GIMP/C2/Sketching/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:23 | GIMP tutorial க்கு நல்வரவு. வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது.
|
00:41 | இன்று புதிதாக ஒன்றைக் காட்டப்போகிறேன். |
00:44 | Joseph ன் ஒரு புது video உள்ளது. இன்று அவர் sketch effects ஐ பயன்படுத்தி ஒரு படத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதைக் காட்டபோகிறார்.
|
00:55 | Joseph இன்று gimp 2.4 ஐ பயன்படுத்தி sketch effect ஐ எவ்வாறு உருவாக்குவது என காட்டபோகிறார். |
01:06 | sketch effect ஐ காட்ட layers உடன் வேலை செய்ய போகிறேன். |
01:14 | அடுத்தபடியாக இந்த layerகளை பெயர்மாற்ற போகிறேன், அதனால் எந்த layer ல் நான் வேலை செய்கிறேன் என்பது குறித்து தெரிய வரும். |
01:23 | எனவே மேல் layer ஐ தேர்கிறேன். Filters க்கு சென்று, Blur, Gaussian blur. |
01:36 | சில கோடுகளை காணும் ஒரு இடத்தை அடைய preview ன் உதவியுடன் படத்தில் சுற்றி நகர்கிறோம் |
01:45 | இங்கே Blur Radius மிக முக்கியமானது. |
01:48 | 30 blur radius மற்றும் 5 blur radius ஐ பயன்படுத்தி பெறும் வித்தியாசங்களைக் காட்ட இரண்டு previewகளை உருவாக்கியுள்ளேன்.
|
01:59 | இந்த படத்துக்கு blur radius ஐ 15 என அமைத்து Ok ல் சொடுக்குக. |
02:08 | இப்போது மேல் layer ல் நல்ல blur ஐ பெற்றுள்ளோம். |
02:12 | எனவே அடுத்து நாம் செய்ய வேண்டியது நிறங்களை தலைகீழாக மாற்றுவது. |
02:18 | எனவே colours க்கு சென்று, Invert. |
02:21 | tool boxக்கு மீண்டும் சென்று, மேல் layerஐ தேர்ந்து அதன் opacity ஐ 50% என அமைக்கவும். |
02:28 | நல்ல சாம்பல் நிற படத்தை பெறுகிறோம். |
02:31 | இப்போது மேல் layer மீது வலது சொடுக்கி Merge Visible Layer ல் merge ல் சொடுக்கி இந்த இரு layerகளையும் ஒன்றாக சேர்க்கவும் |
02:40 | அடுத்த படியாக படத்தில் contrast ஐ அதிகரிக்க விரும்புகிறேன். அதை செய்ய Levels Tool ஐ தேர்கிறேன். |
02:48 | நீங்கள் பார்ப்பது போல இந்த படத்தில் பல தகவல்கள் மையத்தில் உள்ளன. |
02:54 | sliders ஐ அந்த மதிப்புக்கு நகர்த்த வேண்டும் |
03:01 | இப்போது மைய slider ஐ இடதுபக்கம் நகர்த்தவும். அதன்மூலம் படத்தை சற்று வெள்ளையாக பெறலாம். |
03:13 | பின் Okல் சொடுக்குக. |
03:16 | இப்போது அந்த கோடுகள் வெளிவர ஆரம்பித்திருப்பதைக் காணலாம். ஆனால் படத்தில் இன்னும் சில நிறங்கள் உள்ளன. |
03:23 | எனவே colours சென்று, Desaturate பின் Luminosity தேர்வை தேர்க. இப்போது கருப்பு வெள்ளை படத்தைப் பெற்றிருக்கிறோம்.
|
03:32 | இப்போது மீண்டும் Levels Tool ஐ தேர்ந்து படத்தில் மேலும் contrast ஐ பெற slider ஐ சரிசெய்யவும்.
|
03:47 | படத்தில் நல்ல contrast பெறும்படி sliders ஐ சரிசெய்க. |
03:56 | இது நன்றாக உள்ளதென நினைக்கிறேன். |
04:00 | இப்போது நல்ல sketch effect உடன் படத்தை பெற்றுள்ளோம். |
04:07 | இந்த படத்துக்கு ஓரங்கள் அமைக்க வேண்டும். |
04:11 | எனவே புது layerஐ உருவாக்கி, white என பெயரிடுக. layer fill type ஐ white என தேர்க. தற்காலிகமாக opacity ன் மதிப்பை குறைக்கிறேன். அதனால் படத்தின் ஊடே காணலாம். |
04:27 | இப்போது rectangle selection tools ஐ tool box லிருந்து தேர்ந்து படத்தினுள் தோராயமான தேர்வை வரைக.
|
04:38 | செவ்வகத்தை சரிசெய்க. |
04:42 | செவ்வகத்தை சரிசெய்வதை முடித்தவுடன், இடது மூலைக்கு சென்று Toggle Quick Mask ஐ சொடுக்குக. edit செய்யக்கூடிய கருப்பு வெள்ளை ஓரங்களை பெறுகிறோம். |
04:55 | சில சுவாரசியமான effects ஐ உருவாக்க filters ஐ பயன்படுத்தலாம், எனவே Filters க்கு சென்று, Distorts, Waves.
|
05:06 | இந்த பெட்டியில் சில சுவாரசியமான ஓரங்களை உருவாக்க பல தேர்வுகள் இருப்பதைக் காணலாம். |
05:18 | sliders ஐ சரிசெய்கிறேன். அதனால் சிறிய அலையைப் பெறலாம். |
05:30 | அது நன்றாக உள்ளது. |
05:32 | இப்போது சற்று blur ஐ சேர்க்க விரும்புகிறேன். |
05:34 | எனவே Filters க்கு செல்க. ஆனால் சில வித்தியாசமான effect ஐ பயன்படுத்த வேண்டும் என நினைக்கிறேன். |
05:41 | எனவே Noise க்கு சென்று Spread ஐ தேர்கிறேன். Horizontal ஐ 22 க்கு அமைக்கிறேன்.
|
06:02 | எனவே இப்போது toggle quick mask button க்கு சென்று அதை சொடுக்குக. |
06:09 | இங்கே விளிம்பு பகுதி இருப்பதைக் காணலாம். அதாவது ஒரு தேர்வு செய்துள்ளோம். |
06:17 | இப்போது அந்த layer க்கு ஒரு layer mask ஐ சேர்த்து முழு opacity க்கு வெள்ளையால் அதை நிரப்பபோகிறேன். படத்தில் ஒரு தேர்வு உள்ளது, தேர்வினுள் கருப்பு நிறத்தை இழுத்து நம் பகுதியை முழுதும் transparent ஆக்கலாம். |
06:39 | Select க்கு சென்று, None, தற்காலிகமாக transparent செய்த layer க்கு சென்று opacity ஐ 100% ஆக அதிகரிக்கலாம். |
06:53 | அதன் பின் ஓரங்களின் நிறத்தை மாற்ற விரும்பினால், colour dialog சென்று, ஒரு நிறத்தை தேர்ந்து layerக்கு இழுக்கவும். வித்தியாசமான நிற layer ஐ பெறுவோம். |
07:10 | அது நல்ல sketch effect ஆக இருந்தது. இந்த video க்காக Joseph க்கு நன்றி. |
07:17 | அங்கே என்ன நடந்தது என பார்ப்போம். |
07:22 | இங்கே ஓர் படத்தை தயாரித்துள்ளேன். இங்கே கருப்பிலிருந்து வெள்ளைக்கு சாம்பல் gradient உள்ளது. ஒரு பகுதி கருப்பு - வெள்ளையுடனும் நிரப்பப்படுகிறது. |
07:37 | முதல் படியாக ஏற்கனவே layer ஐ இரண்டாக்கியுள்ளேன். |
07:45 | இப்போது படத்தை தலைகீழ் நிறமாக்க விரும்புகிறேன், எனவே colours க்கு சென்று, Invert. |
07:53 | இப்போது இந்த படம் மிக சரியான எதிர்மறையாக இருப்பதைக் காணலாம். opacity ஐ 50% ஆக குறைக்கிறேன். |
08:06 | முழு படமும் சாம்பலாக உள்ளது. இது ஏனெனில் கருப்பின் பாதியும் வெள்ளையின் பாதியும் சாம்பலைத் தருகிறது. |
08:19 | இங்கே கருப்பின் பாதியும் வெள்ளையின் பாதியும் சாம்பலைத் தருகிறது.
|
08:28 | எனவே அடுத்த படி இந்த layer ஐ blur ஆக்குவது. |
08:33 | எனவே Filters சென்று, Blur, Gaussian Blur.
|
08:40 | இங்கே இந்த சங்கிலியை விடுவித்துள்ளேன். அதனால் vertical blur ஐ மட்டும் மாற்ற முடியும் horizontal blur ஐ அல்ல. ஏனெனில் படம் மிகவும் குழப்பம் அடைந்து விடும். |
08:55 | எனவே இதுவே நான் விரும்பிய முடிவு. Ok ல் சொடுக்குகிறேன். |
09:01 | இப்போது அடர் சாம்பல் மற்றும் லேசான சாம்பல் கோடுகளைக் காண்க. |
09:06 | இங்கே இந்த கோடுகள் foreground blur ன் விளைவு ஆகும்.
|
09:18 | இங்கே பெரிதாக்கி opacityஐ மேம்படுத்தும்போது இங்கே கருப்பு வெள்ளையையும் அவற்றிற்கிடையே ஒரு gradientஐயும் காண்க. |
09:32 | மற்ற layer ல் கருப்பு மற்றும் வெள்ளை உள்ளது. இப்போது இது மிகசரியான எதிர்மறை அல்ல. |
09:44 | எனவே opacity ஐ குறைக்கவும். இப்போது ஒரு பக்கம் அடர் சாம்பலும் அடுத்த பக்கம் மிதமான சாம்பலும் இருப்பதைக் காணலாம்.. |
10:00 | இங்கே இது மிதமான சாம்பல். இங்கேயும். |
10:05 | ஆனால் முதலில் கண் பார்வையின் மாயத்தை காண்போம். |
10:10 | இங்கே இது கண்டிப்பாக இங்கே இதை விட கருமையாக இருக்கிறது. எனவே colour picker ஐ தேர்ந்து... இங்கே இது red blue greenக்கு 128, 128, 128 என காணலாம். 50% சாம்பல். இது மிதமான சாம்பல். இங்கே இது 127,127,127. 50% சாம்பல்.
|
10:43 | இங்கே அடிப்படையில் ஒரே நிறமான சாயல்கள் சற்று உள்ளன. இந்த பக்கம் 127 உள்ளது. இந்த பக்கம் 128 உள்ளது. |
10:57 | 225 ஐ 2 ஆல் வகுத்தோமானால் தசம புள்ளி இல்லையெனில் 127 அல்லது 128 ஐ பெறுகிறோம்.
|
11:15 | இப்போது இந்த layerகளை ஒன்றுசேர்க்க வேண்டும். |
11:19 | எனவே Layer க்கு சென்று, Merge down. |
11:29 | எனவே இங்கே Joseph ... அவர் படத்தில் கொண்டுள்ள colour level பெறுக. இப்போது இந்த sliderகளை இழுத்து கருப்பை திடமாகவும் சாம்பலை வெள்ளையாகவும் மாற்றுக. |
11:56 | variable thicknessன் கோட்டைக் காணலாம். இந்த sliderகளை இடப்பக்கமாக இழுத்தால் மேலும் நெருக்கமாகின்றன. |
12:12 | எனவே முழு படத்தையும் காண்போம், Shift + Ctrl + E. முன்னர் வைத்திருந்த color fills மற்றும் gradientக்கு பதிலாக கோடுகள் உள்ளதைக் காணலாம். |
12:25 | இது புரிந்திருக்கும் என நம்புகிறேன். இதை செய்ய முயற்சிக்கவும். |
12:31 | சில படங்கள் இந்த effectல் மிக நன்றாக இருக்கும் |
12:37 | Joseph ன் படம் மிக வேடிக்கையாக இருந்தது. எனக்கு பிடித்திருக்கிறது.
|
12:44 | இந்த வாரம் GIMP tutorial லில் புதிய பகுதியை ஆரம்பிக்கிறேன். |
12:48 | home page க்கு சென்று கீழே அங்கே வலப்பக்கம் photo group at 23HQ.com ஐ காணலாம். |
13:00 | இங்கே நான் காட்டும் உங்களின் பல படங்கள் உள்ளன. வாராவாரம் அவற்றில் ஒன்றை எடுத்து அதை பற்றி கொஞ்சம் சொல்கிறேன். இன்று இங்கே இதை எடுக்கிறேன். |
13:13 | இது Mainzelmann ஆல் fireworks ல் உருவாக்கப்பட்டது. இந்த படத்தில் white balance மற்றும் நிறம் பற்றி கருத்து கேட்கிறார். இது பார்க்க மதிப்புடையது என நினைக்கிறேன். |
13:28 | நான் கருத்தளித்தேன். ஆனால் அது Germanல் மட்டும் இருந்தது. |
13:32 | சரி அதைப் பார்ப்போம். |
13:35 | இந்த படம் வெறுமனே ஒரு இணையத்தளத்திலிருந்து இழுத்து இங்கே tool box ல் விடப்பட்டது. பின் GIMP இந்த படத்தை இணையத்திலிருந்து திறக்கிறது.
|
13:48 | வானம் சற்று கருமையாக்கப்பட வேண்டும் என நினைக்கிறேன். |
13:53 | கீழே இங்கே உள்ள கட்டிடங்கள் நன்றாக உள்ளன. அது படத்திலேயே இருக்க வேண்டும். ஆனால் வானம் இங்கே கிட்டதட்ட கருப்பாக இருக்க வேண்டும் இது போன்ற உண்மையான கருப்பு அல்ல. அநேகமாய் இந்த புகை மேகங்களில் கொஞ்சம் இங்கேயே சேமிக்கப்படும். |
14:13 | எனவே Curves Tool ஐ தேர்ந்து நாம் செய்யக்கூடியதைக் காண்போம். |
14:24 | இங்கே இந்த படத்தில் அதிகமாக வெள்ளை நிறம் இருப்பதைக் காணலாம். |
14:31 | இந்த படத்தில் exposure நன்றாக உள்ளது. histogramல் மதிப்புகளும் நன்றாக பகிரப்பட்டுள்ளன. இங்கே கருப்பு உள்ளது. அது உண்மையான கருப்பு இல்லை என காணலாம். |
14:48 | இதை இங்கே சற்று கருப்பாக்கலாம். |
14:56 | எனவே இந்த கருப்பு புள்ளியை இது வரை இழுக்கிறேன். |
15:01 | கருப்பு புள்ளி கருப்பின் வரையறை ஆகும். இப்போது இது கருப்பு எனலாம். |
15:12 | எனவே இப்போது இந்த வானவேடிக்கை மேலும் முக்கியமானதாக இருப்பதைக் காணலாம். histogramன் இந்த பகுதியை மேலும் கருமையாக்க விரும்புகிறேன்.
|
15:26 | எனவே இங்கே ஒரு புள்ளியை வைத்து வளைவை கீழே இழுக்கிறேன். |
15:33 | இங்கே கட்டிடத்திற்கு சற்று இடம் விட வேண்டும். |
15:41 | இது கட்டிடத்தின் முக்கிய பகுதி என நினைக்கிறேன். |
15:52 | எனவே வளைவை இங்கே கீழே இழுக்கிறேன். இன்னும் அங்கே கட்டிடம் இருப்பதைக் காணலாம். |
16:07 | இப்போது இங்கே இந்த இடம் கருப்பாக உள்ளது இது வெள்ளையாக உள்ளது. அநேகமாய் இது இப்போது மேலும் வெள்ளையாய் உள்ளது. எனவே இதை சற்று கீழே இழுக்க வேண்டும். |
16:25 | வினோதமாய் சிலவற்றை முயற்சிப்போம். |
16:32 | இல்லை அது வேலை செய்யவில்லை. |
16:35 | புள்ளிகளை இழுப்போம். |
16:39 | இதை முன்னர் முயற்சிக்கவில்லை. எனவே சற்று சோதிக்கிறேன். |
16:51 | இது வேலை செய்கிறது என நினைக்கிறேன். |
16:54 | முதலில் படத்தை மேலும் வெப்பமாக்க பார்த்தேன் ஆனால் இப்போது நிறங்கள் நன்றாக வந்துள்ளன. |
17:03 | இந்த படத்துக்கு இவ்வளவுதான் என நினைக்கிறேன். |
17:07 | மேலும் தகவல்களுக்கு http://meetthegimp.org க்கு செல்க. கருத்துக்களை அனுப்ப விரும்பினால் info@meetthegimp.org க்கு அனுப்பவும் |
17:22 | இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி. |