Spoken-Tutorial-Technology/C2/Side-by-Side-Method/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 11:47, 13 August 2015 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Side-by-side method ஐ விளக்கும் ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவும்.
00:07 இந்த டுடோரியலில் பின்வருவனவற்றைக் கற்போம்
00:10 Side-by-side method பற்றி தெரிந்துகொள்வோம்.
00:14 ஒரு நேரத்தில் ஒரு command ஐ கற்க side-by-side method எவ்வாறு உதவுகிறது.
00:20 ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி எவ்வாறு ஒருவர் மெதுவாகவோ வேகமாகவோ கற்கமுடியும்.
00:26 ஸ்போகன் டுடோரியலுக்குத் தேவையான பாடங்கள் எங்குள்ளன என காண்போம்.
00:32 ஸ்போகன் டுடோரியல்களை எவ்வாறு பயன்படுத்தக் கூடாது என காண்போம்.
00:36 workshop organiserகளுக்கும் ஒரு செய்தியைக் கொண்டுள்ளோம்.
00:41 Side-by-side method என்பது IIT Bombay ல் நாங்கள் உருவாக்கிய ஒரு நுட்பம் ஆகும்.
00:47 இது ஒரு மென்பொருளை, எந்த ஒரு வல்லுனரின் உதவியும் இன்றி நீங்களே கற்றுக்கொள்ள உதவுகிறது.
00:54 இதை எவ்வாறு செய்ய வேண்டும்?
00:56 ஸ்போகன் டுடோரியலில் இருந்து ஒரு நேரத்தில் ஒரு command ஐ கற்பதன் மூலம்.
01:01 கற்றல் என்றால் என்ன?
01:03 ஒரு ஸ்போகன் டுடோரியலைக் காண்பது மட்டுமா?
01:08 இல்லவே இல்லை.
01:09 அல்லது ஒரு ஸ்போகன் டுடோரியலை கவனமாக கேட்டல் மட்டுமா?
01:13 அதுவும் இல்லை.
01:14 கற்றல் என்பது ...
01:16 ஆம், உங்களுக்கு புரிந்துவிட்டது – ஸ்போகன் டுடோரியலில் காட்டப்படும் ஒவ்வொரு command ஐயும் நீங்களே செய்துபார்ப்பதுதான்.
01:24 டுடோரியலில் காட்டப்படும் ஒவ்வொரு command ஐயும் செய்துபார்க்க முடியுமா?
01:29 அதற்கான விடையும் ஆம் முடியும்.
01:31 அதை எவ்வாறு சொல்ல முடியும்?
01:33 ஏனெனில், சுயமாக கற்றுக்கொள்வதற்காகவே நாங்கள் ஸ்போகன் டுடோரியல்களை உருவாக்குகிறோம்.
01:39 அதை எவ்வாறு செய்கிறோம்?
01:41 அது ஒரு பெரிய கதை.
01:42 இதற்காகவே IIT Bombay ல் சிறப்பு முறைகளை நாங்கள் உருவாக்கினோம் என சொல்லலாம்.
01:49 சுயமாக கற்றுக்கொள்வதற்காகவே (SELF LEARNING) ஸ்போகன் டுடோரியல்கள் உருவாக்கப்படுகின்றன.
01:52 அதனால், ஸ்போகன் டுடோரியல்களில் காட்டப்படும் அனைத்து commandகளையும் நீங்கள் செய்துப்பார்க்கலாம்
01:58 ஒவ்வொரு command ஐயும் செய்துபார்ப்பதற்கான சிறந்த வழி எது?
02:02 அதை செய்துகாட்டுகிறேன்.
02:04 http://spoken-tutorial.org க்கு செல்வோம்
02:08 Scilab ஸ்போகன் டுடோரியல்களுக்குச் செல்வோம்
02:14 Vector Operations என்ற ஸ்போகன் டுடோரியலை பயன்படுத்துகிறேன்.
02:18 ஏற்கனவே வீடியோவை திறந்துவைத்துள்ளேன்.
02:21 வீடியோ விண்டோவை பெரிதாக்க வேண்டுமா?
02:23 இல்லை தேவையில்லை.
02:26 வேண்டுமானல் சிறிதாக்கலாம்.
02:29 நான் ஏற்கனவே முடிந்தவரை இதை சிறியதாக்கிவிட்டேன்.
02:33 திரையின் ஒருபக்கத்தில் வீடியோ வருமாறு browser ஐ நகர்த்துகிறேன்
02:43 மற்றொரு பக்கம், வீடியோ கற்றுத்தரும் மென்பொருளை திறப்போம்.
02:49 இங்கே அது, Scilab.
02:51 Scilab ஒரு திறந்த மூல மென்பொருள் என்பதால் நாம் பயன்படுத்தமுடியும்.
02:56 ஸ்போகன் டுடோரியல் திட்டம் வணிகரீதியான மென்பொருட்களை ஆதரிப்பது இல்லை.
03:00 எனவே, நீங்கள் பயிற்சி செய்ய விரும்பும் மென்பொருளை எப்போதும் இலவசமாக தரவிறக்கலாம்.
03:05 சாஃப்டவேர் விண்டோவை பெரிதாக்க வேண்டுமா?
03:08 இல்லை.
03:09 பதிலாக, அதை சிறிதாக்கி நான் வைத்துள்ளதுபோல மற்றொரு பக்கம் வைக்கவும்.
03:15 இப்போது நான் ஸ்போகன் டுடோரியலையும் கற்கபோகும் சாஃப்ட்வேரையும் அருகருகே (SIDE BY SIDE) வைத்துள்ளேன்.
03:20 அடுத்து என்ன செய்யவேண்டும்?
03:22 அடுத்த ஸ்லைடுக்கு செல்வோம்.
03:28 வீடியோவை ப்ளே செய்யவும்.
03:29 ஸ்போகன் டுடோரியலில் command ஐ கவனிக்கவும்.
03:32 வீடியோவை நிறுத்தவும்.
03:34 சாஃப்ட்வேரில் அதே command ஐ முயற்சிக்கவும்.
03:37 command வேலைசெய்தால், அடுத்த command ஐ கேட்கவும்.
03:41 வேலைசெய்யவில்லை எனில், அதே command க்கு சென்று.
03:44 மீண்டும் கேட்டு அதை முயற்சிக்கவும்.
03:47 மீண்டும் செய்யவும்.
03:49 Scilab ஐ பயன்படுத்தி அதை செய்து காட்டுகிறேன்.
03:54 Audio playing
04:11 வீடியோவை நிறுத்துகிறேன்.
04:15 Scilab சாஃப்ட்வேரில் இந்த command ஐ செய்கிறேன்.
04:23 p equals 1 2 3, close bracket.
04:32 வீடியோவில் பார்த்த அதே விடையைப் பெறுகிறோம்.
04:35 ஆனால் இது எனக்கு சலிப்பாய் இருக்கிறது.
04:37 வீடியோவை கேட்டுக்கொண்டே இருப்பது எனக்கு பிடிக்கவில்லை.
04:40 இது மிகவும் மெதுவாக உள்ளது.
04:42 பிரச்சனையில்லை.
04:43 இந்த ஸ்போகன் டுடோரியல் முறையில் நீங்கள் மெதுவாகவோ வேகமாகவோ கற்க முடியும்.
04:48 இப்போது வேகமாக கற்பதை விளக்குகிறேன்.
04:51 வீடியோவைப் பார்த்துக்கொண்டே நீங்கள் சாஃப்ட்வேரிலும் வேலை செய்யமுடியும்.
04:57 அடுத்த commandஐ கேட்டுக்கொண்டே, அதை சாஃப்ட்வேரில் முயற்சிப்போம்
05:03 ப்ளே பட்டனை அழுத்துகிறேன்.
05:09 Audio playing
05:23 வீடியோவை நிறுத்துகிறேன்.
05:32 நான் வீடியோவைக் கேட்டுக்கொண்டே டைப் செய்ததைப் பார்த்தீர்கள்.
05:36 ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி வேகமாக கற்க இது ஒரு வழி.
05:40 மீண்டும் சொல்கிறேன்.
05:41 இந்த அணுகுமுறை உங்களை மெதுவாகவோ வேகமாகவோ கற்க அனுமதிக்கிறது.
05:45 சில சமயங்களில், வீடியோவையும் சாஃப்ட்வேரையும் தனித்தனியாக வைப்பது சிரமமாக இருக்கலாம்.
05:50 அச்சமயங்களில் அவற்றை ஒன்றன் மீது ஒன்றாக வைக்கலாம்.
05:54 அடுத்த ஸ்லைடில் அதற்கான உதாரணத்தைக் காட்டுகிறேன்.
06:03 இது ஒரு புத்தகத்தில் பயன்படுத்தப்பட்ட படம் ஆகும்.
06:09 xfigக்கான ஒரு ஸ்போகன் டுடோரியலையும், xfig சாஃப்ட்வேரையும் காண்கிறீர்கள்.
06:15 அவை ஒன்றன் மீது ஒன்று இருப்பதைக் காணலாம்.
06:18 நீங்கள் அவற்றின் இடங்களையும் விண்டோ அளவுகளையும் மாற்றிக்கொள்ளலாம்.
06:23 விண்டோவை முழுதும் பெரிதாக்காமல் மேற்சொன்ன எந்த முறையும் அனுமதிக்கத்தக்கது!
06:27 அனைத்து படிகளையும் செய்யத் தேவையான மற்றொன்றை இப்போது சொல்கிறேன்.
06:32 ஒரு file ஐ திற என ஸ்போகன் டுடோரியல் சொன்னால் என்னாகும்?
06:37 அந்த file இல்லாமல், கற்பது சிறப்பாக இருக்காது அல்லவா?
06:41 கவலையில்லை – ஸ்போகன் டுடோரியலில் பயன்படுத்தப்பட்ட அனைத்து fileகளும் ஸ்போகன் டுடோரியலில் கிடைக்கப்பெறும்.
06:47 ஏனெனில் அவையில்லாமல், ஸ்போகன் டுடோரியலின் அனைத்து படிகளையும் செய்துபார்க்க முடியாது.
06:55 அதை உதாரணத்தின் மூலம் காட்டுகிறேன்.
07:00 அதற்கு, tokens என்ற C மற்றும் C++ டுடோரியலைத் திறக்கிறேன்
07:11 அதில் சரியான இடத்திற்கு ஏற்கனவே நான் வந்துள்ளேன்.
07:15 இப்போது ப்ளே செய்கிறேன்.
07:20 Audio playing
07:36 நிறுத்துகிறேன்.
07:41 இந்த வீடியோ, tokens.c என்ற file ஐ திறக்க சொல்கிறது
07:46 இந்த file இருந்தால் மட்டும்தான், அனைத்து படிகளையும் செய்யமுடியும்.
07:50 நம் இணையத்தளத்தில் அந்த file இருக்கிறதா என காண்போம்.
07:55 நான் அனைத்து இணைப்புகளையும் காணும் வகையில் browserஐ கொண்டுவருகிறேன்.
08:06 கீழே வருகிறேன்.
08:13 இங்கே Code files என்ற இணைப்பு உள்ளது
08:16 அந்த file tokens.c ஐ இது கொண்டுள்ளதாக தெரிகிறது.
08:21 அதை தரவிறக்க முடியுமா என காண்போம்.
08:24 அந்த இணைப்பு மீது க்ளிக் செய்கிறேன்.
08:27 அந்த file சேமிக்க தயாராக இருப்பதைக் காண்க.
08:31 அதை நாம் சேமிக்கப்போவதில்லை.
08:35 அதை உங்களுக்கான பயிற்சியாக விடுகிறேன்.
08:38 உங்கள் கணினியின் இயங்குதளத்திற்கு ஏற்ப சேமிப்பதில் சிறு மாறுதல்கள் இருக்கலாம்.
08:43 உதாரணமாக, உங்களிடம் கேட்காமலேயே zip file தானே தரவிறங்கலாம்.
08:48 எப்படியாயினும் தேவையான அனைத்து fileகளும் அதுபோன்ற ஒரு இணைப்பில் கிடைக்கும்.
08:54 உங்களிடம் இணையஇணைப்பு இல்லையென்றால்?
08:57 கவலையில்லை.
08:58 offline ல் கற்பதற்கு image file ஐ உருவாக்கவும் வாய்ப்பு உள்ளது.
09:02 ஸ்போகன் டுடோரியல் இணையத்தில் எங்கிருந்து இந்த image ஐ உருவாக்குவது என காட்டுகிறேன்.
09:09 அது அடுத்த tab ல் உள்ளது.
09:12 browser ஐ சிறியதாக வைத்துள்ளதால் அனைத்து இணைப்புகளும் தெரியவில்லை.
09:16 அனைத்து இணைப்புகளையும் காண, விண்டோவை பெரிதாக்குகிறேன்.
09:21 அது உள்ள இடம் Software Training, Downloads, Create your own disk image.
09:33 இதன் மூலம் உருவாக்கப்படும் zip file தேவையான அனைத்து fileகளையும் கொண்டுள்ளது.
09:37 மிக அரிதாக அந்த தேவையான fileகள் தவறிபோகலாம்.
09:41 அப்படி இருப்பின், அதை சரிசெய்ய உங்கள் உதவி தேவை.
09:44 அதை எங்கள் இணையத்தளத்தில் காட்டுகிறேன்.
09:47 மீண்டும் விண்டோவை சிறியதாக்குகிறேன்.
09:50 முன் tabக்கு செல்வோம்.
09:56 மேலே வருவோம்.
09:59 Report missing component என்ற இணைப்பைக் காணவும்
10:03 அந்த இணைப்பு மீது க்ளிக் செய்து தேவையான தகவலைத் தரவும்.
10:08 அவ்வளவுதான்.
10:09 அடுத்த ஸ்லைடுக்கு செல்கிறேன்.
10:12 இந்த டுடோரியலில் நாம் கற்றதைக் காண்போம்.
10:16 side-by-side method என்றால் என்ன என கற்றோம்.
10:20 ஒரு நேரத்தில் ஒரு command ஐ கற்க side-by-side method எவ்வாறு உதவுகிறது என கண்டோம்.
10:25 ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி எப்படி ஒருவர் வேகமாகவும் மெதுவாகவும் கற்கமுடியும் என விளக்கினோம்.
10:31 ஸ்போகன் டுடோரியலுக்கு தேவையான அனைத்து பாடங்களும் எங்கு கிடைக்கும் என்பதைக் கற்றோம்.
10:36 ஸ்போகன் டுடோரியல்களை எவ்வாறு பயன்படுத்தக்கூடாது என்பதையும் கற்றோம்.
10:40 வெறுமனே ஸ்போகன் டுடோரியலைக் காண்பது எந்த பயனையும் தராது.
10:45 அது ஒரு workshop அல்ல.
10:47 ஒரு organiser ஸ்போகன் டுடோரியலைக் காணும்படி சொன்னால், அவர் அவரது வேலையை ஒழுங்காக செய்யவில்லை.
10:52 இந்த டுடோரியலில் விளக்கப்பட்ட side-by-side method ஐ பின்பற்றவும்.
10:58 உங்களுக்கு ஒரு சிறிய பயிற்சி உள்ளது.
11:01 இந்த டுடோரியலில் காட்டப்படும் அனைத்து படிகளையும் செய்யவும்.
11:05 இதே முறையில் மற்றொரு டுடோரியலை செய்துபார்க்கவும்.
11:08 ஒரு மாணவர் பயிற்சி செய்து கற்க ஸ்போகன் டுடோரியல் உதவுகிறது என்பதை பரப்பவும்.
11:14 இந்த வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது.
11:18 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லை எனில், அதை தரவிறக்கிக் காணவும்.
11:22 ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி workshopகளை(பயிலரங்குகள்) நடத்துகிறோம்.
11:25 சான்றிதழ்களை அளிக்குறோம்.
11:26 எங்களை தொடர்புகொள்ளவும்.
11:28 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
11:34 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst