Jmol-Application/C2/Script-Console-and-Script-Commands/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 17:24, 12 November 2014 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:01 Jmol அப்ளிகேஷனில் Script console மற்றும் script commandகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:08 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
00:11 * script commandகள்
00:13 * எவ்வாறு script console விண்டோவை பயன்படுத்துதல்
00:16 * script commandகளை பயன்படுத்தி மாதிரியின் display ஐ மாற்றுதல்
00:21 * Panel ல் உரை வரிகளை காட்டுதல்.
00:24 இந்த டுடோரியலைத் தொடர உங்களுக்கு
00:26 * Jmol அப்ளிகேஷனில் மூலக்கூறு மாதிரிகளை உருவாக்கவும் திருத்தவும் தெரிந்திருக்க வேண்டும்.
00:32 இல்லையெனில் அதற்கான டுடோரியல்களை எங்கள் வலைதளத்தில் காணவும்.
00:37 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:
00:39 உபுண்டு இயங்குதளம் பதிப்பு. 12.04
00:44 * Jmol பதிப்பு 12.2.2
00:47 * Java பதிப்பு 7 .
00:51 Jmol panel ல் display ஐ பின்வருவனவற்றை பயன்படுத்தி மாற்றலாம்
00:55 * Menu bar ன் தேர்வுகள்
00:57 * Pop-up-menu ன் தேர்வுகள் அல்லது
01:00 * script console ல் Scripting commandகள் .
01:04 menu bar மற்றும் Pop-up-menu ஐ பயன்படுத்தி display ஐ மாற்றுவதை முன் டுடோரியல்களில் கற்றோம்.
01:13 இந்த டுடோரியலில் script commandகளை பயன்படுத்த கற்போம்
01:18 commandகளின் ஒரு தொகுப்புScript command எனப்படும்.
01:22 panel ல் மாதிரியின் display ஐ Script commandகள் கட்டுப்படுத்துகிறது
01:27 RasMol program ஐ சார்ந்த ஒரு command language ஐ Jmol பயன்படுத்துகிறது.
01:32 அம்மாதிரியான commandகளை எழுதுவது scripting எனப்படும்
01:36 Jmol scripting language ன் ஆவணம் மற்றும் commandகளின் பட்டியல் இந்த இணைப்பில் கிடைக்கும்.

http://chemapps.stolaf.edu/jmol/docs/

01:44 இப்போது script commandகளை பயன்படுத்துவதை காண்போம்:
01:47 Script commandகள்Script console” விண்டோவில் டைப் செய்யப்படுகின்றன.
01:53 Script console என்பது Jmol ன் command line interface ஆகும்.
01:58 இது menu bar ல், File க்கு கீழே Console தேர்வில் உள்ளது.
02:03 இது திரையில் ப்ரோப்பேன் மாதிரியைக் கொண்ட Jmol அப்ளிகேஷன் விண்டோ.
02:08 இப்போது display ஐ மாற்ற Script console ஐ பயன்படுத்த கற்போம்.
02:12 Script console விண்டோவை திறக்க, menu bar ல் File menu மீது க்ளிக் செய்க.
02:19 கீழிறங்கு பட்டியலில் கீழே வந்து Console மீது க்ளிக் செய்க
02:24 திரையில் Jmol script console விண்டோ திறக்கிறது.
02:29 Script console விண்டோ commandகளை டைப் செய்ய ஒரு உரை பகுதியைக் கொண்டுள்ளது.
02:34 விண்டோவின் அடியில் Script editor விண்டோவை திறக்க ஒரு பட்டன் உள்ளது.
02:40 மற்ற பட்டன்களாக, Variables, Clear, History மற்றும் State ஆகியவையும் இந்த விண்டோவில் உள்ளன.
02:49 கிடைக்கும் script commandகளின் பட்டியலை காட்டும் பக்கத்தை திறக்க Help பட்டன் மீது க்ளிக் செய்க
02:57 இந்த விண்டோவை மூட OK பட்டன் மீது க்ளிக் செய்க.
03:01 இப்போது சில எளிய script commandகளை எழுத முயற்சிப்போம்.
03:05 இந்த commandகளை எழுதுவதை காண்போம்:
03:08 Script console விண்டோவில் $ prompt க்கு பின் command ஐ டைப் செய்வோம்.
03:13 Script commandகள் ஒரு command வார்த்தையுடன் ஆரம்பிக்கின்றன.
03:17 இடைவெளியில் பிரிக்கப்பட்ட parameterகளின் ஒரு தொகுப்புடன் தொடர்கிறது.
03:22 வரிமுடிவு எழுத்து (end of line character) அல்லது semicolon உடன் முடிவடைகிறது.
03:27 command ஐ டைப் செய்வதை முடிக்கும் வரை அந்த command சிவப்பு நிறத்தில் தோன்றும்.
03:33 அந்த command ஐ செயற்படுத்த விசைப்பலகையில் Enterவிசையை அழுத்துக.
03:37 console ஐ பெரிதாக்கி காட்ட Kmag screen magnifier ஐ பயன்படுத்துகிறேன்.
03:44 உதாரணமாக, ப்ரோப்பேனின் அனைத்து கார்பன்களின் நிறத்தையும் ஆரஞ்சாக மாற்ற; Script Console விண்டோவில் கர்சரை வைக்கவும்.
03:53 dollar prompt ல் டைப் செய்க select carbon semicolon color atoms orange
04:05 விசைப்பலகையில் Enter விசையை அழுத்துக.
04:08 panel ல் உள்ள ப்ரோப்பேன் மாதிரி, இப்போது அனைத்து கார்பன்களையும் ஆரஞ்ச் நிறத்தில் கொண்டுள்ளது.
04:14 இப்போது அனைத்து பிணைப்புகளையும் நீல நிறத்தில மாற்ற
04:18 dollar prompt, ல் டைப் செய்க
04:20 select all bonds semicolon color bonds blue
04:26 Enter ஐ அழுத்துக
04:29 ப்ரோப்பேன் மாதிரியின் அனைத்து பிணைப்புகளும் இப்போது நீல நிறத்தில் இருப்பதை கவனிக்கவும்.
04:35 அடுத்து, பிணைப்புகளின் அளவுகளை மாற்றலாம்.
04:39 dollar prompt ல் டைப் செய்க wireframe 0.05
04:45 angstrom களில் பிணைப்புகளின் ஆரத்தை குறிப்பிட தசம எண் பயன்படுகிறது. Enter ஐ அழுத்துக
04:53 ப்ரோப்பேன் மாதிரியில் பிணைப்புகளின் அளவில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கவனிக்கவும்.
04:58 அதேபோல, பிணைப்புகளின் அளவை அதிகரிக்க, prompt ல் டைப் செய்க wireframe 0.1
05:07 மீண்டும் பிணைப்புகளின் அளவில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கவனிக்கவும்.
05:12 அணுக்களின் அளவை மாற்ற, command spacefill ஐ தொடர்ந்து ஒரு தசம எண்ணை பயன்படுத்துவோம்.
05:20 dollar prompt ல் டைப் செய்க spacefill 0.2
05:26 angstrom களில் தசம எண் அணுவின் ஆரத்தை குறிப்பிடுகிறது
05:30 Enter ஐ அழுத்துக
05:33 ப்ரோப்பேன் மூலக்கூறில் அணுக்களின் அளவு குறைந்திருப்பதைக் கவனிக்கவும்.
05:39 அதேபோல, அணுக்களின் அளவை அதிகரிக்க டைப் செய்க:
05:43 spacefill 0.5
05:46 Enter ஐ அழுத்துக.
05:48 அணுக்களின் அளவில் மாற்றத்தை காணலாம்.
05:51 மாறாக, cpk ஐ தொடர்ந்து சதவிகிதம் அல்லது தசம எண்ணை கொண்ட command ஐ யும் பயன்படுத்தலாம்.
05:59 சதவிகிதமானது அணுவின் vanderwaals ஆரத்தைக் குறிக்கிறது.
06:04 உதாரணமாக, டைப் செய்க cpk 20% பின் Enter ஐ அழுத்துக.
06:11 அணுக்களின் அளவில் மாற்றத்தை கவனிக்கவும்.
06:15 Jmol panel ல் உரையின் வரிகளை காட்ட commandகளையும் எழுத முடியும்
06:22 'set echo' உடன் உரை வரிக்கான command ஆரம்பிக்கிறது
06:27 இதை தொடர்ந்து திரையில் உரையின் இடம் உள்ளது.
06:31 உதாரணமாக, panel ன் மேலே மையத்தில் மூலக்கூறின் பெயரை 'Propane' என காட்டுவோம்.
06:39 எனவே டைப் செய்க set echo top center semicolon echo Propane

பின் Enter ஐ அழுத்துக.

06:48 panel ன் மேலே மையத்தில் 'Propane' என்ற உரை காட்டப்படுவதை காணலாம்
06:54 panel ல் மற்ற உரை வரிகளையும் காட்டமுடியும்
06:58 உதாரணமாக, panel ன் கீழே இடது மூலையில் சில உரைகள் எனக்கு வேண்டும்
07:04 dollar prompt ல்
07:06 டைப் செய்க set echo bottom left semicolon echo This is a model of Propane
07:15 Enter ஐ அழுத்துக
07:17 panel ன் கீழ் இடது மூலையில் உரை வரியை காணலாம்.
07:22 காட்டப்படும் உரையின் நிறம், அளவு மற்றும் font ஐயும் மாற்ற முடியும்.
07:29 உதாரணமாக, எனக்கு இந்த உரை Arial Italic font ல் வேண்டும்.
07:34 dollar prompt ல் டைப் செய்க font echo 20 Arial italic
07:42 Enter ஐ அழுத்துக
07:43 இது உரையை 'Arial Italic' font க்கு மாற்றும்.
07:48 உரையின் நிறத்தை மாற்ற, color echo ஐ தொடர்ந்து நிறத்தின் பெயரை பயன்படுத்துவோம்.
07:55 எனவே டைப் செய்க color echo yellow பின் Enter ஐ அழுத்துக
08:01 font நிறத்தில் மாற்றத்தை கவனிக்கவும்.
08:05 அதேபோல, மேலும் பல commandகளை ஆராய்ந்து மாற்றங்களை கவனிக்கவும்.
08:11 சுருங்கசொல்ல:
08:13 இந்த டுடோரியலில் நாம் கற்றது:
08:15 * Script Commandகள் மற்றும்
08:17 * Script Console
08:18 மேலும் கற்றது
08:19 * script commandகளை பயன்படுத்தி மாதிரியின் காட்சி பண்புகளை மாற்றுதல்
08:24 * panel ல் உரை வரிகளை காட்டுதல்.
08:28 பயிற்சியாக
08:30 3-மெத்தில்-பென்டேன் (pentane) மாதிரியை உருவாக்குக.
08:33 பின்வருவனவற்றை செய்ய script commandகளை பயன்படுத்துக:
08:36 * அனைத்து ஹைட்ரஜன்களின் நிறத்தையும் நீலமாக மாற்றுக
08:40 அனைத்து பிணைப்புகளின் நிறத்தையும் சிவப்பாக மாற்றுக
08:43 மேலும் மூலக்கூறை spin க்கு அமைக்கவும்.
08:46 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial
08:49 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
08:52 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
08:57 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
09:02 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
09:06 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
09:13 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
09:17 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09:24 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro
09:30 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst