GChemPaint/C3/Aromatic-Molecular-Structures/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 17:13, 17 September 2014 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration


00:01 வணக்கம்.
00:02 GChemPaint ல் வாசனை மூலக்கூறு அமைப்புகள் (Aromatic Molecular Structures) குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது
00:10 சைக்ளோஹெக்சேன் (Cyclohexane)சைக்ளோஹெக்சீன் (Cyclohexene) ஆக மாற்றுதல்
00:13 சைக்ளோஹெக்சீன் (Cyclohexene)பென்சீன் (Benzene) ஆக மாற்றுதல்
00:16 பென்சீன் வளையத்தின் ஹைட்ரஜனுக்கு பதிலாக மற்ற அணுக்களை வைத்தல்.
00:20 பென்சீன் வளையத்தின் ஹைட்ரஜனுக்கு பதிலாக அணுக்களின் குழுவை வைத்தல்
00:24 இரு மூலக்கூறுகளை ஒன்றுசேர்க்க
00:26 இங்கே நான் பயன்படுத்துவது,
00:28 உபுண்டு லினக்ஸ் இயங்குதளம் பதிப்பு 12.04
00:32 GChemPaint பதிப்பு 0.12.10.
00:37 இந்த டுடோரியலை பின்தொடர, உங்களுக்கு,
00:41 GChemPaint வேதியியல் அமைப்பு திருத்தி பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
00:44 இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும்.
00:50 ஒரு புதிய GChemPaint application ஐ திறந்துள்ளேன்.
00:54 முதலில் காட்சி பகுதியில் ஆறு உறுப்பினர்கள் கொண்ட சுழற்சியை சேர்ப்போம்.
00:59 Add a six membered cycle tool மீது க்ளிக் செய்க.
01:02 காட்சி பகுதியில் க்ளிக் செய்க.
01:04 Add a bond or change the multiplicity of the existing one tool மீது க்ளிக் செய்க.
01:10 சுழற்சியின் ஒவ்வொரு மூலையிலும் இரு பிணைப்புகளை சேர்க்கவும்.
01:14 இரு பிணைப்புகளும் ஒன்றையொன்று தொடாதவாறு பிணைப்புகளை வைக்கவும்.
01:19 அவ்வாறு செய்ய, பிணைப்புகளின் மீது க்ளிக் செய்து சரியான இடத்திற்கு நகர்த்தவும்.


01:24 சுழற்சியின் அனைதது மூலைகளிலும் கார்பன் அணுக்களை காட்டுவோம்.
01:28 ஏதேனும் ஒரு மூலையில் ரைட் க்ளிக் செய்க.
01:31 ஒரு துணை menu தோன்றுகிறது.
01:33 Atom ஐ தேர்ந்தெடுத்து Display symbol மீது க்ளிக் செய்க.
01:36 அதேபோல, சுழற்சியின் அனைத்து மூலைகளிலும் கார்பன் அணுக்களை சேர்க்கவும்.
01:42 பிணைப்புகளுக்கு ஹைட்ரஜன் அணுக்களை சேர்க்க, விசைப்பலகையில் H ஐ அழுத்துக.
01:47 Add or modify an atom tool மீது க்ளிக் செய்க.
01:51 அனைத்து பிணைப்பு நிலைகளின் மீதும் க்ளிக் செய்க.
01:54 மீண்டும், ஹைட்ரஜன்கள் ஒன்றன்மேல் ஒன்று அமையவில்லை என்பதை காண்போம்.
01:59 பெறப்பட்ட அமைப்பு (C6H12) (Cyclohexane) சைக்ளோஹெக்சேன்.
02:04 இந்த அமைப்பை பிரதி எடுத்து ஒட்டுவோம்.
02:07 அமைப்பை தேர்ந்தெடுக்க CTRL+A ஐ அழுத்துக.
02:10 பிரதிஎடுக்க CTRL+C ஐ அழுத்தி.... அந்த அமைப்பை ஒட்ட CTRL+V ஐ அழுத்துக.
02:15 இரண்டாம் (Cyclohexane) சைக்ளோஹெக்சேன் அமைப்பை (Cyclohexene) சைக்ளோஹெக்சீன் ஆக மாற்றுவோம்.
02:19 Eraser tool மீது க்ளிக் செய்க.
02:22 அடுத்தடுத்த ஒவ்வொரு கார்பன் அணுக்களில் இருந்தும் ஒரு ஹைட்ரஜன் பிணைப்பை நீக்குக.
02:27 Add a bond or change the multiplicity of the existing one tool மீது க்ளிக் செய்க.
02:33 பின் நீக்கப்பட்ட ஹைட்ரஜன் பிணைப்புகளுக்கு இடையேயான பிணைப்பின் மீது க்ளிக் செய்க.
02:37 ஒரு இரட்டை பிணைப்பு உருவாக்கப்பட்டது.
02:40 பெறப்பட்ட அமைப்பு சைக்ளோஹெக்சீன் (Cyclohexene)(C6H10)
02:44 சைக்ளோஹெக்சீனை (Cyclohexene) சைக்ளோஹெக்சாடைன் (Cyclohexadiene) ஆக மாற்றி பின் பென்சீனாக (Benzene) மாற்றுக.
02:51 Current element கார்பனா என உறுதிசெய்க.
02:56 Eraser tool மீது க்ளிக் செய்க.
02:58 அடுத்தடுத்த ஒவ்வொரு கார்பன் அணுக்களில் இருந்தும் ஒரு ஹைட்ரஜன் பிணைப்பை நீக்குக.
03:03 Add a bond or change the multiplicity of the existing one tool மீது க்ளிக் செய்க.
03:09 பின் நீக்கப்பட்ட ஹைட்ரஜன் பிணைப்புகளுக்கிடையேயான பிணைப்பின் மீது க்ளிக் செய்க.
03:13 இரண்டாம் இரட்டை பிணைப்பு உருவாக்கப்பட்டது.
03:16 பெறப்பட்ட அமைப்பு சைக்ளோஹெக்சாடைன் (Cyclohexadiene)(C6H8).
03:22 அதேபோல மூன்றாம் இரட்டை பிணைப்பை உருவாக்க இந்த செயல்முறையை திரும்ப செய்வோம்.
03:28 பெறப்பட்ட அமைப்பு பென்சீன் (Benzene)(C6H6)
03:33 பயிற்சியாக.
03:35 சைக்ளோப்யூட்டேன் (Cyclobutane) அமைப்பை வரைந்து சைக்ளோப்யூடடைன் (Cyclobutadiene) ஆக மாற்றுக
03:39 சைக்ளோபென்டேன் (Cyclopentane) அமைப்பை வரைந்து சைக்ளோபென்டடைன் (Cyclopentadiene) ஆக மாற்றுக
03:45 பயிற்சியை செய்து முடித்தபின் அது இவ்வாறு இருக்க வேண்டும்.
03:49 பென்சீனில்(Benzene) இருந்து தருவிக்கப்படுபவை பற்றி கற்போம்.
03:53 பலவேறு வேதியியல் சேர்மங்களை தருவிக்க Benzene ல் ஹைட்ரஜன்களை (Hydrogens) செயல்பாட்டு குழுக்கள் (Functional groups) ஆல் மாற்ற முடியும்
03:59 ஹைட்ரஜனை மாற்றும் செயல்பாட்டு குழுக்களாவன
04:02 ப்ளூரோ (fluoro)(F),
04:03 மீத்தில் (methyl)(CH3),
04:04 நைட்ரோ (nitro)(NO2),
04:05 ஹைட்ராக்ஸி (hydroxy)(OH) மற்றும்
04:06 பல.
04:08 பென்சீன் (Benzene) அமைப்பை இருமுறை பிரதி எடுத்து காட்சிபகுதியில் ஒட்டுவோம்,
04:13 பென்சீன் (Benzene) அமைப்பை தேர்ந்தெடுக்க Select one or more objects tool மீது க்ளிக் செய்க.
04:18 பிரதி எடுக்க CTRL+C ஐ அழுத்தி அமைப்பை ஒட்ட இருமுறை CTRL+V ஐ அழுத்துக.
04:24 முதல் பென்சீன் (Benzene) அமைப்பின் ஹைட்ரஜன் (Hydrogen) க்கு பதிலாக ப்ளூரின் (Fluorine) அணுவை வைப்போம்.
04:30 விசைப்பலகையில் F ஐ அழுத்துக.
04:32 Add or modify an atom tool மீது க்ளிக் செய்க.
04:35 ஹைட்ரஜன் (Hydrogen) க்கு பதிலாக ப்ளூரின் (Fluorine) ஐ வைக்க அதன் மீது க்ளிக் செய்க.
04:40 பெறப்பட்ட அமைப்பு ப்ளூரோபென்சீன் (Fluorobenzene).
04:44 அடுத்து இரண்டாம் பென்சீனின் (Benzene) ஹைட்ரஜன் (Hydrogen) க்கு பதிலாக அணுக்களின் குழுவை வைப்போம்.
04:50 Add or modify a group of atoms tool மீது க்ளிக் செய்க.
04:54 ஏதேனும் ஒரு ஹைட்ரஜன் மீது க்ளிக் செய்க.
04:57 பச்சைப்பெட்டியில் சிமிட்டும் கர்சருடன் ஹைட்ரஜனை (Hydrogen) காண்க.
05:03 ஹைட்ரஜன் (Hydrogen) க்கு பதிலாக ஒருமெத்தில் (methyl) குழுவை வைப்போம்.
05:06 ஹைட்ரஜனை நீக்கி capital C H 3 ஐ டைப் செய்க
05:12 காட்சி பகுதியில் எங்கேனும் டைப் செய்க.
05:15 பெறப்பட்ட அமைப்பு மெத்தில் பென்சீன் (Methyl benzene).
05:19 மூன்றாம் பென்சீனின் (Benzene) ஹைட்ரஜன் (Hydrogen) க்கு பதிலாக ஒரு நைட்ரோ (nitro) குழவை வைப்போம்.
05:24 ஏதேனும் ஒரு ஹைட்ரஜன் மீது க்ளிக் செய்க.
05:27 ஹைட்ரஜனை நீக்கி capital N O 2 ஐ டைப் செய்க
05:32 பெறப்பட்ட அமைப்பு நைட்ரோபென்சீன் (Nitrobenzene).
05:36 பென்சீன் வளையத்தில் கார்பன் நிலைகளை காண்போம்.
05:40 பென்சீனில் ஆறு கார்பன் அணுக்களும் 1 முதல் 6 வரை எண்ணிடப்படுகிறது.
05:45 ஹைட்ரஜன் மாற்றப்படுவதற்கு முன் அனைத்து ஆறு நிலைகளும் சமமாக உள்ளன.
05:51 ஒரு செயல்பாட்டு குழுவால் ஹைட்ரஜன் மாற்றப்படும்போது அந்த வளையத்தின் எலக்ட்ரான் அடர்த்தி (Electron density) மாறுகிறது.
05:57 எலக்ட்ரானின் அடர்த்தியானது (Electron density) மாற்றப்படும் குழுவைப் பொருத்தது.
06:01 பென்சீனின் (Benzene) ஒற்றை மாற்று (mono-substituted) சேர்மம் மாற்றப்படக்கூடிய நிலைகளாவன:
06:06 * 1 மற்றும் 4- (Para) பேராவாக.
06:09 * 2 மற்றும் 6- (Ortho) ஆர்த்தோவாக.
06:12 * 3 மற்றும் 5- (Meta) மெடாவாக .
06:15 இப்போது மெத்தில்பென்சீன் (Methylbenzene) அமைப்பில் மற்றொரு மெத்தில் (methyl) குழுவை மாற்றி வைப்போம்.
06:20 Add or modify a group of atoms tool மீது க்ளிக் செய்க.
06:24 வளையத்தின் இரண்டாம் ஹைட்ரஜன் நிலை மீது க்ளிக் செய்க.
06:28 பச்சை பெட்டியில் உள்ள ஹைட்ரஜனை மெத்தில் (methyl) குழுவாக மாற்ற,
06:32 டைப் செய்க capital C H 3.
06:35 பெறப்பட்ட புதிய அமைப்பு ஆர்த்தோ-சைலீன் (ortho-Xylene).


06:39 நைட்ரோபென்சீனில் (Nitrobenzene) ஒரு கார்பாக்ஸி (Carboxy) குழுவை மாற்றி வைப்போம்.
06:44 வளையத்தில் நான்காம் ஹைட்ரஜன் நிலை மீது க்ளிக் செய்க.
06:48 பச்சை பெட்டியில் ஹைட்ரஜனை கார்பாக்ஸி (Carboxy) குழுவாக மாற்ற,
06:52 டைப் செய்க capital C O O H
06:57 பெறப்பட்ட புதிய அமைப்பு பேரா-நைட்ரோ பென்சாயில் அமிலம் (para-Nitrobenzoic acid).
07:02 இந்த செயல்முறையை மீளமைக்க CTRL+Z ஐ அழுத்துக.
07:05 நைட்ரோ பென்சீனின் (Nitrobenzene) மூன்றாம் ஹைட்ரஜன் நிலையில் நைட்ரோ குழுவை மாற்றியமைக்கவும்.
07:11 ஹைட்ரஜனை நீக்கி டைப் செய்க capital N O 2
07:17 பெறப்பட்ட புதிய அமைப்பு மெடா-டைநைட்ரோபென்சீன் (meta-Dinitrobenzene).
07:22 இங்கே உங்களுக்கான பயிற்சி.
07:24 ஏழு பென்சீன் அமைப்புகளை வரையவும்.
07:25 பின்வருமாறு ஒவ்வொன்றின் ஹைட்ரஜன்களையும் மாற்றியமைக்கவும்:
07:28 முதலாவது பென்சீனில் ப்ரோமோ (bromo).
07:30 இரண்டாவது பென்சீனில் ஐயோடோ (iodo).
07:32 மூன்றாவது பென்சீனில் ஹைட்ராக்ஸி (hydroxy).
07:34 நான்காவது பென்சீனில் அமினோ (amino).
07:36 ஐந்தாவது பென்சீனில் எத்தில் (ethyl).
07:39 மேலும்:
ஆறாவது  பென்சீனில் இரு ஹைட்ரஜன்களை  க்ளோரின் (Chlorine) அணுக்களாக மாற்றவும். 
07:44 ஏழாவது பென்சீனில் முதல் மற்றும் நான்காவது ஹைட்ரஜன் நிலைகளை கார்பாக்ஸி (Carboxy) குழுக்களாக மாற்றுக.
07:51 பயிற்சியை செய்து முடித்தபின் அது இவ்வாறு இருக்க வேண்டும்.
07:55 இப்போது இரு அமைப்புகளை ஒன்றுசேர்க்க கற்போம்.
07:57 ஒரு புது விண்டோவை திறப்போம்.
08:00 current element கார்பனா என உறுதிசெய்க.
08:04 Add a four membered cycle tool மீது க்ளிக் செய்க.
08:07 காட்சி பகுதியில் இருமுறை க்ளிக் செய்க.
08:10 Select one or more objects tool மீது க்ளிக் செய்க.
08:14 இரண்டாம் அமைப்பின் மீது க்ளிக் செய்க.
08:16 அதை இழுத்து முதலாவது அமைப்பின் அருகில் அவை ஒன்றையொன்று தொடுமாறு வைக்கவும்
08:23 அமைப்புகளை தேர்ந்தெடுக்க CTRL+A ஐ அழுத்துக.
08:26 Merge two molecules tool செயல்பாட்டில் வருகிறது.
08:30 மூலக்கூறுகளை ஒன்று சேர்க்க Merge two molecules tool மீது க்ளிக் செய்க.
08:34 ஒன்றுசேர்த்ததை காண அமைப்புகளை இழுக்கவும்.
08:38 சுருங்க சொல்ல.
08:41 இந்த டுடோரியலில் நாம் கற்றது,
08:43 சைக்ளோஹெக்சேன் (Cyclohexane)சைக்ளோஹெக்சீன் (Cyclohexene) ஆக மாற்றுதல்
08:46 சைக்ளோஹெக்சீன் (Cyclohexene)பென்சீன் (Benzene) ஆக மாற்றுதல்
08:49 பென்சீனின் ஹைட்ரஜன்களை ப்ளூரோ (fluoro), மெத்தில் (methyl), நைட்ரோ (nitro) மற்றும் கார்பாக்ஸி (carboxy) குழுக்களாக மாற்றுதல்.
08:55 நான் உறுப்பினர்கள் கொண்ண இரு வளையங்களை ஒன்றுசேர்த்தல்.
08:58 இங்கே உங்களுக்கான பயிற்சி.
09:00 இரு பென்சீன் மூலக்கூறுகளை ஒன்றுசேர்க்க
09:02 இரு பென்டேன் (Pentane) அமைப்புகளை ஒன்றுசேர்க்க
09:04 சைக்ளோபென்டேன் (Cyclopentane) மற்றும் சைக்ளோஹெக்சேன் (Cyclohexane) மூலக்கூறுகளை ஒன்றுசேர்க்க.
09:08 செய்துமுடிக்கப்பட்ட பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும்.
09:12 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
09:15 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
09:19 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
09:23 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
09:27 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
09:31 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
09:37 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
09:41 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09:48 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
09:53 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst