LibreOffice-Writer-on-BOSS-Linux/C2/Inserting-pictures-and-objects/Tamil
From Script | Spoken-Tutorial
Resources for recording Inserting Pictures and Formatting Features
Time | Narration |
00:00 | LibreOffice Writerஇல் படங்களை நுழைப்பது குறித்த tutorial க்கு நல்வரவு. |
00:06 | இந்த tutorial லில் கற்பது: |
00:09 | ஒரு document இல் படத்தை உள்நுழைப்பது, |
00:12 | Writer இல் table களை உள்நுழைப்பது, |
00:15 | hyperlink களை உள்நுழைப்பது. |
00:18 | இங்கே GNU/Linux நம் operating system. LibreOffice Suite பதிப்பு 3.3.4. |
00:29 | LibreOffice Writer இல் படங்களை உள்நுழைப்பதை முதலில் கற்போம். |
00:36 | resume.odt file ஐ திறக்கலாம். |
00:39 | படத்தை உள்நுழைக்க “resume.odt” ஆவணத்துள் சொடுக்கலாம். |
00:47 | menu bar இல் “Insert” தேர்வு செய்து முறையே “Picture”, “From File” option மீது சொடுக்கவும். |
00:56 | “Insert picture” என்ற dialog box தோன்றுவதை காணலாம். |
01:00 | உங்கள் கணினியில் சேமித்துள்ள படம் ஒன்றை “Location” field இல் பெயரை எழுதி தேர்வு செய்யலாம். |
01:09 | எதையும் சேமிக்கவில்லை என்பதால் முன்னிருப்பு option களில் இருந்து ஒன்றை உள்நுழைக்கலாம். |
01:16 | dialog boxயில் இடது பக்கம் உள்ள “Pictures” option மீது சொடுக்கலாம். |
01:21 | ஒரு படத்தை தேர்வு செய்து “Open” button ஐ சொடுக்கலாம். |
01:28 | document இல் படம் நுழைக்கப்படுவதை காணலாம். |
01:32 | மறு அளவாக்கி document இன் மேல் வலது மூலைக்கு இதை நகர்த்தலாம். |
01:38 | படத்தின் மீது சொடுக்கலாம். வண்ண கைப்பிடிகள் தோன்றுகின்றன. |
01:44 | ஒரு கைப்பிடி மீது cursor ஐ வைத்து இடது சொடுக்கி button ஐ அழுத்தவும். |
01:50 | cursor ஐ இழுத்து மறு அளவாக்கலாம். முடிந்ததும் படத்தின் மீது சொடுக்கி இழுத்து editor இன் மேல் வலது மூலைக்கு படத்தை நகர்த்தலாம். |
02:01 | படங்களை உள்நுழைக்க மற்ற வழிகள் ஒட்டுப்பலகை, ஸ்கேனர் அல்லது பட காலரியிலிருந்து. |
02:09 | அடுத்து Writer இல் table களை உள்நுழைப்பதை கற்போம். |
02:13 | LibreOffice writer இல் table கள் தகவலை சேமிக்கின்றன. |
02:21 | document இல் table ஐ நுழைக்க, tool bar இல் “Table” சின்னத்தின் மீது சொடுக்கி table அளவை தேர்ந்தெடுக்கலாம். அல்லது menu bar இல் “Insert” option மூலம் செய்யலாம். |
02:36 | ”Education Details” தலைப்பின் கீழ் ஒரு table ஐ நுழைக்க தலைப்பின் கீழ் cursor ஐ வைக்கவும். |
02:44 | menu bar இல் முறையே “Insert”, “Tables” option களை சொடுக்கவும். |
02:51 | இது பல field கள் உள்ள dialog boxஐ திறக்கும். |
02:55 | “Name” field இல், “resume table” என பெயரிடலாம். |
03:01 | “Size” என்ற தலைப்பின் கீழ் “Columns” எண்ணிக்கையை “2” எனலாம். |
03:06 | “Rows” field இல் மேல்நோக்கு அம்புக்குறியை அழுத்தி “Rows” எண்ணை “4” ஆக்கலாம். |
03:11 | columns and rows field களில் உள்ள மேல் / கீழ் அம்புக்குறிகள் மூலம் table இன் அளவை அதிகமாக/ குறைவாக ஆக்கலாம். |
03:21 | dialog boxஇல் “AutoFormat” button ஐ அழுத்தவும். |
03:25 | இது திறக்கும் புதிய dialog box இல் விரும்பும் table பாங்கை தேர்ந்தெடுக்கலாம். |
03:33 | Writer பல option களை தருகிறது. இப்போதைக்கு “None” option ஐ “Format” கீழ் சொடுக்கி “OK” ஐ சொடுக்குவோம். |
03:43 | மீண்டும் “OK” ஐ சொடுக்குவோம். |
03:45 | தலைப்பின் கீழ் இப்போது இரண்டு columnகள் நான்கு வரிகள் கொண்ட table சொருகப்பட்டது. |
03:53 | இப்போது table க்குள் ஏதும் தகவலை எழுதலாம். |
03:58 | உதாரணமாக, table யின் முதல் column முதல் வரியில் உள்ள அறையில் சொடுக்குவோம். |
04:04 | இங்கே “Secondary School Examination” என்று எழுதுவோம். |
04:08 | பக்கத்து அறையில் சொடுக்கி “93 percent” என எழுதுவோம்.
இது ரமேஷ் உயர்நிலை பள்ளி தேர்வில் 93 percent மதிப்பெண்கள் பெற்றதாக சொல்கிறது. |
04:20 | இதே போல படிப்பு விவரங்களை இங்கே எழுதலாம். |
04:25 | “Secondary School Examination” என எழுதிய அறைக்கு கீழ் சொடுக்கவும். |
04:31 | இங்கு “Higher Secondary School Examination” என எழுதி அடுத்த அறையில் மதிப்பெண் “88 percent” என எழுதலாம். |
04:41 | அடுத்த அறை செல்ல மூன்றாம் வரியின் முதல் அறையில் சொடுக்கவும். அல்லது TAB விசையை அழுத்தலாம். |
04:52 | TAB ஐ அழுத்தி “Graduation” அடுத்த அறையில் “75 percent”. கடைசி வரியில் முதல் அறையில் “Post Graduation” “70%” |
05:01 | கடைசி வரியில் தலைப்பை “Post Graduation” என முதல் cell இல் type செய்வோம்; பக்கத்து cell இல், “70 percent” |
05:12 | ஆகவே படிப்பு விவரங்கள் கொண்ட நம் table இந்த document இல் உள்ளது. |
05:18 | cursor ஐ table யின் கடைசி அறையில் வைக்கவும். |
05:24 | இப்போது கூடுதல் வரியை table யின் கடைசி வரிக்கு கீழ் சேர்க்க நினைத்தால், “Tab” விசையை அழுத்தவேண்டும். |
05:33 | ஒரு புதிய வரி சேர்க்கப்பட்டதை காணலாம். |
05:37 | table யின் இடது பக்கம் “Phd” என எழுதலாம். வலது பக்கம் மதிப்பெண் “65%” என டைப் செய்கிறோம். |
05:49 | ஆகவே, ஒரு வரி கீழ் இன்னொரு வரி சேர்க்க கடைசி அறையில் cursor ஐ வைத்து “Tab” விசையை அழுத்த அது செய்யப்படும். |
06:00 | Tab மற்றும் Shift+Tab, விசைகளை பயன்படுத்தி table இல் அறைக்கு அறை செல்ல இயலும். |
06:07 | table இல் இன்னொரு அம்சம் “Optimal Column Width” option. அறையின் உள்ளடக்கத்துக்கு பொருத்தமாக தானியங்கியாக columnஇன் அகலம் அமையும். |
06:18 | இதை வலது- இரண்டாவது columnஇல் அமைக்க அந்த column இல் எங்காவது கர்சரை வைக்கவும். |
06:30 | ஆகவே text யில் கடைசி அறையில் “65%” க்கு அடுத்து கர்சரை வைப்போம். |
06:35 | இப்போது menubar இல் முறையே “Table” menu, “Autofit” மீது சொடுக்கவும். |
06:42 | திரையில் தோன்றும் மெனுவில், “Optimal Column Width” option இல் சொடுக்கவும். |
06:49 | column தானியங்கியாக உள்ளடக்கத்துக்கு ஏற்றபடி அகலத்தை மாற்றிக்கொள்கிறது. |
06:58 | இது போல் table இன் எந்த columnக்கும் செய்யலாம். |
07:02 | table க்கு பலவித எல்லைக்கோடுகளை அமைக்கலாம்: கோடே இல்லாமல், உள் வெளி கோடுகள், வெளிக்கோடு மட்டும்.... முதலியன. |
07:15 | இதற்கு main menu வில் Table tab இல் Table Properties option , Borders tab சென்று தகுந்த option ஐ செய்யலாம். |
07:25 | அடுத்து hyperlink களை உருவாக்குவதை பார்க்கலாம். |
07:30 | hyperlink களை தொடரும் பயனர் hypertext இல் உலாவுகிறார். |
07:35 | hyperlink என்பது ஒரு document க்கான தொடுப்பு; படிப்பவர் நேரடியாக தொடரலாம் அல்லது தானியங்கியாக தொடரப்படலாம். |
07:43 | hyperlink முழு document ஐயோ அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியையோ காட்டலாம். |
07:49 | file இல் hyperlink ஐ உருவாக்கும் முன் hyperlink செய்ய document ஐ உருவாக்க வேண்டும். |
07:56 | toolbar இல் “New” சின்னத்தில் சொடுக்கவும். |
08:00 | புதிய text document திறக்கிறது. document இல் “Hobbies” என table ஐ உருவாக்குவோம். |
08:06 | ஆகவே தலைப்பை“HOBBIES” என எழுதுவோம். |
08:09 | Enter விசையை அழுத்தலாம். |
08:11 | பொழுதுபோக்குகளை ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதலாம். “Listening to music”, ”Playing table tennis” “Painting” |
08:20 | file ஐ சேமிக்கலாம். |
08:24 | toolbar இல் “Save” சின்னத்தில் சொடுக்கலாம். “Name” field இல், file பெயரை “hobby” என எழுதுவோம். |
08:30 | “Save in folder” இல் கீழ் அம்பை அழுத்துவோம். “Desktop” option ஐயும், பின் “Save” மீதும் சொடுக்குவோம். |
08:40 | file desktop இல் சேமிக்கப்படுகிறது. |
08:43 | file ஐ மூடுவோம். “resume.odt” file இல் உருவாக்கப்போகும் hyperlink இந்த document ஐ திறக்கும். |
08:53 | இப்போது படிப்பு குறித்த விவரங்கள் அடங்கிய table யின் கீழ் “HOBBIES” என ஒரு தலைப்பு எழுதுகிறோம். |
09:00 | “HOBBIES” ஐ hyperlink ஆக்க, text ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். cursor ஐ “HOBBIES” மீது இழுக்க வேண்டும். |
09:09 | menubar இல் முறையே “Insert” menu விலும், “Hyperlink” இலும் சொடுக்கவேண்டும். |
09:15 | dialog box திறக்கிறது. அதில் பல option கள் உள்ளன. “Internet”,”Mails and news”,”document” “New document”. |
09:24 | hyperlink ஐ text document க்கு செய்வதால் “ document ” ஐ தேர்வு செய்கிறோம். |
09:30 | இப்போது “Path” field இல் “Open file” button ஐ அழுத்தவும். |
09:36 | dialog box இல் “Desktop” option இல் சொடுக்கி உருவாக்கிய புதிய document ஐ தேர்ந்தெடுக்கலாம். |
09:44 | “hobby.odt” option இல் சொடுக்கவும். பின் “Open” ஐ சொடுக்கவும். |
09:52 | “Path” field இல் பைலுக்கான பாதை இடப்படுவதை காணலாம். |
09:57 | “Apply” field இல் சொடுக்கி பின் “Close” ஐ சொடுக்கவும். |
10:02 | “HOBBIES” என்பது அடிக்கோடிடப்பட்டுள்ளது, நீல வண்ணத்தில் இருக்கிறது. ஆகவே இந்த text hyperlink ஆகிவிட்டது. |
10:11 | cursor ஐ “HOBBIES” தலைப்பு மீது வைத்து “Control விசை மற்றும் இடது சொடுக்கி button” ஐயும் அழுத்தவும். |
10:19 | hobbies பைல் திறக்கிறது. |
10:23 | இதே போல hyperlink ஐ படங்கள், வலைத்தளங்கள் ஆகியவற்றுக்கும் உருவாக்கலாம். |
10:30 | இத்துடன் LibreOffice writer க்கான spoken tutorial கள் முடிவுக்கு வருகின்றன. |
10:35 | நாம் கற்றது: |
10:37 | document இல் பட file ஒன்றை நுழைத்தல், |
10:39 | Writer இல் table ஐ உருவாக்குதல், |
10:42 | hyperlink குகளை உருவாக்குதல். |
10:48 | முழுமையான பயிற்சி: |
10:50 | “practice.odt” ஐ திறக்கவும். |
10:53 | file இல் ஒரு படத்தை உள்நுழைக்கவும். |
10:57 | 3 வரிகள் 2 columnகள் கொண்ட ஒரு table ஐ உருவாக்கவும். |
11:01 | அந்த பைலில் ஒரு படத்தின் மீது சொடுக்கினால் “www.google.com” வலத்தளத்தை திறக்க hyperlink ஐ உருவாக்கவும். |
11:11 | http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial இல் கிடைக்கும் விடியோவை காணுங்கள். அது இந்த பாட திட்டத்தை சுருக்கமாக சொல்கிறது. |
11:17 | வேகமான இணைப்பு இல்லையானால் தரவிறக்கி பாருங்கள். |
11:22 | Spoken Tutorial திட்டக்குழு spoken டுடோரியல்களை கொண்டு பயிலரங்குகளை நடத்துகிறது. |
11:25 | இணைய வழி தேர்வில் தேருவோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
11:31 | மேற்கொண்டு விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும். contact@spoken-tutorial.org |
11:37 | Spoken Tutorial திட்டம் Talk to a Teacher project இன் முனைப்பாகும். |
11:41 | இது இந்திய அரசின் ICT, MHRD வழியாக National Mission on Education மூலம் ஆதரிக்கப்படுகிறது. |
11:46 | மேற்கொண்டு தகவல்களுக்கு தொடர்பு கொள்க, http://spoken-tutorial.org/NMEICT-Intro |
12:00 | இந்த tutorial க்கு தமிழில் மொழியாக்கம் கடலூர் திவா. குரல் கொடுத்து பதிவு செய்தது...... கலந்து கொண்டமைக்கு நன்றி. |