Python/C3/Manipulating-lists/Tamil
From Script | Spoken-Tutorial
Timing | Narration |
---|---|
0:00 | 'Manipulating Lists' குறித்த tutorial க்கு நல்வரவு! |
0:06 | இந்த டுடோரியலின் முடிவில் செய்ய முடிவது
|
0:18 | இந்த tutorial ஐ ஆரம்பிக்கும் முன், "Getting started with Lists" டுடோரியலை முடித்திருக்க பரிந்துரைக்கிறோம். |
0:25 | terminal இல் ipython ஐ துவக்குவோம் |
0:28 | type செய்க: ipython பின் என்டர் செய்க. |
0:35 | நாம் Python இல் list கள் பற்றி ஏற்கெனெவே கற்றோம்; எப்படி individual element களை list இல் அணுகலாம்; listகள் மீது இயக்கக்கூடிய சில functionகள்... max, min, sum, len போன்றவை. |
0:49 | இப்போது List கள் மீது செய்யக்கூடிய சில அடிப்படை operation களை பார்க்கலாம். |
0:54 | individual element களை list இல் அணுகுவதை அறிவோம். |
0:57 | முழு list இன் ஒரு பகுதியையோ அல்லது list இன் ஒரு slice என நாம் அழைப்பதை மட்டுமே பெற என்ன செய்வது? |
1:07 | Python list களில் slicing செய்வதை ஆதரிக்கிறது. |
1:11 | ஒரு list வைத்துள்ளோம். primes is equal to within brackets 2,3,5,7,11,13,17,19,23,29. |
1:33 | enter செய்க; |
1:35 | பத்துக்கு மேல் இருபதுக்குள் உள்ள எல்லா primes களையும் மேற்படி list இலிருந்து பெற சொல்வது: primes[4:8] |
1:51 | index 4 குறிப்பிடும் element இல் துவங்கி index 8 குறிப்பிடும் element வரை (8 வது element ஐ சேர்க்காமல்) list இல் உள்ள எல்லா element களையும் பட்டியலிடுகிறது. |
2:05 | நாம் 11 இலிருந்து 19 வரையான slice ஐ பெற்றோம். |
2:09 | Python இல் ...ஒரு range of elements ஐ ... specify செய்யும் போது.... start index சேர்க்கப்படும் ஆனால் ….end index சேர்க்கப்படாது.... என்பதை நினைவில் வைக்கவும். |
2:19 | மேற்படி உதாரணத்தில் 11 என்பது துவக்க index ஆன 4 இன் element; ஆகவே சேர்க்கப்பட்டது. ஆனால் கடைசி index ஆன 8 இன் element 23 சேர்க்கப்படவில்லை. |
2:30 | video வை நிறுத்தி பயிற்சியை முடித்த பின் தொடரவும். |
2;36 | list primes இலிருந்து 10 க்கு கீழுள்ள prime களை பெறவும். |
2:44 | தீர்வுக்கு டெர்மினலுக்கு போகலாம். |
2:46 | type செய்க: primes within brackets 0 colon 4 பின் என்டர் செய்க. |
2:57 | அது 10 க்கு கீழுள்ள prime களை தருகிறது. |
3:00 | பொதுவாகச் சொல்ல, list "p" இலிருந்து ஒரு slice ஐ index "start" முதல் index "end" வரை, ஆனால் "end" தவிர்த்து syntax p[start:stop] ஆல் பெறலாம். |
3:18 | default ஆக slice start முதல் stop வரை உள்ள - start உட்பட.... ஆனால் stop தவிர்த்து உள்ள … எல்லா element களையும் தரும். |
3:25 | start முதல் stop வரை உள்ள எல்லா element களையும் steps of one இல் பெறுகிறோம். |
3:31 | Python slice களை பெற steps ஐ specify செய்யும் functionality ஐயும் தருகிறது. |
3:37 | num is equal to within brackets 0,1,2,3,4,5,6,7,8,9,10,11,12,13 என இருப்பின்... |
3:59 | list num இல் 10 க்கு குறைவான எல்லா ஒற்றைப்படை எண்களும் வேன்டும் என நினைத்தால் ... நாம் index 1 element இல் துவங்கி.... index 10 வரை... steps of 2 இல் போக வேண்டும். |
4:11 | type செய்க: num within square brackets 1 is to 10 is to 2 tஅதாவது, 1 colon 10 colon 2 |
4:25 | step ... specify செய்யாத போது ... 1 என கொள்ளப்படுகிறது. |
4:29 | அதே போல, start மற்றும் stop indices க்கு default values உள்ளன. |
4:34 | list இன் start index ஐ specify செய்யாவிட்டால் அது லிஸ்ட்டின் முதல் element ஆக கொள்ளப்படுகிறது. |
4:46 | type செய்க: num within square brackets colon 10. |
4:52 | இது தருவது ...list இன் துவக்கம் முதல்... பத்தாவது element வரையான ….எல்லா element களும். ஆனால் பத்தாவது element நீங்கலாக. |
5:00 | அதே போல list இன் stop index ஐ specify செய்யாவிட்டால் அது லிஸ்ட்டின் கடைசி element ஆக கொள்ளப்படுகிறது. |
5:10 | type செய்க: num within square brackets colon 10. |
5:21 | இது தருவது ... "num" list இன் பத்தாவது element முதல் …. கடைசி வரையான …. எல்லா element களும், கடைசி element உட்பட. |
5:30 | "num" list இன் இரட்டைப்படை எண்கள் அனைத்தும் பெற, செய்வது num within square brackets colon colon two |
5:43 | video வை நிறுத்தி பயிற்சியை முடித்த பின் தொடரவும். |
5:48 | list num இலிருந்து மூன்றின் மடங்கான எல்லா எண்களையும் பெறுக. |
5:56 | solution ... screen இல் உள்ளது |
5:59 | num colon colon 3 list இலிருந்து... மூன்றின் மடங்கான எல்லா எண்களையும் தருகிறது. ஏனெனில் பூஜ்யத்தில் இருந்து துவங்கி... ஒவ்வொரு மூன்றாம் எண்ணும்... 3 ஆல் வகுபடும். |
6:14 | listகளில் செய்யக்கூடிய இன்னொரு basic operation இரண்டு அல்லது அதிக list களை concatenation செய்வது. |
6:22 | இரண்டு list களை "plus" operator ஐ பயன்படுத்தி ஒன்று சேர்க்கலாம். |
6:26 | a is equal to within brackets 1,2,3,4 comma b is equal to within brackets 4,5,6,7 எனில்.. |
6:42 | பின் type செய்க: a plus b … பின் என்டர் செய்க. |
6:48 | இப்படி "plus" operator ஆல் லிஸ்ட்களை concatenate செய்யின் நமக்கு புதிய list கிடைக்கிறது. |
6:52 | இந்த புதிய list ஐ புதிய variable இல் store செய்யலாம், உதாரணமாக c. |
6:58 | ஆகவே c is equal to a plus b. |
7:01 | பின் type செய்க: c. |
7:06 | முக்கியமாக கவனிக்க வேண்டியது ... "plus" operator எப்போதும் ஒரு புதிய list ஐ திருப்புகிறது. அது concatenate செய்யும் லிஸ்ட்களை பாதிப்பதே இல்லை. |
7:13 | ஒரு list என்பது collection of data என தெரியும். |
7:16 | எப்போது ஒரு collection இருக்கிறதோ அப்போது அதை sort செய்ய வேண்டிய தருணங்கள் இருக்கும். |
7:22 | Lists ஆதரிப்பது sort method. இது list ஐ sort செய்கிறது. |
7:28 | type செய்க: a is equal to 5,1,6,7,7,10. |
7:41 | பின் type செய்க: a dot sort மற்றும் closing brackets. |
7:46 | இப்போது a list இன் contents ஐ அறிய... |
7:50 | type செய்க: a பின் என்டர் செய்க. |
7:52 | As the sort method ஆனது a list இன் element sort செய்கிறது. நம்மிடம் இருந்த original list a மேலெழுதப்படுகிறது அல்லது மாற்றப்படுகிறது. |
8:00 | பின்னர் original list ஐ பெற வழியே இல்லை. |
8:03 | இதை தவிர்க்க ஒரு வழி … லிஸ்டை ...இன்னொரு வேரியபிலில் copy செய்துவிட்டு... sort method ஐ... list மீது இயக்கலாம். |
8:10 | எனினும்... Python... இன்னொரு built-in function ஐ தருகிறது. அது sorted என்பது. இது argument ஆக தரப்பட்ட... list ஐ sort செய்த பின் … ஒரு புதிய sorted list ஐ திருப்புகிறது. |
8:20 | இந்த sorted list ஐ இன்னொரு list variable இல் சேமித்துக்கொள்ளலாம். |
8:26 | type செய்க: a is equal to 5,1 6,7,7,10 பின் என்டர் செய்க |
8:40 | type செய்க: sorted within brackets a... Enter |
8:48 | இப்போது, இந்த sorted list ஐ இன்னொரு list variable இல் சேமித்துக்கொள்ளலாம் என்றோம். |
8:52 | type செய்க: sa is equal to sorted within brackets a. |
9:00 | மேலும் Python reverse method ஐ தருகிறது. இது list ஐ அதன் இடத்தில் reverse செய்கிறது. |
9:04 | type செய்க: a is equal to within square brackets 1,2,3,4,5 |
9:10 | a dot reverse within closing brackets. |
9:17 | reverse method list "a" ஐ reverse செய்கிறது. மேலும் அதை அதன் இடத்திலேயே அதாவது "a" யிலேயே வைக்கிறது. list "a" இல் என்ன இருக்கிறது என காண்போம். |
9:27 | type செய்க: a பின் என்டர் செய்க. |
9:30 | ஆனால், மீண்டும் original list … காணாமல் போய்விட்டது. |
9:33 | list ஐ reverse செய்ய, நாம் striding with negative indexing ஐயும் பயன்படுத்தலாம். |
9:38 | type செய்க: a within square brackets colon colon -1. |
9:45 | இந்த புதிய reverse செய்த list ஐ இன்னொரு list variable இல் store செய்யலாம். |
9:49 | video வை நிறுத்தி பயிற்சியை முடித்த பின் தொடரவும். |
9:54 | ஒரு தேர்வில் மாணவர்களின் marks list கொடுக்கப்பட்டது. கீழிறங்கும் வரிசையில் mark களை குறித்து ஒரு லிஸ்டை பெறுக. |
10:01 | marks are 99, 67, 47, 100, 50, 75, 62. |
10:09 | இப்போது terminal க்கு போகலாம். |
10:18 | type செய்க: marks is equal to within brackets 99,67,47,100,50,75,62. |
10:36 | இப்போது, in terminal type செய்க: sorted within brackets marks பின் in square brackets colon colon minus 1. |
10:55 | அல்லது, இன்னொரு method ஐ பயன்படுத்தலாம். |
10:57 | sorted within brackets marks comma reverse is equal to True. |
11:09 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
11:10 | இந்த டுடோரியலில் கற்றவை, |
11:14 | slicing மற்றும் striding ஐ பயன்படுத்தி list களின் பகுதிகளை பெறுவது. |
11:17 | இரண்டு listகளை plus operator ஆல் Concatenate செய்வது |
11:20 | 3. sort method ஐ பயன்படுத்தி list களை Sort செய்வது. |
11:23 | 4.reverse method ஐ பயன்படுத்தி list களை reverse செய்வது |
11:26 | தீர்வு காண self assessment கேள்விகள் |
11:30 | 1. கொடுக்கப்பட்ட primes list, primes is equal to within brackets 1, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, எப்படி கடைசி 4 prime களை பெறுவீர்கள்? |
11:41 | 2. length தெரியாத ஒரு list p கொடுக்கப்பட்டது. முதல் 3 (அல்லது குறைவாக இருப்பின் எல்லாம் ) character களை பெறுக. |
11:53 | 3.reversed function ஒரு list ஐ அதனிடத்திலேயே reverse செய்கிறது. உண்மையா பொய்யா? |
11:58 | answer களை பார்க்கலாம். |
12:03 | அவை... |
12:05 | 1. கொடுத்த list இன் கடைசி 4 prime களை பெற... |
12:09 | primes within brackets -4 colon. |
12:14 | 2.... முதல் 3 character களை பெற |
12:19 | p within square brackets colon 3. |
12:24 | கடைசி கேள்விக்கு பதில் - பொய். |
12:28 | function reverse ஒரு list ஐ அதனிடத்திலேயே reverse செய்கிறது |
12:32 | tutorialஐ ரசித்திருப்பீர்கள் மற்றும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். |
12:35 | நன்றி! |