LibreOffice-Suite-Draw/C3/Basics-of-Layers-Password-Encryption-PDF/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | LibreOffice Draw ல் - Layerகளின் அடிப்படை மற்றும் Password Encryption PDF குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:09 | இந்த டுடோரியலில், layerகளின் அடைப்படைகளை அறிவோம். |
00:12 | மேலும் கற்கபோது ஒரு Draw file ஐ |
00:15 | password encryption ஐ பயன்படுத்தி பாதுகாப்பது |
00:18 | அதை PDF ஆக export செய்வது. |
00:21 | இங்கு நான் பயன்படுத்துவது Ubuntu Linux பதிப்பு 10.04 மற்றும் LibreOffice தொகுப்பு பதிப்பு 3.3.4. |
00:30 | file Route Map ஐ திறப்போம். |
00:33 | Layerகள் என்பவை யாவை? |
00:34 | Layers என்பவை ஒன்றன் மீது ஒன்று வைக்கப்பட்ட transparent sheetகள் போன்றவை. |
00:42 | ஒவ்வொரு Draw fileக்கும் மூன்று layerகள் இருக்கும். |
00:44 | Layout layer முன்னிருப்பாக காட்டப்படும். |
00:48 | இங்குதான் நாம் பெரும்பான்மையான நம் graphicsஐ உருவாக்குகிறோம். |
00:51 | buttonகள் மற்றும் formகள் போன்ற control elementகளை சேமிக்க Control layer பயன்படுகிறது. |
00:57 | சிக்கலான வரைப்படங்களுக்கான dimension lines அல்லது measurement lines ஐ சித்தரிக்க Dimensions layer பயன்படுகிறது. |
01:06 | உதாரணமாக, ஒரு வீட்டின் வரைப்படத்தில் சுவர்கள், மின்சார கம்பிகள் போன்றவற்றின் மிகச்சரியான அளவுகள் இருக்க வேண்டும். |
01:19 | வீட்டிலிருந்து பள்ளிக்கான மூன்று mapகளை அச்சடிப்போம். |
01:26 | அவற்றை Map 1, Map 2 மற்றும் Map 3 என்போம். |
01:31 | Map 1, அந்த பகுதியின் அனைத்து இடங்களையும் காட்டுகிறது. |
01:35 | Map 2 ல், இரு Lakeகள், Stadium மற்றும் Commercial Complex ஐ தவிர அனைத்து objectகளையும் காட்டுவோம். |
01:43 | Map 3 ல், Park ஐ தவிர அனைத்து objectகளையும் காட்டுவோம். |
01:48 | இவைகளைக் காட்ட மூன்று தனித்தனி mapகள் தேவையா? |
01:51 | இல்லை, Layerகளின் உதவியுடன் இதற்கு Draw தீர்வை தருகிறது. |
01:58 | இதில், பல layerகளின் தகவல்களுடன் ஒரே ஒரு map file இருக்கலாம். |
02:03 | Draw page ஐ பயன்படுத்தி layerகளின் கலவையை அச்சடிக்கவோ பார்க்கவோ செய்யலாம். |
02:10 | RouteMap க்கு சில layerகளை சேர்ப்போம். |
02:13 | Layout layer ல் க்ளிக் செய்க. |
02:15 | ரைட் க்ளிக் செய்து Insert layerஐ தேர்ந்தெடுக்கவும். |
02:18 | Insert layer dialog box தோன்றுகிறது. |
02:22 | “Name” field ல், “Layer four” என டைப் செய்வோம். |
02:24 | உங்கள் வரைப்படத்திற்கு பொருத்தமான தலைப்பு மற்றும் விவரத்தைச் சேர்க்கலாம். |
02:30 | “Visible” மற்றும் “Printable” boxகளை குறியிடுவோம். |
02:34 | dialog box ஐ மூட OKஐ க்ளிக் செய்க. |
02:37 | மீண்டும் Layout layer ஐ க்ளிக் செய்க. |
02:40 | Draw pageல், map ஐ தேர்ந்தெடுத்து அதை ungroup செய்க. |
02:44 | இப்போது Lakeகளை தேர்ந்தெடுப்போம். |
02:46 | Shift key ஐ அழுத்திக்கொண்டு Stadium மற்றும் Commercial complex ஐ தேர்ந்தெடுக்கவும். |
02:52 | ரைட் க்ளிக் செய்து Cut ஐ தேர்ந்தெடுக்கவும். |
02:55 | “Layer four” layer ஐ தேர்ந்தெடுத்து அவற்றை paste செய்வோம். |
02:59 | Layout layer ல் இருந்த அதே இடங்களிலேயே அவை paste செய்யப்படுகின்றன. |
03:04 | மீணடும் Layer Four ஐ க்ளிக் செய்க. |
03:07 | context menu ஐ காண ரைட் க்ளிக் செய்து Modify Layerஐ தேர்ந்தெடுக்கவும். |
03:12 | Modify Layer dialog box தோன்றுகிறது. |
03:15 | “Visible” ஐ குறிநீக்கி OKல் க்ளிக் செய்க. |
03:18 | Layer Four ல் objectகள் தெரிவதில்லை. |
03:21 | objectகள் அங்கேயேதான் இருக்கின்றன ஆனால் கண்ணுக்கு தெரிவதில்லை. |
03:26 | Layout Layerல் க்ளிக் செய்க. tab தெரியவில்லை எனில், Layout layer தெரியும் வரை left arrow button ஐ அழுத்தவும். |
03:35 | நம் Map 2 உள்ளது! இதேபோல, Map 3 ஐயும் உருவாக்கலாம். |
03:42 | டுடோரியலை இடைநிறுத்தி பயிற்சியை செய்யவும். |
03:45 | Home ல் இருந்து School Campus க்கு இரு routeகளை உருவாக்கவும் |
03:49 | RouteMap drawing ல் ஒவ்வொரு routeஐயும் தனித்தனி layer ல் உருவாக்கவும், இதனால் ஒவ்வொன்றிலும் ஒரு route வருமாறு இரு வெவ்வேறு mapகளாக அவற்றை அச்சடிக்கலாம். |
04:01 | இப்போது file ஐ PDF ஆக export செய்ய கற்போம் நம் Draw fileஐ password கொண்டு பாதுகாப்போம். |
04:10 | முதலில் Draw file “RouteMap” ஐ PDF ஆக சேமிப்போம். |
04:14 | main menu ல், File ஐ தேர்ந்தெடுத்து “Export as PDF” ல் க்ளிக் செய்க. |
04:19 | PDF dialog box தோன்றுகிறது. |
04:21 | முதலில், “General” optionகளை அமைப்போம். |
04:24 | “General” Tab ல் க்ளிக் செய்க. |
04:26 | Draw file ன் அனைத்து page களையும் PDFஆக மாற்றுவதால் “Range” ல், “All” ஐ தேர்ந்தெடுக்கவும். |
04:34 | “Images” ல் “JPEG compression” ஐ தேர்ந்தெடுக்கலாம். |
04:38 | இது compressionக்கு பயன்படுத்தப்படும் மிக பொதுவான format ஆகும். |
04:42 | இப்போது Initial View tabல் க்ளிக் செய்க. |
04:45 | dialog box ல் காட்டப்படும் முன்னிருப்பு மதிப்புகளை அப்படியே வைப்போம். |
04:49 | இப்போது Links tabல் க்ளிக் செய்க. |
04:52 | Draw file ல் link களை சேர்த்திருக்கலாம். |
04:55 | மீண்டும் Linksக்கான முன்னிருப்பு மதிப்புகளை அப்படியே வைப்போம். |
04:59 | இப்போது, PDF document ஐ பாதுகாக்க password ஐ கொடுப்போம். |
05:03 | அதற்கு “Security” tab ஐ க்ளிக் செய்க. |
05:07 | Set open password button ஐ க்ளிக் செய்க. |
05:10 | Set open password dialog box தோன்றுகிறது. |
05:14 | field “Password” ல், file ஐ பாதுகாக்க விரும்பும் ஏதேனும் password ஐ டைப் செய்க. |
05:20 | “Protect101” என என் password ஐ அமைக்கிறேன். |
05:24 | field “Confirm” ல், password “Protect101”ஐ மீண்டும் டைப் செய்து OKல் க்ளிக் செய்க. |
05:31 | அடுத்து, document ஐ அச்சடிக்க அல்லது மாற்றம் செய்ய permission passwordஐ அமைப்போம். |
05:37 | Set permission password button ஐ க்ளிக் செய்க. |
05:41 | field “Password” ல், விருப்பமான password ஐ டைப் செய்க. “ProtectAgain0” என டைப் செய்கிறேன். |
05:49 | field “Confirm”ல், password “ProtectAgain0” ஐ மீண்டும் டைப் செய்க OKஐ க்ளிக் செய்க. |
05:57 | Printing மற்றும் Changesக்கான permissionகள் இப்போது செயலில் வந்துள்ளன என்பதை காண்க. |
06:03 | எப்போதும்
|
06:14 | Printingல், option Not Permittedஐ தேர்ந்தெடுக்கவும். |
06:18 | சரியான password கொடுத்தால் மட்டுமே PDF அச்சடிக்கப்படும், இல்லையெனில் அதை அச்சடிக்க முடியாது. |
06:25 | Changes ல் option “Not Permitted”ஐ தேர்ந்தெடுக்கவும். |
06:29 | சரியான passwordஐ கொடுத்தால் மட்டுமே Passwordஐ edit செய்யமுடியும், இல்லையெனில் அதை மாற்றமுடியாது. |
06:36 | இப்போது, கீழே Export button ஐ க்ளிக் செய்க. |
06:41 | Export dialog box தோன்றுகிறது. |
06:43 | left panel ல், Placesல், fileஐ சேமிக்க விரும்பு இடத்தை க்ளிக் செய்க. நான் Desktopஐ தேர்ந்தெடுக்கிறேன். |
06:53 | File typeல், PDF - Portable Document Formatஐ க்ளிக் செய்க |
06:57 | பின் Save buttonஐ க்ளிக் செய்க. |
07:01 | Draw file ஆனது PDF file ஆக மாற்றப்பட்டு Desktopல் சேமிக்கப்படுகிறது. |
07:07 | இப்போது Desktop க்கு செல்வோம். |
07:09 | Desktopல், RouteMap PDF file மீது டபுள் க்ளிக் செய்க. |
07:14 | Enter password dialog box திறக்கிறது. |
07:17 | Password fieldல், தவறான password Protect111 என டைப் செய்வோம். |
07:23 | Unlock Document button ஐ க்ளிக் செய்க |
07:26 | password field துடைக்கப்பட்டு மீண்டும் password ஐ உள்ளிட சொல்வதைக் காணலாம். |
07:35 | Password fieldல், சரியான password Protect101 என டைப் செய்வோம். |
07:40 | Unlock Document buttonஐ க்ளிக் செய்க. PDF file திறக்கப்படுகிறது. |
07:46 | நம் Draw file ஐ வெற்றிகரமாக password-protected PDF ஆக மாற்றியுள்ளோம்! |
07:53 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
07:57 | இங்கு நாம் கற்றது, layerகளின் அடிப்படை. |
08:00 | Draw fileஐ PDF ஆக மாற்றுதல் |
08:03 | password encryptionஐ பயன்படுத்தி அதை பாதுகாத்தல். |
08:08 | இங்கே உங்களுக்கான பயிற்சி. |
08:11 | RouteMap file ன் மற்றொரு PDF ஐ உருவாக்கவும். |
08:14 | PDF dialog box ல், “Initial View” தேர்வுகளை மாற்றவும் |
08:17 | பின் நடப்பதை கவனிக்கவும். |
08:20 | “User Interface”க்கான அனைத்து தேர்வுகளையும் சோதிக்கவும். |
08:23 | permission passwordகளை அமைக்கவும். |
08:25 | PDF ஐ அச்சடிக்கவும். |
08:28 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். |
08:31 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. |
08:34 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும். |
08:40 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
08:50 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
08:58 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
09:03 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
09:11 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
09:23 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |