BASH/C3/Basics-of-Redirection-(error-handling)/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Redirection ன் அடிப்படை குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது |
00:10 | Bash ல் input மற்றும் output |
00:12 | Redirection மற்றும் file descriptorகள் |
00:15 | Standard input |
00:16 | Standard output |
00:18 | Standard error |
00:19 | இவற்றை விளக்க சில உதாரணங்கள் |
00:22 | இந்த டுடோரியலை தொடர, உங்களுக்கு BASH ல் Shell Scripting பற்றி தெரிந்திருக்க வேண்டும். |
00:28 | இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு, எங்கள் இணையத்தளத்தைக் காணவும் |
00:34 | இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது |
00:36 | Ubuntu Linux 12.04 மற்றும் |
00:40 | GNU BASH பதிப்பு 4.2 |
00:43 | பயிற்சிக்கு GNU Bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது. |
00:50 | GNU/Linux ல் ஒரு file க்கு output ஐ அனுப்பவோ அல்லது ஒரு file ல் இருந்து input ஐ read செய்யவோ முடிவும். |
00:58 | ஒவ்வொரு Shell commandக்கும் அதன் inputகள் மற்றும் outputகள் இருக்கும் |
01:03 | Shell மூலம் interprete செய்யப்பட்ட ஒரு சிறப்பு notation ஐ பயன்படுத்தி Input மற்றும் output... redirect செய்யப்படுகிறது |
01:11 | input அல்லது output ன் default path ஐ மாற்றுவது redirection எனப்படும் |
01:18 | GNU/Linux ல் hardware ஐயும் சேர்த்து அனைத்தும் ஒரு file |
01:24 | பொதுவாக return valueகளாவன: |
01:27 | Input அதாவது Keyboard க்கு 0 |
01:31 | Output அதாவது Screen க்கு 1 |
01:34 | Error அதாவது Screen க்கு 2 |
01:38 | 0, 1, 2 ஆகியவை POSIX எண்களாகும். இவை file descriptorகள்' (FD) எனவும் அறியப்படுகின்றன. |
01:46 | redirector ஒரு பயனர் அல்லது மற்ற ப்ரோகிராமுடன் பேச POSIX எண்களை பயன்படுத்துகிறது. |
01:54 | Standard input: Standard input என்பது default input method |
02:00 | இது input ஐ read செய்ய அனைத்து commandகளாலும் பயன்படுத்தப்படுகிறது. |
02:04 | இது பூஜ்ஜியம் மூலம் குறிக்கப்படுகிறது. |
02:07 | stdin(Standard input) எனவும் அறியப்படுகிறது |
02:13 | default standard input ஆனது keyboard ஆகும். |
02:17 | Less than குறியானது input redirection குறியாகும் |
02:22 | syntax... Command space less than குறி space fileபெயர் |
02:30 | redirection dot sh என்ற file ஐ திறக்கிறேன் |
02:34 | இந்த file ல் சில code ஐ டைப் செய்துள்ளேன். |
02:37 | இது shebang line. |
02:41 | டைப் செய்க ' sort space less than குறி space file dot txt |
02:48 | இது input redirectionக்கான ஒரு உதாரணம். |
02:52 | file file dot txt ல் input எடுக்கப்படுகிறது |
02:57 | sort command... file dot txt உள்ள எண்களை sort செய்கிறது |
03:04 | Save மீது க்ளிக் செய்க |
03:06 | file redirection dot sh ஐ இயக்குவோம் |
03:10 | Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினலை திறக்கவும். |
03:18 | அதற்கு முன், file dot txt ன் உள்ளடக்கத்தைக் காண்போம் |
03:23 | டைப் செய்க cat space file dot txt. |
03:27 | எண்டரை அழுத்துக |
03:30 | எண்களின் தொடரை அந்த file கொண்டுள்ளதைக் காணலாம் |
03:35 | டைப் செய்க: chmod space plus x space redirection dot sh |
03:43 | எண்டரை அழுத்துக |
03:45 | டைப் செய்க dot slash redirection dot sh |
03:48 | எண்டரை அழுத்துக |
03:51 | sorting க்கு பின் output ஐ டெர்மினலில் காணலாம் . |
03:56 | எண்கள் ஏறுவரிசையில் அடுக்கப்பட்டுள்ளன. |
04:00 | நம் ஸ்லைடுகளுக்கு வருவோம். |
04:03 | Standard output: Standard output ஆனது output ஐ காட்ட அனைத்து commandகளாலும் பயன்படுத்தப்படுகிறது. |
04:10 | screen ல் காட்டப்படுவது default output ஆகும். |
04:14 | அது எண் ஒன்றால் (1) குறிக்கப்படுகிறது. |
04:17 | இது stdout (Standard output) எனவும் அறியப்படுகிறது |
04:23 | ( > )Greater than குறியானது output redirection குறியாகும் |
04:28 | Syntax... Command space greater குறி space fileபெயர் |
04:35 | file redirection dot shக்கு வருவோம் |
04:41 | முன் வரி அதாவது sortஐ Comment செய்கிறேன் |
04:45 | அதன் கீழ் டைப் செய்க ls space greater than space ls underscore file.txt |
04:55 | இது output redirection ன் உதாரணம் ஆகும். |
04:59 | 'ls' ன் output... ls_file dot txt ல் சேமிக்கப்படுகிறது. |
05:06 | அந்த குறிப்பிட்ட directory ல் உள்ள தகவலை ls command பட்டியலிடுகிறது. |
05:14 | இப்போது, file ஐ சேமித்து பின் டெர்மினலுக்கு வருவோம் |
05:19 | prompt ஐ துடைக்கிறேன். முதலில் 'ls' ஐ டைப் செய்து output ஐ காண்க. |
05:28 | இப்போது uparrow key ஐ மூன்று முறை அழுத்தி |
05:33 | முன் command dot slash redirection dot sh க்கு வருவோம். |
05:38 | எண்டரை அழுத்துக |
05:41 | இப்போது output சரியாக redirect ஆகியுள்ளதா என சோதிப்போம். |
05:46 | டைப் செய்க gedit space ls underscore file dot txt எண்டரை அழுத்துக |
05:56 | இப்போது இந்த file ல் output ஐ காணலாம். எனவே நம் redirect நன்றாக நடந்துள்ளது. |
06:03 | நம் ஸ்லைடுகளுக்கு வருவோம். |
06:06 | Standard error என்பது default output error |
06:12 | அனைத்து system errorகளையும் எழுத இது பயன்படுகிறது |
06:16 | இது எண் இரண்டால் குறிக்கப்படுகிறது |
06:20 | இது stderr (Standard error) எனவும் அறியப்படுகிறது |
06:25 | default standard error output ஆனது screen அல்லது monitor ல் காட்டப்படுகிறது. |
06:32 | இரண்டு greater than குறி (2>) ஆனது error redirection குறியாகும் |
06:36 | Syntax... command space 2 greater than space error dot txt |
06:44 | file redirection dot shக்கு வருவோம் |
06:49 | முன் வரி அதாவது ls ஐ comment செய்கிறேன் |
06:54 | அதன் கீழ் டைப் செய்க rm space backslash tmp backslash 4815 dot txt space 2 greater than குறி space error dot txt. |
07:11 | error output அனது error dot txt file க்கு redirect செய்யப்படுகிறது |
07:17 | Save மீது க்ளிக் செய்து பின் டெர்மினலுக்கு வருவோம். |
07:22 | error ஐ காண முதலில் ஒரு command ஐ டைப் செய்வோம். |
07:26 | டைப் செய்க rm space backslash tmp backslash 4815 dot txt |
07:36 | எண்டரை அழுத்துக |
07:38 | காட்டப்படும் error |
07:40 | rm: cannot remove slash tmp slash 4815 dot txt: No such file or directory |
07:49 | இப்போது நம் file ஐ இயக்குவோம். |
07:53 | uparrow key ஐ அழுத்தி |
07:55 | முன் command dot slash redirection dot shக்கு வருவோம் |
08:01 | எண்டரை அழுத்துக |
08:03 | இப்போது error... redirect செய்யப்பட்டதா என சொதிப்போம். |
08:07 | டைப் செய்க gedit space error dot txt எண்டரை அழுத்துக |
08:15 | error இப்பொது file error dot txt க்கு redirect செய்யப்பட்டதை காணலாம். |
08:22 | இத்துடன் இந்த டுடோரில் முடிகிறது. |
08:26 | சுருங்கசொல்ல. |
08:28 | இந்த டுடோரியலில் நாம் கற்றது |
08:31 | Bashல் Input மற்றும் output |
08:35 | Redirection மற்றும் file descriptorகள் |
08:38 | <(less than) குறியைப் பயன்படுத்தி Standard input |
08:42 | >(greater than) குறியைப் பயன்படுத்தி Standard output |
08:47 | 2> (2 greater than) குறியைப் பயன்படுத்தி Standard error |
08:52 | பயிற்சியாக. |
08:54 | C, C++, Java போன்ற ஏதேனும் ஒன்றில் ஒரு ப்ரோகிராம் எழுதுக. |
08:59 | அதன் output அல்லது error ஐ ஒரு புது file க்கு redirect செய்க. |
09:04 | அல்லது, உங்கள் பெயர், முகவரி போல சில உள்ளடகத்துடன் ஒரு text file ஐ உருவாக்குக. |
09:11 | அந்த உள்ளடக்கத்தை ஒரு புது file க்கு redirect செய்க. |
09:15 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். |
09:19 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. |
09:23 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும். |
09:28 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
09:34 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
09:38 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
09:46 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
09:50 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
09:58 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org\NMEICT-Intro |
10:04 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |