Spoken-Tutorial-Technology/C2/Creation-of-a-spoken-tutorial-using-Camstudio/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:24, 9 March 2015 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:14 நண்பர்களே, CDEEP, IIT Bombay சார்பில் தங்களை இந்த செய்முறை விளக்கப் பயிற்சிக்கு வரவேற்கிறோம்
00:20 கற்றல் animation உதவியுடன் விளக்கப்படும்போது மிக எளிமையாகிறது
00:25 இந்த audio video வாயிலான செய்முறை விளக்கம் மூலமாக camstudio என்ற software ன் சிறப்பம்சங்களை அறிவோம்
00:32 Camstudio, computer screen recording க்கான ஒரு மென்பொருள்
00:37 இது தங்கள் கணினி வழியே பார்க்கக்கூடிய மற்றும் செய்யக்கூடிய எல்லா விதமான வேலைகளையும் பதிவு செய்து கொள்ளவும், பின்னர் விருப்பம் போல் மீண்டும் பார்த்து தெளிவுப்படுத்திக்கொள்ளவும் பயன்படுகிறது
00:47 இதை பயன்படுத்தி ஒரு புதிய மென்பொருளின் பண்புகளை செய்முறை விளக்கத்தோடு எடுத்துரைக்கவும் பள்ளிக் கல்லூரிகளுக்கான பாடங்களை audio video ஆக பதிவு செய்யவும் பயிற்சி வகுப்புகளுக்கான video விளக்கப்படங்கள் தயாரிக்கவும் avi file களை flash file களாக மாற்றவும் இயலும்
01:04 மேலும் விவரிக்க இதன் பயன்கள் எண்ணிலடங்கா
01:07 Camstudio ஐ microsoft windows 95, 98, Me, NT 4.0, 2000 or XP உள்ள கணினிகளில் உபயோகிக்கலாம்
01:18 தாங்கள் கவனித்தில் கொள்ள வேண்டியது தங்களது கணினி 400 MHz processor, 64 MB of RAM and 4 MB of Hard disk space save திறன் கொண்டதாக இருக்க வேண்டும்
01:30 Camstudio ஒரு open source software. இதை தாங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இணையத்தளத்திலிருந்து இலவசமாக download செய்ய இயலும்.
01:37 இதற்கான இணையத்தள முகவரி www.camstudio.org. இந்த இணையதளத்தில் கீழாக scroll செய்து கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இதை தாங்கள் கணினியில் download செய்து முடித்திருப்பீர்கள்
01:49 Installation முடிந்தபிறகு இதை தங்கள் கணினியில் run செய்ய camstudio icon ஐ double-click செய்யவும். தற்போது camstudio dialog box ஐ திரையில் காண்பீர்கள்
01:58 Main menu இந்த window வின் முதல் வரிசையில் உள்ளதை காணலாம். இதில் file ன் கீழ் தங்களால் Record, Stop, Pause and Exit ஐ விருப்பத்தேர்வு செய்ய இயலும்
02:07 இதற்கு இணையான button உள்ள dialog box லும் காணலாம்
02:11 சிவப்பு recordஐயும் சாம்பல் நிற button pause செய்யவும் நீல நிற button பதிவை முற்றிலுமாக நிறுத்துவதற்கும் பயன்படுகிறது
02:19 பதிவை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே பதிவு செய்யவேண்டிய area ஐ வரையறை செய்துகொள்ள பரிந்துரைக்கப்படுகிறது
02:25 இதற்காக மூன்று விதமான capture options ஐ பயன்படுத்த இயலும்
02:29 தாங்கள் ஒரு பகுதியைத் தெரிவு செய்த பின் record ஐ click செய்து cursor மூலமாக ஒரு rectangle வரைய அந்த பகுதி பதிவு செய்யப்படும்
02:37 வரையறுக்கப்பட்ட பகுதியை பதிவு செய்ய தங்கள் விருப்பம் போல capture region ஐ pixelகள் மூலமாகவும் விவரிக்கலாம். மாறாக full screen ஐ select செய்ய முழுத்திரையும் பதிவுசெய்யப்படும்
02:51 Autopan feature camstudi ன் தனித்தன்மையான பண்புகளில் ஒன்று
02:56 இது தெரிவு செய்யப்பட்டால் cursor ஐ பின்பற்றி எந்த பகுதியை வேண்டுமானாலும் பதிவு செய்யலாம்
03:01 செயற்பாடுகள் அதிகம் நிறைந்த பகுதி செய்ய உதவுவது இதன் மற்றொரு சிறப்பம்சம் ஆகும்
03:08 மேலும் தங்களால் தங்களுக்குத் தேவையான panning வேகத்தை நிர்ணயிக்கவும் இயலும்
03:15 Video file size ஐ தெரிவு செய்ய Option க்கு கீழாக video option உள்ளது
03:21 இங்கு தங்களுக்கு தேவையான compressor ஐ விருப்பத்தேர்வு செய்ய இயலும்
03:26 இயல்பாக compressor Microsoft Video 1 ஆக இருக்கும்
03:30 ஆனால் drop down box ல் உள்ள எந்த ஒரு compressor அல்லது codecs ஐ தெரிவு செய்யும் சுதந்திரம் தங்களுக்கு உள்ளது
03:37 அது மட்டுமல்லாமல் தாங்களே தேவைக்கேற்ற codecs ஐ இணையத்தளத்திலிருந்து download செய்து பயன்படுத்தும் வாய்ப்பும் உள்ளது
03:47 Video settings ஐ தங்கள் தேவைக்கேற்ப பெறுவது file size, quality மற்றும் frame rate ஐ நிர்ணயிப்பதன் மூலம் முடியும்
03:53 Key Frames, Capture Frames மற்றும் Playback Rate கான value ஐ நிர்ணயிக்க முதலில் Auto Adjust button ஐ செயலிழக்கச் செய்யவும்
04:00 பின்னர் தங்கள் தேவைக்கேற்றபடி இந்த value களை தெரிவு செய்து கொள்ளலாம்
04:04 இந்த செயல்முறை பயிற்சியைப் பதிவு செய்ய நாங்கள் Microsoft Video 1 compressor ஐ பயன்படுத்துகிறோம் மற்றும் Key Frames 5 ஆகவும், Capture Frames 200 ஆகவும் Playback Rate 5 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. Quality உம் 50 ஆக குறைக்கப்பட்டது
04:17 பலமுறை trial and error மற்றும் பலவகை permutations and combinations ல் செய்து பார்த்ததன் மூலம் இந்த அளவீடுகள் தரமான output மற்றும் file size க்கு optimize செய்யப்பட்டது
04:29 Cursor option ஐ நிர்ணயிப்பதன் மூலம் அதிகமான செயல்பாடுகள் நிறைந்த பகுதியில் கவனம் செலுத்த இயலும்
04:34 இதற்கு option ற்கு கீழாக curson option ஐ click செய்யவும்
04:39 இதில் உங்களால் இரண்டு விதமான செயல்பாட்டை தெரிவு செய்ய இயலும்
04:42 ஒன்று cursor ஐ காண்பிப்பது மற்றொன்று cursor ஐ மறையச் செய்வது
04:47 இவற்றுள் cursor ஐ காண்பிப்பது இயல்பானது அதிலும் தங்களுக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளது
04:53 முதலாவது the actual cursor இரண்டாவது the custom cursor இதை drop down box ல் இருந்து தெரிவு செய்யலாம்
05:01 அல்லது தங்கள் கணினியில் உள்ள folder ல் இருந்தும் ஒன்றை தெரிவு செய்து உபயோகிக்கலாம்
05:06 மூன்றாவது cursor அமைந்துள்ள இடத்தை hightlight செய்ய உதவுவது
05:10 இதற்கு இந்த box ஐ செயல்பட செய்வதன் மூலம் cursor கான size, color மற்றும் shape ஐ தங்களால் தெரிவுசெய்ய இயலும்
05:20 பின்னர் OK ஐ click செய்யவும்
05:22 இப்பொழுது தங்கள் தெரிவு செய்த பண்புகள் கொண்ட cursor ஐ recorded video ல் காணலாம்
05:28 தங்கள் தங்கள் cursor ல் எந்த மாற்றமும் இருக்காது
05:32 இதற்கான செயல்முறை விளக்கத்தை காணவும்
05:40 இயல்பில் camstudio ல் audio ஐ பதிவு செய்ய இயலாது. Audio ஐ தங்கள் microphone வழியே பதிவு செய்ய இயலும்
05:49 இதற்கு sound card உடன் கூடிய microphone தேவை
05:53 கணினியுடன் இணைக்கப்பட்டுள்ள speakerகள் வாயிலாகவும் audio ஐ பதிவு செய்ய இயலும்
06:00 மேலும் மற்றொரு Option ஆன program option ன் கீழ் உள்ள sub-option ல் கொடுக்கப்பட்டுள்ள பண்புகளை தெரிவு செய்வதன் மூலம் camstudio ன் இயக்கத்தை தேவைக்கேற்றபடி customize செய்து கொள்ள இயலும்
06:14 இதில் உள்ள Minimize program on Start Recording ஐ தெரிவு செய்யவும்
06:21 இது camstudio ஐ system tray ல் minimize செய்யும்
06:27 தங்கள் கணினி திரையில் கீழாக வலது மூலையில் இரண்டு camstudio icon களை காணலாம்
06:33 காரணம் இந்த செயல்முறை விளக்கத்திற்கு நாங்கள் camstudio ஐ பயன்படுத்துகின்றோம்
06:38 மேலும் இதில் உள்ள Record to Flash Option மூன்று sub-optionகளை கொண்டுள்ளது
06:43 Keyboard shortcuts வழியே தங்களால் record, pause, stop and rest ஐ HOT KEYS ஐ நிர்ணயிக்க முடியும்.
06:52 Camstudio பற்றி தங்களுக்கு தேவையான தகவல்களை அளித்துள்ளோம் என நம்புகிறோம்
06:57 இந்த open source software ஐ தாங்கள் இணையதள வழி கல்விமுறைகளுக்கு பயன்படுத்தவும்
07:02 இதை நன்றாக புரிந்து கொண்ட பிறகு இதை விட சிறந்த edition ஐ பயன்படுத்தும் ஆர்வம் தங்களுக்கு வரலாம்
07:08 அதுவரை இந்த செயல்முறை விளக்கத்தை கண்டுகளித்தமைக்கு CDEEP, IIT Bombay சார்பில் நன்றி கூறி விடைபெறுவது அன்புமதி பழனிசாமி

Contributors and Content Editors

Priyacst