PERL/C2/Functions-in-Perl/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 17:30, 19 August 2014 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:01 Perl ல் Functionகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது
00:10 Perl functionகள்
00:11 argument களுடன் functionகள்
00:13 திருப்பியனுப்பும் மதிப்புகளுடன் function.
00:16 இந்த டுடோரியலுக்காக நான் பயன்படுத்துவது
00:18 உபுண்டு லினக்ஸ் 12.04 இயங்குதளம்
00:22 Perl 5.14.2 மற்றும்
00:24 gedit Text Editor
00:27 உங்களுக்கு விருப்பமான எந்த text editor ஐயும் பயன்படுத்தலாம்.
00:31 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, Perl ல் Variableகள், commentகள், loopகள், conditional statementகள் மற்றும் Data Structureகள் குறித்த அறிவு இருக்க வேண்டும்
00:41 அதற்கான ஸ்போகன் டுடோரியல்களை ஸ்போகன் டுடோரியல் இணையத்தளத்தில் காணவும்.
00:47 முதலில் சில எளிய Perl functionகளை காண்போம்
00:51 Perl ல், functionகள், subroutines எனவும் அழைக்கப்படுகிறது, இவை sub keyword உடன் declare செய்யப்படுகிறது
00:57 ஒரு declare செய்யப்பட்ட function க்கான வரையறை curly braceகளுக்கிடையே எழுதப்படுகிறது.
01:03 இந்த function எந்த argument ஐயும் எடுக்கவில்லை
01:07 மேலும் இது எதையும் திருப்பியனுப்பவில்லை.
01:10 குறிப்பு: function க்கான வரையறை script ல் எங்குவேண்டுமானாலும் அல்லது மற்றொரு module ல் எழுதப்படலாம்.
01:17 பின் இந்த function ஐ பயன்படுத்த அந்த module, இந்த script உடன் சேர்க்கப்பட வேண்டும்
01:24 module file ஐ script உடன் சேர்க்க, பின்வரும் syntax ஐ பயன்படுத்த வேண்டும்-
01:31 use ModuleFileபெயர் semicolon
01:35 ஒரு உதாரண ப்ரோகிராமை பயன்படுத்தி இதை புரிந்துகொள்வோம்.
01:39 உங்கள் text editor ல் ஒரு file ஐ திறந்து அதற்கு simpleFunction dot pl என பெயரிடுக
01:46 இங்கே gedit ல் என் simpleFunction dot pl file உள்ளது
01:51 திரையில் காட்டப்படும் code ஐ டைப் செய்க.
01:55 இங்கே நாம் define செய்த function ஐ call செய்கிறோம்.
02:00 பின், இயக்க கட்டுப்பாடு அந்த function க்கு அனுப்படுகிறது
02:06 இது தான் அந்த function ஐ declare மற்றும் define செய்வது
02:10 அந்த function கொடுக்கப்பட்ட உரையை அச்சடிக்கும்.
02:14 file ஐ சேமிக்கவும்.
02:17 பின் டெர்மினலுக்கு வந்து Perl script ஐ இயக்க டைப் செய்க
02:24 perl simpleFunction dot pl
02:28 எண்டரை அழுத்துக
02:30 வெளியீடு டெர்மினலில் காட்டப்படுவது போல இருக்கும்
02:38 இப்போது, argumentகளுடன் ஒரு function ஐ காண்போம்
02:44 இந்த function ஐ ஒரு உதாரண ப்ரோகிராமை பயன்படுத்தி புரிந்துகொள்வோம்.
02:48 உங்கள் text editor ல் ஒரு file ஐ திறந்து அதற்கு functionWithArgs dot pl என பெயரிடுக
02:57 இங்கே gedit ல் என் functionWithArgs script உள்ளது
03:02 திரையில் காட்டப்படும் பின்வரும் code ன் பகுதியை டைப் செய்க
03:07 இங்கே argumentகள், 10 மற்றும் 20 உடன் ஒரு function ஐ call செய்கிறோம்.
03:13 அனுப்பப்பட்ட argumentகள்.... $var1 மற்றும் $var2 ல் பெறப்படுகின்றன
03:20 @_ என்பது ஒரு சிறப்பு Perl variable. இது பற்றி விரிவாக வரும் டுடோரியல்களில் காண்போம்.
03:29 இந்த function 2 variableகளையும் கூட்டி விடையை அச்சடிக்கிறது.
03:37 உங்கள் file ஐ சேமிக்கவும்.
03:42 @_ என்பது ஒரு சிறப்பு Perl array.
03:46 இந்த array அனுப்பப்பட்ட argumentகளை சேமிக்க பயன்படுகிறது.
03:51 அதேபோல, அனுப்பப்பட்ட argument variableகளில் பின்வருமாறு பெறலாம்
03:56 $var1 space = space shift @_ semicolon
04:04 $var2 space = space shift @_ semicolon
04:12 @_ array லிருந்து முதல் இருப்பில் உள்ள element ஐ shift @_ நீக்குகிறது
04:21 பின் அதை ஒரு variable க்கு assign செய்கிறது
04:24 மற்றொரு வழி; $var1 space = space dollar underscrore சதுர அடைப்புகளில் பூஜ்ஜியம் semicolon
04:38 $var2 space = space dollar underscrore சதுர அடைப்புகளில் 1 semicolon
04:49 மேற்சொன்ன வழியானது index ஐ பயன்படுத்தி @_ array ன் element களை பெறுவது போன்றதே
04:59 இப்போது, டெர்மினலுக்கு வந்து script ஐ இயக்க டைப் செய்க -
05:06 perl functionWithArgs dot pl பின் எண்டரை அழுத்துக
05:14 வெளியீடு திரையில் காட்டப்படுவது போல இருக்கும்
05:23 இப்போது, ஒரே ஒரு மதிப்பை திருப்பும் ஒரு function ஐ காண்போம்.
