GChemPaint/C3/Features-of-GChem3D/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | வணக்கம். ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) ல் GChem3D ன் அம்சங்கள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்க போவது, |
00:10 | * Menu bar |
00:11 | * File வகை formatகள் |
00:13 | * பல்வேறு மாதிரி வகைகள் மற்றும் |
00:15 | பின்புல நிறத்தை எவ்வாறு மாற்றுவது. |
00:18 | இங்கே நான் பயன்படுத்துவது உபுண்டு லினக்ஸ் இயங்குதளம் பதிப்பு 12.04. |
00:24 | ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) பதிப்பு 0.12.10. |
00:29 | GChem3D பதிப்பு 0.12.10 |
00:34 | இந்த டுடோரியலை தொடர உங்களுக்கு ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) பற்றி தெரிந்திருக்க வேண்டும் |
00:38 | இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும். |
00:44 | ஒரு புதிய ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) விண்டோவை திறந்துவைத்துள்ளேன். |
00:47 | Templates கீழிறங்கு பட்டியலைப் பயன்படுத்தி, காட்சி பகுதியில் Adenosine அமைப்பை ஏற்றுகிறேன். |
00:53 | file ஐ சேமிக்க tool bar ல் Save ஐகான் மீது க்ளிக் செய்க. |
00:58 | Save as dialog box திறக்கிறது. |
01:02 | GChem3D ல் இந்த file ஐ காண, இது
.mol, .mdl மற்றும் .pdb போன்ற formatகளில் சேமிக்கப்பட வேண்டும் |
01:11 | Adenosine.pdb என file பெயரை டைப் செய்க |
01:15 | Desktop ல் file ஐ சேமிக்க Desktop ல் க்ளிக் செய்க. |
01:18 | Save பட்டன் மீது க்ளிக் செய்க. |
01:21 | GChemPaint விண்டோவை மூடுகிறேன். |
01:25 | இப்போது GChem3D அப்ளிகேஷன் பற்றி கற்போம். |
01:29 | சினாப்டிக் பேக்கேஜ் மேனஜரை (Synaptic Package Manager) பயன்படுத்தி ஜிகெம்பெய்ண்டின் (GChemPaint) ஒரு பயன்பாட்டு மென்பொருளாக GChem3D ஐ நிறுவலாம். |
01:38 | சினாப்டிக் பேக்கேஜ் மேனஜரை (Synaptic Package Manager) க்கு செல்க. |
01:40 | Quick filter box ல் டைப் செய்க gchempaint. |
01:44 | GChemPaint பயன்பாடுகளின் மொத்த நிறுவலுக்கு gcu-plugin, libgcu-dbg மற்றும் gcu-bin ஐ நிறுவுக. |
01:55 | அனைத்து fileகளையும் நான் ஏற்கனவே நிறுவியுள்ளேன் |
01:59 | GChem3d என்பது ஒரு முப்பரிமாண மூலக்கூறு அமைப்பு காட்சிபடுத்தி (3 dimensional molecular structure visualizer). |
02:04 | இது ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) ன் ஒரு பயன்பாட்டு அம்சமாகும். |
02:07 | ஜிகெம்பெய்ண்டில் வரையப்பட்ட அமைப்புகளை GChem3D ல் காணலாம் |
02:12 | GChem3D ஐ திறக்க Dash Home ல் க்ளிக் செய்க. |
02:15 | தோன்றும் search bar ல் டைப் செய்க gchem3d. |
02:20 | Molecules viewer ஐகான் மீது க்ளிக் செய்க. |
02:24 | GChem3d Viewer விண்டோ Menubar மற்றும் காட்சி பகுதியை கொண்டுள்ளது. |
02:30 | GChem3D ல் வேலைசெய்வதற்கு தேவையான அனைத்து கட்டளைகளையும் Menubar கொண்டுள்ளது. |
02:36 | திறந்துள்ள file ன் உள்ளடக்கத்தை காட்சி பகுதி காட்டுகிறது. |
02:40 | ஒரு file ஐ திறக்க, File ஐ தேர்ந்தெடுத்து Open மீது க்ளிக் செய்க. |
02:46 | Open dialog box திறக்கிறது. |
02:49 | நீங்கள் திறக்க நினைக்கும் file ஐ தேர்ந்தெடுக்கவும். |
02:52 | Desktop ல் உள்ள Adenosine.pdb ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
02:57 | இப்போது Open பட்டன் மீது க்ளிக் செய்க. |
02:59 | காட்சி பகுதியில் file காட்டப்படுகிறது. |
03:02 | காட்சியை ஒரு படமாக சேமிக்க கற்போம். |
03:05 | File ல் க்ளிக் செய்து Save As Image க்கு செல்க. |
03:10 | Save as image dialog box திறக்கிறது. |
03:12 | அடியில் Width மற்றும் Height parameterகளை காண்க. |
03:17 | படத்தின் முன்னிருப்பு அளவு Width 300 pixelகள் மற்றும் Height 300 pixelகள். |
03:24 | மேல் கீழ் அம்புகளை பயன்படுத்தி மதிப்புகளை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம். |
03:29 | இப்போது File type தேர்வு. |
03:31 | GChem3D பல்வேறு file formatகளை ஆதரிக்கிறது. |
03:35 | கீழிறங்கு பட்டியலில் VRML, PDF, PNG போன்ற பல File வகைகள் உள்ளன. |
03:45 | எந்த file வகையும் குறிப்பிடவில்லை எனில், file பெயரில் இருந்து file வகையை நிர்ணயிக்க GChem3d முயலுகிறது. |
03:52 | அது வெற்றியடையவில்லை எனில், முன்னிருப்பாக File வகை VRML பயன்படுத்தப்படும். |
03:58 | அமைப்பை VRML file format ல் சேமிப்போம். |
04:03 | VRML document ஐ தேர்ந்தெடுக்கவும். |
04:07 | file பெயரை Adenosine என டைப் செய்க. |
04:11 | Desktop ல் file ஐ சேமிக்க Desktop மீது க்ளிக் செய்க. |
04:14 | Save பட்டன் மீது க்ளிக் செய்க. |
04:17 | இப்போது VRML File வகை என்றால் என்ன என கற்போம். |
04:22 | VRML என்பது .wrl நீட்சியுடன் உள்ள ஒரு text file format. |
04:28 | 3D பலகோண பண்புகளான (polygon properties) 'உச்சிகள்(vertices)', 'விளிம்புகள் (edges)', 'மேற்பரப்பு நிறம் (surface color)' போன்றவற்றை குறிப்பிடலாம். |
04:35 | gzip ஆக compress ஆகும் எளிய உரையில் VRML fileகள் உள்ளன. |
04:40 | பொருட்கள் (objects) மற்றும் காட்சிகளை (scenes) 3D மாதிரி ப்ரோகிராம்கள் (modelling programs) இதில் சேமிக்கின்றன. |
04:45 | சேமிக்கப்பட்ட file ஐ திறப்போம். |
04:48 | Adenosine.wrl file மீது ரைட்-க்ளிக் செய்க. Open with Text Editor தேர்வை தேர்வு செய்க. |
04:55 | அந்த அமைப்பின் அனைத்து தகவல்களையும் Text editor காட்டுகிறது. |
05:01 | இப்போது Page Setup க்கு செல்வோம். |
05:04 | GChem3d அச்சடிக்கும்போது 300 dpi பிரிதிறனை (resolution) பயன்படுத்துகிறது. |
05:09 | Page Setup properties ஆனது ஜிகெம்பெய்ண்ட் ல் உள்ளதுபோன்றதே. |
05:14 | அதுபற்றி ஏற்கனவே இந்த தொடரில் ஜிகெம்பெய்ண்ட் டுடோரியல்களில் பார்த்துள்ளோம் |
05:19 | இந்த விண்டோவை மூடுகிறேன். |
05:21 | இப்போது View menu க்கு செல்வோம். |
05:25 | View menu ஐ தேர்ந்தெடுக்கவும் |
05:27 | நான்கு மாதிரி வகைகளைப் பயன்படுத்தி GChem3D ஒரு மூலக்கூறைக் காட்டுகிறது அவை: |
05:32 | * Balls and sticks * Space filling |
05:35 | * Cylinders மற்றும் * Wireframe. |
05:39 | Balls and sticks ஆனது முன்னிருப்பு மாதிரி. |
05:42 | இந்த மாதிரியை பயன்படுத்தி பல பிணைப்பு மற்றும் நடப்பு பிணைப்பு நிலைகளை காணலாம். |
05:48 | Space Filling மீது க்ளிக் செய்கிறேன். வித்தியாசத்தைக் காண்க. |
05:53 | Space Filling மாதிரி மூலக்கூறுகளை சிறிய வடிவில் காட்டுகிறது. |
05:58 | Cylinders மாதிரி அமைப்பை உருளைவடிவ குழாய்களின் வடிவில் காட்டுகிறது. |
06:03 | Wireframe மாதிரி வரிவடிவ அமைப்பை காட்டுகிறது. |
06:08 | Balls and sticks க்க திரும்ப வருவோம். |
06:11 | இப்போது Background color க்கு வருவோம். |
06:14 | முன்னிருப்பு பின்புல நிறம் “கருப்பு”. |
06:17 | View menuஐ தேர்ந்தெடுத்து, Background color க்கு செல்க. |
06:21 | ஒரு துணைmenu திறக்கிறது. |
06:23 | துணைmenu ன் கடைசியில் Custom color ஐ தேர்ந்தெடுக்கவும். |
06:26 | Background color' விண்டோ திறக்கிறது. |
06:30 | நமக்கு வேண்டிய நிறத்தை தேர்ந்தெடுக்க பல்வேறு புலங்களை இந்த விண்டோ கொண்டுள்ளது. |
06:35 | Hue ஐ பயன்படுத்தி, பின்புல நிறத்தை மாற்றலாம். |
06:39 | மேல்கீழ் அம்புகளை க்ளிக் செய்து. மதிப்புகளின் மாற்றத்தையும் நிறவட்டத்தின் இயக்கத்தையும் கவனிக்க. |
06:45 | Saturation ஐ பயன்படுத்தி, நிறத்தின் செறிவை மாற்றலாம். |
06:51 | Value ஐ பயன்படுத்தி, அதே நிறத்தின் பல்வேறு சாயல்களை பெற RGB கலவையை மாற்றலாம். |
06:59 | இங்கே eyedropper ஐகான் உடன் முன்பார்வை பெட்டி (Preview box) உள்ளது. |
07:04 | eyedropperஐகான் மீது க்ளிக் செய்க. |
07:07 | விருப்பமான நிறத்தை தேர்ந்தெடுக்க நிறவளையத்தில் எங்கேனும் க்ளிக் செய்க. |
07:11 | Ok பட்டன் மீது க்ளிக் செய்க. திரையில் பின்புல நிறம் மாறுகிறது. |
07:18 | நாம் கற்றதை சுருங்க காண்போம். |
07:20 | இந்த டுடோரியலில் நாம் கற்றது |
07:23 | பல்வேறு Menuகள் |
07:24 | File வகை formatகள் |
07:26 | மாதிரி வகைகள் மற்றும் பின்புல நிறத்தை எவ்வாறு மாற்றுவது. |
07:30 | இங்கே உங்களுக்கான பயிற்சி |
07:33 | 1. ஜிகெம்பெய்ண்ட் ல் இருந்து ஒரு சக்கரைடை (Saccharide) ஏற்றி file ஐ .mdl format ல் சேமிக்கவும். |
07:39 | 2. Molecules viewer ல் அமைப்பை திறக்கவும். |
07:42 | 3. படத்தை PNG மற்றும் PDF file வகைகளில் சேமிக்கவும். |
07:46 | 4. பல்வேறு பின்புல நிறங்களை முயற்சிக்கவும். |
07:49 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
07:53 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
07:56 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
08:01 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
08:06 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
08:10 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
08:17 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
08:22 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
08:29 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
08:35 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |