Scilab/C2/Iteration/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:19, 5 June 2014 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
ல்
Time' Narration


00.01 Scilab இல் iterative கணக்கீடுகள் குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00.07 நான் பயன்படுத்துவது Mac இயங்கு தளத்தில் scilab பதிப்பு 5.2
00.11 ஆனாலும் இந்த கணக்கீடுகள் ஏனைய பதிப்புகளிலும் வேலை செய்ய வேண்டும். மேலும் linux மற்றும் windows இலும்.
00.17 iteration.sce file இல் உள்ள code ஐ பயன்படுத்துவேன்.
00.22 இந்த file ஐ Scilab editor இல் திறந்துள்ளேன். இதை editor ஆக மட்டுமே பயன்படுத்துவேன்.
00.29 colon operator மூலம் ஒரு vector ஐ உருவாக்கலாம். i equal to 1 colon 5
00.38 இது ஒரு vector ஐ 1 இலிருந்து 5 க்கு, படிக்கு 1 அதிகரித்து உருவாக்குகிறது.
00.42 இந்த command இல், i equal to 1 colon 2 colon 5,
00.51 நடுவில் உள்ள argument 2 increment ஐ காட்டுகிறது
00.56 1 தான் முதல் argument; அங்கே vector துவங்குகிறது. நாம் 5 க்கு மேல் போக முடியாது.
01.01 5 க்கு சமமாக இருக்கலாம்.
01.04 முடிக்கும் argument 6 ஆக மாறினாலும் விடை அப்படியே இருக்கும்.
01.09 இந்த நடத்தையை விளக்குவது சுலபமே.
01.13 ஏன் என்று ஒரு கணம் யோசிக்கலாமா ?
01.15 இப்போது iterative கணக்கீடுகளை செய்ய for statement ஐ பயன்படுத்துவதை பார்க்கலாம்
01.22 for... i equal to 1 colon 2 colon 7... disp i... end.
01.28 scilab console ல் வெட்டி ஒட்டி Enter செய்க.
01.34 நாம் loop இல் செல்ல செல்ல இந்த code... i ஐ print out செய்கிறது,
01.37 இதன் காரணம் command disp அனுப்பிய argument காட்டப்படுகிறது.
01.42 for loop integer மதிப்புகளுக்கு பயனாகிறது என்பதை நினைவில் கொள்க.
01.45 இங்கே, நான்கு integer மதிப்புகள் ... 1, 3, 5 மற்றும் 7 காட்டப்படுகின்றன,
01.50 for loop இல் எவ்வளவு முறை iterationகள் நடக்கிறதோ அந்த எண்ணிக்கை priori எனப்படும்.
01.56 இந்த tutorial இல் முன்னிருப்பு increment ஆக ஒன்றைக்கொள்வோம்.
02.01 i equal to 1 லிருந்து 5 என காட்டும் loop உடன் துவக்கலாம்.
02.10 break statement ஐ உள்ளிடுவதன் மூலம் code ஐ மாற்றலாம்.
02.18 i ... 2 வரை மட்டுமே காட்டபப்டுவதை கவனிக்கவும்
02.22 iteration i இன் கடைசி மதிப்பான 5 வரை நடக்கவில்லை.
02.27 i equal to 2 என ஆனபோது if block முதல் முறையாக செயலாக்கப்பட்டது.
02.30 ஆனால் break command .... loop ஐ நிறுத்தி விட்டது.
02.34 இடையில் ஏதேனும் condition பூர்த்தியானால் loop இலிருந்து வெளியேற break statement ஐ பயன்படுத்தலாம்.
02.40 "i equal to 2" statement இல் "equal to" குறி இரு முறை இருப்பதை காணவும்.
02.45 programming மொழிகளில் சமநிலையைக் காட்ட இதுவே நியமம் ஆகும்.
02.50 இந்த comparison statement இன் விடை ஒரு boolean: true அல்லது false.
02.56 continue statement ஐ இங்கே நுழைக்கலாம். ஒட்டி Enter ஐ அழுத்தவும்
03.06 இதன் விளைவாக i 4 க்கும் 5 க்கும் மட்டுமே காட்டப்படுகிறது.
03.10 i less than or equal to 3 statement இன் நிபந்தனையால் i 3 க்கு சமம் அல்லது குறைவு என்ற நிலையில் ஏதும் காட்டப்படுவதில்லை.
03.18 continue statement ... program ஐ மீதி loop ஐ தவிர்க்கச்சொல்லுகிறது.
03.22 break statement போலில்லாமல் இது loop ஐ முடிப்பதில்லை.
03.25 parameter i increment ஆகிறது மற்றும் loop இன் எல்லா கணக்கீடுகளும் புதிய i க்கு செயலாகிறது.
03.32 இங்கு சற்று இளைப்பாறி எப்படி less than or equal to வகை operator களுக்கு உதவி பெறுவது எனப்பார்க்கலாம்.
03.38 type செய்க ... less than or equal to ... help உடன்...
03.46 இது scilab help browser ஐ திறக்கிறது.
03.51 less option இன் கீழ் உதவி இருக்கிறது
03.56 ஆகவே இப்போது இதை மூடிவிட்டு help less என type செய்தால்
04.06 தேவையான help வழிக்காட்டல்கள் இங்கே கிடைக்கின்றன. இதை மூடுகிறேன்.
04.11 Scilab இல் இந்த for statement... programming language களில் உள்ளதை விட சக்தி வாய்ந்தது.
04.16 உதாரணமாக , ஒரு vector மீது ஒரு loop ஐ இயக்கலாம்:
04.24 இந்த script .... v இன் மதிப்புகள் எல்லாவற்றையும் காட்டுகிறது.
04.28 இதுவரை variable களை மட்டுமே காட்டிக்கொண்டு இருந்தோம்.
04.32 உண்மையில் ஒரு கணக்கீட்டின் விடையைக்கூட காட்டலாம்.
04.35 பின் வரும் code... எண்களின் இரண்டுக்குகளை காட்டுகிறது.
04.44 for loop ஐ விவரிக்க நிறையவே நேரம் எடுத்துக்கொண்டோம்.
04.48 இப்போது while loop ஐ பார்க்கலாம்.
04.50 ஒரு boolean expression true ஆக இருக்கும் வரை loop ஐ இயக்க while statement அனுமதிக்கிறது.
04.55 loop இன் ஆரம்பத்தில் expression true எனில்,
04.58 while loop இன் body இல் உள்ள statementகள் இயங்குகின்றன.
05.02 program ஐ நன்றாக எழுதி இருந்தால் expression false ஆகி loop முடிவடையும்.
05.08 இப்போது while loop க்கு உதாரணத்தை பார்க்கலாம் :
05.15 i இன் மதிப்புகள், 1 முதல் 6 வரை காட்டப்படுகின்றது.
05.19 for loop போலவே Break மற்றும் continue statementகள் while loop இலும் வேலை செய்கின்றன. Break ஐ பயன்படுத்தி இதை செய்து காட்டலாம்.
05.33 i equal to 3 என்றானதும் break statement காரணமாக program... loop ஐ நிறுத்துகிறது.
05.39 மேலும் continue statement ஐ while loop இல் முயற்சிக்கலாம்.
05.44 இத்துடன் Scilab இல் iterative கணக்கீடுகள் மீதான spoken tutorial முடிவுக்கு வருகிறது.
05.50 Spoken Tutorialகள் இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே ஆதரிக்கப்படும் Talk to a Teacher திட்டத்தின் ஒரு அங்கமாகும்.
05.57 இது குறித்த மேலதிக தகவல்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
06.00 இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி!

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst