Inkscape/C2/Fill-color-and-stroke/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:00 | Inkscape ல் “Fill color மற்றும் stroke” குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
|
00:20 | இந்த டுடோரியலுக்காக நான் பயன்படுத்துவது * Ubuntu Linux 12.04
|
00:29 | Inkscapeஐ திறப்போம். அதற்கு, Dash home க்கு சென்று Inkscape என டைப் செய்க. |
00:35 | Inkscape logo ஐ க்ளிக் செய்து அதை திறக்கலாம் |
00:40 | நாம் ஏற்கனவே உருவாக்கிய file Assignment.svg ஐ திறப்போம். அதை என் Documents folderல் சேமித்திருந்தேன். |
00:50 | இவை முன் பயிற்சியில் உருவாக்கப்பட்ட மூன்று வடிவங்களாகும். |
00:54 | interface ன் அடியில் உள்ள color palette ஐ பயன்படுத்தி நிறத்தை மாற்ற கற்றோம் என்பதை நினைவுகொள்க. |
01:01 | இப்போது Fill and Stroke ஐ பயன்படுத்தி எவ்வாறு பலவகைகளில் நிறங்களை நிரப்புவது என கற்போம் |
01:08 | Object menuக்கு சென்று, பட்டியலில் Fill and Stroke தேர்வுமீது க்ளிக் செய்க. |
01:13 | interface ன் வலப்பக்கம் Fill and Stroke dialog box திறந்திருப்பதைக் கவனிக்கவும். |
01:20 | இந்த dialog box ல் 3 tabகள் உள்ளன : Fill, Stroke paint மற்றும் Stroke style |
01:27 | இப்போது canvas பகுதியில் செவ்வகம் மீது க்ளிக் செய்வோம். Fill and stroke dialog box ல் உள்ள தேர்வுகள் மற்றும் iconகள் செயலில் வந்திருப்பதைக் கவனிக்கவும். |
01:38 | முதலில் Fill tab பற்றி கற்போம். |
01:41 | Fill tab ன் கீழ் 6 iconகள் இருப்பதை கவனிக்கவும். இந்த iconகளின் செயலைக் கற்போம். |
01:48 | முதல் icon No paint எனப்படும். இது object ல் எந்த நிறமும் நிரப்பப்படாது என காட்டுகிறது. |
01:56 | இந்த icon ஐ க்ளிக் செய்து செவ்வகத்தின் மாற்றத்தை கவனிக்கவும். செவ்வகத்தின் நிறம் நீக்கப்பட்டுள்ளது. |
02:03 | அடுத்த icon color Flat. இது ஒரு object ல் திடமான நிறத்தை நிரப்ப பயன்படுகிறது. |
02:11 | Flat color icon ஐ க்ளிக் செய்து செவ்வக வடிவத்தில் நிற மாற்றத்தை கவனிக்கவும். |
02:17 | Flat color ன் கீழ் 5 துணை tabகள் இருப்பதை கவனிக்கவும். |
02:21 | முன்னிருப்பாக, RGB tab தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். |
02:25 | RGB tabன் கீழ், 4 sliderகள் உள்ளன |
02:29 | முதல் 3 sliderகள் சிவப்பு, பச்சை, நீல நிறங்களின் intensity ஐ காட்டுகின்றன. |
02:36 | இந்த sliderகளை இடது அல்லது வலது பக்கம் நகர்த்தி நிறத்தை மாற்றலாம். நான் செய்யும் போது செவ்வகத்தில் ஏற்படும் நிறமாற்றதை கவனிக்கவும். |
02:46 | நான்காவது slider Alpha slider. இதை பயன்படுத்தி நிறத்தின் opacity level ஐ opaque ல் இருந்து முழுதும் transparent ஆக அதிகரிக்கவோ குறைக்கவோ செய்யலாம். |
02:57 | நான் இந்த 4 sliderகளை நகர்த்தும்போது, இந்த பெட்டியில் நிறங்களின் RGBA மதிப்புகள் தானாக மாறுவதை கவனிக்கவும். |
03:06 | மாற்றங்களை தெளிவாக கவனிக்க மீண்டும் ஒருமுறை sliderகளை நகர்த்துகிறேன். |
03:12 | sliderகளின் வலப்புறம் உள்ள இந்த பெட்டிகளில் ஒவ்வொரு நிறத்தின் மதிப்பை நாமாகவே கையால் மாற்றுவதன் மூலம் நிறத்தை மாற்றலாம். |
03:20 | சிவப்பின் மதிப்பு 100, பச்சை 50 மற்றும் நீலம் 150 என மாற்றுகிறேன். செவ்வகத்தின் நிறம் ஊதா நிறமாக மாறியிருப்பதை காணலாம். |
03:32 | opacity level ஐ நான் குறைக்க விரும்பாததால் Alpha level ஐ 255 ஆக வைக்கிறேன். |
03:40 | அடுத்த tab HSL அதாவது முறையே Hue, Saturation மற்றும் Lightness. |
03:49 | ஒரு base color ஐ பெற Hue slider பயன்படுகிறது. பச்சையின் base color ஐ பெற sliderஐ இடப்பக்கமாக இழுக்கிறேன். |
03:59 | Saturation slider மூலம் base color ன் saturationஐ மாற்றலாம் |
04:04 | இந்த slider ஐ வலது அல்லது இடது பக்கம் நகர்த்துவதன் மூலம் saturation level ல் ஏற்படும் மாற்றத்தைக் கவனிக்கவும். |
04:12 | base colorன் lightness ஐ மாற்ற Lightness slider பயன்படுகிறது. |
04:16 | இந்த தேர்வின் மூலம் base colorன் shade ஐ பின்வருமாறு மாற்றலாம்
|
04:26 | முன்புபோல, Alpha slider ஆனது opaque ல் இருந்து முழு transparentஆக opacity level ஐ குறைக்கவோ அதிகரிக்கவோ பயன்படுகிறது. |
04:35 | அடுத்த tab CMYK அதாவது முறையே Cyan, Magenta, Yellow மற்றும் Black. |
04:44 | இந்த sliderகளை நகர்த்துவதன் மூலம், base colour ன் intensity அல்லது depth ஐ குறைக்கவோ அதிகரிக்கவோ செய்யலாம். |
04:52 | design projectகள் வணிக அச்சகங்களில் அச்சிடப்படும் போது இந்த color mixing தேர்வுகள் பயன்படுகின்றன. |
05:00 | அடுத்தது Wheel tab. இது HSL color mixer க்கான பதிலீடு ஆகும். |
05:07 | standard color wheel ஐ சார்ந்த நிற வட்டத்தில் base hueஐ தேர்ந்தெடுக்கலாம். |
05:14 | எனவே, மஞ்சள் நிறத்தின் base ஐ தேர்ந்தெடுக்க மஞ்சள் shade ஐ க்ளிக் செய்கிறேன். |
05:19 | நிற வட்டத்தின் உள், ஒரு சிறிய வட்டத்துடன் ஒரு முக்கோணம் உள்ளது. அதை க்ளிக் செய்து முக்கோணத்தில் நகர்த்தும் போது செவ்வகத்தில் ஏற்படும் மாற்றத்தைக் கவனிக்கவும். |
05:31 | CMS tab ஆனது color managed environmentகளில் வேலைசெய்பவர்களுக்கு மட்டும்தான் சுவாரசியமாக இருக்கும். |
05:38 | எனவே இப்போது, இந்த tabஐ தவிர்ப்போம். |
05:43 | அடுத்து, ஒரு Linear gradientஐ உருவாக்க கற்போம் |
05:47 | canvas க்கு சென்று வட்டத்தில் க்ளிக் செய்க. |
05:50 | இப்போது Fill and Stroke dialog boxக்கு வந்து Linear gradient icon ஐ க்ளிக் செய்க. |
05:57 | வட்டத்தில் gradient நிரப்பப்பட்டிருப்பதைக் காண்க. |
06:00 | சில எண்களுடன் gradient க்கு ஒரு பெயர் கொடுக்கப்படும். |
06:05 | என் interfaceல், அந்த எண் linearGradient3794. உங்கள் interfaceல் அது வேறுபடலாம். |
06:14 | linear gradient number button க்கு வலப்பக்கம் உள்ள Edit button ஐ க்ளிக் செய்து gradient ஐ மாற்றலாம் |
06:21 | இது Gradient editor dialog box ஐ திறக்கும். |
06:26 | இந்த boxன் முதல் button ன் பெயர் stop பின் அதில் சில எண்கள். இதில் ஒரு drop down menu உள்ளது. |
06:34 | இந்த drop down ல் அம்புக்களை க்ளிக் செய்தால், இரு stop தேர்வுகளைக் காணலாம். |
06:39 | முதலாவது pure base colour ஐ காட்டுகிறது. அடுத்த half checker board... இது transparent என காட்டுகிறது. |
06:48 | இரண்டாம் தேர்வு, அதாவது transparent stop தேர்வை தேர்ந்தெடுப்போம். |
06:53 | கீழே Stop Color சென்று RGB மதிப்புகளின் sliderகளை நகர்த்தி உங்கள் விருப்பம் போல மாற்றுக |
07:00 | gradient முழுதும் தெரியுமாறு Alpha மதிப்பை 255 ல் வைப்போம். Gradient editor dialog box ஐ மூடுக. |
07:09 | இப்போது gradient angle ஐ மாற்றுவோம். அதற்கு, interface ன் இடப்பக்கமுள்ள tool box ல் Node toolஐ க்ளிக் செய்க. அது Selector toolக்கு கீழ் உள்ளது |
07:26 | ஒரு square handle மற்றும் arc handleகள் எனப்படும் ஒரு circular handle இந்த கோட்டின் முனைகளில் உள்ளன. |
07:29 | இவை வட்டத்தின் square handle மற்றும் arc handleகளின் மேல் மறைந்துள்ளன. |
07:33 | இந்த handleகளை சற்று நகர்த்துவதன் மூலம் gradient line handleகளை தெளிவாக காணலாம். |
07:40 | circular handle அல்லது square handle ஐ க்ளிக் செய்து இழுப்பதன் மூலம் gradient ன் ஆரம்ப மற்றும் முடிவு நிலைகளை மாற்றலாம். |
07:50 | காட்டுவது போல circular handle ஐ நகர்த்துவதன் மூலம் gradient ன் திசையை சுழற்றவும் முடியும். |
07:58 | இப்போது Radial gradient ஐ பயன்படுத்த கற்போம். அந்த icon ஐ க்ளிக் செய்து வட்டத்தில் gradient ன் மாற்றத்தைக் கவனிக்கவும். |
08:06 | Radial gradient வட்டவடிவில் அமைந்துள்ளது. |
08:10 | ஒரு square handle மற்றும் இரு circular handle களைக் காண்க |
08:15 | gradient ன் ஆரம்ப புள்ளியை நகர்த்த மைய square handle ஐ க்ளிக் செய்க. அதை கீழே இடப்பக்கமாக நகர்த்துகிறேன். |
08:22 | gradient ல் மாற்றத்தை ஏற்படுத்த ஏதேனும் ஒரு circular handleஐ க்ளிக் செய்து இழுக்கவும். |
08:28 | gradient வடிவின் உயரம் மற்றும் அகலத்தில் ஏற்படும் மாற்றத்தைக் கவனிக்கவும். |
08:37 | Tool box லும் Gradient tool ஐ காணலாம். |
08:42 | அதை க்ளிக் செய்து பின் நம் வட்டத்திற்கு வருவோம். |
08:45 | capital I உடன் ஒரு கூட்டல் குறியாக cursor மாறியிருப்பதைக் காண்க. |
08:51 | இப்போது வட்டத்தில் எங்கேனும் க்ளிக் செய்து இழுக்கவும். gradient ன் மாற்றத்தை கவனிக்கவும். |
09:00 | இப்போது வட்டத்தின் வெளிப்பக்கம் எங்கேனும் க்ளிக் செய்து இழுக்கவும். |
09:04 | gradient ன் மாற்றத்தைக் கவனிக்கவும். |
09:06 | அடுத்து வடிவங்களில் patternகளை சேர்க்க கற்போம். |
09:11 | Tool boxக்கு சென்று, Selector tool ஐ க்ளிக் செய்து பின் நட்சத்திரத்தை க்ளிக் செய்க. |
09:17 | Fill and stroke dialog boxல், Pattern iconஐ க்ளிக் செய்க. நட்சத்திரத்தின் நிறம் stripe patternஆக மாறியிருப்பதைக் காண்க. |
09:26 | Pattern fill ல் ஒரு drop down menu உள்ளது. இருக்கும் patternகளை காண அம்புகளை க்ளிக் செய்க. |
09:32 | Checkerboard ஐ க்ளிக் செய்து நட்சத்தின் மாற்றத்தைக் கவனிக்கவும். இங்குள்ள patternகளில் எதையும் நீங்கள் பயன்படுத்தலாம். |
09:44 | மற்றொரு டுடோரியலில் Swatch பற்றி கற்போம். |
09:48 | கடைசி icon ஆன Unset paint... தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள object ன் நிறத்தை கருப்பாக மாற்றுகிறது. |
09:54 | அந்த icon ஐ க்ளிக் செய்து நட்சத்திரத்தில் மாற்றத்தைக் கவனிக்கவும். அது கருப்பாக மாறியுள்ளது. |
10:01 | இப்போது, ஒரு objectக்கு stroke அல்லது outline ஐ கொடுக்க கற்போம். அதை செய்ய, Stroke paint tab ஐ பயன்படுத்த வேண்டும். |
10:09 | இப்போது, Stroke paint tab ஐ க்ளிக் செய்து பின் செவ்வகத்தை க்ளிக் செய்க. |
10:14 | Stroke paint tab ல் உள்ள iconகள் Fill tabல் உள்ளவை போன்றதே. |
10:19 | அவைபோன்றே இவையும் செயல்படுகின்றன. |
10:22 | முதல் icon, No paint, மூலம் வடிவத்தின் outline ஐ நீக்கலாம். |
10:26 | அடுத்து, Flat color iconஐ க்ளிக் செய்வோம். செவ்வகத்தை சுற்றி கருப்பு நிற outline ஐ காண்கிறோம். |
10:33 | Stroke style tab ஐ பயன்படுத்தி outlineன் தடிமனை அதிகமாக்கலாம் அல்லது குறைக்கலாம். |
10:44 | width parameter ஐ 10 ஆக வைப்போம். நம் தேவைக்கேற்ப unitகளை percentage, point, போல மாற்றவும் முடியும். |
10:54 | unit ஐ Pixels என மாற்றுகிறேன் |
10:56 | Stroke paint tabக்கு மீண்டும் வருவோம். RGB tabக்கு கீழே உள்ள sliderகளை நகர்த்துவதன் மூலம் stroke ன் நிறத்தை மாற்றலாம். |
11:04 | நான் செய்யும்போது outline ன் மாற்றத்தை கவனிக்கவும். |
11:09 | HSL, CMYK, Wheel மற்றும் CMS போன்ற மற்ற Flat color தேர்வுகளை ஆய்ந்தறியவும். |
11:17 | இப்போது, Linear gradient ல் க்ளிக் செய்கிறேன். இது செவ்வகத்திற்கு gradient outline ஐ கொடுக்கிறது. |
11:24 | முன்னர் நாம் பயன்படுத்திய gradientகள் இந்த drop down list ல் தோன்றும். அவற்றையும் நாம் பயன்படுத்தலாம். |
11:32 | என் செவ்வகத்திற்கு சிவப்பு நீல gradient outline ஐ கொடுக்கிறேன். |
11:38 | அதே போல, மீதியுள்ள stroke iconகளை பயன்படுத்தி நம் objectகளுக்கு பலவித patternகள் மற்றும் gradient outlineகளைக் கொடுக்கலாம். |
11:46 | அடுத்து Stroke style பற்றி கற்போம் அதை க்ளிக் செய்க. |
11:50 | நாம் ஏற்கனவே stroke ன் அகலத்தை மாற்ற கற்றோம். |
11:54 | இப்போது, மூன்று Join icon களான, Miter join, Round join மற்றும் Bevel join ஐ காண்போம். முன்னிருப்பாக, Miter join ல் stroke உள்ளது |
12:08 | சரியாக காண செவ்வகத்தின் ஒரு மூலையைப் பெரிதாக்குகிறேன். |
12:12 | இப்போது, stroke க்கு round cornerஐ கொடுக்க Round join ஐ க்ளிக் செய்வோம். strokeன் மூலையில் மாற்றத்தைக் கவனிக்கவும் |
12:21 | அடுத்து, Bevel corner ஐ உருவாக்க Bevel join தேர்வை க்ளிக் செய்வோம். |
12:26 | Dashes drop down menuல் பல dash patternகள் உள்ளன. இவற்றை பயன்படுத்தி, strokeக்கு பல dash patternகளை கொடுக்கலாம், அகலத்தையும் மாற்றலாம். |
12:38 | அடுத்தது Cap தேர்வு. இது அடிப்படையில் line strokeகளில் வேலைசெய்கிறது |
12:44 | Tool box க்கு சென்று Freehand toolஐ க்ளிக் செய்க. Freehand toolஐ பயன்படுத்தி ஒரு கோட்டை வரைவோம் |
12:50 | இப்போது, கோட்டின் முனையை பெரிதாக்குவோம். |
12:54 | முன்னிருப்பாக, Butt cap தேர்ந்தெடுக்கப்பட்டு முனைக்கு flat edgeஐ கொடுக்கிறது. |
12:59 | இப்போது rounded edge ஐ கொடுக்க Round cap ஐ க்ளிக் செய்கிறேன். |
13:04 | அடுத்து, கோட்டின் முனைகளுக்கு flat மற்றும் extended edge ஐ கொடுக்கும் Square cap . |
13:13 | Dashes tabக்கு கீழே மூன்று Markers உள்ளன அவை path ன் மையத்தில் markerகளை வைக்கின்றன. |
13:20 | இருக்கும் பட்டியலைக் காண ஒவ்வொரு Marker ன் drop down menuஐயும் க்ளிக் செய்க. |
13:25 | Start Markers ல் Torsoஐ தேர்ந்தெடுக்கிறேன் |
13:29 | Mid markers ஆக Curvein ஐ தேர்ந்தெடுக்கிறேன் |
13:33 | End Markers ல் Legsஐ தேர்ந்தெடுக்கிறேன் |
13:39 | canvas ல் ஒரு cartoon shape உருவாக்கப்பட்டிருப்பதைக் காண்க. |
13:44 | கடைசியாக, Fill and stroke dialog box ன் கீழே உள்ள இரு sliderகளை காண்க, அவை Blur மற்றும் Opacity. |
13:53 | முதலில் நம் செவ்வகத்தை தேர்ந்தெடுப்போம். |
13:56 | ஒரு objectக்கு blur effectஐ கொடுக்க Blur slider பயன்படுகிறது. அந்த slider ஐ க்ளிக் செய்து வலப்பக்கமாக இழுக்கிறேன். |
14:04 | செவ்வகம் மங்குவதைக் காண்க, slider ஐ மேலும் நான் நகர்த்த நகர்த்த மங்கிக்கொண்டே வருகிறது. |
14:15 | வடிவத்திற்கு transparency ஐ கொடுக்க Opacity slider பயன்படுகிறது. slider ஐ வலப்பக்கம் நகர்த்தி வடிவத்தின் மாற்றத்தைக் கவனிக்கவும். |
14:27 | சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது |
14:31 | * Fill மற்றும் Stroke தேர்வுகளை பயன்படுத்தி objectகளில் நிறத்தை நிரப்புதல்
|
14:44 | இங்கே உங்களுக்கான பயிற்சி |
14:47 | 1. ஒரு ஐங்கோணத்தை உருவாக்கி சிவப்பு மஞ்சள் நிறத்துடன் Linear gradient மற்றும் 5 pixels அகலத்துடன் நீலநிற stroke ஐ கொடுக்கவும். |
14:57 | 2. Wavy pattern உடன் ஒரு நீள்வட்டத்தை வரைந்து அதன் opacity ஐ 70% ஆக மாற்றவும் |
15:04 | 3. அகலம் 10 உடன் ஒரு கோட்டை வரைந்து Start Markers ஐ Arrow1Lstart ஆகவும் End Markers ஐ Tail ஆகவும் கொடுக்கவும் |
15:15 | நீங்கள் செய்து முடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும். |
15:18 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும். |
15:28 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
15:37 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசின் MHRD,NMEICT மூலம் கிடைக்கிறது. |
15:55 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும். spoken-tutorial.org/NMEICT-intro. |
16:05 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |