BASH/C2/Globbing-and-Export-statement/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 11:30, 20 May 2015 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:01 Globbing மற்றும் Export command குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது
00:08 * Globbing மற்றும்
00:09 * export command
00:11 இந்த டுடோரியலைத் தொடர லினக்ஸ் இயங்குதளம் குறித்து உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்
00:18 இல்லையெனில், அதற்கான டுடோரியலுக்கு எங்கள் இணையத்தளத்திற்கு செல்லவும்
00:24 இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது
00:27 * Ubuntu Linux 12.04 இயங்குதளம்
00:31 * GNU Bash பதிப்பு 4.1.10
00:35 பயிற்சிக்கு GNU bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது.
00:43 globbingக்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்.
00:46 * BASH மூலம் செயல்படுத்தப்படும் Filename அல்லது pathname expansion... Globbing எனப்படும்.
00:52 * Globbing... wildcards ஐ கண்டறிந்து விரிக்கிறது
00:57 * பின்வருவன போன்ற standard wildcard characterகளை interpret செய்கிறது
01:02 # * (asterix) மற்றும்
01:04 # ? (கேள்விக்குறி)
01:05 இதை ஒரு உதாரணத்தின் உதவியுடன் கற்போம்.
01:09 Ctrl+Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவைத் திறக்கவும்.
01:18 டெர்மினலில் டைப் செய்க,ls space asterix dot sh Enter ஐ அழுத்துக
01:27 நடப்பு directory ல் .sh extension ஐ கொண்ட அனைத்து fileகளையும் இது காட்டுகிறது.
01:34 இங்கே அனைத்து sh fileகளையும் காணலாம்.
01:40 promptஐ துடைக்கிறேன், டைப் செய்கிறேன், ls space s asterix dot sh Enterஐ அழுத்துக
01:51 s asterix dot sh ஆனது character sஆல் ஆரம்பித்து sh என extension கொண்ட அனைத்து fileகளையும் காட்டுகிறது என காணலாம்.
02:02 இதை தொடர்ந்து,
02:04 இப்போது டைப் செய்வொம், ls space square bracketகளினுள் a hyphen c asterix dot sh Enter ஐ அழுத்துக
02:19 இது characterகள் a b அல்லது c ல் ஆரம்பிக்கும் file களைக் காட்டும்
02:26 வெளியீட்டைக் காண்போம்.
02:28 characterகள் a b அல்லது c ல் ஆரம்பிக்கும் அனைத்து fileகளையும் காண்கிறோம்
02:35 மேலும் இவை sh extension கொண்டவை.
02:39 இப்போது, டைப் செய்வோம் ls space square bracketகளினுள் caret குறி a hyphen c asterix dot sh Enter ஐ அழுத்துக
02:55 இது ' sh' extension கொண்ட அனைத்து fileகளையும் காட்டும்
03:00 ஆனால் characterகள் 'a' 'b' அல்லது 'c' ல் ஆரம்பிக்கும் fileகளை மட்டும் காட்டாது
03:07 வெளியீட்டைக் காண்போம். characterகள் 'a' , 'b' அல்லது 'c' ல் ஆரம்பிக்கும் fileகள் இல்லை என்பதை கவனிக்கலாம்.
03:16 prompt ஐ துடைக்கிறேன்
03:19 இப்போது டைப் செய்க, ls space square bracketகளில் capital 'A' small 'a' asterix குறி dot sh Enter ஐ அழுத்துக
03:34 இது upper மற்றும் lower case 'A' ல் ஆரம்பிக்கும் file பெயர்களை காட்டுகிறது.
03:40 வெளியீட்டைக் காண்போம். extension sh கொண்ட upper மற்றும் lower case 'A உடன் ஆரம்பிக்கும் file கள் காட்டப்படுகின்றன.
03:49 இப்போது BASH ல் Export commandஐ காண்போம்
03:53 ஸ்லைடுகளுக்கு வருவோம்.
03:55 Bash ல், variableகள் அதன் சொந்த Shellக்கு local ஆகும்.
04:00 * Local variableகளை அதே Shell அல்லது நடப்பு Shell மூலம் அனுகமுடியும்.
04:06 Export command ஒரு variable அல்லது function ஐ அனைத்து child processகளின் environmentக்கும் Export செய்கிறது.
04:15 * ஒரு local variable ஐ global variable ஆகவும் மாற்றுகிறது.
04:20 இதை ஒரு உதாரணத்துடன் கற்போம்.
04:24 Terminal க்கு சென்று டைப் செய்க, myvar equal to lion Enterஐ அழுத்துக
04:34 இப்போது டைப் செய்க, echo space dollar குறி myvar Enter ஐ அழுத்துக
04:41 lion அச்சடிக்கப்படுகிறது.
04:44 இதுதான் variable myvarக்கு assign செய்யப்பட்ட மதிப்பு
04:48 இப்பொது புதிய Shellக்கு வருவோம்.
04:51 புதிய Shellக்கு செல்ல, புதிய Terminal ஐ திறக்கலாம் அல்லது டைப் செய்க slash bin slash bash Enter ஐ அழுத்துக
05:03 இப்போது variable myvar ன் மதிப்பை சோதிப்போம்
05:07 டைப் செய்க, echo space dollar குறி myvar Enter ஐ அழுத்துக
05:15 காலி வரி அச்சடிக்கப்படுகிறது.
05:17 அதாவது variable myvar க்கு assign செய்யப்பட்ட மதிப்பு இந்த Shellக்கு வரவில்லை.
05:24 மேலும் variable myvar முந்தைய Shell க்கு local ஆகும் நடப்பு Shellக்கு அல்ல.
05:32 நம் முந்தைய Shell க்கு செல்ல exit என டைப் செய்க.
05:36 எனவே variableகளை global ஆக declare செய்ய export command ஐ பயன்படுத்த வேண்டும்
05:43 எவ்வாறு என காண்போம்.
05:46 டைப் செய்க, export space myvar equal to lion Enterஐ அழுத்துக
05:55 டைப் செய்க, echo space dollar குறி myvar Enter ஐ அழுத்துக
06:02 lion காட்டப்படுகிறது.
06:05 மற்றொரு Shellக்கு செல்ல, டைப் செய்க, slash bin slash bash Enterஐ அழுத்துக
06:13 prompt ஐ துடைப்போம்.
06:15 இப்போது டைப் செய்க,echo space dollar குறி myvar.
06:22 lion காட்டப்படுகிறது
06:25 ஏனெனில் export command ஐ பயன்படுத்தி variable myvar ஐ global ஆக declare செய்துள்ளோம்.
06:33 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
06:36 நம் ஸ்லைடுகளுக்கு வருவோம்.
06:39 சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது,
06:41 * Globbing
06:42 * Export command
06:44 பயிற்சியாக.
06:45 globbing ல் நாம் பார்த்த அனைத்து செயல்பாடுகளையும் செய்ய ஒரு Bash script எழுதுக
06:51 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
06:54 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
06:57 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
07:02 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
07:08 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
07:12 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
07:20 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
07:24 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
07:31 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org\NMEICT-Intro
07:37 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst