LibreOffice-Suite-Draw/C3/Import-and-Export-Images/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | LibreOffice Draw ல் Import மற்றும் Export படங்கள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில், Draw page னுள் படங்களை import செய்யவும் ஒரு Draw file ஐ வெவ்வேறு file formatகளில் export செய்யவும் கற்போம். |
00:16 | Draw ல் vector மற்றும் bitmap அல்லது raster படங்களை import மற்றும் export செய்யலாம். |
00:23 | இங்கு நான் பயன்படுத்துவது Ubuntu Linux பதிப்பு 10.04 மற்றும் LibreOffice தொகுப்பு பதிப்பு 3.3.4. |
00:32 | file RouteMapஐ திறப்போம் |
00:35 | இந்த டுடோரியலுக்காக, WaterCycle என்ற ஒரு வரைப்படத்தின் JPEG file ஏற்கனவே உருவாக்கப்பட்டு Desktopல் சேமிக்கப்பட்டுள்ளது |
00:46 | அந்த படத்தை நம் Draw fileனுள் import செய்வோம். |
00:49 | இந்த படத்தை மூடுவோம். |
00:52 | முதலில், படத்தை import செய்யவிரும்பும் பக்கத்தை தேர்ந்தெடுக்கவும். |
00:57 | ஒரு புது பக்கத்தை உள்நுழைத்து அதை தேர்ந்தெடுப்போம். |
01:01 | vector அல்லது bitmap படங்களை import செய்ய, Insert tab ஐ க்ளிக் செய்து Pictureஐ தேர்ந்தெடுப்போம் |
01:08 | பின் From Fileல் க்ளிக் செய்க. |
01:10 | Insert picture dialog box தோன்றுகிறது. |
01:14 | இப்போது Water Cycle.jpeg தேர்ந்தெடுப்போம் |
00:17 | Open மீது க்ளிக் செய்தால், அந்த படம் நம் Draw fileல் மொத்தமாக உட்பொதிக்கப்படும் அதாவது embed செய்யப்படும். |
01:24 | இங்குள்ள Link box ல் குறியிட்டால், பின் அந்த படம் அதன் path மூலம் இணைக்கப்படும். |
01:29 | Open மீது க்ளிக் செய்வோம் |
01:32 | படமானது ஒரு link மூலம் மட்டும் சேமிக்கப்படுகிறது என்ற செய்தி தோன்றுகிறது. |
01:37 | Keep Link ஐ க்ளிக் செய்க |
01:40 | Draw file ல் ஒரு link ஆக அந்த படம் உள்நுழைக்கப்பட்டுள்ளது. |
01:44 | Linkகளை சுலபமாக நீக்கலாம். |
01:48 | Main menuக்கு சென்று, Edit ஐ தேர்ந்தெடுத்து பின் Link ஐ க்ளிக் செய்க |
01:53 | Edit Links dialog box தோன்றுகிறத. |
01:57 | Draw file ன் அனைத்து linkகளையும் இந்த dialog box காட்டுகிறது. |
02:02 | WaterCycle படத்துக்கான link ஐ க்ளிக் செய்க |
02:06 | Break Link ஐ க்ளிக் செய்க |
02:09 | இதை உறுதிசெய்ய Draw செய்தியைக் காட்டுகிறது. Yesஐ க்ளிக் செய்க |
02:14 | Link நீக்கப்பட்டுவிட்டது. இப்போது, Close button ஐ க்ளிக் செய்க. |
02:20 | ஆனால் file ல் இன்னும் அந்த படம் இருப்பதைக் காணலாம். |
02:25 | ஒரு link ஐ break செய்யும்போது, அந்த படம் தானாகவே Draw file ல் embed செய்யப்படுகிறது. |
02:31 | இப்போது இந்த படத்தை நீக்குவோம். படத்தை தேர்ந்தெடுத்து Delete button ஐ அழுத்தவும். |
02:39 | இங்கே உங்களுக்கான பயிற்சி. |
02:42 | இரு Draw fileகளை உருவாக்கவும். |
02:44 | ஒரு file ல் ஒரு படத்தை உள்நுழைத்து அதை சேமிக்கவும். |
02:48 | மற்றொரு file ல் ஒரு படத்தை embed செய்து அதை சேமிக்கவும். |
02:52 | இரு fileகளின் அளவையும் ஒப்பிடவும். |
02:55 | படத்தை link செய்த file ல் , படத்தின் அளவை மாற்றவும். |
03:00 | original file லும் அந்த மாற்றம் காணப்படுகிறதா என சோதிக்கவும். |
03:05 | அடுத்து Draw image ஆக நேரடியாக WaterCycle diagram ஐ import செய்வோம் . |
03:13 | Main menu ல், Insert ஐ க்ளிக் செய்து File ஐ தேர்ந்தெடுக்கவும் |
03:18 | Insert File dialog box திறக்கிறது. |
03:21 | பட்டியலில், Draw file WaterCycle.odg ஐ தேர்ந்தெடுக்கவும் |
03:28 | Open ஐ க்ளிக் செய்க |
03:30 | Insert slides/objects dialog box தோன்றுகிறது. |
03:34 | file path க்கு அடுத்துள்ள கூட்டல் குறியை க்ளிக் செய்க. |
03:38 | slideகளின் பட்டியலைக் காண்போம். |
03:41 | WaterCycle diagram என்ற முதல் slide ஐ தேர்ந்தெடுக்கவும். |
03:46 | page அல்லது object ஐயும் link க்காக உள்நுழைக்கலாம். |
03:51 | அதற்கு, Link check box ஐ க்ளிக் செய்க. |
03:55 | OK ஐ க்ளிக் செய்க |
03:57 | புது format க்கு objectகள் பொருந்தவேண்டுமா என கேட்டு உறுதிசெய்ய ஒரு dialog box தோன்றுகிறது. |
04:05 | Yes ஐ க்ளிக் செய்க |
04:07 | file ல் ஒரு புது பக்கத்தில் slide உள்நுழைக்கப்பட்டுள்ளது. |
04:12 | அடுத்து Draw ல் இருந்து படங்களை export செய்ய கற்போம். |
04:17 | Draw ல் ஒரு file ஐ export செய்தல் என்பது
|
04:29 | உதாரணமாக, Draw file ஐ ஒரு PDF, HTML, JPEG அல்லது ஒரு bitmap file ஆக மாற்றலாம் |
04:39 | file formatகள் PDF, Flash மற்றும் HTML ஆகியவை எப்போதும் முழு Draw file ஐ export செய்யும் |
04:47 | RouteMap file ஐ minimize செய்கிறேன். |
04:51 | Draw WaterCycle diagram ஐ எவ்வாறு JPEG format ல் மாற்றினோம்? |
04:58 | அதை செய்துகாட்டுகிறேன். |
05:01 | file WaterCycle ஐ திறக்கவும் |
05:05 | பின், Pages panel ல், WaterCycle diagram உள்ள பக்கத்தை தேர்ந்தெடுக்கவும். |
05:11 | Main menu ல், Fileஐ க்ளிக் செய்து Export ஐ தேர்ந்தெடுக்கவும் |
05:16 | Export dialog box தோன்றுகிறது. |
05:18 | Filename field ல் WaterCycleDiagram என டைப் செய்வோம். |
05:24 | Places panelல், browse செய்து Desktop ஐ தேர்ந்தெடுக்கவும் |
05:29 | File type fieldல், JPEG தேர்வை தேர்ந்தெடுப்போம். ஆனால் Draw fileஐ சேமிக்க உங்களுக்கு விருப்பமான எந்த formatஐயும் தேரந்தெடுக்கலாம். |
05:38 | Selection check box ஐ குறியிடவும். |
05:42 | Saveஐ க்ளிக் செய்க |
05:43 | JPEG Options dialog box தோன்றுகிறது. |
05:47 | இந்த dialog box ல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னிருப்பு தேர்வுகளை அவ்வாறே வைத்துக்கொள்வோம். |
05:53 | OK ஐ க்ளிக் செய்க |
05:55 | WaterCycle diagram உடன் Draw page ஒரு JPEG ஆக Desktop ல் சேமிக்கப்படுகிறது |
06:02 | இங்கே Draw file ன் ஒரே ஒரு பக்கம் JPEG file ஆக மாற்றப்பட்டுள்ளது. |
06:08 | PDF, Flash அல்லது HTML formatகளில் சேமித்தால், Draw file ன் அனைத்து பக்கங்களும் export செய்யப்படும். |
06:18 | Draw ல் raster படங்களையும் edit செய்யலாம். |
06:22 | Format menu மூலம் Raster படங்களை format செய்யலாம். |
06:26 | இந்த படங்களை edit செய்ய Picture toolbar ஐயும் பயன்படுத்தலாம். |
06:31 | இத்துடன் LibreOffice Draw மீதான இந்த டுடோரியல் முடிகிறது. |
06:37 | இந்த டுடோரியலில், படங்களை import மற்றும் export செய்யவும் Draw objectகளை பல்வேறு file formatகளில் சேமிக்கவும் கற்றோம். |
06:47 | இங்கே உங்களுக்கான பயிற்சி. |
06:50 | தனித்தனி objectகள் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட objectகளின் ஒரு தொகுப்பை export செய்யமுடியும் |
06:56 | WaterCycle Draw file ல் இருந்து மேகங்கள் மற்றும் மலையை மட்டும் JPEG format ல் மாற்றுக |
07:05 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். |
07:09 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. |
07:12 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும். |
07:17 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
07:28 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
07:35 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
07:40 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
07:48 | மேலும் தகவல்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
08:01 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |