KTurtle/C3/Programming-Concepts/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 16:42, 2 July 2014 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Visual Cue Narration
00.01 அனைவருக்கும் வணக்கம்.
00.03 KTurtle ல் ப்ரோகிராமிங் கோட்பாடுகள் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு.
00.08 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது
00.12 KTurtle ல் ஒரு ப்ரோகிராம் எழுதுதல்
00.15 பயனரின் உள்ளீட்டை சேமிக்க variableகளை பயன்படுத்துதல்
00.18 canvas ல் அச்சடிக்க print command ஐ பயன்படுத்துதல்
00.22 ஒரு வரியை Comment செய்தல்
00.24 இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது, Ubuntu Linux OS பதிப்பு 11.10. KTurtle பதிப்பு 0.8.1 beta.
00.37 KTurtle ல் வேலைசெய்ய அடிப்படை அறிவு உங்களுக்கு இருப்பதாகக் கொள்கிறோம்
00.43 இல்லையெனில், அதற்கான டுடோரியலுக்கு, எங்கள் தளத்திற்கு செல்லவும். http://spoken-tutorial.org
00.49 ஆரம்பிக்கும் முன், KTurtle பற்றிய சில அடிப்படை விஷயங்களைக் காண்போம்.
00.55 canvas ல் காட்டப்படும் "Turtle"... "sprite" எனப்படும்.
01.00 "Sprite" என்பது திரை முழுதும் நகரும் ஒரு சிறிய படம். உ.தா. Cursor ஒரு sprite.
01.10 "spritehide" command... Turtle ஐ canvas ல் இருந்து மறைக்கிறது.
01.15 "spriteshow" command... Turtle மறைந்திருந்தால் அதைக் காட்டுகிறது.
01.21 "clear" command... வரைந்திருக்கும் அனைத்தையும் canvas லிருந்து துடைக்கிறது.
01.27 KTurtle ல்,
01.29 "$ " குறியானது variableகளின் கொள்கலன் ஆகும்.
01.34 "*"(asterisk) இரு எண்களின் பெருக்கலுக்கு பயன்படுகிறது.
01.41 "^"(caret) எண்ணின் அடுக்கைக் குறிக்கிறது.
01.45 "#"(hash) குறியானது அதற்குபின் எழுதிய வரியை comment செய்கிறது.
01.50 "sqrt" என்பது ஒரு எண்ணின் வர்க்க மூலத்தைக் கண்டுபிடிக்கும் ஒரு உள்ளடங்கிய function ஆகும்.
01.58 புதிய KTurtle Application ஐ திறப்போம்
02.02 Dash home ல் சொடுக்கி>> Media Apps.
02.07 Type க்கு கீழே, Education பின் KTurtle ஐ தேர்க.
02.13 KTurtle application திறக்கிறது.
02.20 டெர்மினலை பயன்படுத்தியும் KTurtle ஐ திறக்கலாம்.
02.24 டெர்மினலை திறக்க CTRL+ALT+T ஐ ஒருசேர அழுத்துக.
02.30 KTurtle என டைப் செய்து enter ஐ அழுத்துக, KTurtle Application திறக்கிறது.
02.41 program code ஐ டைப் செய்து விளக்குகிறேன்.
02.46 இது சற்று மங்கலாக தெரியலாம். எனவே program text ஐ பெரிதாக்குகிறேன்
02.55 #program to find square of a number. enter ஐ அழுத்துக
03.15 "#" குறி அதற்கடுத்து எழுதப்பட்ட வரியை comment செய்கிறது.
03.19 அதாவது, ப்ரோகிராம் இயங்கும்போது இந்த வரி இயக்கப்பட மாட்டாது. enter ஐ அழுத்துக.
03.29 reset
03.30 reset command... Turtle ஐ முன்னிருப்பு நிலைக்கு அமைக்கிறது. enter ஐ அழுத்துக.
03.38 $i= ask இரட்டை மேற்கோள்களில் enter a number for i and click OK.
03.58 "$i" ஆனது பயனரின் உள்ளீட்டை சேமிக்கும் ஒரு variable.
04.03 “ask” command... variable ல் சேமிக்கப்பட பயனரிடம் உள்ளீட்டைக் கேட்கிறது. enter ஐ அழுத்துக
04.11 “fontsize” space 28.
04.17 fontsize print ஆல் பயன்படுத்தப்படும் font அளவை அமைக்கிறது.
04.20 Fontsize எண்ணை உள்ளீடாக பெற்று pixelகளில் அமைக்கிறது.
04.27 print $i*$i
04.36 print $i*$i ஒரு எண்ணின் இரண்டடுக்கைக் கணக்கிட்டு அச்சடிக்கிறது. enter ஐ அழுத்துக.
04.45 spritehide
04.48 spritehide .... Turtle ஐ canvas ல் இருந்து மறைக்கிறது.
04.53 இப்போது ப்ரோகிராமை இயக்குவோம்.
04.56 editor ல் உள்ள code ஐ இயக்க ஆரம்பிக்க toolbar ல் உள்ள Run button ஐ சொடுக்கவும்.
05.03 இது இயக்குவதற்கான வேகங்களின் பட்டியலைக் காட்டுகிறது.
05.07 Full speed(no highlighting and inspector)
05.10 Full speed,

slow, slower, slowest மற்றும் step-by-step.

05.17 slow வேகத்தில் code ஐ இயக்குகிறேன்.
05.21 ஒரு "input bar" தோன்றுகிறது
05.23 i க்கு 15 என கொடுத்து OK ல் சொடுக்குக
05.29 '15' ன் இரண்டடுக்கு '225' canvas ல் காட்டப்படுகிறது.
05.35 இப்போது ஒரு ப்ரோகிராம் மூலம் ஒரு எண்ணின் n ஆவது அடுக்கை கணக்கிட கற்போம்.
05.42 text editor ல் ஏற்கனவே ப்ரோகிராமை கொண்டுள்ளேன்.
05.46 text editor ல் இருந்து ப்ரோகிராமை பிரதி எடுத்து... KTurtle editor னுள் ஒட்டுகிறேன்.
05.56 இங்கே டுடோரியலை இடைநிறுத்தி உங்கள் KTurtle editor னுள் பிரதி எடுக்கவும்.
06.03 program text ஐ பெரிதாக்குகிறேன்.
06.07 ப்ரோகிராமை விளக்குகிறேன்.
06.09 # குறி அதற்கடுத்து எழுதப்பட்ட வரியை comment செய்கிறது.
06.13 reset command Turtle ஐ முன்னிருப்பு நிலைக்கு அமைக்கிறது.
06.18 $i மற்றும் $n ஆகியவை பயனர் உள்ளீட்டை சேமிக்க variableகள்.
06.25 “ask” command... variableகளில் சேமிக்கப்பட பயனர் உள்ளீட்டைக் கேட்கிறது.
06.31 fontsize 28 print ஆல் பயன்படுத்தப்படும்font அளவை அமைக்கிறது.
06.37 Fontsize எண்ணை உள்ளீடாக பெற்று pixelகளில் அமைக்கிறது.
06.43 print ($i^$n) ஒரு எண்ணின் n ஆவது அடுக்கைக் கணக்கிட்டு அச்சடிக்கிறது.
06.52 spritehide... Turtle ஐ canvas ல் இருந்து மறைக்கிறது.
06.57 ப்ரோகிராமை இயக்குவோம்.
07.00 i க்கு 5 என கொடுத்து OK ஐ சொடுக்கவும்
07.05 n க்கு 4 என கொடுத்து OK ஐ சொடுக்கவும். 5^4... 625 canvas ல் காட்டப்படுகுறது.
07.18 அடுத்து ஒரு எண்ணின் வர்க்க மூலத்தைக் கண்டுபிடிக்க உள்ளடங்கிய “sqrt” function ஐ பயன்படுத்துவோம்.
07.27 editor ல் இருந்து code ஐ பிரதி எடுத்து... அதை KTurtle's editor னுள் ஒட்டுகிறேன்.
07.35 டுடோரியலை இங்கே இடைநிறுத்தி ப்ரோகிராமை உங்கள் KTurtle editor னுள் பிரதி எடுக்கவும்.
07.43 இது சற்று மங்கலாக தெரியலாம். எனவே program text ஐ பெரிதாக்குகிறேன்
07.49 code ஐ விளக்குகிறேன்.
07.52 # குறி அதற்கடுத்து எழுதப்பட்ட வரியை comment செய்கிறது.
07.57 reset command Turtle ஐ முன்னிருப்பு நிலைக்கு அமைக்கிறது.
08.02 $i பயனர் உள்ளீட்டை சேமிக்க ஒரு variable.
08.07 fontsize 28 print ஆல் பயன்படுத்தப்படும் font அளவை அமைக்கிறது.
08.12 print sqrt $i ஒரு எண்ணின் வர்க்க மூலத்தை அச்சடிக்கிறது.
08.19 spritehide ... canvas ல் இருந்து Turtle ஐ மறைக்கிறது.
08.24 இப்போது ப்ரோகிராமை இயக்குகிறேன்.
08.28 i க்கு '169' என கொடுத்து OK ஐ சொடுக்குக
08.34 169 ன் வர்க்க மூலம் 13 canvasல் காட்டப்படுகிறது.
08.39 மீண்டும் இயக்கலாம்,
08.42 i க்கு -169 என கொடுத்து OK ஐ சொடுக்குக.
08.49 எதிர்மறை எண்களை உள்ளிட்டால் வெளியீடு 'nan'. அது ஒரு எண் இல்லை.
08.56 அதாவது ஒரு எதிர்மறை எண்ணின் வர்க்க மூலம் ஒரு மெய்யெண் இல்லை.
09.02 அடுத்து ஒரு ப்ரோகிராம் மூலம் ஒரு நேர்மறை எண்ணின் கனமூலத்தை மதிப்பிடுவோம்.
09.08 editor ல் இருந்து code ஐ பிரதி எடுத்து... அதை KTurtle's editor னுள் ஒட்டுகிறேன்.
09.19 இங்கே டுடோரியலை இடைநிறுத்தி ப்ரோகிராமை உங்கள் KTurtle editor னுள் பிரதி எடுக்கவும்.
09.25 இது சற்று மங்கலாக தெரியலாம். எனவே program text ஐ பெரிதாக்குகிறேன்
09.31 ப்ரோகிராமை விளக்குகிறேன்.
09.35 # குறி அதற்கடுத்து எழுதப்பட்ட வரியை comment செய்கிறது.
09.38 இது ஒரு வரி comment ஐ நினைவுக்கொள்க.
09.42 ஒவ்வொரு comment க்கும் முன்னால் ஒரு # குறி இருக்க வேண்டும்.
09.48 reset command Turtle ஐ முன்னிருப்பு நிலைக்கு அமைக்கிறது.
09.53 $i மற்றும் $C ஆகியவை பயனர் உள்ளீட்டை சேமிக்க variableகள்.
09.59 $C=($i)^(1/3) ஒரு எண்ணின் கன மூலத்தை கணக்கிடுகிறது.
10.07 fontsize 28 print ஆல் பயன்படுத்தப்படும் font அளவை அமைக்கிறது.
10.13 print $C ஒரு எண்ணின் கன மூலத்தை அச்சடிக்கிறது.
10.19 spritehide Turtle ஐ canvas ல் இருந்து மறைக்கிறது.
10.23 ப்ரோகிராமை இயக்குவோம்
10.27 i க்கு 343 என கொடுத்து OK ஐ சொடுக்குக
10.34 343 ன் கன மூலம் 7 என canvas ல் காட்டப்படுகிறது.
10.40 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
10.43 சுருங்க சொல்ல.
10.46 இந்த டுடோரியலில் நாம் கற்றது
10.49 ப்ரோகிராமிங் கோட்பாடுகள்
10.52 sqrt function ன் பயன்
10.55 print command ன் பயன்
10.57 KTurtle editor மற்றும் canvas ஐ பயன்படுத்துதல்.
11.02 பயிற்சியாக, அடிப்படை ப்ரோகிராமிங் command களை பயன்படுத்தி பின்வருவனவற்றை கண்டுபிடிக்கவும்...
11.08 ஒரு எண்ணின் கனம்
11.11 ஒரு எண்ணின் n ஆவது மூலம்
11.15 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What is a Spoken Tutorial
11.19 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
11.22 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
11.27 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:
11.29 ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
11.32 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
11.35 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
11.44 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
11.48 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
11.55 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro
11.59 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst