BOSS-Linux/C2/Simple-filters/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
0:00 | லீனக்ஸில் எளிய பில்டர்கள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
0:09 | இங்கு ஹெட், டெய்ல், ஸார்ட், கட், பேஸ்ட் ஆகியவற்றை கற்போம். |
0:18 | இவை அனைத்தும் கமாண்ட் உரை மாற்றி கருவிகள். |
0:22 | டெர்மினலில் ஹாஷ் ஐ கண்டால் இந்த கமாண்ட் களை செயலாக்க நீங்கள் ரூட் ஆக வேண்டும். |
0:29 | கமாண்ட் இல் சூடொ சு அல்லது சு ரூட் சேர்க்க வேண்டும். டாலர் குறியை கண்டால் பயனாராகவே பயன்படுத்தலாம். |
0:38 | உபுன்டுவின் முன்னிருப்பு நிறுவலை செய்திருக்கிறீர்கள், பைல்கள் சேமிக்கப்படும் பாதையை மாற்றவில்லை என கொள்கிறேன். |
0:46 | நான் லினக்ஸ் OS பயன்படுத்துகிறேன். |
0:51 | இந்த மாட்யூலை பயன்படுத்த மௌஸ் -ஐயும் விசைப்பலகையும் கையாளுவது, ஒரு சாளரத்தை பெரிதாக்குவது, சிறிதாக்குவது ஆகியவை தெரிய வேண்டும். |
1:02 | ஹெட் கமாண்டின் பின்னால் ஒரு ஆஸ்கி பைல் பெயர் மூலம் முதல் பத்து வரிகளை காண்பிக்க வைக்கலாம். |
1:10 | ஒரு பைல் ஐ உருவாக்கலாம். |
1:13 | அப்ளிகேஷன் > ஆக்ஸசரீஸ் > டெக்ஸ்ட் எடிட்டர் போகலாம். |
1:20 | சில எண்களை இன்னொரு பைலில் எழுதி வைத்தி இருக்கிறேன். |
1:26 | நேரத்தை மிச்சப்படுத்த....அதை பிரதி எடுத்து இங்கே ஒட்டுகிறேன். |
1:34 | பைல், சேவ் இல் சொடுக்கி... |
1:37 | நம்பர்ஸ் டாட் டிஎக்ஸ்டி என பெயர் கொடுத்து சேமிக்கிறேன். |
1:44 | பைல் ஐ மூடுகிறேன். |
1:50 | இப்போது அப்ளிகேஷன் > ஆக்ஸசரீஸ் > டெர்மினல் க்கு போகிறேன். |
1:58 | உருவாக்கிய பைல் இங்கே இருக்கிறதா என்று பார்க்கலாம். |
2:02 | எல்எஸ் என டைப் செய்து என்டர் செய்கிறேன். |
2:05 | ஹோம் டிரக்டரியின் எல்லா டிரக்டரிகளையும் பைல் களையும் பார்க்கிறோம். |
2:11 | கேட் கமாண்ட் ஆல் உருவாக்கிய பைலை படிக்க முயற்சிக்கலாம். |
2:18 | கேட் என்யுஎம் … டேபை அழுத்த மீதி பெயர் தானாக உள்ளிடப்படும். என்டர் செய்க. |
2:26 | அதையே ஹெட் கமாண்ட் க்கு செய்யலாம். |
2:30 | ஹெட் என்யுஎம் … டேப் … என்டர் |
2:36 | முதல் பத்து வரிகள் காட்டப்படுகிறன. |
2:39 | முதல் ஐந்து வரிகளை மட்டும் காண ஹெட் கமாண்ட் க்கும் பைல் பெயருக்கும் நடுவில் ஹைபன் என் 5 எழுத வேண்டும். |
2:49 | மேல் அம்புக்குறியை அழுத்த முந்தைய கமாண்ட் வரும். மைனஸ் என் 5 என்டர் |
2:55 | முதல் ஐந்து வரிகள் மட்டும் காட்டப்படும். |
2:59 | இப்போது ப்ரெசன்டேஷனுக்கு போகலாம். |
3:04 | ஹெட் கமாண்ட் செய்வதை டெய்ல் கமாண்ட் தலைகீழாக செய்கிறது. கடைசி பத்து வரிகளை காட்டுகிறது. |
3:12 | ஆல்ட் டேப் அழுத்தி டெர்மினலுக்கு மாறுகிறேன். |
3:17 | டெய்ல் நம்ப்... டேப் என்டர். |
3:21 | கடைசி ஐந்து வரிகளை மட்டும் காண டெய்ல் கமாண்ட் க்கும் பைல் பெயருக்கும் நடுவில் ஹைபன் என் 5 இட வேண்டும். |
3:31 | ஹைபன் என் 5 என்டர் |
3:36 | ஸ்லைடுகளுக்கு போகலாம். |
3:39 | லாக் பைல் கணினியில் நடந்த நிகழ்ச்சிகளை பதிவு செய்கிறது. |
3:45 | ஆத் டாட் லாக் பைல் உள்நுழைந்தார்கள் வெளியேறினார்களை பதிவு செய்கிறது. |
3:51 | டெய்ல் கமாண்ட் இன் முக்கிய தேர்வு... ஹைபன் எஃப் மூலம் லாக் பைலின் கடைசி பகுதியை தொடர்வது. |
3:59 | லாக் கோப்பில் புதிய வரி எழுதப்பட்டால் அதை கடைசி வரியாக கொண்டு கடைசி பத்து வரிகள் காட்டப்படும். |
4:09 | டெர்மினலுக்கு போகலாம். |
4:11 | டெய்ல் ஹைபன் எஃப் பார்வோர்ட் ஸ்லாஷ் வார்(var) பார்வோர்ட் ஸ்லாஷ் லாக் ஆத் dot லாக். |
4:21 | டெர்மினலை மறு அளவு செய்வோம். |
4:28 | இன்னொரு டெர்மினலை திறக்கலாம். அப்ளிகேஷன் > ஆக்ஸசரீஸ் > டெர்மினல் க்கு போகிறேன். |
4:36 | டெர்மினலை மறு அளவு செய்தால் ... |
4:42 | டெய்ல் கமாண்ட் ஒரு லாக் பைலின் கடைசி வரியை தொடர்வதை ஒரே திரையில் பார்க்கலாம். |
4:50 | உங்களையே சு ஆக்க சு என உள்ளிடுங்கள்; என்டர். |
4:54 | தவறான பாஸ்வேர்டை உள்ளிடுங்கள். |
4:58 | டெய்ல் இயங்கும் டெர்மினலில்... புதிய லாக் பதிவு தோன்றுவதை பாருங்கள். |
5:05 | லாக் நுழைவு... தோல்வி அடைந்த நேரமும் தேதியும் காட்டப்படுகிறது. |
5:13 | இதை உறுதி செய்ய டேட் என டைப் செய்து என்டர் செய்க. |
5:22 | இந்த டெர்மினலில் இருந்து வெளியேற எக்ஸிட். |
5:26 | கண்ட்ரோல் சி என டைப் செய்தால் இந்த டெய்ல் கமாண்ட் இயக்கம் நின்றுவிடும். திரையை பெரிதாக்கிக்கொள்ளலாம். |
5:42 | முந்தைய உதாரணத்தில் நாம் ஆத் லாக் பைல் ஐ மட்டுமே பார்த்து இருக்கிறோம். |
5:47 | இவை லீனக்ஸில் அதிகம் பயன்படும் லாக் பைல்கள். |
5:51 | பிரச்சினைகள் ஏற்பட்டால் ஒரு லீனக்ஸ் சிஸ்டம் மேலாளர் தன் கணினியை சரி செய்ய இவற்றை காண்பார். |
6:02 | சார்ட் கமாண்ட் பெயருக்கு ஏற்றாற்போல் ஒரு பைல் ஐ மேல் நோக்கியோ கீழ் நோக்கியோ அடுக்கிக்கொடுக்கும். |
6:13 | சார்ட் நம்பர்ஸ் டாட் டெக்ஸ்ட். இது நம் நம்பர்ஸ் டாட் டெக்ஸ்ட் பைல் ஐ ஏறு வரிசையில் அடுக்கி கொடுக்கும். |
6:21 | இதில் பத்து பதினொன்று பன்னிரண்டு ஆகியவை இரண்டுக்கு முன்னால் வருகின்றன. ஏனெனில் சார்ட் முதல் எண்ணை மட்டுமே பார்த்து அடுக்குகிறது. |
6:33 | இதை தவிர்க்க ஹைபன் என் ஐ சேர்க்கவும். சேர்த்து.. என்டர். |
6:43 | இப்போது முழு எண்னையும் பார்த்து அடுக்குகிறது. |
6:47 | இதையே இறங்கு வரிசையில் அடுக்க தேர்வு ஹைபன் ஆர் ஐ பயன்படுத்தலாம். |
6:59 | சில எண்கள் மீண்டும் மீண்டும் வருகின்றன. இவற்றை தவிர்த்து மற்றதை காண ஹைபன் யு பயன்படுத்துக. |
7:07 | டெர்மினலுக்கு போகலாம். |
7:09 | மேல் அம்புக்குறி |
7:11 | யு என்டர், |
7:15 | முன்னே இரண்டு இரண்டு காட்டப்பட்டது இல்லையா? இப்போது ஒரே ஒரு இரண்டுதான் காட்டப்படுகிறது. |
7:28 | பைல் ஐ காலம் அடிப்படையில் பிரிப்பதை பார்க்கலாம். |
7:33 | பைல் ஐ உருவாக்கி கீழ் கண்டபடி உள்ளிடுக. |
7:38 | அப்ளிகேஷன் > ஆக்ஸசரீஸ் > டெக்ஸ்ட் எடிட்டர் க்கு போகலாம். |
7:46 | டேடாவை வேறு கோப்பில் வைத்தி இருக்கிறேன். நேரத்தை மிச்சப்படுத்த அதை பிரதி எடுத்து ஒட்டுகிறேன். கண்ட்ரோல் சி கண்ட்ரோல் வி. |
8:01 | பைல், சேவ், மார்க்ஸ்டாட் டெக்ஸ்ட். சேவ் ஐ சொடுக்கவும். |
8:11 | இங்கு இருக்கும் சிறப்பு எழுத்துக்களை கண்டுகொள்ளாதீர்கள். யாரும் என் மேல் குறைந்த மார்க் கொடுத்ததற்கு கேஸ் போடக்கூடாது இல்லையா? |
8:18 | பைல் ஐ மூடுவோம். |
8:24 | மார்க்ஸ் டாட் டெக்ஸ்ட் இன் இரண்டாம் காலம் அடிப்படையில் இதை பிரிக்கலாம். |
8:30 | டெர்மினலுக்கு போகலாம். |
8:32 | சார்ட் ஸ்பேஸ் மார்க்ஸ் டாட் டெக்ஸ்ட் ஸ்பேஸ் ஹைபன் டி[t] ஸ்பேஸ் மேற்கோள் குறிகளுக்கு நடுவே ஸ்பேஸ் பின்னர் ஸ்பேஸ். |
8:43 | இங்கே ஹைபன் டி என்பது டிலிமிடர், மேற்கோள் குறிகளுக்கு நடுவே உள்ள ஸ்பேஸ் அதன் பிரதிநிதி. |
8:52 | ஹைபன் கே என்பது அடுக்க வேண்டிய இரண்டாம் காலம் ஐ குறிக்கிறது. |
9:04 | என்டர் ஐ தட்டவும். |
9:10 | கேட் மார்க்ஸ் டாட் டெக்ஸ்ட் |
9:14 | இதுதான் ஒரிஜினல் பைல். இரண்டாம் காலம் அடிப்படையில் இதை பிரிக்க அவிர் மேலே போய்விட்டார். பாலா கீழே வந்துவிட்டார். |
9:33 | ஒரு கோப்பிலிருந்து சில தகவல்களை மட்டும் வெட்ட கட் கமாண்ட் பயனாகிறது. |
9:41 | மார்க்ஸ் டாட் டெக்ஸ்ட் இலிருந்து சில பெயர்களை இழுக்கலாம். |
9:44 | ஆல்ட் டேப் [tab] அடித்து டெர்மினலுக்கு போகலாம். |
9:48 | கட் ஸ்பேஸ் மார்க்ஸ் டாட் டெக்ஸ்ட் ஸ்பேஸ் ஹைபன் டி[D] ஸ்பேஸ் மேற்கோள் குறிகளுக்கு நடுவே ஸ்பேஸ்; அடுத்து ஸ்பேஸ். |
9:58 | இங்கே கட் கமாண்ட் யில் ஹைபன் டி[D] என்பது டிலிமிடர், மேற்கோள் குறிகளுக்கு நடுவே உள்ள ஸ்பேஸ் அதன் பிரதிநிதி. |
10:10 | ஹைபன் எஃப்2 என்பது இரண்டாம் காலம் ஐ குறிக்கிறது. என்டர் ஐ தட்டவும். |
10:21 | பேஸ்ட் கமாண்ட் பொருத்தமான அடுத்த வரிகளை வேறு கோப்பிலிருந்து சேர்க்கிறது. |
10:26 | நம்பர்ஸ் டாட் டெக்ஸ்ட் ஐயும் மார்க்ஸ் டாட் டெக்ஸ்ட் ஐயும் பயன்படுத்தலாம். |
10:31 | டெர்மினலுக்கு போகலாம். |
10:33 | பேஸ்ட் நம்பர்ஸ் டாட் டெக்ஸ்ட் மார்க்ஸ் டாட் டெக்ஸ்ட்; என்டர். |
10:40 | நம்பர்ஸ் டாட் டெக்ஸ்ட் இன் முதல் வரிகளுக்கு மார்க்ஸ் டாட் டெக்ஸ்ட் இன் முதல் வரி சேர்க்கப்பட்டது. |
10:47 | ரிடிரக்ட் விசை மூலம் வெளியீட்டை கான்கேட்பைல் டாட் டெக்ஸ்ட் பைல் க்கு அனுப்பலாம். |
10:56 | டெர்மினலுக்கு போகலாம். |
10:58 | மேல் அம்புக்குறியை தட்டுக. ரிடிரக்ட் விசையை தட்டுக. அது வல முனை அம்புக்குறியாகும். கான்கேட்பைல் டாட் டெக்ஸ்ட். என்டர் ஐ தட்டவும். |
11:07 | கேட் கான்கேட்பைல் டாட் டெக்ஸ்ட் |
11:12 | ஸ்லைடுக்கு போகலாம். |
11:15 | எண்களை வரிசையாக டேப் ஆல் பிரிக்கப்பட்டு அச்சிட பேஸ்ட் ஹைபன் எஸ் தேர்வை பயன்படுத்தலாம். |
11:25 | பேஸ்ட் ஹைபன் எஸ் |
11:29 | நம்பர்ஸ் டாட் டெக்ஸ்ட் |
11:33 | ஸ்லைடுகளுக்கு போகலாம் |
11:34 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
11:39 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ICT,MHRD மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
11:45 | மேற்கொண்டு விவரங்களுக்கு இங்கே செல்லுங்கள்: |
11:48 | மொழியாக்கம் கடலூர் திவா. நன்றி |