05:32 அதை ஒரு உதாரண ப்ரோகிராம் மூலம் புரிந்துகொள்வோம்.
05:35 gedit ல் funcWithSingleRtrnVal dot pl script க்கு வருகிறேன்
05:46 உங்கள் text editor ல் ஒரு file ஐ திறந்து காட்டப்படும் code ன் பகுதியை அதில் டைப் செய்க.
05:52 இங்கே, addVariables functionparameterகள் 10 மற்றும் 20 உடன் call செய்கிறோம்.
06:01 இந்த function திருப்பும் மதிப்பு $addition variable ல் பெறப்படுகிறது
06:09 இந்த function அனுப்பப்பட்ட parameterகளை கூட்டி விடையை திருப்பியனுப்புகிறது.
06:15 file ஐ சேமிக்கவும்.
06:17 இப்போது script ஐ இயக்குவோம்.
06:20 எனவே டெர்மினலுக்கு வந்து டைப் செய்க-
06:24 perl funcWithSingleRtrnVal dot pl பின் எண்டரை அழுத்துக
06:35 வெளியீடு டெர்மினலில் காட்டப்படுவதுபோல இருக்கும்.
06:43 இப்போது, பல்வேறு மதிப்புகளை திருப்பும் ஒரு function ஐ காண்போம்.
06:48 அதை ஒரு உதாரண ப்ரோகிராம் மூலம் புரிந்துகொள்வோம்.
06:53 gedit ல், ஒரு file ஐ திறந்து அதற்கு funcWithMultipleRtrnVals dot pl என பெயரிட்டுள்ளேன்
07:04 அதேபோல உங்கள் text editor லும் செய்யவும்
07:08 இப்போது, காட்டப்படும் பின்வரும் code ன் பகுதியை டைப் செய்க.
07:13 இங்கே, addVariables function ஐ parameterகள் 10 மற்றும் 20 உடன் call செய்கிறோம்.
07:21 இந்த function திருப்பும் மதிப்புகள் variableகள் $var1, $var2 மற்றும் $addition ல் பெறப்படுகின்றன
07:31 இந்த function கூட்டலை செய்து.... அனுப்பப்பட்ட parameterகள் மற்றும் விடையை திருப்பியனுப்புகிறது.
07:42 இந்த உதாரணம் ஒரு function லிருந்து எவ்வாறு ஒரு array ஐ திருப்ப முடியும் என்பதை காட்டுகிறது.
07:53 அதேபோல், ஒரு function லிருந்து எவ்வாறு hash திருப்பப்படலாம் என்பதை இது காட்டுகிறது.
08:00 உங்கள் file ஐ சேமிக்கவும்.
08:03 இப்போது Perl script ஐ இயக்க டெர்மினலில் டைப் செய்க -
08:10 perl funcWithMultipleRtrnVals dot pl
08:18 எண்டரை அழுத்துக
08:20 டெர்மினலில் காட்டப்படுவது போல வெளியீடு இருக்கும்.
08:32 Perl பல உள்ளடங்கிய functionகளை தருகிறது
08:36 அவற்றில் சில முன் டுடோரியல்களில் கற்றோம். உதாரணமாக- Arrays, Hash, sort, scalar, each, keys போன்றவை.
08:49 உள்ளடங்கிய functionகளை call செய்வது, நாம் define செய்யும் மற்ற fuction ஐ call செய்வது போன்றதே.
08:57 உ.தா sort அடைப்புகளில் @arrayName semicolon
09:04 நாம் பயன்படுத்திய உதாரண ப்ரோகிராம்களில் சில உள்ளடங்கிய functionகளை சேர்த்து முயற்சிக்கவும்.
09:10 அவற்றின் வெளியீடுகளை கவனிக்கவும்.
09:13 சுருங்கசொல்ல.
09:15 இந்த டுடோரியலில் நாம் கற்றது -
09:17 உதாரண ப்ரோகிராம்களை பயன்படுத்தி Perl ல் Functionகள்
09:19 argumentகளுடன் functionகள்
09:22 மதிப்புகளை திருப்பியனுப்பும் functionகள்
09:27 இங்கே உங்களுக்கான பயிற்சி -
09:29 3 argument களை ஏற்கும் ஒரு function ஐ எழுதுக
09:33 இந்த argument களின் மீது சில செயல்பாடுகளை செய்க
09:37 argumentகள் மீது செய்யப்பட்ட செயல்பாட்டின் முடிவை திருப்பி அதை அச்சடிக்கவும்.
09:43 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
09:47 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
09:51 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
09:56 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
10:02 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
10:07 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
10:14 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
10:19 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.


10:28 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
10:40 இந்த டுடோரியல் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம்.
10:43 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst