Scilab/C2/Plotting-2D-graphs/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 10:24, 27 June 2014 by Pratik kamble (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:00 scilab இல் Plotting 2D graphs குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00:04 Scilab உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ளதாகக் கொண்டு Scilab இல் plots குறித்து விவாதிக்கலாம்.
00:10 பல் வகை 2D மற்றும் 3D plot களை உருவாக்க தனிப்பயனாக சைலாப் பல வழிகளை தருகிறது.
00:15 Scilab ஆல் உருவாக்கக்கூடிய சில charts : x-y plots, contour plots, 3D plots, histograms, bar charts, முதலியன...
00:24 இப்போது Scilab console window ஐ திறக்கவும்
00:28 Plotting.sce file இலிருந்து commandகளை வெட்டி ஒட்டுவேன்.
00:34 Plot செய்ய ஒரு தொகுதி புள்ளிகள் தேவை. சமமான இடைவெளியில் ஒரு வரிசை புள்ளிகளை உருவாக்கலாம்.
00:39 இதை linspace command மூலம் செய்யலாம். அது நேர்கோட்டில் சம இடைவெளியுள்ள vector ஐ உருவாக்கும்.
00:45 உதாரணமாக
00:48 x என்பது ஒரு row vector . இதில் 5 புள்ளிகள், 1 மற்றும் 10 க்கு இடையில் சம இடைவெளியில் உள்ளன.
00:57 அதே போல y என்பது ஒரு row vector . இதில் 5 புள்ளிகள் 1 மற்றும் 20 க்கு இடையில் சம இடைவெளியில் உள்ளன.
01:08 linspace குறித்து மேலும் அறிய Help documentation ஐ காண்க.
01:14 இப்போது Plot function மூலம் argumentகள் x மற்றும் y ஆல் ஒரு graph ஐ plot செய்யலாம்.
01:19 இது matlab இல் செய்தது போலவேதான்.
01:23 Plot x,y ... x verses y graph ஐ நாம் காண்பது போல உருவாக்குகிறது.
01:31 graphics window '0' என லேபிள் இடப்பட்டுள்ளதை காண்க.
01:36 xset function ஐ பயன்படுத்தி இன்னொரு graphic window ஐ திறக்கலாம்
01:41 இதை மூடுகிறேன்.
01:43 xset function ஐ வெட்டி scilab இல் ஒட்டி enter ஐ தட்ட ...
01:50 graphic window number 1 தெரிகிறது.
01:54 இந்த function க்கு இரண்டு argumentகள் .... window மற்றும் 1 தரப்பட்டதை கவனிக்கவும்
02:03 அடுத்த graph இந்த window வில் plot செய்யப்படும்.
02:06 scilab இல் plot 2d என்பது 2d graphs ஐ plot செய்ய native function ஆகும்.
02:14 plot2d command பார்ப்பது போல x verses y ன் graph ஐ plot செய்கிறது.
02:26 style எனப்படும் மூன்றாம் argument இருப்பதை கவனிக்கவும்
02:31 Style argument நம் தேர்வே. plotஇன் தோற்றத்தை customize செய்ய பயனாகும்.
02:36 style இன் நேர்மறை மதிப்புகளுக்கு curve plain ஆக இப்போது 3 க்கு பச்சை உள்ளது போல இருக்கும்.
02:44 style இன் முன்னிருப்பு மதிப்பு 1.
02:46 எதிர்மறை மதிப்புகளுக்கு graphகள் plot செய்து பாருங்கள். தோற்றத்தில் வித்தியாசத்தை நீங்களே காணலாம்.
02:51 மேலும் x மற்றும் y axis க்கு ஆரம்ப புள்ளி மற்றும் முடிவு புள்ளிகளை நான்காம் argument ஐ பாஸ் செய்து காண்க
02:57 அதற்கு rect எனப்பெயர். காண்பதுபோல...
03:07 x axis 1 முதல் 10 வரையில் துவங்குகிறது. y axis 1 முதல் 20 வரை.
03:14 rect command இல் argument இன் வரிசை xmin, ymin, xmax மற்றும் ymax.
03:24 இப்போது Title, Axis மற்றும் Legends குறித்து கற்போம்.
03:28 labels ஐaxis க்கும், மேலும் title ஐ plot க்கும் configure செய்ய பயனாகும் commandகள் title, xlabel மற்றும் ylabel.
03:38 இந்த commandகளின் தொகுதியை வெட்டி console இல் ஒட்டுகிறேன். enter செய்க.
03:45 graph... label செய்யப்பட்டுள்ளது. x axis க்கு x , y axis க்கு y மற்றும் my title என்பது graph இன் title .
03:58 title மற்றும் plot axis ஐ... 3 க்கு பதில் ஒரே command இல் configure செய்ய விரும்பலாம்.
04:04 இதற்கு பயனாவது xtitle command 3 argument களுடன்.
04:11 scilab இல் command ஐ வெட்டி ஒட்டுகிறேன். enter.
04:18 இப்போது காண்பது x axis இன் label X axis , Y axis மற்றும் title My title.
04:26 இப்போது டைப் செய்யும் clf() function நீங்கள் காண்பது போல graphic window ஐ துடைக்கும்.
04:36 ஒரே graphic window வில் வெவ்வேறு graph களை plot செய்யும் போது இது பயனுள்ளது.
04:41 window ஐ மூடலாம்.
04:44 சில நேரங்களில் இரண்டு data வின் தொகுதிகளை ஒரே plot இல் ஒப்பிட வேண்டி இருக்கலாம். அதாவது, x data ன் ஒரு தொகுதி மற்றும் y data ன் இரண்டு தொகுதி.
04:51 கீழே scroll செய்து ஒரு உதாரணத்தை காணலாம்
04:56 linspace command மூலம் x axis புள்ளிகளை ஒரு row vector x இல் define செய்யலாம்.
05:03 ஒரு function ஐ define செய்யலாம்
05:05 y1 = x square
05:07 plot x verses y1
05:10 இன்னொரு function ஐ define செய்யலாம் y2 = 2x square


05:15 plot x verses y2
05:17 மேலும் label ஐயும் title ஐயும் graph க்கு கொடுக்கலாம்.
05:22 கூடுதலாக ”o-” மற்றும் ”+ -” command களை plot function க்கு pass செய்திருக்கிறோம் என்பதை கவனிக்கவும். இது curve இன் தோற்றத்தை மாற்றும்.
05:33 இந்த argumentகள் plot2d function இன் பகுதி இல்லை.
05:37 plot function உடன் மட்டுமே பயன்படுத்த முடியும்.
05:41 scilab console இல் இந்த command களை வெட்டி ஒட்டுகிறேன்.
05:49 graph ஐ காணலாம்
05:51 எந்த curve எந்த function உடன் தொடர்புள்ளது என்பது தெரிந்தால் நன்றாக இருக்குமல்லவா?
05:56 இதை legend command மூலம் செய்யலாம்.
06:08 "o-" curve ஆனது function y1=x square க்கு தொடர்பானது. "+-" curve.. function y2=2x square க்கு
06:19 graphic window ஐ மூடுகிறேன்
06:22 இப்போது plot2d demos மற்றும் subplot function குறித்து விவாதிக்கலாம்.
06:28 Scilab அதன் எல்லா முக்கிய function களுக்கு demo வைத்துள்ளது.
06:31 plot2d இன் Demo களை demonstration tab இல் காணலாம்
06:39 முறையே சொடுக்குக: Graphics, 2d_3d plots .... பின் அங்குள்ள பலவற்றில் தேவையான demo ஐ தேர்ந்தெடுக்கவும்.
06:51 நான் plot2d மீது சொடுக்குகிறேன்.
06:54 demo graph ஐ காணலாம்
06:55 இங்கேயுள்ள view code button ஐ சொடுக்கி இந்த graph க்கான code ஐ காணலாம்.
07:02 இந்த தொடுப்பு Mac OS இல் வேலை செய்வதில்லை. windows மற்றும் linux இல் செய்கிறது.
07:07 இருந்தாலும் Mac இல் code ஐ directory மூலம் பார்க்கலாம்
07:12 terminal க்கு போகலாம்.
07:15 காட்டப்படுவது போல நான் இப்போது scilab 5.2 இன் demos directory இல் இருக்கிறேன்.
07:21 இந்த directory க்கான முழு path இங்கே உள்ளது.
07:27 ls என type செய்து மீதி demos க்களின் பட்டியலைக் காணலாம்.


07:36 2d_3d_plots directory ஐ தேர்ந்தெடுத்து enter செய்யலாம்.
07:46 மீண்டும் ls என டைப் செய்து sce file களில் உள்ள demo code களை காணலாம்
07:55 நாம் முன்னே பார்த்த demo வுக்கான code ஐ காணலாம்
08:00 more plot2d.dem.sce என Type செய்து enter செய்க
08:11 plot2d function க்கான demo graph இன் code ஐ காணலாம்
08:18 terminal ஐ மூடுகிறேன்
08:21 demo graph மற்றும் demo window களையும் மூடுகிறேன்


08:26 இதே போல மற்ற demo க்களையும் காணலாம். scilab ஐ ஆராயலாம்.
08:29 இப்போது Subplot function குறித்து விவாதிக்கலாம்
08:33 subplot() function ஆனது graphics window வை துணை window க்களின் தொகுப்பாக மாற்றுகிறது.
08:37 இந்த function ஐ விளக்க scilab இல் 2D graphs plot செய்யும் டெமோவை பார்க்கலாம்
08:43 உதாரணமாக , கன்சோலில் type செய்க: plot 2d இந்த function க்கான demo plot ஐ காண்க.


08:58 இந்த window வை மூடுகிறேன்
09:00 subplot command இல் கொடுத்த முதல் இரண்டு argumentகளை பிரதிபலிக்கும்படி subplot command, .. graphics window வை 2 க்கு 2 sub-windows matrix ஆக பிளக்கிறது.
09:10 மூன்றாம் argument காட்டுவது இப்போது plot வரையப்படும் நடப்பு window.
09:15 scilab console இல் இந்த முழு commandகளின் தொகுதியையும் பிரதி எடுத்து இயக்கலாம்.
09:24 ஒரு plot window வில் 4 plot களை காணலாம்
09:28 கிடைத்த plot ஐ ஒரு image ஆக கணினியில் சேமிக்கலாம்.
09:32 graphic window மீது சொடுக்கி File menu சென்று export to ஐ தேர்க.
09:39 தகுந்த title ஐ plot க்கு கொடுக்கவும்.
09:50 file ஐ சேமிக்க destination folder ஐ தேர்ந்தெடுக்கவும்.
09:54 image இன் file format ஐயும் தேர்க
09:59 நான் JPEG format ஐ தேர்ந்து Save ஐ சொடுக்குகிறேன்
10:05 directory இல் Browse செய்து image ஐ திறந்து சேமிப்பை உறுதி செய்து கொள்ளவும்.
10:11 இத்துடன் Scilab ல் Plotting குறித்த spoken tutorial முடிவுக்கு வருகிறது
10:15 Scilab இல் உள்ள மற்ற பல function களை ஏனைய spoken tutorial களில் காணலாம்
10:20 Scilab இணைய இணைப்புகளை பார்த்திருங்கள்
10:22 Spoken Tutorialகள்... Talk to a Teacher திட்டத்தின் அங்கமாகும். இதற்கு ஆதரவு ICT வழியாக தேசிய கல்வித்திட்டத்தின் மூலமாக கிடைக்கிறது.
10:29 இது குறித்த மேலதிக தகவல்களுக்கு இங்கே பார்க்கவும்.


10:32 இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி!

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst