Java/C2/Relational-Operations/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 11:28, 16 July 2014 by Pratik kamble (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:01 Java-ல் Relational Operators குறித்த spoken tutorial-க்கு நல்வரவு.
00:07 நாம் கற்கபோவது
00:09 boolean data type
00:10 Relational operators மற்றும்
00:12 Relational operators-ஐ பயன்படுத்தி data-ஐ ஒப்பிடுவது
00:17 நாம் பயன்படுத்துவது

Ubuntu 11.10,

JDK 1.6 மற்றும்

Eclipse 3.7

00:26 tutorial-ஐ தொடர, java-ல் data types தெரிந்திருக்க வேண்டும்
00:31 இல்லையெனில் அதற்கான tutorial-ஐ எங்கள் வலைத்தளத்தில் காணவும்.
00:39 Relational operatorகள் conditionகளை சோதிக்க பயன்படுகிறது.
00:43 அதன் வெளியீடு... boolean data type-ன் variable ஆகும்
00:48 ஒரு boolean data type-ன் அளவு 1 bit
00:51 இரண்டு மதிப்புகளை மட்டும் அது சேமிக்கிறது.
00:54 True அல்லது False
00:56 condition... உண்மை எனில் வெளியீடு True.
00:59 condition... உண்மை இல்லையெனில் வெளியீடு False.
01:06 இது இருக்கும் Relational operatorகளின் பட்டியல்.
01:10 * greater than
01:12 * less than
01:13 * equal to
00:14 * greater than or equal to
01:15 * less than or equal to
01:17 * not equal to
01:19 ஒவ்வொன்றையும் விரிவாக காண்போம்.
01:22 Eclipse-க்கு வருவோம்.
01:27 இங்கே Eclipse IDE மற்றும் மீதி code-க்கு தேவையான அமைப்பும் உள்ளது
01:33 class BooleanDemo-ஐ உருவாக்கி Main method-ஐ சேர்த்துள்ளோம்.
01:38 சில expressionகளை சேர்ப்போம்.
01:41 எழுதுக boolean b ;
01:47 keyword boolean... variable b-ன் data type... boolean என்கிறது
01:53 நம் condition-ன் முடிவை b-ல் சேமிப்போம்.
01:56 variable weight-ஐ define செய்து அதை பயன்படுத்தி condition-ஐ சோதிப்போம்.
02:05 int weight equal to 45;
02:13 weight-ன் மதிப்பு 40-ஐ விட பெரியதா என சோதிப்போம்
02:18 b equal to weight greater than 40;
02:28 இது சொல்வது... variable-ன் மதிப்பு 40-ஐ விட பெரியது எனில் முடிவை b-ல் சேமி;
02:37 இப்போது b-ன் மதிப்பை அச்சடிப்போம்.
02:41 System dot out dot println(b);
02:49 சேமித்து இயக்கவும்.
02:59 பார்ப்பது போல வெளியீடு True.
03:02 மதிப்பு... 40-ஐ விட சிறியது எனில் நடப்பதைக் காண்போம்.
03:07 weight-ஐ 30 ஆக்குவோம்.
03:12 சேமித்து இயக்குவோம்
03:20 எதிர்பார்த்தது போல வெளியீடு False.
03:24 ஒரு மதிப்பை விட மற்றொன்று பெரியதா என சோதிக்க greater than symbol பயன்படுகிறது.
03:30 ஒரு மதிப்பை விட மற்றொன்று சிறியதா என சோதிக்க less than symbol பயன்படுகிறது.
03:37 greater than-ஐ less than symbol ஆக்குவோம்
03:43 weight-ன் மதிப்பு 40-ஐ விட சிறியதா என சோதிக்கிறோம்.
03:48 சேமித்து இயக்கவும்
03:56 எதிர்பார்த்து போல வெளியீடு True என காண்கிறோம்.
04:01 weight-ன் மதிப்பை 45 என மாற்றி வெளியீட்டைக் காண்போம்.
04:09 சேமித்து இயக்கவும்.
04:16 False என பெறுகிறோம். ஏனெனில் condition, weight less than 40 என்பது உண்மையல்ல.
04:25 இப்போது ஒரு மதிப்பை இன்னொன்றுக்கு சமமா என சோதிப்பதைக் காண்போம்.
04:31 அதற்கு பயன்படுத்துவது double equal to symbols.
04:35 less than symbol-ஐ double equal to ஆக மாற்றலாம்
04:41 சேமித்து இயக்கவும்
04:48 weight மதிப்பு 40-க்கு சமமில்லை என்பதால் வெளியீடு False.
04:55 weight-ஐ 40 ஆக மாற்றி வெளியீட்டைக் காண்போம்.
05:01 சேமித்து இயக்கவும்.
05:08 பார்ப்பது போல வெளியீடு True
05:12 இவ்வாறு சமமா என கண்டறிய Double equal to பயன்படுகிறது.
05:16 சில சமயம் சமமா என சோதிக்க சிலர் single equal to-ஐ பயன்படுத்துவதால் கவனமாக இருக்கவும்.
05:22 இது தேவையில்லாத பிழைகளைக் கொடுக்கிறது.
05:26 அடுத்து less than or equal to-ஐ சோதிப்பதைக் காண்போம்
05:30 அதற்கு, equal to-க்கு முன் less than symbol-ஐ பயன்படுத்துவோம்
05:35 double equal to-ஐ less than equal to ஆக மாற்றுவோம்.
05:42 சேமித்து இயக்கவும்
05:50 எதிர்பார்த்து போல வெளியீடு True.
05:53 less than சோதனை செயல்படுகிறதா என பார்க்க weight மதிப்பை மாற்றுவோம்
05:59 40-ஐ 30 ஆக்குவோம்
06:04 சேமித்து இயக்குவோம்
06:14 weight... 40-ஐ விட சிறியது என்பதால் 40-க்கு சமமில்லை என்றாலும் வெளியீடு True என காண்கிறோம்.
06:22 weight-ன் மதிப்பு 40-ஐ விட பெரியது எனில்...
06:24 50 என்போம். சேமித்து இயக்கவும்.
06:39 weight-ன் மதிப்பு 40-க்கு சமமில்லை என்பதால் வெளியீடு False.
06:44 மேலும் இது 40-ஐ விட சிறியது அல்ல.
06:48 greater than or equal to-ஐ சோதிக்க equal to symbol-க்கு முன் greater than-ஐ பயன்படுத்துவோம்.
06:55 அதை முயற்சிப்போம்.
06:57 less than equal to-ஐ greater than equal to ஆக்குவோம்
07:04 சேமித்து இயக்குவோம்
07:10 weight... 40-ஐ விட பெரியது என்பதால் வெளியீடு true என காண்கிறோம்
07: 16 weight-ஐ 40-க்கு குறைவான மதிப்பாக்குவோம். 30 என்போம்.
07:25 சேமித்து இயக்குவோம்
07:32 weight-ன் மதிப்பு 40-ஐ விட பெரியதும் அல்ல 40-க்கு சமமும் அல்ல என்பதால் false.
07:39 அடுத்து not equal to-ஐ சோதிப்பதைப் பார்ப்போம்
07:46 இது equal to-க்கு முன் exclamation mark-ஐ பயன்படுத்துவதன் மூலம் செய்யப்படுகிறது.
07:53 greater than-ஐ exclamation ஆக்குவோம்
07:59 இது சொல்வது... weight-ன் மதிப்பு 40-க்கு சமமில்லை எனில் முடிவை b-ல் சேமி
08:08 சேமித்து இயக்கவும்
08:16 weight-ன் மதிப்பு 40-க்கு சமமில்லை என்பதால் வெளியீடு true
08:23 weight-ஐ 40-ஆக மாற்றி வெளியீட்டைக் காண்போம்.
08:28 30-ஐ 40 ஆக்குக.
08:31 சேமித்து இயக்கவும்
08:38 weight not equal to 40 என்பது தவறு என்பதால் false-ஐ பெறுகிறோம்.
08:45 not equal to condition-ஐ equal to condition-க்கு எதிர்மறை எனலாம்.
08:50 இவ்வாறுதான் Java-ல் பல relational operatorகளை data-ஐ ஒப்பிட பயன்படுத்துகிறோம்.
08:58 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
09:01 நாம் கற்றது, boolean data type
09:06 relational operators மற்றும்
09:08 இரண்டு மதிப்புகளை ஒப்பிட relational operators-ஐ பயன்படுத்துவது
09:13 இப்போது பயிற்சி. காட்டப்பட்டுள்ள இரண்டு expressionகளும் சமமா என சோதிக்கவும்.
09:23 மேலும் அறிய இந்த இணைப்பைக் காணவும்
09:28 இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது
09:31 இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
09:36 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
09:40 இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
 மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org 
09: 50 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.


10:00 மேலும் விவரங்களுக்கு
[1] 
10:05 தமிழாக்கம் பிரியா. நன்றி



Contributors and Content Editors

Pratik kamble, Priyacst