LibreOffice-Calc-on-BOSS-Linux/C2/Formatting-Data/Tamil
From Script | Spoken-Tutorial
Time | NARRATION |
00:00 | Calc இல் தரவை ஒழுங்கு செய்வது குறித்த tutorial க்கு நல்வரவு! |
00:07 | இதில் நாம் கற்கப்போவது: பார்டர்களையும் பின்புல நிறத்தையும் ஒழுங்கு செய்வது |
00:14 | தானியங்கி மடித்தல் அம்சத்தால் ஒன்றுக்கு மேற்பட்ட உரை வரிகளை ஒழுங்கு செய்வது, |
00:19 | Cell களை இணைத்து ஒன்றாக்குவது. Cell க்கு தகுந்தபடி உரையை சுருக்குவது. |
00:23 | இங்கு பயனாவது Ubuntu Linux 10.04 மற்றும் LibreOffice தொகுப்பு பதிப்பு 3.3.4 |
00:33 | Calc இல் பார்டர்களை ஒழுங்கு செய்வதை முதலில் கற்கலாம். |
00:38 | நம் “personal finance tracker.ods” file ஐ திறக்கலாம். |
00:43 | பார்டர்களை ஒழுங்கு செய்வதை ஒரு குறிப்பிட்ட செல்லுக்கு அல்லது ஒரு தொகுதி செல்களுக்கும் செய்யலாம். |
00:49 | உதாரணமாக “Serial Number”, “Item”, “Cost”, “Spent”, ”Received”, ”Date” மற்றும் ”Account” என தலைப்புகள் உள்ள செல்களுக்கு ஒழுங்கு செய்வோம். |
01:00 | “SN” ஆல் குறிக்கப்படும் வரிசை எண் தலைப்புள்ள செல்லை முதலில் சொடுக்குவோம். |
01:07 | இடது சொடுக்கி button ஐ அழுத்திக்கொண்டு தலைப்புகள் உள்ள செல்கள் மீது இழுப்போம். |
01:13 | தலைப்புகள் உள்ள கிடைமட்ட வரி முழுவதையும் தேர்ந்தெடுத்தபின் Formatting toolbar இல் உள்ள “Borders” சின்னம் மீது சொடுக்கவும். |
01:22 | பல border பாங்குகளை உடைய கீழிறங்கும் பெட்டி ஒன்று திறக்கிறது. |
01:27 | border களில் பொருத்த நமக்கு விருப்பமான பாங்கை சொடுக்கவும். |
01:32 | நான் கடைசி தேர்வு மீது சொடுக்குகிறேன். |
01:35 | border களின் ஒழுங்கு நாம் தேர்ந்தெடுத்த பாங்குக்கு மாறிவிட்டதை காணலாம். |
01:41 | இந்த மாறுதலை செயல் நீக்குவோம். |
01:44 | தேர்ந்தெடுத்த செல்கள் இன்னும் முன்னிலைப்படுத்தப்பட்டுளன. தேர்வில் வலது சொடுக்கு செய்க. “Format Cells” ஐ தேர்வு செய்க. |
01:53 | “Borders” கீற்றில் சொடுக்குக. |
01:56 | நீங்கள் “Line arrangement”, “Line”, “Spacing to contents” மற்றும் “Shadow style” ஆகிய தேர்வுகளை காணலாம். |
02:04 | இதன் ஒவ்வொன்றிலும் Calc இன் முன்னிருப்பு அமைப்பு காட்டப்படுகிறது. |
02:08 | தேவைக்கு ஏற்ப இவை எதையும் மாற்றிக்கொள்ளலாம். |
02:14 | “User-defined” இன் கீழ் ஒரு சிறிய முன்பார்வை சாளரத்தை காணலாம். இது தேர்வை முன்பார்வையிட உதவும். |
02:21 | “Default” இன் கீழ் மூன்றாம் தேர்வை தேர்ந்தெடுக்கிறேன். அது முன்பார்வை சாளரத்தில் காட்டப்படுகிறது. |
02:29 | “Style”, “Width” மற்றும் “Color” ஆகியவற்றையும் மாற்றுகிறேன். |
02:33 | மீண்டும் அவை அனைத்தும் முன்பார்வை சாளரத்தில் காட்டப்படுகின்றன. |
02:37 | Spacing to contents என்பதில் “Synchronize” தேர்வாகி உள்ளது. |
02:41 | அதாவது எல்லா விளிம்புகளுக்கும் ஒரே இடைவெளி தரப்படுகிறது. |
02:46 | நாம் அதை தேர்வு நீக்கலாம். மேலும் வசதி போல விளிம்பின் இடைவெளியை அமைத்துக்கொள்ளலாம். |
02:52 | “Top” மற்றும் “Bottom” விளிம்புகளை 1.4pt என மாற்றுகிறேன். |
02:59 | பலவித நிழல் பாங்குகளை நீங்களே மாற்றிப் பார்க்க விட்டுவிடுகிறேன். |
03:03 | OK ஐ சொடுக்குகிறேன். |
03:05 | தேர்ந்தெடுத்த செல்களுக்கு தேர்ந்தெடுத்த பாங்கு செயலாக்கப்படுகிறது. |
03:10 | border களை ஒழுங்கு செய்வதை பார்த்தோம். இப்போது cell களுக்கு பின்புல நிறத்தை கொடுப்பதை காணலாம். |
03:17 | இதற்கு Formatting toolbar இல் “Background Color” என்ற தேர்வை கால்க் கொடுக்கிறது. |
03:27 | அது செயலாக்கப்படுவதை என பார்க்கலாம். |
03:30 | உதாரணமாக தலைப்புகள் உள்ள cell களுக்கு பின்புல நிறத்தை கொடுக்கலாம். |
03:36 | “SN” ஆல் குறிக்கப்படும் வரிசை எண் தலைப்புள்ள செல்லை முதலில் சொடுக்குவோம். |
03:43 | இடது சொடுக்கி button ஐ அழுத்திக்கொண்டு தலைப்புகள் உள்ள செல்கள் மீது இழுப்போம். |
03:49 | தலைப்புகள் உள்ள கிடைமட்ட வரி முழுவதையும் தேர்ந்தெடுத்தபின் Formatting toolbar இல் உள்ள “Background Color” சின்னம் மீது சொடுக்கவும். |
04:00 | துள்ளும் மெனு ஒன்று திறக்கிறது. அதில் நீங்கள் உங்களுக்கு தேவையான பின்புல நிறத்தை தேர்ந்தெடுக்கலாம். |
04:08 | நாம் “Grey” நிறத்தின் மீது சொடுக்கலாம். |
04:11 | நீங்கள் தலைப்புகளை உடைய செல்களின் பின்புல நிறம் சாம்பல் ஆவதை காணலாம். |
04:16 | Calc உரைகளின் பல வரிகளை ஒழுங்கு செய்ய தேர்வுகளை தருகிறது. |
04:21 | முதலாவது “தானியங்கி மடித்தல்” ஐ பயன்படுத்துவது. |
04:25 | "தானியங்கி மடித்தல்” ஒரு பயனர் ஒரே செல்லில் பல வரிகளை உள்ளிடுவதை அனுமதிக்கிறது. |
04:32 | இதை செயலாக்குவதைப் பார்க்கலாம். |
04:35 | இப்போது நம் “personal finance tracker.ods” sheet இல் ஒரு காலி செல்லை சொடுக்குவோம். |
04:43 | உதாரணமாக cell எண் “B12”. |
04:47 | cell இல் வலது சொடுக்கி பின் “Format Cells” தேர்வில் சொடுக்கவும். |
04:53 | உரையாடல் பெட்டியில் “Alignment” கீற்றில் சொடுக்கவும். |
04:57 | உரையாடல் பெட்டியின் கீழ் “Wrap text automatically” தேர்வில் சொடுக்கி பின் “OK” button இல் சொடுக்கவும். |
05:06 | type செய்க, “THIS IS A PERSONAL FINANCE TRACKER. IT IS VERY USEFUL”. |
05:13 | ஒரே cell இல் அத்தனை வாக்கியங்களும் மடிந்து பொருந்துவதை காணலாம். |
05:19 | மாற்றங்களை செயல் நீக்குவோம் |
05:22 | “தானியங்கி மடித்தல்” பற்றி கற்றபின், இப்போது Calc இல் எப்படி cell களை இணைத்து ஒன்றாக்குவது என்று பார்க்கலாம். |
05:28 | நம் “personal finance tracker.ods” file இல், “SN” தலைப்பில் வரிசை எண்களுள்ள செல்களையும் அவற்றுக்கான உருப்படிகளையும் ஒன்றாக சேர்க்க விரும்பினால், முதலில் “SN” கீழ் தரவு உள்ளீடு '1' ஐ சொடுக்கவும். |
05:46 | “Shift” விசையை அழுத்திக்கொண்டு அதற்கான உருப்படியான “Salary” செல்லை சொடுக்கவும். |
05:55 | இது சேர்க்கப்படப்போகும் இரண்டு செல்களையும் முன்னிலைப்படுத்துகிறது. |
05:59 | அடுத்து menu bar இல் “Format” பின் “Merge Cells” தேர்வு மீது சொடுக்கவும். |
06:06 | துள்ளித்தோன்றும் பக்கப்பட்டியில் “Merge Cells” தேர்வில் சொடுக்கவும். |
06:11 | இரண்டு செல்களிலும் தெரியும் உள்ளடக்கங்களை ஒரே செல்லுக்கு நகர்த்த தோன்றும் உரையாடல் பெட்டியில் “Yes” ஐ சொடுக்கவும். |
06:21 | தேர்ந்தெடுத்த செல்கள் ஒன்றாகிவிட்டதையும் மேலும் உள்ளடக்கங்களும் ஒரே செல்லில் இருப்பதையும் காணலாம். |
06:29 | “CTRL+Z” ஐ ஒரே நேரத்தில் அழுத்தி ஒன்றாக்கிய செய்த செயலை நீக்கலாம். |
06:37 | அடுத்து ஒரு cell க்குள் உரையை பொருந்துமாறு சுருக்கலாம். |
06:42 | ஒரு cell இல் உள்ள உரையின் எழுத்துரு விவரம் தானியங்கியாக உரை cell க்குள் பொருந்தும் படி மாற்றப்பட முடியும். |
06:49 | அதை கற்போம். |
06:51 | B14 என்று குறிக்கப்படும் செல்லில் இந்த உரையை type செய்யலாம்: “This is for the month of January” |
06:59 | உரை cell க்குள் பொருந்தவில்லை என்பதை காணலாம். |
07:03 | உரையை செல்லுக்குள் சரியாக பொருந்தும்படி சுருக்க B14 செல்லில் சொடுக்கவும். |
07:10 | இப்போது menu bar இல் “Format” பின் “Cells” தேர்வில் சொடுக்கவும். |
07:18 | மாறாக cell இல் வலது சொடுக்கு சொடுக்கி “Format Cells” இல் சொடுக்கவும். |
07:23 | “Format Cells” உரையாடல் பெட்டி தோன்றுவதை பார்க்கலாம். |
07:27 | உரையாடல் பெட்டியில் “Alignment” கீற்றில் சொடுக்கவும். |
07:32 | உரையாடல் பெட்டியின் கீழ், “Shrink to fit cell size” பெட்டியில் குறியிட்டு, பின் “OK” button ஐ சொடுக்கவும். |
07:41 | நீங்கள் B14 cell இல் உள்ள உரையின் எழுத்துரு விவரம் cell க்குள் பொருந்தும் படி எழுத்துரு அளவை குறைத்து தானியங்கியாக உரை மாற்றப்பட்டதை காணலாம். |
07:53 | மாற்றங்களை செயல் நீக்குவோம் |
07:56 | இத்துடன் Calc மீதான இந்த Tutorial முடிகிறது. |
08:01 | சுருங்கச்சொல்ல நாம் கற்றது: Calc இல் பார்டர்களையும் பின்புல நிறத்தையும் ஒழுங்கு செய்வது, |
08:08 | தானியங்கி மடித்தல் அம்சத்தால் ஒன்றுக்கு மேற்பட்ட உரை வரிகளை ஒழுங்கு செய்வது, |
08:14 | Cell களை இணைத்து ஒன்றாக்குவது. Cell க்கு தகுந்தபடி உரையை சுருக்குவது. |
08:17 | முழுமையான பயிற்சி |
08:20 | “spreadsheet practice.ods” sheet ஐ திறக்கவும். |
08:24 | எல்லா தலைப்புகளையும் தேர்ந்தெடுக்கவும். |
08:27 | தலைப்புகளுக்கு நீல நிற பின்புல நிறம் கொடுக்கவும். |
08:30 | “தானியங்கி மடித்தல்” ஐ பயன்படுத்தி “This is a Department Spreadsheet” என்ற உரையை type செய்யவும். |
08:36 | இந்த உரை செல்லுக்குள் பொருந்தும்படி சுருக்கவும். |
08:39 | கீழ் வரும் தொடுப்பில் உள்ள விடியோவை காணவும். |
08:42 | இது Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது. |
08:45 | இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள். |
08:50 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
08:55 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
08:59 | மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@ spoken hyphen tutorial dot org |
09:05 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
09:10 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
09:18 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
09:29 | தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |