LibreOffice-Suite-Draw/C4/Working-with-3D-objects/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:07, 18 October 2015 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:01 LibreOffice Draw ல் 3D Objectகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:05 இந்த டுடோரியலில், பின்வரும் தேர்வுகளைப் பயன்படுத்தி 3D objectகளை உருவாக்க கற்போம்:
  • Extrusion
  • 3D Toolbar'
  • 3D Rotation Object
00:16 மேலும் objectகளுக்கு 3D effectsஐ edit மற்றும் apply செய்தல் மற்றும் Duplicationஐ பயன்படுத்தி special effectsஐ உருவாக்குதலைக் கற்போம்
00:24 இந்த டுடோரியலைத் தொடர, Draw ன் Basic மற்றும் Intermediate level டுடோரியல்களை தெரிந்திருக்கவேண்டும்.
00:30 இங்கு நான் பயன்படுத்துவது Ubuntu Linux பதிப்பு 10.04 மற்றும்

LibreOffice தொகுப்பு பதிப்பு 3.3.4

00:40 ஒரு வடிவியல் விளக்கப்படத்தை உருவாக்குவோம் அதில் ஒரு 2D மற்றும் அதற்கு சமமான 3D வடிவத்தை காட்டுவோம்.

உதாரணமாக, சதுரம் ஒரு 2D object, கனச்சதுரம் அதன் 3D வடிவம்

00:53 இங்கே 3DObjectsChart என்ற ஒரு புதிய Draw fileஐ கொண்டுள்ளோம்.
00:59 வரைய ஆரம்பிக்கும் முன் gridகள் மற்றும் guidelineகளை செயல்படுத்துவோம்.

இவை பற்றி முன் டுடோரியல்களில் பார்த்தோம்.

01:08 Main menuல், View ல் க்ளிக் செய்து, Grid பின் Display Gridல் க்ளிக் செய்க.
01:17 பின் மீண்டும் View ல், Guides பின் Display Guidesல் க்ளிக் செய்க.
01:23 இரு rulerகளையும் centimeterகளில் அமைக்க விரும்புகிறேன்.
01:29 mouse pointer ஐ கிடைமட்ட rulerல் வைக்கவும். ரைட் க்ளிக் செய்து Centimeterஐ தேர்ந்தெடுக்கவும்.
01:38 mouse pointer ஐ செங்குத்து ruler ல் வைக்கவும் மீண்டும் ரைட் க்ளிக் செய்து Centimeterஐ தேர்ந்தெடுக்கவும்.
01:45 page ல் மேலே ஒரு text box ஐ வரைவோம்.
01:49 அதனுள் text "Geometric shapes in 2D and 3D" ஐ டைப் செய்வோம்.
01:55 இப்போது page ஐ snap lineஐ பயன்படுத்தி இரு செங்குத்து பாதிகளாக பிரிப்போம்.
02:01 செங்குத்து ruler ஐ க்ளிக் செய்து அதை Draw pageக்கு இழுப்போம்.
02:05 செங்குத்து dotted line தோன்றுகிறது.
02:08 page ஐ இரு பாதிகளாக பிரிக்குமாறு dotted line ஐ வைக்கவும்.
02:14 இடப்பக்கத்தில் ஒரு text box ஐ வைத்து... அதில் 2D Shapes என டைப் செய்வோம்.
02:23 மற்றொரு text box ஐ வலப்பக்கத்தில் வரைந்து... அதில் 3D Shapes என டைப் செய்வோம்.
02:30 3D toolbarsஐ செயல்படுத்துவோம்.
02:33 Main menuல், Viewல் க்ளிக் செய்து, Toolbars ல் 3D-Objectsஐ தேர்ந்தெடுக்கவும்.
02:43 மீண்டும் Viewல் க்ளிக் செய்து, Toolbars ல் 3D-settingsஐ தேர்ந்தெடுக்கவும்.
02:53 3D-Objects மற்றும் 3D-Settings tool boxகள் காட்டப்படுகின்றன.
03:02 முதலில் 2D shapeகளை வரைவோம்.
03:05 ஒரு செவ்வகம், சதுரம், வட்டம் மற்றும் முக்கோணத்தை வரைந்து அவற்றை ஒன்றன் கீழ் ஒன்றாக வைக்கவும்.
03:14 2D objectஐ பயன்படுத்தி 3D object ஐ பெறும் முறை Extrusion எனப்படுகிறது.
03:19 அடிப்படையில், 3D object ஐ உருவாக்க மேல்பாகம் வெளிப்பக்கமாக நகர்த்தப்படுகிறது.
03:25 முதலில், செவ்வகத்தின் நிறத்தை Turquoise 1 என மாற்றுவோம்
03:31 செவ்வகத்தை ஐ copy செய்வோம்.
03:35 copy செய்யப்பட்ட செவ்வகத்தை இழுத்து அதை page ன் வலது பாதியில் வைப்போம்.
03:40 இப்போது இன்னும் அது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, context menu ஐ காண ரைட் க்ளிக் செய்க.
03:45 Convert ல் To 3Dஐ தேர்ந்தெடுக்கவும்.
03:48 2D செவ்வகம் கனச்செவ்வகமாக மாறுகிறது.
03:52 செவ்வகத்தின் உள்ளே Rectangle என டைப் செய்க.
03:55 எனினும், 3D objectகளினுள் text ஐ டைப் செய்ய முடியாது.
04:00 textஐ டைப் செய்ய, Text toolஐ பயன்படுத்த வேண்டும்.
04:04 Text tool ஐ க்ளிக் செய்து கனச்செவ்வகத்தினுள் ஒரு Text box ஐ வரைவோம்.
04:10 அதனுள் text Cuboid என டைப் செய்யவும்.
04:14 Text box மற்றும் கனச்செவ்வகம் இரு வெவ்வேறு objectகளாக கருதப்படும். எனவே, அவற்றை group செய்வோம்.
04:21 அதேபோல, சதுரம், வட்டம் மற்றும் முக்கோணத்தின் நிறத்தை மாற்றி அவற்றை 3D objectகளாக மாற்றலாம்.
04:30 2D மற்றும் 3D வடிவங்களின் விளக்கப்படத்தை உருவாக்க extrusionஐ பயன்படுத்தினோம்.
04:36 டுடோரியலை இடைநிறுத்தி இந்த பயிற்சியை செய்யவும்.
04:40 Draw fileக்கு ஒரு புது page ஐ சேர்க்கவும்.
04:42 ஒரு சதுரத்தை வரைந்து text Squareஐ டைப் செய்யவும்.
04:46 text உடன் அந்த சதுரத்தை 3Dஆக மாற்றவும்.
04:49 2D square text உடன் இந்த text ஐ ஒப்பிடவும்
04:53 குறிப்பு: 3D objectகளை உருவாக்க 3D Settings toolbar ஐ பயன்படுத்தவும்.
04:58 முன்னிருப்பு 3D வடிவங்களையும் Draw தருகிறது.
05:01 3D Objects toolbarஐ பயன்படுத்தி இந்த வடிவங்களை சேர்க்கலாம்.
05:09 நம் Draw file ல் ஒரு புது page ஐ சேர்ப்போம்.
05:13 3D-Objects toolbar ல் ஒரு வடிவம் Shellஐ தேர்ந்தெடுப்போம்.
05:18 பின் அதை pageல் வரைவோம்.
05:24 2D objectகளில் body rotationஐ பயன்படுத்தியும் 3D objectகளை உருவாக்க Draw அனுமதிக்கிறது.
05:33 ஒரு 2D வடிவம் circle ஐ Draw pageல் வரைவோம்.
05:39 context menu க்கு ரைட் க்ளிக் செய்து Convertல் 3D Rotation Objectஐ தேர்ந்தெடுக்கவும்.
05:47 circle ல் மாற்றத்தை கவனிக்கவும். இப்போது இது ஒரு 3D object.
05:54 அடியில் Drawing toolbarல் Fontwork Gallery iconஐ க்ளிக் செய்க.
05:59 Favorite 16 ஐ தேர்ந்தெடுத்து OK buttonஐ க்ளிக் செய்க.
06:04 நம் Draw page ல் text Fontwork காட்டப்படுகிறது.
06:09 தேவைக்கேற்ப இந்த text ன் அளவை மாற்றலாம்.
06:12 இந்த text இடத்தில் வேறு text ஐ சேர்க்கநினைத்தால், அதை எவ்வாறு செய்வது?
06:17 அதற்கு text Fontworkல் டபுள் செய்க
06:21 இப்போது பெரிய textன் உள் கருப்பு நிறத்தில் Fontwork என்ற வார்த்தையை காணமுடிகிறது .
06:26 இந்த text ஐ தேர்ந்தெடுத்து Spoken Tutorialsஎன டைப் செய்வோம்.
06:30 Draw pageல் எங்கேனும் க்ளிக் செய்க.
06:33 இப்போது page ல் Spoken Tutorials என காட்டப்படுகிறது.
06:36 அடுத்து, 3D objectகளில் effectsஐ பயன்படுத்த கற்போம்.
06:41 நம் shell வடிவத்தில் effectsஐ பயன்படுத்துவோம்.
06:44 அதை தேர்ந்தெடுத்து context menuக்கு ரைட் க்ளிக் செய்து 3D Effectsஐ தேர்ந்தெடுக்கவும்.
06:51 இங்கே பல்வேறு தேர்வுகளைக் காணலாம்.
06:57 செயல்விளக்கத்திற்கு, Depth parameter ஐ 3cm என மாற்றுகிறேன்.
07:05 Segmentsல், Horizontal ஐ 12 ஆக மாற்றுகிறேன்
07:10 Normalல், Flat optionஐ தேர்ந்தெடுக்கவும்.
07:14 preview window ல் object ன் மாற்றத்தை கவனிக்கவும்.
07:19 இப்போது dialog box ன் மேல் வலது மூலையில் Assign iconஐ க்ளிக் செய்க.
07:26 இப்போது, dialog boxஐ மூட மேல் இடது மூலையில் X markஐ க்ளிக் செய்க.
07:32 இப்போது வடிவத்தைக் காணவும். நாம் தேர்ந்தெடுத்த effects அதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
07:38 இங்கே உங்களுக்கான பயிற்சி. slide ல் காட்டியது போன்ற படத்தை உருவாக்கவும்.
07:45 அதை செய்ய 3D Effects dialog box ஐ பயன்படுத்தவும்.
07:49 2D மற்றும் 3D objectகளில் Duplication ஐ பயன்படுத்தியும் special effects ஐ உருவாக்கலாம்.
07:55 ஒரு புது page ஐ உருவாக்கி அதில் ஒரு செவ்வகத்தை வரையவும்
08:00 அந்த 2D செவ்வகத்தில் Duplication ஐ பயன்படுத்தி ஒரு effect ஐ உருவாக்கவும்.
08:04 Main menuல், Edit பின் Duplicateல் க்ளிக் செய்க.
08:09 Duplicate dialog box தோன்றுகிறது.
08:12 பின்வரும் மதிப்புகளை கொடுக்கவும் - Number of copies = 10
08:18 Placementல் X Axis = 10
08:26 Y Axis = 20
08:30 Angle = 0 degrees
08:34 முன்னிருப்பு Enlargement Width மற்றும் Height அவ்வாறே விடுவோம்
08:44 Start color ஐ Yellow ஆகவும் End color ஐ Red ஆகவும் மாற்றுவோம்
08:57 OKஐ க்ளிக் செய்க.
08:58 நாம் பெற்றுள்ள special effects ஐ காண்க!
09:04 angles மற்றும் மற்ற மதிப்புகளை மாற்றுவதன் மூலம் மேலும் பல effects ஐ பெறலாம்.
09:09 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
09:12 இதில், பின்வரும் தேர்வுகளை பயன்படுத்தி 3D objectகளை உருவாக்க கற்றோம்
  • Extrusion
  • 3D toolbar
  • 3D Rotation Object
09:23 மேலும் 3D objectகளை edit செய்யவும் objectகளுக்கு 3D effectsஐ பயன்படுத்தவும் கற்றோம்.
09:27 Duplicationஐ பயன்படுத்தி special effects ஐ உருவாக்கவும் கற்றோம்
09:32 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
09:35 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது.
09:39 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்.
09:44 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
09:53 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
09:59 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
10:03 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
10:10 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
10:20 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst