்போம். வட்டத்தை கடைசியாக தேர்ந்தெடுப்போம்.
05:06 முன்புபோல, ஒவ்வொரு icon ஆக க்ளிக் செய்யவும்.
05:10 கடைசியாக தேர்ந்தெடுக்கப்பட்ட object வட்டம் என்பதால், வட்டத்தைப் பொருத்து objectகள் align செய்யப்படுவதைக் கவனிக்கவும்.
05:19 இதேபோல, Relative toல் உள்ள அனைத்து தேர்வுகளையும் முயற்சித்து objectகளின் alignmentஐ கவனிக்கவும்.
05:26 Align and Distribute dialog box ன் மேம்பட்ட தேர்வுகளை பின்வரும் டுடோரியல்களில் கற்போம்.
05:32 இப்போது இந்த dialog box ஐ மூடுகிறேன்.
05:37 அடுத்து, rowகள் மற்றும் columnகளில் objectஐ align செய்ய கற்போம்.
05:41 Object menu க்கு சென்று
05:43 Rows and Columnsல் க்ளிக் செய்க
05:46 Rows and Columns dialog box திறக்கிறது.
05:50 இந்த தேர்வை பயன்படுத்தி, தேவையான இடைவெளிகளை விட்டு objectகளை rowகள் மற்றும் columnகளில் அடுக்கலாம்.
05:57 canvas ல் objectகளை ஆங்காங்கே வைக்கவும்
06:01 இப்போது, 2 rowகள் மற்றும் 3 columnகளில் இந்த objectகளை அடுக்கலாம்.
06:05 எனவே Row parameter ல் 2 ஐ கொடுப்போம்.
06:09 Row parameter மாறும்போது Column parameter உம் தானாக மாறுவதைக் கவனிக்கவும்.
06:15 கீழ் வலதுப்பக்கம் Arrange பட்டனை கவனிக்கவும்.
06:19 objectகளை இடது, வலது மற்றும் மையத்தில் align செய்ய Align தேர்வுகள் உதவுகின்றன .
06:29 அவற்றை ஒவ்வொன்றாக சோதித்து மாற்றங்களை கவனிக்கவும்.
06:37 Set spacing தேர்வை பயன்படுத்தி rowகள் மற்றும் columnகள் இரண்டிலேயும் objectகளுக்கு இடைவெளிகளை அமைக்கலாம்.
06:45 இப்போது, row மற்றும் column இரண்டிலேயும் space parameter ஐ 5 என கொடுப்போம்.
06:50 Arrange பட்டனை க்ளிக் செய்வோம்.
06:53 objectகளுக்கான இடைவெளிகளை கவனிக்கவும்.
06:56 இப்போது Align and Distributeஐ பயன்படுத்தி patternஐ உருவாக்க கற்போம்
07:01 வெவ்வேறு அளவு மற்றும் நிறங்களில் நான்கு சதுரங்களுடன் ஒரு Inkscape file உள்ளது.
07:06 அனைத்தையும் தேர்ந்தெடுத்து சுழற்றும்போது அவை சாய்சதுர வடிவில் தெரியும்.
07:12 Align and Distribute dialog boxஐ திறக்கவும்.
07:15 Centre on vertical axisஐ க்ளிக் செய்யவும்
07:18 Centre on horizontal axisஐ க்ளிக் செய்யவும்
07:22 canvasல் இப்போது ஒரு tile pattern உருவாக்கப்படுகிறது.
07:25 படைப்பாற்றலுடன் இந்த தேர்வுகளைப் பயன்படுத்தி, பல விந்தையான patternகளை உருவாக்கலாம்.
07:30 சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் கற்றது
07:34 பல்வேறு objectகளை align மற்றும் distribute செய்தல்
07:37 rowகள் மற்றும் columnகளில் objectகளை அடுக்குதல்
07:40 objectகளுக்கு இடைவெளி அமைத்தல் மற்றும் ஒரு tile patternஐ உருவாக்குதல்.
07:45 இங்கே உங்களுக்கான இரு பயிற்சிகள்
07:47 பின்வரும் பரிமாணங்களைக் கொண்ட ஐந்து வட்டங்களை உருவாக்கவும்
07:54 அவற்றை canvasல் ஆங்காங்கே வைத்து அனைத்தையும் தேர்ந்தெடுக்கவும்
07:59 Align and Distributeஐ பயன்படுத்தி Relative to தேர்வை Biggest object என அமைக்கவும்
08:04 Align left edgesஐ க்ளிக் செய்யவும்
08:06 Centre on horizontal axisஐ க்ளிக் செய்யவும்
08:10 நீல நிறத்தில் 100 * 100 pixels அளவுள்ள 6 சதுரங்களை உருவாக்கவும்.
08:17 அனைத்து சதுரங்களையும் தேர்ந்தெடுத்து Rows and columnsஐ திறக்கவும்
08:21 அவற்றை 3 rowகள் மற்றும் 3 columnகளில் அடுக்கவும்
08:25 vertical மற்றும் horizontal space parameterஐ 20 ஆக அமைக்கவும்.
08:29 நீங்கள் செய்து முடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும்.
08:35 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளி ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்.
08:43 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
08:51 மேலும் தகவல்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
08:54 இந்த திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசின் MHRD,NMEICT மூலம் கிடைக்கிறது.
09:03 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்.
09:07 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
09:09 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst