Java-Business-Application/C2/Servlet-Methods/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:03, 13 April 2015 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:01 Servlet Methodகளுக்கான ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
00:08 JSP ஐ பயன்படுத்தி எளிய login form ஐ உருவாக்குதல்
00:13 doGet methodஐ பயன்படுத்தி parameterகளை அனுப்புதல்
00:16 doPost methodஐ பயன்படுத்தி parameterகளை அனுப்புதல்
00:20 doGet மற்றும் doPost methodகளுக்கு இடையேயான வித்தியாசம்
00:25 இங்கு நாம் பயன்படுத்துவது
00:26 Ubuntu பதிப்பு 12.04
00:30 Netbeans IDE 7.3
00:33 JDK 1.7
00:36 Firefox web-browser 21.0
00:39 உங்களுக்கு விருப்பமான எந்த web-browser ஐயும் பயன்படுத்தலாம்.
00:43 இந்த டுடோரியலைத் தொடர உங்களுக்கு தெரிந்திருக்கவேண்டியவை
00:46 Netbeans IDE ஐ பயன்படுத்தி Core Java
00:49 HTML
00:51 Java Servletகள் மற்றும் JSPகளுன் அடிப்படை
00:56 இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் இணையத்தளத்தைக் காணவும்
01:00 நம் web application- Library Management System ஐ உருவாக்குவதில் ஆரம்பிப்போம்
01:06 முதலில், home pageஐ உருவாக்குவோம்
01:09 home page ஒரு எளிய login form ஐ கொண்டிருக்கும்.
01:14 இது அங்கீகரிக்கப்பட்ட பெயர்களை Library Management Systemக்கு login செய்ய அனுமதிக்கும்
01:20 இப்போது Netbeans IDEக்கு வருவோம்
01:23 நாம் ஏற்கனவே மாற்றிய index dot jsp பக்கத்திற்கு செல்வோம்.
01:30 நம் home page ஐ உருவாக்க இந்த பக்கத்தை மாற்றியிருந்தேன்
01:35 Home Page எனவே title இருக்கட்டும்
01:38 body tag ன் உள், border equal to 1 உடன் ஒரு table உள்ளது
01:44 இங்கே code ஐ காணலாம்.
01:47 table ன் உள், Welcome to Library Management System என்ற ஒரு heading ஐ சேர்த்துள்ளோம்
01:54 அடுத்து, This is the home page for Library Management System என்பதை சேர்க்கும் ஒரு paragraph tag உள்ளது
02:03 பின், visitorHomePage dot jsp என்ற பக்கத்தை இணைக்கும் ஒரு hyperlink உள்ளது
02:11 இந்த பக்கதை பின்னர் உருவாக்குவோம்.
02:13 அடுத்து, மிக எளிய ஒரு login form ஐ கொண்டுள்ளோம்
02:18 இந்த form பதிவுசெய்யப்பட்ட பயனர்களை login செய்ய அனுமதிக்கும்.
02:22 form ஐ உருவாக்கும் முன் GreetingServlet என்ற ஒரு servlet ஐ உருவாக்க வேண்டும்
02:28 டுடோரியலை இடைநிறுத்தி முன் டுடோரியலில் சொன்னது போல் ஒரு புதிய servlet ஐ உருவாக்கவும்.
02:35 servletன் பெயர் GreetingServlet என்பதை கவனிக்கவும்
02:39 GreetingServletPath என URL pattern இருக்க வேண்டும்
02:44 இந்த form Username மற்றும் Password என்ற இரு input elementகளை கொண்டது
02:50 Sign In என்ற ஒரு Submit buttonஐயும் கொண்டுள்ளது
02:55 அடுத்து, addUser.jsp க்கு இணைப்பை சேர்க்கும் ஒரு paragraph tag உள்ளது
03:03 இதுவரை பதிவுசெய்யாத பயனர்களுக்கான registration page இது.
03:09 இப்போது நம் GreetingServlet.java க்கு செல்வோம்
03:14 org.spokentutorial package லேயே GreetingServlet.java உருவாக்கப்பட்டது என்பதை கவனிக்கவும்
03:23 இப்போது இந்த servlet ஆல் request object ல் இருந்து form data ஐ அணுக முடியும்
03:30 இந்த servlet ஒரு controllerஆக செயல்படும்
03:33 நாம் ஏற்கனவே controller பற்றி கற்றோம் என்பதை நினைவுகொள்க
03:38 இப்போது ஒருcontroller ஆக servlet என்ன செய்கிறது என காண்போம்
03:42 request object ல் form data இருக்கும்
03:46 form data parameterகளை பெறுவது முதல் வேலை.
03:51 இது request object ல் getParameter method ஐ பயன்படுத்தி செய்யப்படுகிறது
03:57 எனவே Netbeans IDEக்கு வருவோம்
04:02 doGet method ன் உள் டைப் செய்க
04:04 PrintWriter space out equal to response dot getWriter.
04:14 அடுத்து, form data parameterகளை பெறுவோம்.
04:18 அதற்கு அடுத்த வரியில் டைப் செய்வோம்,
04:20 String space username equal to request dot getParameter அடைப்புகளில் இரட்டை மேற்கோள்களில் userName semicolon.
04:35 User Nameக்காக form tag ல் நாம் சேர்த்த பெயர் தான் இந்த userName என்பதை கவனிக்கவும்
04:43 இதேபோல password ஐயும் பெறுவோம்.
04:48 எனவே அடுத்த வரியில் டைப் செய்க, String space password equal to request dot getParameter அடைப்புகளில் இரட்டை மேற்கோள்களில் password semicolon.
05:03 அடுத்து output ல் User Name ஐ அச்சடிப்போம்.
05:08 எனவே அடுத்த வரியில் டைப் செய்க
05:10 'out dot println அடைப்புகளில் இரட்டை மேற்கோள்களில் Hello from GET Method plus username.
05:21 அடுத்து இந்த project ஐ இயக்குவோம், MyFirstProject மீது ரைட்-க்ளிக் செய்க
05:27 Clean and Build மீது க்ளிக் செய்க
05:29 மீண்டும் MyFirstProject மீது ரைட்-க்ளிச் செய்து, Run மீது க்ளிக் செய்க
05:35 எனவே, server வேலைசெய்கிறது.
05:38 இது MyFirstProject ஐ deploy செய்துள்ளது
05:41 browser ல் நம் home page காட்டப்படுகிறது.
05:45 பக்கத்தின் தலைப்பு Home Page என்பதை கவனிக்கவும்
05:50 இங்கே மிக எளிய ஒரு login form ஐ காணலாம்.
05:54 Username மற்றும் Password ஐ கொடுப்போம்
05:58 Usernamearya எனவும்
06:02 Passwordarya*123 எனவும் கொடுத்து
06.06 Sign In மீது க்ளிக் செய்க
06:09 Hello from GET Method arya என்ற வெளியீட்டை பெற்றிருப்பதைக் காணலாம்.
06:15 இப்போது, பயனர் இங்கே login செய்ய முடிகிறது ஏனெனில் code ன் உள்ளே நாம் மதிப்பிடுதலை சேர்க்கவில்லை.
06:24 இதை பின்வரும் டுடோரியலில் செய்வோம்.
06:28 இப்போது, இங்கே URL ஐ காண்போம்.
06:31 அது localhost colon 8080 slash MyFirstProject slash GreetingServletPath கேள்வி குறி userName equal to arya and password equal to arya *123.
06:49 இப்போது, பக்க தகவலில் இருந்து form data ஒரு கேள்விகுறி மூலம் பிரிக்கப்படுகிறது
06:56 form ல் நாம் உள்ளிட்ட username மற்றும் password , URL ன் உள்ளேயும் இருப்பதை காணலாம்.
07:05 இப்போது இதை POST Method ஐ பயன்படுத்தி செய்ய முயற்சிப்போம்
07:10 எனவே IDEக்கு திரும்ப வருவோம்
07:12 doGet Method க்கு நாம் எழுதிய code ஐ பிரதி எடுத்து doPost Methodன் உள் ஒட்டுவோம்
07:20 இப்போது, Hello from POST Method என println statement ஐ மாற்றுவோம்
07:27 இப்போது, index dot jsp ஐ திறப்போம்
07:31 இங்கே form tag ன் method attribute POST என மாற்ற வேண்டும்
07:37 இப்போது இந்த code ஐ காணலாம்.
07:42 form action equal to GreetingServletPath... method equal to POST என உள்ளது
07:49 இப்போது, இந்த Project ஐ மீண்டும் இயக்குவோம்
07:53 எனவே MyFirstProject மீது ரைட்-க்ளிக் செய்து Run மீது க்ளிக் செய்க
07:58 GET method ஐ பயன்படுத்தியபோது பெற்ற வெளியீட்டை போன்றே இப்போதும் பெற்றுள்ளோம்
08:04 எனவே மீண்டும் டைப் செய்க User Name மற்றும் Password .
08:08 பின் Sign In மீது க்ளிக் செய்க
08:12 Hello from POST Method arya ஐ பெற்றுள்ளோம் என்பதை கவனிக்கவும்
08:17 இப்போது URL ஐ காண்போம்
08:19 அது localhost colon 8080 slash MyFirstProject slash GreetingServlet Path
08:25 இங்கே URL ல் request ன் form data ஐ காணமுடிவதில்லை
08:30 இதுதான் doGet மற்றும் doPost Methodகளுக்கு இடையேயான முக்கிய வித்தியாசம் ஆகும்
08:35 இப்போது, GET ஐ எப்போது பயன்படுத்துவது என்றும் POST Methodஐ எப்போது பயன்படுத்துவது என்றும் கற்போம்
08:42 GET Method பயன்படுத்தப்படும் சமயங்கள்:
08:44 form சிறியதாகவும் data குறைவாகவும் இருக்கும்போது.
08:48 data ன் உள்ளடக்கம் URL ல் தெரியவேண்டும் என பயனர் விரும்பும்போது
08:53 POST Method பயன்படுத்தப்படும் சமயங்கள்:
08:55 form பெரியதாகவும் data அதிகமாகவும் இருக்கும்போது.
09:00 data ன் உள்ளடக்கம் URL ல் தெரிய கூடாது என பயனர் விரும்பும்போது
09:06 எகா: passwordகள்
09:08 சுருங்கசொல்ல.
09:10 இந்த டுடோரியலில் நாம் கற்றது:
09:12 JSP ஐ பயன்படுத்தி எளிய login form ஐ உருவாக்குதல்
09:16 doGet method ஐ பயன்படுத்தி parameterகளை அனுப்புதல்
09:19 doPost method ஐ பயன்படுத்தி parameterகளை அனுப்புதல்
09:22 doGet மற்றும் doPost methodகளுக்கு இடையேயான வித்தியாசம்
09:26 மேலும் தொடர்வதற்கு முன் இந்த டுடோரியலை முடித்துவிட்டீர்களா என பார்க்கவும்.
09:32 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
09:35 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
09:38 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
09:42 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
09:48 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
09:52 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
09:58 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
10:02 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
10:09 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
10:19 இந்த Library Management System ஆனது ஒரு முன்னனி மென்பொருள் பன்னாட்டு நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தால் பங்களிக்கப்பட்டது .
10:28 இந்த ஸ்போகன் டுடோரியலின் உள்ளடக்கமும் அவர்களால் மதிப்பிடப்பட்டது
10:32 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst