GIMP/C2/The-Curves-Tool/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 13:12, 4 July 2014 by Ranjana (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration


00:25 GIMP tutorial க்கு நல்வரவு.
00:28 வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது.
00:33 இப்போது இன்றைய tutorial உடன் ஆரம்பிக்கலாம்.
00:35 இது curves பற்றியது.
00:37 முதலில் tool box ல் Curves tool ஐ செயலாக்குகிறேன். பின் இந்த படத்தில் சொடுக்கலாம்.
00:44 Curves tool ல் ஒரு histogram இருப்பதைக் காணலாம். இங்கே சாம்பல் அளவீடுடன் இரு பட்டைகள் உள்ளன.


00:58 curves tool ல் தேர்ந்தெடுக்க preview, save, open போன்ற சில buttonகள் உள்ளன.
01:06 ஆனால் இப்போதைக்கு Curves tool ன் சாம்பல் அளவீடு பட்டையை காண்போம்.


01:11 இங்கே இந்த பட்டை... மூல படத்தின் வெவ்வேறு நிற வீச்சை காட்டுகிறது.
01:20 இந்த பட்டையில் சில pixels மிக கருமையாகவும் சில மிக வெள்ளையாகவும் மற்றும் சில கருப்பு வெள்ளைக்கு இடையும் உள்ளன.
01:33 இங்கே கிடைமட்ட பட்டை 256 வெவ்வேறு நிற சாயலைக் கொண்டுள்ளது
01:39 இந்த பட்டையின் ஆரம்ப புள்ளி zero. அது கருப்பு. கடைசி புள்ளி 255. அது வெள்ளை.
01:49 உதாரணமாக இங்கே இந்த 184... சாம்பல் நிறம்.


01:53 இந்த படம் பல நிறங்களைக் கொண்டுள்ளது. channel ஐ மாற்றுவதன் மூலம் பல்வேறு நிறங்களை இங்கே என்னால் காட்ட முடியும்.
02:01 colour channel ல் red ஐ தேர்ந்தெடுக்கலாம். படத்தில் சிவப்பு நிற சாயலைக் காணலாம்.
02:07 அதேபோல green மற்றும் blue க்கு மாற்றி அதனதன் நிறச்சாயல்களை பெறலாம்.
02:14 இந்த படத்தில் அதிகமான மதிப்புகளை கொண்ட green channel மேலாதிக்க channel ஆக இருப்பதால் இது மிக வியப்பாக இல்லை.
02:24 இப்போது reset channel ஐ சொடுக்குக.
02:27 ஒவ்வொரு சாயலின் மேலே histogram ன் வளைவானது luminosity ஐ கொண்ட pixel ன் எண்ணிக்கையாகும்.
02:38 இங்கே ஒரு பகுதி உள்ளது. அங்கு பட்டையின் மீது இந்த terminal மற்றும் இந்த terminal ல் கிட்டத்தட்ட சம எண்ணிக்கை கொண்ட pixels உள்ளன
02:49 இங்கே உயர்மட்ட நிற வீச்சு உள்ளதாக histogram காட்டுகிறது.


02:56 curves tool செயலில் இருக்கும்போது படத்தினுள் செல்க. mouse cursor ஒரு சிறு dropper ஆக மாறுகிறது. இங்கே சொடுக்கும்போது, histogram ல் கோடு அந்த புள்ளிக்கு நகருகிறது.
03:10 எந்த நிறசாயல் படத்தினுள் எங்குள்ளது என காண படத்தினுள் சொடுக்கி சுற்றி நகருக.
03:18 இப்போது இங்கே கிடைமட்ட பட்டையை பார்த்தோம்.
03:22 இது இங்கே வெளியீடு.
03:26 இங்கேயும் 256 பல்வேறு மதிப்புகள் உள்ளன. அவை இந்த படத்தை வடிவமைக்கிறது.
03:33 கிடைமட்ட பட்டை வளைவினுள் வைக்கப்படுகிற data ஐ கொண்டுள்ளது. செங்குத்து பட்டை வெளியே வைக்கப்படுகிற data ஐ கொண்டுள்ளது.
03:44 இடையில் graph க்கு குறுக்கே இருக்கும் இந்த கோடு translation function ஆகும்.
03:53 சாம்பலின் நடுப்பகுதியிலிருந்து translation curve க்கு போகும்போது, பின் இடப்பக்கம் செங்குத்து பட்டைக்கு போகும்போது சாம்பலின் நடுப்பகுதியை மீண்டும் தொடுகிறேன்.
04:04 விரும்பும்போது இந்த வளைவை இழுக்கலாம். இதை கீழே இழுக்கும்போது படம் சற்று கருமையாவதைக் காணலாம்.
04:13 இப்போது சாம்பலின் நடுப்பகுதியிலிருந்து மேலே வளைவுக்கு செல்லும் போது பின் இடப்பக்கம் செல்க, அடர் சாம்பலில் நிறுத்துகிறேன்.
04:23 இங்கே கீழ் பட்டை உண்மையான உள்ளீடு என்பதையும் செங்குத்து பட்டை curves tool ன் வெளியீடு என்பதையும் இங்கே பாருங்கள்.
04:34 இந்த வளைவை பல வழிகளில் மாற்றலாம், அதற்கு வரம்பு கிட்டத்தட்ட இல்லை.
04:43 ஒரு வரம்பு மட்டும் உள்ளது. அது... பின்னோக்கி வளைவை இழுக்க முடியாது. அதை செய்யும்போது curves tool ன் அந்த புள்ளி இழக்கப்படுகிறது.


04:53 ஆனால் படத்தில் பிரகாசமான pixels ஐ பார்க்க விரும்பவில்லை எனில், அதற்கு அனைத்து புள்ளிகளையும் கீழே இழுக்கலாம். பின் படம் கிட்டத்தட்ட கருப்பாகும்.
05:10 இந்த புள்ளியை சற்று மேலே இங்கே இழுக்கிறேன். பின் இங்கே சற்று பிரகாசமானதை காணலாம்.
05:17 சில வருடங்களுக்கு முன் பாணியில் இருந்த படங்கள் போன்று வரும் வரை சுற்றி இந்த Curves tool உடன் விளையாடலாம்.
05:28 reset button ஐ சொடுக்குவதன் மூலம் வளைவை மீள் துவக்கி உண்மை வளைவை பெறலாம்.


05:34 Linear Mode மற்றும் Logarithmic Mode போன்ற மேலும் சில Buttonகள் உள்ளன.
05:42 logarithmic mode ல் சிறிய மதிப்புகள் உயர்த்தப்படுகிறது.
05:49 இங்கே linear mode ல் இங்கே இந்த கோட்டிலிருந்து இந்த கோடு இரட்டை மதிப்பை கொண்டுள்ளது.
05:56 logarithmic mode ல் இந்த கோடு 1 ஆகலாம், இது 10, இது 100 மற்றும் இது 1000.
06:06 ஒவ்வொரு படியும் 10 மடங்கு அதிக மதிப்பை தருகிறது. இதில் linear mode ல் சிறிய pixels மறைக்கப்படுவதைக் காண்க.
06:17 இங்கே இந்த மூலையில் 250 க்கும் அதிகமான மதிப்புடைய pixels உள்ளது என சொல்ல முடியாது என காண்க.
06:27 ஆனால் logarithmic mode ல், படத்தின் முழு வீச்சுக்கும் pixels இருப்பதைக் காணலாம்.
06:40 பின் இங்கே Curve type என்ற button உள்ளது, இதுவரை இந்த tool ஐ நான் பயன்படுத்தியபோது , curve ... வளைவை பெற்றேன். ஆனால் curve type ஐ நான் மாற்றும் போது வளைவு மீது உண்மையில் வரைந்து சற்று வேடிக்கையான சிலதை பெறலாம் .
07:12 பின் save dialog மற்றும் open dialog button உள்ளன.
07:17 வளைவுகளை மாற்றுவதனுடன் முடிக்கும் போது பிற்கால பயன்பாட்டிற்கு அதை சேமிக்கலாம். விரும்பும்போது மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளலாம்
07:28 திருமணங்களை அதிகமாக படம் பிடிக்கும் ஒருவன் வெள்ளை ஆடைக்கு வெள்ளையில் அமைப்பைக் கொடுக்க நன்கு சீர்செய்யப்பட்ட ஒரு சிறப்பான பிரகாசமான shot curve ஐ வைத்திருப்பான்.
07:42 படத்தில் curves tool ஐ எவ்வாறு பயன்படுத்துவது.
07:47 படத்தின் அடர்ந்த பகுதியை மேலும் அடர்த்தியாக்க விரும்புகிறேன்.
07:52 மத்தியில் இருப்பதை அவ்வாறே விட்டுவிடுகிறேன். பிரகாசமான பகுதியை மேலும் பிரகாசமாக்க விரும்புகிறேன்.
08:00 இதை செய்ய ‘S’ curve ஐ பயன்படுத்துவேன் என நினைக்கிறேன்.
08:06 கீழ் பகுதியில் வளைவை சற்று கீழே இழுக்கிறேன். அடந்த பகுதி மேலும் அடர்த்தியாவதைக் காணலாம். பிரகாசமான பகுதிக்கு செல்கிறேன். வளைவை மேலே இழுத்து பிரகாசமான பகுதியை மேலும் பிரகாசமாக்குகிறேன்.
08:25 மேலும் பிரகாசம் பெற வளைவை சற்று மேலே இழுக்கலாம்.
08:39 OK ஐ சொடுக்கும் போது வளைவுகளின் மதிப்புகள் சேமிக்கப்படுகிறது.
08:44 இந்த செயல்முறையை மீண்டும் இங்கு செய்யும்போது, histogram மாறியிருப்பதைக் காணலாம்.
08:52 இங்கே இடையில் எந்த மதிப்புகளும் இல்லை. pixelகளும் இல்லை. logarithmic mode ஐ சொடுக்கும்போது, அங்கேயும் சில Pixelகளுக்கு மதிப்புகள் இல்லை.
09:04 ஒவ்வொரு முறையும் curves tool ஐ பயன்படுத்தும்போது, படத்தில் சில pixels ஐ இழக்கிறோம்.
09:12 எனவே எதிர்மறையாக செய்வதன் மூலம் வளைவு செயல்முறையை செயல்நீக்க முயற்சிக்க வேண்டாம். அதாவது வளைவை இங்கு மேல் இழுப்பதும் இங்கு கீழ் இழுப்பதும்.
09:24 OK ல் சொடுக்கவும். இப்போது இது மேலும் மேலும் மோசமாவதைக் காணலாம். முடிவில் படத்தில் colour banding இருக்கும்.
09:38 எனவே கவனிப்புடன் curves tool பயன்படுத்தி மாற்றத்தை உருவாக்கவும். இல்லையெனில் முடிவில் pixelகளை இழந்து ஒரு image colour bandings ஐ அதில் பெறுவீர்.
09:56 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
10:01 அடுத்த tutorial ஐ பார்க்க பரிந்துரைக்கிறேன்.


10:08 கருத்துகளை அனுப்ப விரும்பினால், info@meetthegimp.org க்கு வேண்டும். கருத்துகளை உங்களிடமிருந்து பெற விரும்புகிறேன்.
10:23 இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா.

Contributors and Content Editors

Priyacst, Ranjana