Advanced-Cpp/C2/Polymorphism/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:54, 8 December 2014 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:02 C++ ல் Polymorphism குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு..
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
00:10 Polymorphism.
00:11 Virtual Function.
00:13 இதை சில உதாரணங்களின் வழியே செய்வோம்.
00:16 இதை பதிவுசெய்ய நான் பயன்படுத்துவது உபுண்டு இயங்குதளம் பதிப்பு 11.10, g++ compiler பதிப்பு 4.6.1
00:27 polymorphism த்தின் அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்
00:31 வெவ்வேறு வடிவங்களை எடுப்பதற்கான திறன் Polymorphism ஆகும்.
00:36 இது ஒரு function ஐ ஒரே பெயரில் பல்வேறு வழிகளில் பயன்படுத்துவதற்கான நுட்பம் ஆகும்.
00:42 virtual functionகளை காண்போம்.
00:45 class ன் member function... Virtual function ஆகும்.
00:49 இது அதன் derived class ல் override செய்யப்படலாம்
00:53 இது virtual keyword உடன் declare செய்யப்படுகிறது.
00:57 Virtual function call... run-time ல் தீர்க்கப்படுகிறது
01:01 இப்போது virtual functionகளுக்கான ஒரு உதாரணத்தை காண்போம்
01:06 ஏற்கனவே code ஐ எழுதி வைத்துள்ளேன்.
01:08 அதை காண்பொம்.
01:10 நம் file பெயர் virtual.cpp என்பதை கவனிக்க
01:15 இந்த ப்ரோகிராமில்:
01:16 ஒரு செவ்வகம், இணைகரம் மற்றும் முக்கோணத்தின் பரப்பளவை கணக்கிடுவோம்.
01:22 இது நம் header file iostream.
01:25 இங்கே std namespace ஐ பயன்படுத்துகிறோம்
01:29 பின் ஒரு class parallelogram உள்ளது
01:33 இது base class.
01:35 இதில் width,height மற்றும் ar என integer variableகளை declare செய்துள்ளோம்
01:42 இவை protected ஆக declare செய்யப்படுகிறது
01:45 public ஆக declare செய்யப்பட்ட function set_values உள்ளது
01:50 இங்கே a மற்றும் b என argumentகளை pass செய்துள்ளோம்
01:55 public memberகளை பயன்படுத்தி protected memberகளை அணுகுகிறோம்.
02:00 இது நம் virtual function area.
02:04 இங்கே இணைகரத்தின் பரப்பளவை கணக்கிடுகிறோம்.
02:07 பின் ஒரு derived class ஆக class Rectangle உள்ளது
02:12 இது base class parallelogram ன் பண்புகளை inherit (மரபுவழிப் பெறல்) செய்கிறது.
02:17 இங்கே function area ஐ override (மேலெழுதுதல்) செய்கிறோம்.
02:21 பின் செவ்வகத்தின் பரப்பளவை கணக்கிட்டு.
02:23 மதிப்பை அச்சடிக்கிறோம்.
02:25 இங்கே மற்றொரு derived class triangle உள்ளது.
02:29 இதுவும் base class parallelogram ன் பண்புகளை inherit செய்கிறது.
02:35 இங்கே மீண்டும் function area ஐ override செய்கிறோம்.
02:39 பின் முக்கோணத்தின் பரப்பளவை கணக்கிட்டு.
02:41 மதிப்பை அச்சடிக்கிறோம்.
02:43 இது நம் main function.
02:46 இங்கே p என class parallelogram ன் ஒரு object ஐ உருவாக்குகிறோம்
02:52 இங்கே pointer parallel ஐ காணலாம்
02:56 இது class parallelogram ன் pointer ஆகும்
03:00 இது Base pointer எனப்படுகிறது
03:03 base class Pointer ஆனது derived class ன் object ஐ சுட்டிக்காட்டலாம்.
03:08 இங்கே class Rectangle மற்றும் Triangle க்கு objectகளை உருவாக்குகிறோம்
03:14 இங்கே, p ன் address க்கு Parallel assign செய்யப்படுகிறது
03:18 பின் 3 மற்றும் 2 என argument களை pass செய்கிறோம்
03:23 பின் function area ஐ call செய்கிறோம்
03:26 இங்கே , rect ன் address க்கு Parallel assign செய்யப்படுகிறது
03:30 rect class Rectangleன் object ஆகும்
03:33 மீண்டும் 4 மற்றும் 5 என argument களை pass செய்கிறோம்
03:37 பின் function area ஐ call செய்கிறோம்
03:40 கடைசியாக ParallelTriangle ன் address க்கு assign செய்கிறொம்
03:45 trgl.
03:47 இது class Triangle ன் object
03:51 இங்கே argumentகள் 6 மற்றும் 5 ஐ pass செய்து
03:54 function area ஐ call செய்கிறோம்
03:56 இது நம் return statement
03:59 இப்போது ப்ரோகிராமை இயக்குவோம்
04:02 Ctrl, Alt மற்றும் T விசைகளை விசைப்பலகையில் ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவை திறக்கவும்.
04:09 compile செய்ய டைப் செய்க:
04:10 g++ space virtual.cpp space -o space vir. எண்டரை அழுத்துக
04:20 டைப் செய்க: ./vir எண்டரை அழுத்துக
04:24 காட்டப்படும் பின்வரும் வெளியீடுகளைக் காணலாம்:
04:27 Area of parallelogram is 6
04:29 Area of rectangle is 20
04:31 Area of triangle is 15
04:34 நம் slideகளுக்கு வருவோம்.
04:36 சுருங்கசொல்ல.
04:37 இந்த டுடோரியலில் நாம் கற்றது
04:39 Polymorphism.
04:41 Virtual function உதாரணம் Virtual int area
04:45 பயிற்சியாக
04:46 செவ்வகம், சதுரம் மற்றும் முக்கோணத்தின் சுற்றளவைக் கணக்கிடவும்.
04:50 ஒரு Virtual function ஆக perimeter ஐ உருவாக்கவும்
04:54 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
04:57 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
05:00 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
05:04 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
05:09 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
05:14 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
05:21 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
05:25 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
05:32 இந்த திட்டம் பற்றி மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
05:37 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst