Python/C3/Getting-started-with-lists/Tamil
From Script | Spoken-Tutorial
Timing | Narration |
---|---|
0:00 | Hello friends! "Getting started with lists" tutorial க்கு நல்வரவு! |
0:06 | இந்த டுடோரியலில் lists எனப்படும் ஒரு python data structure க்கு நாம் அறிமுகம் செய்து கொள்வோம். இந்த டுடோரியலின் முடிவில் உங்களால் பின் வருவனவற்றை செய்ய முடியும்.
|
0:23 | ஆகவே இப்போது, List என்பது ஒரு compound data வகை, அதில் பரஸ்பரம் வித்தியாசமான data வகைகள் இருக்கலாம். |
0:32 | List என்பது ஒரு sequence data வகை. இதில் எல்லா element களும் ஒரு குறிப்பிட்ட order இல் அமைந்திருக்கும். |
0:36 | ipython interpreter ஐ துவக்கவும் முதலில் elementகள் இல்லாமல் காலி list ஐ உருவாக்கவும். |
0:41 | command இல் ipython. பின் type செய்க: empty is equal to square brackets. |
0:53 | பின் bracket களுக்குள் type செய்க- empty. |
0:59 | இது element கள் இல்லாத காலி list. |
1:03 | ஒரு non-empty list ஐ define செய்வோம். nonempty is equal to within square brackets மற்றும் in single quotes spam comma within single quotes eggs comma 100 comma 1.234] |
1:24 | இப்படியாக, ஒரு list ஐ உருவாக்க எளிய வழி ஒரு sequence comma-separated values (அல்லது items) ஐ இரண்டு square bracket கள் நடுவில் எழுதுவதுதான். |
1:34 | நாம் காணும்படி, list களில் வெவ்வேறு வகை data இருக்கலாம். |
1:37 | முந்தைய உதாரணத்தில் 'spam' மற்றும் 'eggs' என்பன strings; 100 மற்றும் 1.234 என்பன முறையே integer மற்றும் float. |
1:48 | இப்படியாக, வெவ்வேறு வகை data வகைகளின் element களையும், ஏன் அந்த list களையே கூட list களில் வைக்கலாம். |
1:54 | இந்த property, list களை பலவகைப்பட்ட data structureகள் உடையதாக்குகிறது. |
1:59 | நாம் ஒரு list ஐlist க்குள் வைக்கலாம். |
2:02 | நாம் ஒரு list இன் element ஐ அதன் index ஐ கொண்டு அணுகலாம். |
2:07 | ஆகவே command இல் டைப் செய்க: listinlist is equal to square brackets [4,2,3,4],'and', 1, 2, 3, 4. |
2:41 | ஆகவே இப்போது நாம் ஒரு list இன் element ஐ அதன் index ஐ கொண்டு அணுகலாம். |
2:49 | ஒரு list இன் முதல் element இன் Index 0. |
2:53 | ஆகவே list nonempty க்கு, nonempty[0] முதல் element ஐ தருகிறது, nonempty[1] இரண்டவது element ஐ, மற்றும் இதே போல nonempty[3] கடைசி element. |
3:23 | video வை இங்கே நிறுத்தி பயிற்சியை செய்து முடித்து பின் தொடரவும். |
3:28 | nonempty[-1] ஐ செய்யும் போது என்ன ஆகும் |
3:34 | நீங்கள் terminal க்கு மாறி டைப் செய்யலாம்: nonempty -1 square bracketகளில். |
3:44 | நீங்கள் காண்பது போல கடைசி element இன் data வான 1.234 கிடைக்கிறது. |
3:53 | python இல் negative indices ஐ பயன்படுத்தி elements ஐ கடைசியிலிருந்து அணுகலாம். |
3:58 | ஆகவே, -1 கடைசி element ஆன 4 வது element ஐ தருகிறது, -2 கடைசியிலிருந்து இரண்டாவது element, மற்றும் -4 கடைசியிலிருந்து நான்காவது- அது இங்கே முதல் element. |
4:15 | ஆகவே type செய்க: nonempty -1 nonempty[-2] பின் nonempty -4. |
4:24 | நாம் append function ஐ பயன்படுத்தியும் elements களை list இன் கடைசிக்கு சேர்க்கலாம். |
4:28 | ஆகவே type செய்க: nonempty dot append within brackets and single quotes onemore. |
4:41 | ஒரு error ஐ பார்க்கிறோம். |
4:46 | பின் type செய்க: nonempty; பின் type செய்க: nonempty dot append within brackets 6. |
5:09 | பின் மீண்டும் nonempty. |
5:15 | video வை இங்கே நிறுத்தி பயிற்சியை செய்து முடித்து பின் தொடரவும். |
5:21 | 1.'and' element ஐ listinlist list இல் பெற syntax என்ன? |
5:29 | 2. negative indices ஐ பயன்படுத்தி நீங்கள் 'and' ஐ எப்படி பெறுவீர்கள்? |
5:34 | ஆகவே, solution உங்கள் screen இல் உள்ளது. |
5:38 | நாம் காணும்படி nonempty க்கு 'onemore' மற்றும் 6 ஐ கடைசியில் சேர்த்துள்ளது. |
5:45 | நாம் மேலே போகலாம். |
5:47 | நாம் len function ஐ list இல் element களின் எண்ணிக்கையை காண பயன்படுத்தலாம். |
5:50 | list 'nonempty' இன் நீளம் என்ன என்று பார்க்கலாம். |
5:54 | ஆகவே command இல் டைப் செய்யவும் len within brackets nonempty . |
6:05 | நாம் list க்கு element களை append – பின்னே சேர்ப்பது- போலவே நீக்கவும் முடியும். |
6:08 | அதை இரண்டு வழிகளில் செய்யலாம். ஒன்று index ஐ பயன்படுத்தி. |
6:12 | ஆகவே type செய்க: del within brackets nonempty மற்றும் square brackets 1. |
6:26 | function del element ஐ index 1 இல் நீக்குகிறது. அதாவது list இல் இரண்டாம் element - 'eggs'. |
6:34 | இன்னொரு வழி element ஐ content மூலம் கண்டு நீக்குவது. |
6:37 | 100 ஐ nonempty list டிலிருந்து delete செய்ய வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். |
6:41 | இதற்கு function remove ஐ பயன்படுத்தலாம். |
6:55 | ஒரு வேளை இரண்டு 100 கள் இருந்தால்? |
6:57 | அதை ஒரு சின்ன சோதனையால் சோதிக்கலாம். |
7:01 | இப்போது command இல்: nonempty dot append within brackets மற்றும் single quotes spam. |
7:11 | பின் type செய்க: nonempty. |
7:15 | பின் type செய்க nonempty dot remove ... within brackets மற்றும் single quotes spam; பின் outputக்கு type செய்க: nonempty . |
7:29 | நாம் இப்போது check செய்தால், முதல் முறை வரும் 'spam' மட்டும் நீக்கப்பட்டது. ஆகவே function remove sequence இல் முதல் முறை வரும் அந்த element ஐ மட்டுமே நீக்குகிறது, மற்றதை அப்படியே விட்டுவிடுகிறது. |
7:39 | இதை கவனத்தில் கொள்ள வேண்டும்: del index number ஆல் நீக்குகிறது, remove தரப்படும் content அடிப்படையில் நீக்குகிறது. |
7:50 | ஒரு உதாரணத்தை பார்க்கலாம். |
7:53 | del நமக்குத்தருவது [1,2,3]. |
7:59 | ஆகவே terminal இல் type செய்க: k is equal to 1,2 ,1,3 மற்றும் பின் type செய்க: del within brackets மற்றும் square brackets k மற்றும் square brackets 2. |
8:25 | remove நமக்கு கொடுப்பது [2,1,3] |
8:29 | ஏனெனில் அது x[2] தரும் உருப்படி முதல் முறை வரும்போது delete செய்கிறது. இங்கே அது 1. |
8:37 | ஆகவே type செய்க: k dot remove மற்றும் in brackets x மற்றும் square brackets 2. |
8:59 | நாம் ஒரு error ஐ பார்த்ததால் நாம் x of 2 ஐ k of 2 என மாற்றிவிட்டோம். |
9:09 | video வை இங்கே நிறுத்தி பயிற்சியை செய்து முடித்து பின் தொடரவும். |
9:14 | 1. listinlist list இலிருந்து மூன்றாம் element ஐ நீக்கவும். |
9:19 | 2. listinlist list இலிருந்து 'and' ஐ நீக்கவும். |
9:24 | solution உங்கள் screen இல் உள்ளது |
9:29 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
9:30 | இந்த டுடோரியலில், நாம் கற்றவை: list களை உருவாக்குவது, list களை அவற்றின் index number கள் மூலம் அணுகுவது, append function ஐ பயன்படுத்தி
elementகளை list க்கு Append செய்வது. |
9:40 | del function இல் element இன் index number ஐ குறிப்பிட்டு list களிலிருந்து Element களை Delete செய்வது. |
9:47 | பின், remove function இல் content மூலமாக list களிலிருந்து Element களை Delete செய்வது. கடைசியாக len function ஐ பயன்படுத்தி லிஸ்டின் நீளத்தை கண்டு பிடிப்பது. |
9:59 | நீங்கள் தீர்வு காண இதோ சில self assessment கேள்விகள் |
10:02 | 1. நீங்கள் empty list ஐ எப்படி உருவாக்குவீர்கள்? |
10:05 | 2. ஒரு list இன் உள்ளே இன்னொரு list இருக்கமுடியுமா? |
10:09 | 3. list இன் நீளத்தை கண்டுபிடிக்காமல் எப்படி அதை அணுகலாம்? |
10:15 | விடைகள் இதோ |
10:18 | 1. நாம் empty list ஐ உருவாக்க square bracket களுக்குள் இருக்கும் இடத்தை காலியாக விட வேண்டும். empty=[] |
10:30 | 2. ஆம். |
10:34 | List இல் list உள்பட எல்லா data type களும் இருக்கமுடியும். |
10:44 | உதாரணமாக list_in_list=[2.3,[2,4,6],'string,'all datatypes can be there'] |
10:56 | 3. negative indices களை பயன்படுத்தி நாம் list ஐ பின்னாலிருந்து அணுகலாம். |
11:04 | உதாரணமாக nonempty = ['spam', 'eggs', 100, 1.234] nonempty[-1] |
11:15 | இந்த டுடோரியல் சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன். |
11:19 | நன்றி! |