GChemPaint/C2/Formation-of-molecules/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | வணக்கம் |
00:02 | GChemPaint ல் மூலக்கூறுகளின் உருவாக்கம் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு. |
00:08 | இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது |
00:11 | * சேர்மங்களின் அமைப்புகளை சேர்த்தல் மற்றும் மாற்றுதல் |
00:14 | * நடப்பு தனிமத்தை மாற்றுதல் |
00:16 | * அல்கைல் தொகுதிகளை சேர்த்தல் |
00:18 | * கார்பன் சங்கிலியை சேர்த்தல் மற்றும் மாற்றுதல் |
00:21 | இங்கே நான் பயன்படுத்துவது, உபுண்டு லினக்ஸ் இயங்குதளம் பதிப்பு 12.04 GChemPaint பதிப்பு 0.12.10 |
00:33 | இந்த டுடோரியலை பின்தொடர, உங்களுக்கு, |
00:38 | GChemPaint வேதியியல் அமைப்பு திருத்தி பற்றி தெரிந்திருக்க வேண்டும். |
00:41 | இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும். |
00:47 | இங்கே புரோபேன், பியூட்டேன் மற்றும் ஹெப்டேன் க்கான அமைப்புகள் உள்ளன. |
00:54 | முன்னர் காட்டிய புரோபேன் மற்றும் பியூட்டேன் அமைப்புகளுடன் ஒரு புதிய GChemPaint application ஐ திறந்துள்ளேன். |
01:03 | பியூட்டேன்' அமைப்பில் கடைசியில் உள்ள கார்பன் அணுக்களை நீக்கி குளோரின் அணுக்களை சேர்ப்போம். |
01:10 | அதற்கு Periodic table combo பட்டனை பயன்படுத்துகிறேன். |
01:15 | Current element கீழிறங்கு அம்பு பட்டனை க்ளிக் செய்க. |
01:19 | இந்த பட்டன் Periodic table combo பட்டன் எனப்படுகிறது. |
01:23 | உள்ளடங்கிய புதிய ஆவர்த்தன அட்டவணை ஐ காணவும். |
01:27 | அட்டவணையில் Cl மீது க்ளிக் செய்க. |
01:30 | tool box ல் Cl ஐ காணவும். |
01:33 | Add or modify an atom tool ஐ க்ளிக் செய்க. |
01:37 | கடைசி அணுக்களை குளோரின் (Cl) அணுக்களாக மாற்ற அவற்றின் மீது க்ளிக் செய்க. |
01:43 | பெறப்பட்ட புதிய அமைப்பு 1,2-டைகுளோரோஈத்தேன். |
01:48 | அமைப்புகளின் கீழே அவற்றின் பெயர்களை எழுதுவோம். |
01:52 | Add or modify a text tool மீது க்ளிக் செய்க. |
01:56 | Text tool ன் property பக்கம் திறக்கிறது. |
01:59 | அமைப்புக்கு கீழே காட்சி பகுதியின் மீது க்ளிக் செய்க. |
02:03 | பச்சைப் பெட்டியினுள் சிமிட்டும் கர்சரைக் காணலாம். |
02:08 | பெட்டியினுள் 1,2-Dichloroethane என டைப் செய்க. |
02:14 | text tool ன் property பக்கத்தை மூட Select one or more objects tool மீது க்ளிக் செய்க. |
02:21 | அடுத்து புரோபேன் அமைப்பின் நடுவில் உள்ள கார்பன் அணுவை ஆக்ஸிஜன் அணுவாக மாற்றலாம். |
02:28 | புரோபேன் அமைப்பின் நடுவில் உள்ள அணுவிற்கு பக்கத்தில் கர்சரை வைக்கவும். |
02:33 | பெரிய O ஐ அழுத்துக. |
02:35 | O மற்றும் Os உடன் ஒரு துணை menu திறக்கிறது. |
02:39 | O ஐ தேர்ந்தெடுக்கவும். |
02:40 | கார்பன் மற்றும் ஹைட்ரஜன் அணுக்களுக்கு பதிலாக ஆக்ஸிஜன் அணு சேர்க்கப்படும். |
02:46 | பெறப்பட்ட புதிய அமைப்பு டைமெத்தில் ஈதர். |
02:51 | அதன் பெயரை அந்த அமைப்பிற்கு கீழே எழுதுவோம். |
02:54 | Add or modify a text tool மீது க்ளிக் செய்க. |
02:58 | அமைப்பு கீழே காட்சி பகுதியின் மீது க்ளிக் செய்க. |
03:01 | பெட்டியில் Dimethylether என டைப் செய்க. |
03:06 | இப்போது file ஐ சேமிப்போம். |
03:08 | toolbar ல் Save the current file ஐகன் மீது க்ளிக் செய்க |
03:12 | Save as dialog box திறக்கிறது. |
03:15 | file பெயர் Chloroethane-ether என கொடுப்போம். |
03:20 | Save பட்டன் மீது க்ளிக் செய்க. |
03:23 | விண்டோவை மூட Close பட்டன் மீது க்ளிக் செய்க. |
03:27 | இங்கே உங்களுக்கான பயிற்சி |
03:29 | 'ஈத்தேன் மற்றும் பென்டேன் அமைப்புகளை வரையவும். |
03:32 | ஈத்தேன் ன் ஒரு கார்பன் அணுவிற்கு பதிலாக Br ஐ சேர்க்கவும். |
03:36 | Pentane ன் கடைசி கார்பன் அணுக்களுக்கு பதிலாக I ஐ சேர்க்கவும். |
03:41 | நீங்க முடித்த பயிற்சி பார்க்க இவ்வாறு இருக்க வேண்டும். |
03:45 | இப்போது அல்கைல் தொகுதி(Alkyl) குறித்து விளக்குகிறேன். |
03:49 | அல்கைல் தொகுதி அல்கேனின் (Alkane) ஒரு கூறாகும். |
03:53 | உதாரணமாக: மெத்தில் CH3 ஆனது மீத்தேன் CH4 ன் ஒரு கூறு |
04:00 | ஒருஅல்கைல் தொகுதியின் அடுத்தடுத்த உறுப்பினர்கள் CH2 தொகுதியிலிருந்து மாறுபடுகின்றன. |
04:06 | அல்கைல் தொகுதி தொடரில் உள்ளவை, |
04:10 | மெத்தில் (Methyl) CH3 |
04:15 | எத்தில் (Ethyl) C2H5 |
04:20 | ப்ரோப்பைல்(Propyl) C3H7 |
04:23 | ப்யூட்டைல்(Butyl) C4H9 மற்றும் சில. |
04:29 | ஹெப்டேன் (Heptane) அமைப்புடன் ஒரு புதிய GChemPaint application ஐ திறந்து வைத்துள்ளேன். |
04:35 | இப்போது கார்பன் சங்கிலி நிலைகளை எவ்வாறு எண்ணிடுவது என காட்டுகிறேன். |
04:40 | எண்ணிடுதல் சங்கிலி நிலைகளை கண்டறிய உதவுகிறது. |
04:44 | Add or modify a text tool மீது க்ளிக் செய்க. |
04:48 | முதல் சங்கிலி நிலைக்கு அருகே காட்சி பகுதியின் மீது க்ளிக் செய்க. |
04:52 | பச்சை பெட்டியில் 1 என கொடுக்கவும். |
04:55 | அடுத்து, இரண்டாவது சங்கிலி அமைப்புக்கு அருகே க்ளிக் செய்க. |
04:59 | பெட்டியில் 2 ஐ கொடுக்கவும். |
05:02 | அதேபோல மற்ற சங்கிலி நிலைகளுக்கும் எண்ணிடுகிறேன் 3......, 4........, 5.........., 6........ மற்றும் 7. |
05:13 | அல்கைல் தொகுதிகளை பயன்படுத்தி பல்வேறு நிலைகளில் Heptane கிளை அமைப்போம். |
05:19 | மூன்றாம் நிலைக்கு ஒரு மெத்தில் தொகுதியை ஐ சேர்ப்போம். |
05:24 | Add a bond or change the multiplicity of existing one tool மீது க்ளிக் செய்க. |
05:30 | அந்த நிலையின் மீது க்ளிக் செய்க. |
05:32 | அணுக்களில் மாற்றங்களை கவனிக்கவும். |
05:36 | ஐந்தாவது நிலையில் ஒரு எத்தில் தொகுதியை சேர்ப்போம். |
05:40 | Add a chain tool மீது க்ளிக் செய்க. |
05:43 | அந்த நிலையில் க்ளிக் செய்க. |
05:46 | அடுத்து அனைத்து நிலைகளின் மீதும் அணுக்களை காட்டுகிறேன். |
05:51 | அந்த நிலையில் ரைட்-க்ளிக் செய்க. |
05:53 | ஒரு துணைmenu திறக்கிறது |
05:55 | Atom ஐ தேர்ந்தெடுத்து Display symbol மீது க்ளிக் செய்க. |
05:59 | அதேபோல மற்ற நிலைகளிலும் அணுக்களைக் காட்டுகிறேன். |
06:06 | எத்தனை முறை ஒரு நிலையில் கிளையிடலாம் என காண்போம். |
06:12 | Add a bond or change the multiplicity of existing one tool மீது க்ளிக் செய்க. |
06:18 | நான்காவது நிலையின் மீது க்ளிக் செய்க. |
06:21 | மீண்டும் க்ளிக் செய்க. |
06:23 | கார்பன் சங்கிலியில் கிளையிடுதலை கவனிக்கவும். |
06:27 | மூன்றாம் முறை க்ளிக் செய்ய முயற்சிப்போம். |
06:30 | நாம் கிளையைக் காணமுடியவில்லை. |
06:33 | ஒவ்வொரு நிலையிலும் இருமுறை மட்டுமே கிளையிட முடியும் என்பதை கவனிக்கவும். |
06:39 | ஏனெனில் கார்பனின் நாற்பிணைப்பை இது பூர்த்திசெய்கிறது. |
06:43 | file ஐ சேமிக்க, CTRL+ S ஐ அழுத்துக |
06:47 | Save as dialog box, திறக்கிறது. |
06:50 | Alkyl Groups என file பெயரைக் கொடுப்போம். |
06:53 | Save பட்டன் மீது க்ளிக் செய்க. |
06:57 | நாம் கற்றதை சுருங்க காண்போம். |
07:00 | இந்த டுடோரியலில் நாம் கற்றது, |
07:03 | * சேர்மங்களின் அமைப்புகளை சேர்த்தல் மற்றும் மாற்றுதல் |
07:07 | * நடப்பு தனிமத்தை மாற்றுதல் |
07:09 | * அல்கைல் தொகுதிகளை சேர்த்தல் |
07:12 | * கார்பன் சங்கிலியை சேர்த்தல் மற்றும் மாற்றுதல் |
07:15 | பயிற்சியாக, |
07:16 | ஆக்டேன் (Octane) அமைப்பை வரையவும். |
07:18 | சங்கிலியின் நான்காம் மற்றும் ஐந்தாம் நிலையகளில் ப்ரோப்பைல் மற்றும் ப்யூட்டைல் (Butyl) தொகுதிகளை சேர்க்கவும். |
07:25 | நீங்கள் பயிற்சியை செய்துமுடித்தப்பின் அது இவ்வாறு இருக்க வேண்டும். |
07:29 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial |
07:33 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
07:38 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
07:42 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
07:47 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
07:51 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
07:57 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
08:02 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
08:09 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro |
08:15 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
08:22 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |