LibreOffice-Suite-Draw/C3/Working-with-Objects/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | LibreOffice Draw ல் Objectகளுடன் வேலைசெய்தல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது: |
00:08 | * Gridகள் மற்றும் Guide line களை பயன்படுத்தி object களை நிலையில் வைத்தல் |
00:12 | * snap functionகளை பயன்படுத்துதல் |
00:14 | *lineகள் மற்றும் arrowheadகள்ஐ customize செய்தல் |
00:18 | மேலும் கற்கபோவது: * objectகளை duplicate செய்தல் |
00:21 | * objectகளை மறுஅளவாக்குதல் |
00:24 | *objectகளை distribute செய்தல் |
00:25 | *objectகளை Combine,merge, subtract மற்றும் intersect செய்தல் |
00:30 | இங்கு நான் பயன்படுத்துவது Ubuntu Linux பதிப்பு 10.04 மற்றும் LibreOffice தொகுப்பு பதிப்பு 3.3.4. |
00:40 | Gridகள் என்பவை யாவை? |
00:42 | *Draw page ல் துல்லியமாக objectகளை நிலையில் வைக்க Gridகள் உதவுகின்றன |
00:48 | Desktop ல் சேமிக்கப்பட்ட file RouteMapஐ திறப்போம். |
00:53 | முன் டுடோரியல்களில் gridகளை கொஞ்சம் பயன்படுத்தினோம். |
00:57 | இப்போது gridகள் பற்றி விரிவாக காண்போம். |
01:01 | Main menu ல், Viewஐ தேர்ந்தெடுத்து Gridல் க்ளிக் செய்க |
01:05 | பின் Display Grid ல் க்ளிக் செய்க |
01:08 | Draw page ல் புள்ளிகளால் ஆன பல கிடைமட்ட மற்றும் செங்குத்து கோடுகள் வந்துள்ளன. இவை grid ஆகும் |
01:17 | இந்த gridகள் காட்சி நோக்கத்திற்கு மட்டும்தான். அச்சடிக்கும்போது இவை வராது. |
01:22 | gridகளின் அளவை நாம் மாற்றலாம், அதாவது, தேவைக்கேற்ப அவற்றை பெரிதாகவோ சிறியதாகவோ மாற்றலாம். |
01:30 | Main menu ல், Tools ஐ தேர்ந்தெடுத்து Optionsல் க்ளிக் செய்க. |
01:35 | Options dialog box தோன்றுகிறது. |
01:38 | LibreOffice Draw ல் க்ளிக் செய்து Grid ஐ தேர்ந்தெடுக்கவும். |
01:42 | Resolution ல் பின்வரும் மதிப்புகளை உள்ளிடவும்: |
01:46 | Horizontal – 7 cm |
01:49 | Vertical – 5 cm |
01:53 | ஒரு gridல் spaceகளின் எண்ணிக்கையை Subdivision தீர்மானிக்கிறது. |
01:57 | Subdivision மதிப்புகளை உள்ளிடுவோம். |
02:00 | Horizontal – 3 |
02:02 | Vertical – 4 |
02:05 | Synchronize axes ஐ குறியிடாமல் விடுவோம். |
02:09 | OK ஐ க்ளிக் செய்க. |
02:11 | இப்போது Draw page ஐ காண்க. grid ல் ஒவ்வொரு பெட்டியின் அளவையும் காண்க. |
02:17 | Subdivision ல் நாம் கொடுத்த space களை கணக்கிடுவோம். |
02:22 | கிடைமட்டமாக 1, 2, 3 spaceகள் மற்றும் செங்குத்தாக 1, 2, 3, 4 spaceகள். |
02:33 | இப்போது Guideகள் பற்றி அறிவோம். |
02:36 | Guideகள் என்பவை யாவை? |
02:38 | Guideகள் என்பவை உதவும் கோடுகள். அல்லது object முனைகளின் நீட்சிகள் ஆகும் |
02:43 | அவை object ஐ நகர்த்தும்போது காட்டப்படும். |
02:47 | guidelineகளை செயல்படுத்துவோம். |
02:50 | Main menu க்கு சென்று, View ல் க்ளிக் செய்து Guides ஐ தேர்ந்தெடுப்போம். |
02:55 | இப்போது, Display Guides ஐ தேர்ந்தெடுப்போம் |
02:59 | Main menu ல், Tools மற்றும் Options ல் க்ளிக் செய்க. |
03:03 | Options dialog box தோன்றுகிறது. |
03:06 | இடது panelல், LibreOffice Drawக்கு அடுத்த சிறிய கருப்பு முக்கோணத்தை க்ளிக் செய்து View ல் க்ளிக் செய்க. |
03:15 | வலது panelல், Guides when moving ஐ குறியிடுக. இதனால் object களை நகர்த்தும்போது guide களை காணலாம். |
03:23 | OK ல் க்ளிக் செய்க. |
03:27 | இப்போது, park ஐ சற்று வலப்பக்கமாக நகர்த்துவோம். |
03:29 | நகர்த்தும்போது object முனைகளின் நீட்சிகளைக் காண்கிறோம். இவை Guidelineகள். |
03:39 | Snap Lineகள் என்பவை யாவை? |
03:41 | குறிப்பிட்ட ஒரு பரப்பில் இரண்டு அல்லது பல Objectகளை வைக்க Snap Lineகள் உதவுகின்றன |
03:48 | Snap lineகள் மற்றும் Snap pointகள் பயனரால் உருவாக்கப்படுகின்றன. |
03:53 | Snap lineகள் கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் இயங்குகின்றன. இவை கோடிட்ட வரிகளாக தோன்றுகின்றன. |
03:59 | snap lineகளை உருவாக்குவதற்கு முன் Snap Lines option ஐ செயல்படுத்த வேண்டும் |
04:05 | Draw pageக்கு சென்று context menuக்கு ரைட்-க்ளிக் செய்து Snap Lines தேர்வை தேர்ந்தெடுக்கவும். |
04:12 | மூன்று தேர்வுகளையும் செயல்படுத்துவோம்: |
04:16 | Snap Lines Visible |
04:18 | Snap to Snap Lines |
04:20 | Snap Lines to Front |
04:22 | நாம் உருவாக்கும் Snap lineகள் இப்போது தெரியவரும். |
04:26 | Snap Lineகளை பயன்படுத்தி ஒரு பரப்பை வரையறுப்போம், அதனுள் map ன் objectகள் இருக்கவேண்டும். |
04:34 | vertical ruler மீது mouse cursor ஐ நகர்த்தவும். |
04:38 | left mouse button ஐ அழுத்தவும். |
04:41 | இப்போது cursor இருபக்க அம்புகளுடன் மாறியிருப்பதைக் காண்க. |
04:46 | Draw page ஐ நோக்கி mouse ஐ இழுக்கவும். |
04:50 | ஒரு dotted line ஐ காணலாம். |
04:53 | mouse button ஐ விடுவிக்காதீர். |
04:55 | left mouse button ஐ பிடித்துக்கொண்டு அந்த dotted line ஐ page க்கு இழுக்கவும். |
05:01 | இப்போது mouse button ஐ விடுவிக்கவும். |
05:04 | line ஐ காணமுடிகிறதா? |
05:06 | இதுதான் Snap Line. |
05:07 | கீழ் எல்லையை உருவாக்க, line ஐ pageன் கீழ்பக்கமாக இழுக்கவும். |
05:13 | mapஐ உள்ளடக்க மேலும் மூன்று Snap Line களை உருவாக்குவோம். |
05:24 | கிடைமட்ட மற்றும் செங்குத்து Snap Line களை உருவாக்கியுள்ளோம் |
05:29 | இப்போது இந்த Snap Line களில் objectகளை வைக்கலாம் |
05:34 | உங்களுக்கு தேவையான எத்தனை Snap Line களையும் உருவாக்கலாம். |
05:40 | கிடைமட்ட மற்றும் செங்குத்து Snap Lineகள், graph ன் X மற்றும் Y-axis போன்று வேலைசெய்யும் . |
05:48 | இந்த இரு அச்சுகளினுள் objectகளை மிகசரியாக வைக்கலாம். |
05:54 | objectகளை துல்லியமாக வைக்க grid lineகளுடன் Snap function ஐ பயன்படுத்தலாம். |
05:59 | மேலும் பின்வருவனவற்றை செய்யலாம் *Gridக்கு Snap - சரியாக grid pointகளில் object ஐ வைத்தல் |
06:06 | Snap lineகளுக்கு Snap - சரியாக snap line ல் object ஐ வைத்தல் |
06:11 | Page marginக்கு Snap - சரியாக page margin ல் object ஐ வைத்தல் |
06:18 | டுடோரியலை இடைநிறுத்தி பயிற்சியை செய்க. |
06:21 | அனைத்து Grid optionகளையும் ஆய்ந்தறியவும். |
06:24 | Grid, snap lineகள் மற்றும் page marginகளுக்கு snap செய்யும் போது objectகளில் நடப்பதைச் சோதிக்கவும் |
06:31 | இப்போது School Campusக்கு அடுத்துள்ள lake போன்றே மற்றொரு lake ஐ சேர்ப்போம். |
06:38 | அதற்கு Duplicate option ஐ பயன்படுத்துவோம். |
06:43 | Lake ஐ தேர்ந்தெடுப்போம். |
06:45 | Main menuக்கு சென்று, Edit ல் Duplicate ல் க்ளிக் செய்க. |
06:51 | Duplicate dialog box தோன்றுகிறது. |
06:54 | Number of copies ல், மதிப்பு 1 ஐ கொடுத்து OKல் க்ளிக் செய்க. |
06:59 | Lake பிரதிஎடுக்கப்பட்டது. |
07:03 | lakeஐ இழுத்து schoolக்கு அருகில் வைப்போம் |
07:06 | தேவையான எந்த ஒரு சரியான அளவுக்கும் Objectகளை மறுஅளவாக்கலாம். |
07:11 | இந்த ஸ்லைடில் காட்டப்படுவது போல House ன் சரியான அளவுகளைப் பயன்படுத்தி அதன் வடிவத்தை மாற்றுவோம். |
07:18 | அதே உயரம் மற்றும் அகலத்தை கொடுத்து அதன் மூலைகளை சாய்த்து அதை சுழற்றுவோம். |
07:24 | முதலில், Home ஐ தேர்ந்தெடுத்து, context menuக்கு ரைட் க்ளிக் செய்து Position and Sizeஐ தேர்ந்தெடுப்போம் |
07:31 | Position and Size dialog box தோன்றுகிறது. |
07:35 | Position and Size tabஐ க்ளிக் செய்க. |
07:38 | Size ல், Width மற்றும் Height fieldகளில் மதிப்பு 3 ஐ கொடுப்போம். |
07:43 | Rotation tabல் க்ளிக் செய்க. |
07:46 | Angle fieldல், மதிப்பு 10 ஐ கொடுப்போம். |
07:50 | கடைசியாக, Slant and Corner Radius Tab ல் க்ளிக் செய்க |
07:55 | Slant Angle fieldல், 5 degrees ஐ கொடுப்போம். |
07:59 | OK ஐ க்ளிக் செய்க. |
08:01 | house ஐ மாற்றியமைத்துவிட்டோம்! |
08:05 | டுடோரியலை இடைநிறுத்தி இந்த பயிற்சியை செய்க. |
08:08 | #Drawing tool bar மூலம் பல வடிவங்களை வரையவும். |
08:11 | அனைத்து வடிவங்களுக்கும் Corner radius ஐ பயன்படுத்த முடிகிறதா என சோதிக்கவும். |
08:16 | இப்போது சில objectகளின் வலது முனைகளுக்கு சமமாக இடம் கொடுப்போம். |
08:21 | அதை செய்ய Distribution option ஐ பயன்படுத்துவோம். |
08:26 | Distribution option ஐ பயன்படுத்த குறைந்தது மூன்று objectகளையாவது தேர்ந்தெடுக்க வேண்டும். |
08:32 | முதலில், Residential Complex, Parking Lot பின் Commercial Complexஐ தேர்ந்தெடுப்போம். |
08:39 | அனைத்து object களையும் தேர்ந்தெடுக்க Select arrow ஐ இழுத்து அவற்றை group செய்வோம். |
08:45 | இப்போது, ரைட் க்ளிக் செய்து Distribution ஐ தேர்ந்தெடுக்கவும். |
08:50 | Horizontalல், Rightஐ தேர்ந்தெடுத்து OKல் க்ளிக் செய்க |
08:56 | object ன் வலது முனைக்கு சமமாக distribute செய்யப்படுகிறது. |
09:01 | Distribution option, Objectகளை செங்குத்தாகவோ கிடைமட்டமாகவோ distribute செய்யாது |
09:07 | Horizontal Distribution option பின்வருமாறு distribute செய்கிறது. |
09:10 | *வலது மற்றும் இடது முனைகள் |
09:12 | *கிடைமட்ட மையங்கள் |
09:14 | *objectகளின் இடைவெளிகள் |
09:17 | Vertical Distribution option பின்வருமாறு distribute செய்கிறது |
09:21 | மேல் கீழ் முனைகள் செங்குத்து மையங்கள் மற்றும் objectகளின் இடைவெளிகள் |
09:26 | இப்போது map க்கு நம் சொந்த line style ஐ உருவாக்குவோம். |
09:32 | Main menuல் Format ல் Line ஐ க்ளிக் செய்க. |
09:35 | Line dialog box தோன்றுகிறது. |
09:38 | Line Styles tab ல் க்ளிக் செய்க. |
09:41 | Line Stylesல், Three dashes and three dotsஐ தேர்ந்தெடுக்கவும் |
09:47 | Type field ஐ அப்படியே விடவும். |
09:50 | Number ல் 10 மற்றும் 5 ஐ கொடுப்போம்; Length ல் 8%. |
09:57 | Addஐ க்ளிக் செய்க. My Line Style என name ல் டைப் செய்து OKஐ க்ளிக் செய்க. |
10:06 | மீண்டும் OK ல் க்ளிக் செய்க. |
10:08 | இந்த arrowஐ தேர்ந்தெடுத்து ரைட்-க்ளிக், பின் Lineஐ தேர்ந்தெடுக்க Line dialog box தோன்றுகிறது. |
10:13 | Line tab ல் க்ளிக் செய்க. |
10:16 | Style drop-down box ல் க்ளிக் செய்க. |
10:19 | இப்போது உருவாக்கிய புது style ஐ இது காட்டுகிறது. |
10:22 | அதை தேர்ந்தெடுத்து OKஐ க்ளிக் செய்க. |
10:26 | ஒரு புது line style ஐ உருவாக்கியுள்ளோம்! |
10:29 | School Campus ன் இடதுபக்கம் ஒரு சிறிய stadium ஐ வரைவோம். |
10:34 | Drawing toolbar ல், Basic Shapes ல் Circle ஐ தேர்ந்தெடுக்கவும். |
10:40 | அதை Draw pageல் வைப்போம். |
10:44 | circle outlineன் style ஆனது My Line Style ல் உள்ளது. |
10:49 | அதனுள் “Stadium” என டைப் செய்வோம். |
10:53 | இப்போது, objectகளை combine, merge, subtract மற்றும் intersect செய்ய கற்போம். |
10:59 | Grouping மற்றும் combining objectsக்கான வித்தியாசம் என்ன? |
11:03 | objectகள் group செய்யப்படும்போது, பல objectகள் ஒன்றாக சேர்க்கப்படுகின்றன. |
11:09 | objectகள் combine செய்யப்படும்போது, புதிய object உருவாக்கப்படுகிறது. |
11:13 | இந்த தேர்வுகளை செய்துகாட்ட மூன்று objectகளை பயன்படுத்துகிறேன். |
11:18 | முதலில், Draw file க்கு ஒரு pageஐ சேர்ப்போம். |
11:23 | ஒரு circle ஐ வரைவோம். Drawing toolbar ல், Basic Shapesஐ க்ளிக் செய்து Circleஐ தேர்ந்தெடுக்கவும். |
11:32 | Draw pageக்கு mouse ஐ நகர்த்தி அதை கீழே இழுக்கவும். |
11:35 | இரண்டாம் object Diamond ஐ வரைவோம். |
11:38 | Drawing toolbarல், Basic Shapes ல் Diamondஐ தேர்ந்தெடுப்போம். |
11:43 | cursor ஐ Draw pageக்கு நகர்த்தி, அதை கீழே இழுக்கவும். menu bar ல் Area Style / Filling drop down button ஐ க்ளிக் செய்து color Red 3 ஐ தேர்ந்தெடுக்கவும் |
11:55 | மூன்றாம் object ஒரு Rectangle ஐ வரைந்து அதற்கு color Green 6 ஐ கொடுப்போம் |
12:02 | Shift key ஐ பிடித்துக்கொண்டு ஒவ்வொரு object மீதும் க்ளிக் செய்து மூன்று objectகளையும் தேர்ந்தெடுப்போம். |
12:11 | Context menuக்கு ரைட் க்ளிக் செய்து Combine ல் க்ளிக் செய்க. |
12:14 | ஒரு புது object உருவாக்கப்படுகிறது! |
12:18 | கடைசி object ன் நிறத்தை புது object பெற்றுள்ளதை கவனிக்கவும். |
12:24 | CTRL+Z keyகளைை ஒருசேர அழுத்தி இந்த செயலை undo செய்வோம். |
12:29 | மீண்டும் objectகளை தேர்ந்தெடுத்து context menuக்கு ரைட் க்ளிக் செய்க. |
12:35 | Shapes ல் Mergeஐ க்ளிக் செய்க. |
12:38 | மற்றொரு புது வடிவம் உருவாக்கப்படுகிறது! |
12:41 | இந்த செயல்பாடுகளை மீண்டும் மீண்டும் செய்தபார்த்தால் மேலும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம். |
12:48 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
12:51 | இந்த டுடோரியலில் நாம் கற்றது objectகளை துல்லியமாக ஒழுங்குபடுத்த Gridகள், Guideகள் மற்றும் snap lineகளை பயன்படுத்துதல் |
12:59 | objectகளை duplicate, Resize மற்றும் distribute செய்ய கற்றோம் |
13:06 | புது line styleகளை உருவாக்கவும் கற்றோம் |
13:12 | *Combine, *Merge, *Subtract,மற்றும் *Intersect ஐ பயன்படுத்தி புது objectகளை உருவாக்கவும் கற்றோம். |
13:17 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். |
13:20 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. |
13:23 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும். |
13:28 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
13:37 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
13:43 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
13:48 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
13:55 | மேலும் தகவல்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
14:06 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |