Java/C2/First-Java-Program/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 15:18, 23 June 2014 by Pratik kamble (Talk | contribs)
Time | Narration |
00:02 | java-ல் முதல் program குறித்த spoken tutorial-க்கு நல்வரவு. |
00:09 | இந்த tutorial-லில் நாம் கற்க போவது |
00:11 | எளிய java program ஐ உருவாக்குதல். |
00:14 | program-ஐ compile செய்தல். |
00:16 | program-ஐ இயக்குதல். |
00:19 | மேலும் java-ல் பின்பற்றப்படும் naming conventions பற்றி அறிவோம் |
00:24 | இங்கே நாம் பயன்படுத்துவது Ubuntu version 11.10 மற்றும் Java Development Environment jdk 1.6 |
00:32 | இந்த tutorial-ஐ பின்பற்ற உங்கள் கணினியில் JDK 1.6 நிறுவியிருக்க வேண்டும் |
00:39 | இல்லையெனில், எங்கள் தளத்தில் உள்ள அதற்கான tutorial-ஐ பார்க்கவும். |
00:46 | சரி இப்போது java-ல் நம் program-ஐ எழுதுவோம். |
00:51 | அதற்கு Terminal உம் ஒரு Text Editor உம் தேவை. |
00:56 | நான் gedit-ஐ Text Editor ஆக பயன்படுத்துகிறேன் |
01:01 | text editor-ல் முதலில் HelloWorld class-ஐ உருவாக்குவோம். |
01:06 | அதற்கு எழுதுக class HelloWorld HelloWorld என்பது class-ன் பெயர்.
|
01:17 | பின் Open curly bracket.
Enter பின் close curly bracket.
|
01:24 | இந்த இரண்டு curly bracket-களுக்கு இடையே உள்ள code... HelloWorld class-க்கு சொந்தமானது |
01:33 | மேலே Save icon-ஐ சொடுக்கி file-ஐ சேமிப்போம் |
01:37 | file-ஐ அடிக்கடி சேமிப்பது நல்ல பழக்கம். |
01:43 | Save As Dialog box தோன்றுகிறது. |
01:46 | உங்கள் file-ஐ சேமிக்க விரும்பும் இடத்திற்கு Browse செய்யவும் |
01:51 | இங்கே, home directory-ல் ஒரு folder-ஐ உருவாக்குவோம். |
01:57 | அதற்கு Demo என பெயர் தந்து, enter ஐ அழுத்துவோம் |
02:02 | பின் இந்த folder-னுள் file-ஐ சேமிப்போம். |
02:08 | Name text-box-ல், class-ன் பெயரை எழுதுக. |
02:13 | java-ல், class-ன் பெயரும் file-ன் பெயரும் ஒன்றாகவே இருக்க வேண்டும். |
02:20 | class HelloWorld-ஐ உருவாக்கினோம் என்பதை நினைவு கொள்வோம்.
|
02:25 | எனவே file-ஐ HelloWorld dot java என சேமிப்போம் |
02:33 | Dot java என்பது java file-க்கு கொடுக்கப்படும் file extension ஆகும் |
02:39 | பின் Save button-ஐ சொடுக்குவோம். இப்போது file சேமிக்கப்படுகிறது. |
02:47 | class-னுள், main method-ஐ எழுதுவோம்.
|
02:53 | எழுதுக: |
02:54 | public static void main parentheses-னுள் String arg Square brackets
|
03:10 | Main functions... program-ன் ஆரம்பத்தைக் குறிக்கிறது.
|
03:15 | public, static, void மற்றும் String arg பற்றி பின்னர் ஒரு tutorial-லில் காண்போம்.
|
03:23 | பின் மீண்டும், open curly bracket. |
03:27 | Enter பின் close curly bracket. |
03:32 | இந்த இரண்டு curly bracket-களுக்கு இடையே உள்ள இந்த code... main method-க்கு சொந்தமாகும். |
03:41 | Terminal-லில் ஒரு வரியைக் காட்ட ஒரு code-ஐ எழுதுவோம்.
|
03:46 | main method-னுள் எழுதுக System dot out dot println parentheses semi-colon
|
03:59 | இந்த statement ஒரு வரியை அச்சடிக்க பயனாகிறது. semi-colon ஒரு வரியை முடிக்க பயன்படுத்தப்படுகிறது.
|
04:10 | இப்போது அச்சடிக்க வேண்டியதை Java-க்கு சொல்லுவோம்.
|
04:13 | parentheses-னுள் double quote-களில் எழுதுக, My first java program exclamation mark. |
04:30 | Save icon-ஐ சொடுக்கி file-ஐ சேமிப்போம். |
04:36 | Terminal-க்கு செல்வோம். |
04:38 | HelloWorld.java-ஐ சேமித்த directory-யில் நாம் உள்ளோமா என உறுதி செய்து கொள்க
|
04:46 | home directory-யில் உள்ளேன் என்பதை நினைவு கொள்க.
|
04:50 | எனவே எழுதுக cd Space' Demo பின் ' Enter
செய்க |
04:56 | ls |
04:59 | Demo folder-ல் HelloWorld.java file இருப்பதைக் காண்கிறோம். |
05:06 | இந்த file-ஐ compile செய்வோம். எழுதுக javac Space HelloWorld dot java பின் enter செய்க
|
05:21 | இது நாம் உருவாக்கிய file-ஐ compile செய்யும். |
05:25 | சரி, இப்போது காண்பது போல.... file பிழை இல்லாமல் compile செய்யப்படுகிறது. |
05:30 | HelloWorld.class file உருவாக்கப்பட்டதைக் காண்கிறோம். |
05:36 | இந்த file-ஐ எங்குவேண்டுமானாலும் இயக்கலாம். |
05:38 | அதாவது, எந்த இயங்கு தளத்திலும் இயக்கலாம். |
05:41 | நமக்கு java compiler-உம் தேவையில்லை. |
05:45 | எனவே, java “ஒருமுறை எழுது, எங்கு வேண்டுமானாலும் இயக்கு” என வரையறுக்கப்படுகிறது |
05:51 | வெற்றிகரமாக compile செய்த பின், இந்த command-ஐ பயன்படுத்தி இயக்குக, |
05:56 | java ( c இல்லை) space HelloWorld (dot java extension இல்லை) Enter செய்க. |
06:07 | My first java program! என்ற வெளியீட்டை பெறுவோம் |
06:13 | java-ல் முதல் program-ஐ எழுதிவிட்டோம். editor-க்கு வருவோம்
|
06:22 | இப்போது statement-ன் இறுதியில் உள்ள semi-colon -ஐ நீக்குவோம் |
06:27 | Save icon-ஐ சொடுக்குவோம். |
06:29 | Terminal-க்கு வருவோம். |
06:33 | command-ஐ இயக்குவோம் javac HelloWorld dot java. |
06:41 | compiler ஒரு பிழையைத் தருகிறது. |
06:44 | ஒரு semi colon வரி 5-ல் தேவை என்கிறது.
|
06:52 | மேல் அம்பு பிழை statement-ஐக் காட்டுகிறது. |
06:57 | Editor-க்கு வருவோம். |
07:01 | Java-ல், அனைத்து statement-களும் semicolon-களுடன் முடிக்கப்பட வேண்டும். |
07:06 | எனவே வரி 5-க்கு சென்று ஒரு semicolon-ஐ சேர்க்கவும். |
07:13 | Save icon-ஐ சொடுக்கவும். file-ஐ compile செய்யும் முன் அதை சேமிக்க வேண்டியது அவசியம் |
07:22 | Terminal-க்கு வருவோம். |
07:25 | javac Space HelloWorld dot java என எழுதி file-ஐ compile செய்வோம். |
07:32 | நாம் காண்பது போல பிழை இல்லாமல் compile செய்யப்படுகிறது. |
07:36 | இந்த command-ஐ பயன்படுத்தி program-ஐ இயக்குவோம் java HelloWorld .
|
07:45 | My first java program! என்ற வெளியீட்டைக் காண்கிறோம் |
07:49 | இவ்வாறு தான் java-ல் பிழைகளைக் கையாள வேண்டும். |
07:54 | இந்த தொடர் tutorial-களில் பிழைகளைப் பற்றி மேலும் அறிவோம் |
08:02 | java-ல் naming conventions-ஐ பார்ப்போம். |
08:06 | * class பெயர் CamelCase-ல் இருக்கவேண்டும். |
08:10 | * அதாவது ஒவ்வொரு புது வார்த்தையும் மேல்நிலை எழுத்தில் ஆரம்பிக்க வேண்டும். |
08:14 | * உதாரணமாக: class HelloWorld, class ChessGame. |
08:19 | எனவே hello-ன் H உம் World-ன் W உம் மேல்நிலை எழுத்தில் உள்ளன.
|
08:25 | அதேபோல Chess மற்றும் Game-ல் C மற்றும் G மேல்நிலை எழுத்தில் உள்ளன. |
08:31 | method பெயர் mixed case-ல் இருக்க வேண்டும். |
08:35 | அதாவது முதல் வார்த்தை கீழ் நிலை எழுத்தில் ஆரம்பிக்க வேண்டும். |
08:39 | அதை தொடர்ந்து அனைத்து புது வார்த்தைகளும் மேல்நிலை எழுத்தில் ஆரம்பிக்க வேண்டும். |
08:44 | மேலும் method பெயர் ஒரு verb ஆக இருக்க வேண்டும். |
08:48 | உதாரணமாக: showString(), main(), goToHelp(). இங்கே show-ல் s கீழ்நிலை எழுத்திலும் string-ல் S மேல்நிலை எழுத்திலும் உள்ளன. variable பெயர் எண்ணில் ஆரம்பிக்க கூடாது. |
09:06 | keywords-ஐ class, method அல்லது variable பெயருக்கு பயன்படுத்தக் கூடாது. |
09:13 | உதாரணமாக: இதுபோன்ற keywords-ஐ பயன்படுத்த கூடாது public, private, void, static மேலும் பல. |
09:22 | இந்த tutorial-லில், எளிய java program-ஐ எழுத compile செய்ய இயக்க கற்றோம். |
09:30 | java-ல் பின்பற்றபடும் naming conventions-ஐயும் பார்த்தோம். |
09:35 | சுய மதிப்பீட்டுக்கு Java file name and class name should be same என அச்சடிக்க ஒரு எளிய java program ஐ எழுதுக.
|
09:47 | Spoken Tutorial Project பற்றி மேலும் அறிய |
09:50 | இந்த காணொளியைக் காணவும் [1] |
09:58 | இது Spoken Tutorial project-ஐ சுருங்க சொல்கிறது |
10:02 | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
10:08 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
10:13 | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
10:17 | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org |
10:25 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
10:38 | மேலும் விவரங்களுக்கு
[2] |
10:49 | இத்துடன் இந்த tutorial நிறைவடைகிறது |
10:53 | தமிழாக்கம் பிரியா. நன்றி. |