BASH/C3/Recursive-function/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 16:18, 25 August 2015 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Recursive function குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது
00:10 Recursive function என்றால் என்ன?
00:12 அதை விளக்க சில உதாரணங்கள்
00:15 இந்த டுடோரியலை தொடர, உங்களுக்கு BASH ல் Shell Scripting பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
00:20 இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு, எங்கள் இணையத்தளத்தைக் காணவும்
00:27 இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது
00:29 Ubuntu Linux 12.04
00:33 மற்றும் GNU BASH பதிப்பு 4.2
00:37 பயிற்சிக்கு GNU Bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது.
00:44 ஒரு recursive function என்றால் என்ன என காண்போம்.
00:48 ஒரு recursive function என்பதை தன்னைத்தானே call செய்யும் function ஆகும்
00:52 Recursion என்பது சிக்கலான algorithmகளை எளிமைப்படுத்துவதற்கான ஒரு பயனுள்ள நுட்பம் ஆகும்
00:59 factorial.sh என்ற file ஐ திறக்கிறேன்
01:04 இந்த file ல் code ஐ டைப் செய்து வைத்துள்ளேன்.
01:07 இது shebang line.
01:10 factorial என்பது function பெயர்.
01:12 அதனுள், நாம் அச்சடிக்கும் செய்தி “Inside factorial function”
01:19 இந்த statement பயனரின் உள்ளீட்டை read செய்து அந்த மதிப்பை variable 'n' ல் சேமிக்கிறது
01:26 இங்கே if-else condition உள்ளது
01:30 'n' ன் மதிப்பு equal to zero ஆ என If condition சோதிக்கிறது
01:36 true எனில் "factorial value of n is 1" என்ற செய்தியை அச்சடிக்கும்
01:42 இங்கே if statement ன் else பகுதி உள்ளது.
01:46 இது factorial function ஐ call செய்கிறது
01:50 if-else statement ன் முடிவு fi .
01:55 file factorial.sh ஐ இயக்குவோம்
01:59 CTRL+ALT+T keyகளை ஒருசேர அழுத்தி டெர்மினலைத் திறக்கவும்.
02:07 டைப் செய்க: chmod space plus x space factorial dot sh
02:15 எண்டரை அழுத்துக
02:17 டைப் செய்க dot slash factorial.sh
02:21 எண்டரை அழுத்துக
02:24 நாம் காண்பது "Enter the number".
02:26 0 ஐ கொடுக்கிறேன்.
02:29 காட்டப்படும் வெளியீடு:
02:31 factorial value of 0 is 1
02:35 முன் command ஐ கொண்டுவர uparrow key ஐ அழுத்துக.
02:40 எண்டரை அழுத்துக
02:42 இம்முறை 5 ஐ கொடுக்கிறேன்.
02:45 இப்போது காட்டப்படும் வெளியீடு:
02:47 Inside factorial function.
02:51 factorial functionக்கு மேலும் சில logic ஐ சேர்ப்போம்
02:56 ஒரு எண்ணின் factorial ஐ கணக்கிடுவோம்.
03:01 நம் code க்கு வருவோம்.
03:03 இப்போது factorial function னுள் echo statement க்கு பதிலாக code பகுதியை சேர்ப்போம்.
03:10 Save மீது க்ளிக் செய்க
03:13 temp என்ற variable பயனரால் உள்ளிடப்படும் மதிப்பைச் சேமிக்கிறது.
03:19 variable மதிப்பு 1 க்கு சமமா என If condition சோதிக்கிறது
03:25 true எனில், 1 ஐ அச்சடிக்கும்.
03:29 இது if statement ன் else பகுதி.
03:33 இது temp variable ன் மதிப்பில் ஒன்றைக் குறைக்கிறது.
03:37 விடையை ஒரு variable 'f' ல் சேமிக்கிறது
03:42 factorial function ன் வெளியீட்டை Variable f சேமிக்கிறது
03:46 இது ஒரு recursive call.
03:50 variable f ன் மதிப்பு மற்றும் temp பெருக்கப்பட்டு அந்த மதிப்பு f ல் சேமிக்கப்படுகிறது.
03:57 பின் fன் மதிப்பை அச்சடிக்கிறோம்
04:00 if-else statement ன் முடிவு. function ன் முடிவு
04:05 இப்போது நம் ஸ்லைடுகளுக்கு வருவோம்
04:08 ப்ரோகிராமின் flow ஐ புரிந்துகொள்வோம்.
04:12 # n ன் மதிப்பு பயனரிடமிருந்து பெறப்படுகிறது அது n
04:17 # கொடுக்கப்பட்ட மதிப்பு பூஜ்ஜியத்திற்கு சமம் எனில், ஒரு செய்தியை அச்சடிக்கிறது
04:24 # இல்லையெனில் function factorial க்கு செல்கிறது
04:29 # இங்கே, மதிப்பு ஒன்றுக்கு சமம் எனில், மதிப்பு ஒன்றை அச்சடிக்கிறது
04:36 # இல்லையெனில், மதிப்பு ஒன்றுக்கு சமமாகும் வரை ஒரு recursive call ஐ உருவாக்குகிறது
04:44 # பின், அனைத்து மதிப்புகளும் பெருக்கப்பட்டு காட்டப்படுகிறது
04:49 இப்போது நம் டெர்மினலுக்கு வருவோம்.
04:52 uparrow key ஐ அழுத்துக.
04:54 முன் command ./factorial.sh க்கு வருவோம்
04:58 எண்டரை அழுத்துக
05:00 இப்போது உள்ளீட்டு மதிப்பாக 5 ஐ கொடுக்கிறேன்.
05:05 எண் 5 ன் factorial ஐ பெறுகிறோம்.
05:08 அது 120.
05:11 டெர்மினலில் ப்ரோகிராமின் flow ஐ காணலாம். ப்ரோகிராமின் flow ஐ ஆய்ந்து கண்டறியவும்.
05:18 நம் ஸ்லைடுகளுக்கு வருவோம்.
05:20 சுருங்கசொல்ல.
05:21 இந்த டுடோரியலில் நாம் கற்றது
05:23 Recursive function
05:25 அதை விளக்க சில உதாரணங்கள்
05:28 பயிற்சியாக.
05:29 N எண்களின் கூட்டுத்தொகையைக் கணக்கிடும் recursive function க்கு ஒரு ப்ரோகிராம் எழுதுக
05:36 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
05:39 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது.
05:43 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்.
05:47 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
05:53 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
05:58 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
06:06 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
06:10 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
06:18 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org\NMEICT-Intro
06:24 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst