Scilab/C2/Plotting-2D-graphs/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 18:47, 9 June 2014 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00.00 scilab இல் Plotting 2D graphs குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00.04 Scilab உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ளதாகக் கொண்டு Scilab இல் plots குறித்து விவாதிக்கலாம்.
00.10 பல் வகை 2D மற்றும் 3D plot களை உருவாக்க தனிப்பயனாக சைலாப் பல வழிகளை தருகிறது.
00.15 Scilab ஆல் உருவாக்கக்கூடிய சில charts : x-y plots, contour plots, 3D plots, histograms, bar charts, முதலியன...
00.24 இப்போது Scilab console window ஐ திறக்கவும்
00.28 Plotting.sce file இலிருந்து commandகளை வெட்டி ஒட்டுவேன்.
00.34 Plot செய்ய ஒரு தொகுதி புள்ளிகள் தேவை. சமமான இடைவெளியில் ஒரு வரிசை புள்ளிகளை உருவாக்கலாம்.
00.39 இதை linspace command மூலம் செய்யலாம். அது நேர்கோட்டில் சம இடைவெளியுள்ள vector ஐ உருவாக்கும்.
00.45 உதாரணமாக
00.48 x என்பது ஒரு row vector . இதில் 5 புள்ளிகள், 1 மற்றும் 10 க்கு இடையில் சம இடைவெளியில் உள்ளன.
00.57 அதே போல y என்பது ஒரு row vector . இதில் 5 புள்ளிகள் 1 மற்றும் 20 க்கு இடையில் சம இடைவெளியில் உள்ளன.
01.08 linspace குறித்து மேலும் அறிய Help documentation ஐ காண்க.
01.14 இப்போது Plot function மூலம் argumentகள் x மற்றும் y ஆல் ஒரு graph ஐ plot செய்யலாம்.
01.19 இது matlab இல் செய்தது போலவேதான்.
01.23 Plot x,y ... x verses y graph ஐ நாம் காண்பது போல உருவாக்குகிறது.
01.31 graphics window '0' என லேபிள் இடப்பட்டுள்ளதை காண்க.
01.36 xset function ஐ பயன்படுத்தி இன்னொரு graphic window ஐ திறக்கலாம்
01.41 இதை மூடுகிறேன்.
01.43 xset function ஐ வெட்டி scilab இல் ஒட்டி enter ஐ தட்ட ...
01.50 graphic window number 1 தெரிகிறது.
01.54 இந்த function க்கு இரண்டு argumentகள் .... window மற்றும் 1 தரப்பட்டதை கவனிக்கவும்
02.03 அடுத்த graph இந்த window வில் plot செய்யப்படும்.
02.06 scilab இல் plot 2d என்பது 2d graphs ஐ plot செய்ய native function ஆகும்.
02.14 plot2d command பார்ப்பது போல x verses y ன் graph ஐ plot செய்கிறது.
02.26 style எனப்படும் மூன்றாம் argument இருப்பதை கவனிக்கவும்
02.31 Style argument நம் தேர்வே. plotஇன் தோற்றத்தை customize செய்ய பயனாகும்.
02.36 style இன் நேர்மறை மதிப்புகளுக்கு curve plain ஆக இப்போது 3 க்கு பச்சை உள்ளது போல இருக்கும்.
02.44 style இன் முன்னிருப்பு மதிப்பு 1.
02.46 எதிர்மறை மதிப்புகளுக்கு graphகள் plot செய்து பாருங்கள். தோற்றத்தில் வித்தியாசத்தை நீங்களே காணலாம்.
02.51 மேலும் x மற்றும் y axis க்கு ஆரம்ப புள்ளி மற்றும் முடிவு புள்ளிகளை நான்காம் argument ஐ பாஸ் செய்து காண்க
02.57 அதற்கு rect எனப்பெயர். காண்பதுபோல...
03.07 x axis 1 முதல் 10 வரையில் துவங்குகிறது. y axis 1 முதல் 20 வரை.
03.14 rect command இல் argument இன் வரிசை xmin, ymin, xmax மற்றும் ymax.
03.24 இப்போது Title, Axis மற்றும் Legends குறித்து கற்போம்.
03.28 labels ஐaxis க்கும், மேலும் title ஐ plot க்கும் configure செய்ய பயனாகும் commandகள் title, xlabel மற்றும் ylabel.
03.38 இந்த commandகளின் தொகுதியை வெட்டி console இல் ஒட்டுகிறேன். enter செய்க.
03.45 graph... label செய்யப்பட்டுள்ளது. x axis க்கு x , y axis க்கு y மற்றும் my title என்பது graph இன் title .
03.58 title மற்றும் plot axis ஐ... 3 க்கு பதில் ஒரே command இல் configure செய்ய விரும்பலாம்.
04.04 இதற்கு பயனாவது xtitle command 3 argument களுடன்.
04.11 scilab இல் command ஐ வெட்டி ஒட்டுகிறேன். enter.
04.18 இப்போது காண்பது x axis இன் label X axis , Y axis மற்றும் title My title.
04.26 இப்போது டைப் செய்யும் clf() function நீங்கள் காண்பது போல graphic window ஐ துடைக்கும்.
04.36 ஒரே graphic window வில் வெவ்வேறு graph களை plot செய்யும் போது இது பயனுள்ளது.
04.41 window ஐ மூடலாம்.
04.44 சில நேரங்களில் இரண்டு data வின் தொகுதிகளை ஒரே plot இல் ஒப்பிட வேண்டி இருக்கலாம். அதாவது, x data ன் ஒரு தொகுதி மற்றும் y data ன் இரண்டு தொகுதி.
04.51 கீழே scroll செய்து ஒரு உதாரணத்தை காணலாம்
04.56 linspace command மூலம் x axis புள்ளிகளை ஒரு row vector x இல் define செய்யலாம்.
05.03 ஒரு function ஐ define செய்யலாம்
05.05 y1 = x square
05.07 plot x verses y1
05.10 இன்னொரு function ஐ define செய்யலாம் y2 = 2x square


05.15 plot x verses y2
05.17 மேலும் label ஐயும் title ஐயும் graph க்கு கொடுக்கலாம்.
05.22 கூடுதலாக ”o-” மற்றும் ”+ -” command களை plot function க்கு pass செய்திருக்கிறோம் என்பதை கவனிக்கவும். இது curve இன் தோற்றத்தை மாற்றும்.
05.33 இந்த argumentகள் plot2d function இன் பகுதி இல்லை.
05.37 plot function உடன் மட்டுமே பயன்படுத்த முடியும்.
05.41 scilab console இல் இந்த command களை வெட்டி ஒட்டுகிறேன்.
05.49 graph ஐ காணலாம்
05.51 எந்த curve எந்த function உடன் தொடர்புள்ளது என்பது தெரிந்தால் நன்றாக இருக்குமல்லவா?
05.56 இதை legend command மூலம் செய்யலாம்.
06.08 "o-" curve ஆனது function y1=x square க்கு தொடர்பானது. "+-" curve.. function y2=2x square க்கு
06.19 graphic window ஐ மூடுகிறேன்
06.22 இப்போது plot2d demos மற்றும் subplot function குறித்து விவாதிக்கலாம்.
06.28 Scilab அதன் எல்லா முக்கிய function களுக்கு demo வைத்துள்ளது.
06.31 plot2d இன் Demo களை demonstration tab இல் காணலாம்
06.39 முறையே சொடுக்குக: Graphics, 2d_3d plots .... பின் அங்குள்ள பலவற்றில் தேவையான demo ஐ தேர்ந்தெடுக்கவும்.
06.51 நான் plot2d மீது சொடுக்குகிறேன்.
06.54 demo graph ஐ காணலாம்
06.55 இங்கேயுள்ள view code button ஐ சொடுக்கி இந்த graph க்கான code ஐ காணலாம்.
07.02 இந்த தொடுப்பு Mac OS இல் வேலை செய்வதில்லை. windows மற்றும் linux இல் செய்கிறது.
07.07 இருந்தாலும் Mac இல் code ஐ directory மூலம் பார்க்கலாம்
07.12 terminal க்கு போகலாம்.
07.15 காட்டப்படுவது போல நான் இப்போது scilab 5.2 இன் demos directory இல் இருக்கிறேன்.
07.21 இந்த directory க்கான முழு path இங்கே உள்ளது.
07.27 ls என type செய்து மீதி demos க்களின் பட்டியலைக் காணலாம்.


07.36 2d_3d_plots directory ஐ தேர்ந்தெடுத்து enter செய்யலாம்.
07.46 மீண்டும் ls என டைப் செய்து sce file களில் உள்ள demo code களை காணலாம்
07.55 நாம் முன்னே பார்த்த demo வுக்கான code ஐ காணலாம்
08.00 more plot2d.dem.sce என Type செய்து enter செய்க
08.11 plot2d function க்கான demo graph இன் code ஐ காணலாம்
08.18 terminal ஐ மூடுகிறேன்
08.21 demo graph மற்றும் demo window களையும் மூடுகிறேன்


08.26 இதே போல மற்ற demo க்களையும் காணலாம். scilab ஐ ஆராயலாம்.
08.29 இப்போது Subplot function குறித்து விவாதிக்கலாம்
08.33 subplot() function ஆனது graphics window வை துணை window க்களின் தொகுப்பாக மாற்றுகிறது.
08.37 இந்த function ஐ விளக்க scilab இல் 2D graphs plot செய்யும் டெமோவை பார்க்கலாம்
08.43 உதாரணமாக , கன்சோலில் type செய்க: plot 2d இந்த function க்கான demo plot ஐ காண்க.


08.58 இந்த window வை மூடுகிறேன்
09.00 subplot command இல் கொடுத்த முதல் இரண்டு argumentகளை பிரதிபலிக்கும்படி subplot command, .. graphics window வை 2 க்கு 2 sub-windows matrix ஆக பிளக்கிறது.
09.10 மூன்றாம் argument காட்டுவது இப்போது plot வரையப்படும் நடப்பு window.
09.15 scilab console இல் இந்த முழு commandகளின் தொகுதியையும் பிரதி எடுத்து இயக்கலாம்.
09.24 ஒரு plot window வில் 4 plot களை காணலாம்
09.28 கிடைத்த plot ஐ ஒரு image ஆக கணினியில் சேமிக்கலாம்.
09.32 graphic window மீது சொடுக்கி File menu சென்று export to ஐ தேர்க.
09.39 தகுந்த title ஐ plot க்கு கொடுக்கவும்.
09.50 file ஐ சேமிக்க destination folder ஐ தேர்ந்தெடுக்கவும்.
09.54 image இன் file format ஐயும் தேர்க
09.59 நான் JPEG format ஐ தேர்ந்து Save ஐ சொடுக்குகிறேன்
10.05 directory இல் Browse செய்து image ஐ திறந்து சேமிப்பை உறுதி செய்து கொள்ளவும்.
10.11 இத்துடன் Scilab ல் Plotting குறித்த spoken tutorial முடிவுக்கு வருகிறது
10.15 Scilab இல் உள்ள மற்ற பல function களை ஏனைய spoken tutorial களில் காணலாம்
10.20 Scilab இணைய இணைப்புகளை பார்த்திருங்கள்
10.22 Spoken Tutorialகள்... Talk to a Teacher திட்டத்தின் அங்கமாகும். இதற்கு ஆதரவு ICT வழியாக தேசிய கல்வித்திட்டத்தின் மூலமாக கிடைக்கிறது.
10.29 இது குறித்த மேலதிக தகவல்களுக்கு இங்கே பார்க்கவும்.


10.32 இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி!

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst