KTurtle/C3/Control-Execution/Tamil
From Script | Spoken-Tutorial
Visual Cue | Narration |
---|---|
00.01 | அனைவருக்கும் வணக்கம். |
00.03 | KTurtle ல் Control Execution குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00.10 | இந்த டுடோரியலில் நாம் கற்க போவது |
00.13 | 'while' loop மற்றும் |
00.15 | 'for' loop |
00.17 | இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது, Ubuntu Linux OS பதிப்பு 12.04 KTurtle பதிப்பு 0.8.1 beta. |
00.32 | KTurtle ல் வேலைசெய்ய அடிப்படை அறிவு உங்களுக்கு இருப்பதாகக் கொள்கிறோம் |
00.38 | இல்லையெனில், அதற்கான டுடோரியலுக்கு, எங்கள் தளத்திற்கு செல்லவும். http://spoken-tutorial.org |
00.45 | ஒரு புதிய KTurtle Application ஐ திறப்போம். |
00.48 | Dash home ல் சொடுக்குக. |
00.50 | Search bar, ல் டைப் செய்க KTurtle. |
00.53 | அந்த தேர்வில் சொடுக்குக. KTurtle Application திறக்கிறது. |
00.59 | முதலில் control execution என்றால் என்ன என்பதை விளக்குகிறேன். |
01.05 | Control execution என்பது ஒரு ப்ரோகிராமின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது. |
01.10 | ப்ரோகிராமின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த வெவ்வேறு நிபந்தனைகள் பயன்படுத்தப்படுகின்றன. |
01.16 | ஒரு குறிப்பிட்ட நிபந்தனை நிறைவேறும் வரை மீண்டும் மீண்டும் இயக்கப்படும் code ன் ஒரு தொகுதி Loop ஆகும். |
01.25 | உதா. “while” loop மற்றும் “for” loop |
01.30 | “while” loop உடன் டுடோரியலை ஆரம்பிக்கலாம் |
01.34 | “while” loop ல், loop னுள் இருக்கும் code ஆனது boolean 'false' ஐ மதிப்பிடும் வரை திரும்ப திரும்ப இயங்குகிறது. |
01.42 | “while” loop ன் அமைப்பை விளக்குகிறேன்.
while loop condition { do something with loop increment variable } |
01.56 | text editor ல் ஏற்கனவே code ஐ கொண்டுள்ளேன். |
01.59 | text editor ல் இருந்து ப்ரோகிராமை பிரதி எடுத்து KTurtle editor னுள் ஒட்டுகிறேன் |
02.07 | டுடோரியலை இங்கே இடைநிறுத்தி உங்கள் KTurtle editor னுள் ப்ரோகிராமை டைப் செய்க. |
02.13 | ப்ரோகிராமை டைப் செய்த பின் டுடோரியலை தொடரவும் |
02.18 | இது சற்று மங்கலாக தெரியலாம். எனவே program text ஐ பெரிதாக்குகிறேன் |
02.25 | code ஐ விளக்குகிறேன். |
02.27 | # குறி அதற்கடுத்து எழுதப்பட்ட வரியை comment செய்கிறது. |
02.32 | அதாவது, ப்ரோகிராம் இயங்கும்போது இந்த வரி இயக்கப்பட மாட்டாது |
02.38 | reset command... Turtle ஐ முன்னிருப்பு நிலைக்கு அமைக்கிறது. |
02.43 | $x=0 variable x ன் மதிப்பை பூஜ்ஜியத்திற்கு Initialize செய்கிறது. |
02.52 | ஒரு ப்ரோகிராமில் செய்தி message " " என்ற keyword க்கு பின் இரட்டை மேற்கோள்களில் கொடுக்கப்படுகிறது
“message” command... “string” ஐ உள்ளீடாக ஏற்கிறது. |
03.04 | இது string லிருந்து text ஐ கொண்ட ஒரு pop-up dialog box ஐ காட்டுகிறது. |
03.11 | while $x<30 “while” condition ஐ சோதிக்கிறது. |
03.17 | $x=$x+3 variable $x ன் மதிப்புடன் 3 ஐ சேர்க்கிறது |
03.27 | fontsize 15 print command ஆல் பயன்படுத்தப்படும் font அளவை அமைக்கிறது. |
03.35 | Fontsize எண்ணை உள்ளீடாக பெற்று pixelகளில் அமைக்கிறது. |
03.42 | forward 20... “Turtle” ஐ canvas ல் 20 படிகள் முன்னோக்கி செல்ல கட்டளையிடுகிறது. |
03.52 | print $x canvas ல் variable x ன் மதிப்பை காட்டுகிறது. |
04.01 | ப்ரோகிராமை இயக்க “Run” button ஐ சொடுக்குகிறேன். |
04.05 | ஒரு message dialog box தோன்றுகிறது. OK ல் சொடுக்குகிறேன். |
04.11 | 3 லிருந்து 30 வரை மூன்றால் பெருக்கிய விடை canvas ல் காட்டப்படுகிறது. |
04.17 | “Turtle” canvas ல் 20 படிகள் முன்னோக்கி நகருகிறது. |
04.22 | அடுத்து “for” loop ல் வேலை செய்யலாம் |
04.26 | “for” loop ஒரு counting loop. |
04.29 | ஒவ்வொரு முறையும் “for” loop னுள் உள்ள code இயக்கப்படுகிறது, |
04.34 | கடைசி மதிப்பை அடையும் வரை variable மதிப்பு அதிகரிக்கப்படுகிறது. |
04.41 | “for” loop ன் அமைப்பை விளக்குகிறேன். |
04.46 | for variable = ஆரம்ப எண் to முடிவு எண் {
Statement } |
04.55 | நடப்பு ப்ரோகிராமைத் துடைக்கிறேன். |
04.59 | clearcommand ஐ டைப் செய்து canvas ஐ துடைக்க run ஐ சொடுக்கவும். |
05.05 | text editor ல் இருந்து ப்ரோகிராமை பிரதி எடுத்து அதை KTurtle editor னுள் ஒட்டுகிறேன் |
05.14 | இங்கே டுடோரியலை இடைநிறுத்தி ப்ரோகிராமை உங்கள் KTurtle editor னுள் டைப் செய்க. |
05.20 | ப்ரோகிராமை டைப் செய்த பின் டுடோரியலைத் தொடரவும். |
05.25 | இது சற்று மங்கலாக தெரியலாம். எனவே program text ஐ பெரிதாக்குகிறேன் |
05.32 | ப்ரோகிராமை விளக்குகிறேன். |
05.34 | "#" குறி அதற்கடுத்து எழுதப்பட்ட வரியை comment செய்கிறது. |
05.39 | reset command... Turtle ஐ முன்னிருப்பு நிலைக்கு அமைக்கிறது. |
05.44 | $r=0 variable r க்கு மதிப்பு பூஜ்ஜியத்தை Initialize செய்கிறது. |
05.52 | for $x= 1 to 15 “for” condition ஐ 1 லிருந்து 15 வரை சோதிக்கிறது. |
06.01 | $r=$x*($x+1)/2 variable r ன் மதிப்பைக் கணக்கிடுகிறது. |
06.12 | fontsize 18 print command ஆல் பயன்படுத்தப்படும் font அளவை அமைக்கிறது. |
06.19 | print $r variable r ன் மதிப்பை canvas ல் காட்டுகிறது |
06.26 | forward 15 Turtle ஐ canvas ல் 15 படிகள் முன்னோக்கி நகர கட்டளையிடுகிறது. |
06.34 | go 10,250 Turtle ஐ canvas ன் இடப்பக்கத்திலிருந்து 10 pixelகளும் canvas ன் மேலிருநது 250 pixelகளும் நகரும் படி கட்டளையிடுகிறது. |
06.48 | “Turtle” அனைத்து print commandகளையும் நேர இடைவெளி ஏதுமின்றி காட்டுகிறது. |
06.54 | “Wait 2” command அடுத்த command ஐ இயக்கும் முன் Turtle ஐ 2 நொடிகள் காத்திருக்க வைக்கிறது. |
07.04 | “print” command இரட்டை மேற்கோள்களில் இருக்கும் “string” ஐயும் variable $r ஐயும் காட்டுகிறது. |
07.13 | ப்ரோகிராமை இயக்க “ Run” button மீது சொடுக்குகிறேன். |
07.17 | முதல் 15 இயல்எண்களின் கூட்டல் தொடர் வரியை மற்றும் முதல் 15 இயல் எண்களின் கூட்டுத்தொகைக் canvas ல் காட்டப்படுகிறது. |
07.27 | Turtle canvas ல் 15 படிகள் முன்னோக்கி நகருகிறது. |
07.32 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
07.37 | சுருங்க சொல்ல. |
07.40 | இந்த டுடோரியலில், |
07.44 | “while”' loop மற்றும் “for” loop ஐ பயன்படுத்தக் கற்றோம் |
07.47 | பயிற்சியாக பின்வரும் ப்ரோகிராம்களை எழுதுக |
07.54 | “while” loop ஐ பயன்படுத்தி 2 ன் மடங்குகளை மதிப்பிடுக |
07.58 | “for” loop ஐ பயன்படுத்தி ஒரு எண்ணின் பெருக்கல் வாய்ப்பாட்டை மதிப்பிடுக |
08.03 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What is a Spoken Tutorial |
08.08 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
08.12 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
08.17 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: |
08.20 | ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
08.23 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
08.27 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
08.36 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
08.41 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
08.48 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro |
08.54 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |