Python/C2/Using-the-plot-command-interactively/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:01, 7 August 2014 by PoojaMoolya (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Visual Cue
00:00 ஹலோ, நண்பர்களே! Ipython கொண்டு எளிய ப்லாட்களை உருவாக்கும் tutorial க்கு நல்வரவு!
00:06 உங்கள் கணினியில் IPython இயங்குகிறது என்று நம்புகிறேன்.
00:10 நாம் கற்கப்போவது
  1. கணித function களின் எளிய plot களை வரைதல்.
  2. Figure window ஐ பயன்படுத்தி plot களை தெளிவாக காணுதல்.
00:20 ipython ஐ துவக்கலாம்.
00:22 முனையத்தை திறந்து ipython -pylab என type செய்து enter செய்யலாம்.
00:35 Pylab என்பது ஒரு python நூலகம். இது plotting செயலை தருகிறது.
00:39 இது பல் வேறு கணித அறிவியல் செயல்களையும் செய்ய ஏதுவாகிறது.
00:43 IPython -pylab ஐ shell இல் இயக்கியதும் சில குறிப்புகளை காண்பீர்கள். In[1] தூண்டியையும் காண்பீர்கள்.
00:55 அப்படி இல்லாமல் பின் வரும் பிழை செய்தியும் கிடைக்கலாம். `ERROR: matplotlib could NOT be imported! Starting normal IPython.`
01:02 அப்படி இருந்தால் நீங்கள் matplotlib ஐ நிறுவி பின் இதை மீண்டும் இயக்க வேண்டும்.
01:08 இப்போது ipython shell இல் 'linspace' என type செய்து '?' குறியும் இடவும்.
01:19 ஆவணம் சொல்லுவது போல இது துவக்கத்துக்கும் நிறைவுக்கும் இடையே சம இடைவெளிகளில் num மாதிரிகளை காட்டும்.
01:29 இதை விளக்க நாம் 100 point களை உருவாக்குவோம்.
01:33 இதற்கு linspace 1 comma 100 comma 100 என Type செய்து enter செய்யலாம்.
01:47 நாம் காண்பது போல 1 முதல் 100 வரை வரிசை எண்கள் காண்கின்றன.
01:52 இப்போது 0 க்கும் 1 க்கும் இடையே 200 pointகளை உருவாக்க முயல்வோம்.
01:57 இதற்கு linspace அடைப்பு குறிகளுக்குள் 0 comma 1 comma 200. என டைப் செய்வோம்.
02:11 இங்கு 0 துவக்கம், 1 முடிவு, 200 மொத்த புள்ளிகள்
02:18 linspace இல் துவக்கமும் முடிவும் முழு எண்களாகவோ, தசம எண்களாகவோ மாறிலியாகவோ இருக்கலாம்.
02:24 minus pi க்கும் pi க்கும் இடையில் 100 புள்ளிகளை பெற முயற்சிக்கலாம்.
02:30 இங்கு 'pi' என்பது pylab அறுதியிடும் ஒரு மாறிலி.
02:34 இதை மாறியாக சேமிக்கலாம். அதை p என கொள்வோம்.
02:52 இப்போது type len அடைப்பு குறிகளுக்குள் p என type செய்ய இந்த எண்ணிக்கை புள்ளிகளை பெறுவோம்.
03:05 len function ஒரு வரிசையின் மூலங்களின் எண்ணிக்கையை தருகிறது.
03:11 இப்போது நாம் minus pi க்கும் pi க்கும் இடையில் ஒரு cosine வளை கோட்டை வரைய முயற்சிக்கலாம். இதற்கு plot கட்டளையை பயன்படுத்த வேண்டும். இங்கு ஒவ்வொரு p புள்ளிக்கும் தக்கபடி cos(p) க்கு cosine மதிப்பு கிடைக்கிறது.
03:50 நாம் cos(p) ஐ variable cosine க்கு சேமித்துவிட்டு பின் அதை plot function ஐ பயன்படுத்தி ப்லாட் செய்யலாம்.
03:57 இப்போது இந்த ப்லாட்டை துடைக்க நாம் tt>clf closing brackets</tt> function ஐ பயன்படுத்தலாம்.
04:19 இது எதற்கு என்றால் நாம் அடுத்த ப்லாட்டை வரையப்போனால் அது இதன் மீது வரையப் படக்கூடாது.
04:25 இந்த இடத்தில் ஒன்றின் மீது ஒன்றாக வரையப்பட்ட ப்லாட்களால் ஆக்கிரமிப்பு இல்லாதிருக்க clf() ஆல் நீக்குகிறோம்.
04:34 இப்போது ஒரு a sine plot ஐ முயற்சிக்கலாம்.
05:04 ஒரு plot window அதன் பல்வித தேர்வுகளுடன் இருந்தால் ப்லாட் களை நாம் நன்றாக பார்க்கலாம்.
05:11 இவை என்ன தேர்வுகள் என்று பார்க்கலாம்.
05:14 நாம் காண்பது போல சொடுக்கியை வளை கோட்டில் நகர்த்த அது ப்லாட்டின் ஒவ்வொரு புள்ளி இருக்குமிடத்தையும் காட்டுகிறது.
05:26 சாளரத்தின் கீழே இடது பக்கம் சில button கள் உள்ளன.
05:30 வலது கோடியில் உள்ளது file ஐ சேமிக்க.
05:35 அதன் மீது சொடுக்கிவிட்டு file பெயரை எழுதவும்.
05:48 ப்லாட்டை நாம் sin_curve என்ற பெயரில் pdf ஒழுங்கில் சேமிப்போம்.
06:00 நீங்கள் கண்டது போல கீழிறங்கும் மெனுவில் நாம் பைல் ஒழுங்கை தேர்ந்து எடுக்கலாம்.
06:05 png ,eps ,pdf, ps போன்ற ஒழுங்குகளும் கிடைக்கலாம்.
06:17 sa0ve button க்கு இடது பக்கம் உள்ளது slider button. இதைக்கொண்டு margin களை குறிக்கலாம்.
06:25 இதற்கும் இடது பக்கம் zoom button இருக்கிறது. இதைக்கொண்டு ப்லாட்டின் உள்ளே அணுகிப் பார்க்கலாம்.
06:30 அணுகுவதற்கான இடத்தை மட்டும் குறித்தால் போதும்.
06:40 இடது பக்கம் உள்ள button ஐக்கொண்டு ப்லாட்டின் அச்சுக்களை நகர்த்தலாம்.
06:50 அடுத்த இரண்டு இடது வலது அம்புக்குறியுடன் கூடிய button கள் ப்லாடின் நிலையை மாற்றி முன்னிருந்த நிலைக்கு கொண்டு செல்கின்றன.
07:00 அவை உலாவியின் பின், முன் பட்டன்கள் போல செயல்படுகின்றன.
07:06 கடைசி பட்டன் 'home' முதலில் போட்ட plot.
07:13 விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்தபின் தொடரவும்.
07:20 (sin(x) into sin(x)) by x ஐ Plot செய்யவும்.
07:26 1. sin square by plot ஐ x.pdf என pdf ஒழுங்கில் சேமிக்கவும்.
07:33 2. கிட்டே அணுகி maxima வை கண்டு பிடிக்கவும்.
07:37 3. அதை முதலில் இருந்த நிலைக்கு கொண்டு வரவும்.
07:44 இப்போது நாம் கற்றதை விரைவாக பார்க்கலாம்.
07:49 Ipython ஐ pylab உடன் கற்றல்
07:52 linspace function ஐ பயன்படுத்தி ஒரு இடத்தில் num சமமாக இடைவெளி விட்ட புள்ளிகளை அமைத்தல்.
07:57 ஒரு வரிசையின் நீளத்தை len function மூலம் கண்டு பிடித்தல்
08:01 Plot ஐ பயன்படுத்தி கணித function களை வரைதல்
08:05 வரையும் இடத்தை clf ஆல் சுத்தம் செய்தல்
08:08 plot இன் பயனர் இடைமுகத்தை பயன்படுத்தி அதை இன்னும் நன்கு பார்க்கவும். சேமித்தல், zoom மற்றும் x, y அச்சுக்களில் அவற்றை நகர்த்துவது ஆகியவற்றை செய்து பார்க்கவும்.
08:23 minus pi by 2 மற்றும் pi by 2 க்கு இடையில் 100 சமமாக இடைவெளி விட்ட புள்ளிகளை உருவாக்கவும்.
08:31 இரண்டாவதாக. Ipython இல் ஒரு உருவத்தை நீக்குதல் எப்படி?
08:36 மூன்றாவது. ஒரு வரிசையின் நீளத்தை கண்டு பிடிப்பது எப்படி?
08:43 விடைகள் இப்படி:
08:45 1. minus pi by 2 மற்றும் pi by 2 க்கு இடையில் 100 சமமாக இடைவெளி விட்ட புள்ளிகளை உருவாக்க கட்டளை linspace அடைப்பு குறிகளுக்குள் minus pi by 2 comma pi by 2 comma 100
09:03 இரண்டாவது. Ipython இல் ஒரு உருவத்தை நீக்க clf closing bracket function ஐ பயன்படுத்த வேண்டும்.
09:11 மூன்றாவது. ஒரு வரிசையின் நீளத்தை கண்டு பிடிக்க len அடைப்பு குறிகளுக்குள் sequence_name function ஐ பயன்படுத்த வேண்டும்.
09:20 டுடோரியல் பயனுள்ளதாயும் அனுபவிக்கத் தக்கதாயும் இருந்திருக்கும் என நம்புகிறேன்.
09:24 நன்றி!

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst