BASH/C2/Case-statement/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Bash ல் Case statement குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது case statement ன் முக்கியத்துவம் case statement ன் Syntax மற்றும் அதற்கு ஒரு உதாரணம் |
00:17 | இந்த டுடோரியலை தொடர, உங்களுக்கு Shell Scripting ன் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும். |
00:23 | அதற்கான டுடோரியல்களுக்கு, எங்கள் இணையத்தளத்தைக் க்காணவும் http://spoken-tutorial.org |
00:29 | இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது Ubuntu Linux 12.04 மற்றும் GNU BASH பதிப்பு 4.1.10 |
00:39 | பயிற்சிக்கு GNU Bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது. |
00:47 | Bash shell இரண்டுவிதமான conditional statement அமைப்புகளைக் கொண்டுள்ளது. if statement மற்றும் case statement. |
00:56 | if-else statement க்கு பதிலாக Case statement ஐ பயன்படுத்தலாம் |
01:03 | தேர்ந்தெடுக்க பல இருக்கும் போது case statement பயன்படுத்த உகந்தது. |
01:09 | பொதுவாக menus ஐ செயற்படுத்து இது script ல் பயன்படுத்தப்படுகிறது. |
01:14 | syntax ஐ காண்போம். |
01:15 | case space $(dollar)VARIABLE space in match_1 close round bracket space commands இரு semicolonகள் |
01:27 | match_n close round bracket space commands இரு semicolonகள் asterisk close round bracket space command_to_execute_by_default இரு semicolonகள் esac |
01:45 | VARIABLE match_1க்கு ஒப்பிடப்படுகிறது |
01:48 | அது பொருந்தவில்லை எனில், match_n ஆன அடுத்த case க்கு செல்கிறது |
01:54 | இது இந்த stringகளில் எதாவது ஒன்று VARIABLE உடன் பொருந்துகிறதா என சோதிக்கிறது |
02:01 | ஆம் எனில், இரட்டை semicolon (;;) வரை அனைத்து commandகளும் இயக்கப்படுகின்றன. |
02:07 | எதுவும் VARIABLEஉடன் பொருந்தவில்லை எனில், asterisk உடன் உள்ள commandகள் இயக்கப்படுகின்றன. |
02:14 | asterisk அனைத்து stringகளுடனும் பொருந்தும் என்பதால் இதுதான் default case condition. |
02:21 | case block ன் முடிவை esac குறிக்கிறது |
02:26 | ஒரு உதாரணத்தின் உதவியுடன் case statement ஐ புரிந்துகொள்வோம். |
02:32 | ப்ரோகிராமை ஏற்கனவே டைப் செய்துவைத்துள்ள file case.sh ஐ திறக்கிறேன் |
02:38 | இந்த ப்ரோகிராம் disk space ஒரு குறிப்பிட்ட எல்லையை அடையும் போது ஒரு எச்சரிக்கை செய்தியை அச்சடிக்கும். |
02:45 | இது shebang line. |
02:47 | CentOS, RedHat போன்ற மற்ற Linux வழங்கிகளில் bash வேறு இடத்தில் இருக்கும் |
02:55 | முன்னர் பயன்படுத்திய /bin/bash ஆனது binary fileஐ நேரடியாக குறிக்கிறது. |
03:01 | இங்கே பயன்படுத்தப்படும் env ஆனது bash ன் உண்மையான இடத்தை காட்டுகிறது. |
03:07 | இந்த shebang வரி ஆனது எந்த GNU/Linux கணினிகளிலும் இந்த script வேலை செய்யும் விதமாக செய்கிறது. |
03:16 | df -(hyphen)h ஆனது disk space பயன்பாட்டை மனிதன் read செய்யும் வடிவில் காட்டுகிறது. |
03:22 | ஐந்தாம் column ஐ தலைகீழாக அடுக்கும் sort -rk5 க்கு இதன் வெளியீடு அனுப்பப்படுகிறது. |
03:31 | இரண்டாம் வரியின் ஐந்தாம் புலத்தை எடுக்கும் awk 'FNR == 2 {print $5}' க்கு பின் இதன் வெளியீடு அனுப்பப்படுகிறது. |
03:43 | கடைசியாக, அதன் வெளியீடு % sign ஐ நீக்குவதற்காக cut -(hyphen)d “% -(hyphen)f1” க்கு அனுப்பப்படுகிறது |
03:55 | இது case statementன் முதல் வரி |
03:59 | இங்கே, 0 க்கும் 69 க்கு இடையே space ஐ ஒப்பிடுகிறோம். |
04:04 | பொருந்தினால், "Everything is OK” என அச்சடிக்கிறது |
04:08 | அடுத்து, 70 க்கும் 89 க்கும் அல்லது 91 க்கும் 98 க்கும் இடையே space ஐ ஒப்பிடுகிறது; |
04:17 | பொருந்தினால், “Clean out. There's a partition that is $(dollar)space % full” என அச்சடிக்கிறது |
04:27 | இங்கே, space ஐ 99 உடன் ஒப்பிடுகிறது. |
04:30 | பொருந்தினால், “Hurry. There's a partition at $(Dollar) space %!” என அச்சடிக்கிறது |
04:39 | asterisk அனைத்து stringகளுடனும் பொருந்தும் என்பதால் இது default case condition ஆகும். |
04:45 | இது case statement ன் முடிவு |
04:48 | இப்போது file ஐ executable ஆக மாற்ற டெர்மினலுக்கு வருவோம். |
04:52 | டைப் செய்க chmod space plus x space case dot sh |
04:57 | டைப் செய்க dot slash case dot sh |
05:02 | Everything is OK. உங்கள் கணினியின் diskspace க்கு ஏற்ப வெளியீடு வேறுபடும் என்பதை கவனத்தில் கொள்க. |
05:10 | என் கணினியில், 0 க்கும் 69க்கும் இடையில் பொருந்துவதால், Everything is OK என அச்சடிக்கிறது |
05:18 | உங்கள் கணினியில் அச்சடிக்கப்பட்ட செய்தியைக் காணவும். |
05:20 | எந்த case statement இயக்கப்பட்டது என்பது புரியும். |
05:27 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. சருங்கசொல்ல. |
05:31 | இந்த டுடோரியலில் நாம் கற்றது, case statementன் முக்கியத்துவம், case statement ன் syntax, மற்றும் disc space உதாரணம் |
05:41 | பயிற்சியாக. |
05:42 | Menu ஆல் இயக்கப்படும் கணித கணக்கீடுக்கான ஒரு ப்ரோகிராம் எழுதுக |
05:47 | இது உள்ளீடுகள் a மற்றும் b ஐ பயனரிடமிருந்து பெற வேண்டும் |
05:51 | கணித குறியீடுகளைக் கேட்க வேண்டும் (கூட்டல் +, கழித்தல் -, வகுத்தல் / மற்றும் பெருக்கல் *). அதைக் கணக்கிட்டு வெளியீட்டை அச்சடிக்கவும் |
06:02 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
06:08 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
06:14 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
06:23 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
06:31 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
06:35 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
06:48 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |