Scilab/C2/Installing/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 10:35, 7 August 2014 by PoojaMoolya (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:01 Windows இயங்கு தளத்தில் Scilab ஐ நிறுவுதல் குறித்த spoken tutorial க்கு நல்வரவு.
00:07 Scilab பதிப்பு 5.2 ஐ windows இயங்கு தளத்தில் நிறுவுகிறேன்.
00:13 இந்த செயல்முறை எல்லா Scilab பதிப்புகளுக்கும் மேலும் windows இயங்கு தளத்தின் எல்லாம் பதிப்புகளுக்கும் பொதுவானது.
00:20 scilab ஐ scilab.org இணையத்தளத்திலிருந்து தரவிறக்கலாம்
00:25 Products க்கு சென்று download ஐ தேர்ந்து சொடுக்குக.
00:31 கீழே Scroll செய்து windows பகுதியில் scilab 5.2 மீது சொடுக்கவும்.


00:41 இது exe file ஐ தரவிறக்க ஒரு dialog ஐ திறக்கிறது.
00:45 save file மீது சொடுக்க தரவிறக்கம் துவங்குகிறது.
00:50 அது சில நிமிடங்கள் எடுக்கும். நான் இதை minimize செய்கிறேன்.
00:54 browser ஐ Minimize செய்கிறேன்.
00:58 download பக்கத்தில் நேரடியாக தரவிறக்க தொடுப்பும் உள்ளது.
01:03 நிறுவலை துவக்கும் முன் உங்கள் கணினி இணையத்திற்க்கு இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்க.
01:10 Intel Math Kernal Library ஐ தரவிறக்கி நிறுவ அது தேவை.
01:16 இதை minimize செய்கிறேன்.
01:18 scilab setup file மீது இரட்டை சொடுக்க நிறுவல் துவங்குகிறது
01:25 Run ஐ சொடுக்கவும்.
01:28 set up language... English ஆக இருக்கட்டும். Ok ஐ சொடுக்கவும்.
01:33 இது Scilab setup wizard ஐ துவக்கும்
01:37 தொடர Next ஐ சொடுக்கவும்.
01:39 license agreement ஐ ஒத்துக்கொள்ள Next ஐ சொடுக்கவும்.
01:42 scilab ஐ நிறுவ கணினியில் இலக்கு folder ஐ தேர்க.
01:47 Next ஐ சொடுக்கவும்.
01:48 full Installation ஐ செய்யலாம்
01:50 Next ஐ சொடுக்கவும்.
01:52 Next.
01:53 Next.
01:55 Install ஐ சொடுக்கவும்.
01:58 இணைய இணைப்பை அனுமதிக்க Ok ஐ சொடுக்கவும்.
02:03 இது Scilab க்கான Intel Math Kernal Library ஐ தரவிறக்குகிறது
02:11 இதற்கு கொஞ்ச நேரமாகும்.
02:20 Intel Math Kernal Library தரவிறக்கம் முடிந்து scilab நிறுவல் துவங்கிவிட்டது.
02:28 இதற்கு கொஞ்ச நேரமாகும்.
02:46 scilab நிறுவல் முழுமையாயிற்று. "Finish" ஐ சொடுக்கவும்.
02:51 இது உங்கள் கணினியில் Scilab 5.2 ஐ துவக்குகிறது.
03:00 இதை மூடுகிறேன்.
03:03 Scilab குறித்து இன்னும் பல spoken tutorialகள் உள்ளன.
03:08 அவற்றின் பட்டியல் இதோ...
03:12 இந்தியாவில் Scilab மீதான முயற்சி scilab.in இணைய தளத்தின் மூலம் நடக்கிறது
03:18 பல சுவாரசியமான திட்டங்கள் நடை பெறுகின்றன.
03:21 அதில் ஒன்று Textbook திட்டம். இவை நிலையான பாடபுத்தகங்களை scilab ஐ பயன்படுத்தி work out செய்த உதாரணங்களை code செய்கிறது.
03:28 இந்த link project ... பயனர்களுக்கு தெரிந்த Scilab documentகளுக்கு தொடுப்பு கொடுத்து அவற்றை தரவரிசையாக்கவும் வாய்ப்பளிக்கிறது.
03:35 Scilab பயிற்சி வகுப்புகளை நடத்தவும் உதவுகிறோம்
03:38 அறிவிப்புகளுக்கு ஒரு mailing list உம் விவாதத்துக்கு இன்னொன்றும் உள்ளன.
03:44 அவற்றில் பங்கு கொள்ள உங்களை அழைக்கிறோம்.
03:47 spoken tutorial களுக்கு திரும்பலாம்
03:50 இதன் பேச்சுப்பகுதி பல இந்திய மொழிகளிலும் கிடைக்கும்.
03:54 அவை spoken-tutorial.org இணைய தளத்தில் கிடைக்கின்றன.
03:58 இந்த tutorial கள் Scilab இல் Level 0 பயிற்சியின் பகுதியாகும்.
04:03 இந்த tutorial கள் முற்றிலும் இலவசம்.
04:07 பல FOSS system களை இந்த வழியில் கொண்டுபோக நினைக்கிறோம்.
04:11 இவற்றைப்பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லவும்.
04:14 உங்கள் பங்களிப்பையும் வரவேற்கிறோம்.
04:17 மென்பொருளுக்கு outline எழுதுவது...
04:20 மூல script களை எழுதுவது...
04:22 spoken tutorial ஐ பதிவு செய்வது.


04:25 script களை இதர இந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பது.
04:28 அவற்றைக்கொண்டு audio வை மற்ற மொழிகளில் பதிவு செய்வது.
04:33 இவை அனைத்தையும் மீள் பார்வையிட்டு கருத்து சொல்வது.
04:36 spoken tutorial களை பயன்படுத்தி பயிற்சி வகுப்புகளை நடத்துவது
04:42 Spoken tutorial களில் தாக்கத்தை ஆய்வு செய்வது.
04:47 audio, video, தானியங்கி மொழிபெயர்ப்பு போன்றவற்றுக்கு தொழில்நுட்ப ஆதரவு கொடுக்கக்கூடிய வல்லுனர்களையும் நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம்.
04:55 இந்த செயல்களுக்கு பொருள் ஆதரவும் தருகிறோம்.
04:58 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

05:07 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும்


05:11 இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி!

Contributors and Content Editors

PoojaMoolya, Pratik kamble, Priyacst