Digital-Divide/D0/Getting-to-know-computers/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:23, 27 May 2014 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Visual Cue Narration
00:01 கணினியை பற்றி அறிந்துக்கொள்வதற்கான ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது
00:09 ஒரு கணினியின் வெவ்வேறு பாகங்கள்.
00:11 அந்த பாகங்களை இணைக்கவும் கற்க போகிறோம்.
00:15 பொதுவாக, இருவகை கணினிகள் உள்ளன
00:18 டெஸ்க்டாப்(desktop) அல்லது பெர்சனல் கம்ப்யூட்டர்(personal computer) மற்றும் லேப்டாப்(laptop)
00:23 தற்போது, டேப்லெட் பிசிக்கள் (tablet PCs) அல்லது சுருக்கமாக டேப்(tabs)களும், மிக பிரபலமாக உள்ளன.
00:31 ஒரு கணினியின் செயல்பாடுகள்.
00.33 ஒரு கணினி அதன் அளவு எதுவாக இருந்தாலும் ஐந்து முக்கியமாக செயல்படுகளை செய்கிறது-
00.40 இது உள்ளீட்டின் மூலம் டேடா(Data) அல்லது இன்ஸ்ட்ரக்ஷன்களை(Instructions) ஏற்கிறது.
00.45 இது டேடாவை(data) பயனருக்கு தேவையானபடி செயல்படுத்துகிறது
00.50 இது டேடாவை(data) சேமிக்கிறது
00.52 இது வெளியீட்டு வடிவில் முடிவைத் தருகிறது
00.56 இது கணினியின் உள்ளே உள்ள அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது.
01:01 ஒரு கணினியின் அடைப்படை அமைப்பு இந்த வரைப்படத்தில் காட்டப்படுகிறது.
01:08 இன்புட் யூனிட்(Input Unit)
01:09 சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் (Central Processing Unit)
01:11 'அவுட்புட் யூனிட்(Output Unit)
01:14 ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் கணினியினுள் டேடா(data) மற்றும் ப்ரோக்ராம்களை(program) உள்ளிட இன்புட் யூனிட்(Input unit) உதவுகிறது
01.23 கீபோர்ட்(keyboard), மெளஸ்(mouse), கேமரா(Camara)மற்றும் ஸ்கேனர் (scaner) ஆகியவை சில உள்ளீட்டு சாதனங்கள் ஆகும்
01.31 சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட்(Central Processing Unit) ... அரித்மடிக்(arithmatic) மற்றும் லாஜிகல்(logical) செயல்பாடுகள் போன்றவற்றை செயல்படுத்துகிறது
01.38 மற்றும் டேடா(data)' மற்றும் இன்ஸ்ட்ரக்ஷன்களை(instructions) சேமிக்கிறது
01.41 பொதுவாக, சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் (Central Processing Unit)அல்லது சிபியூ(CPU) பார்க்க இவ்வாறு இருக்கும்.
01.48 இதில் யூனிட்க்கு முன்னும் பின்னும் பல போர்ட்டுகள்(ports) உள்ளன
01.53 அவற்றை பற்றி இன்னும் சற்று நேரத்தில் காண்போம்.
01.57 இது டேடா(data) மற்றும் இன்ஸ்ட்ரக்ஷன்களை(instructions) எடுத்து, அவற்றை செயல்படுத்தி வெளியீடு அல்லது முடிவுகளைத் தருகிறது.
02:05 செயல்பாடுகளை செயலாக்கும் பணி ப்ராசசிங்(processing) எனப்படும்
02:11 அந்த வெளியீடு... டேடா(data) மற்றும் இன்ஸ்ட்ரக்ஷன்களுடன்(instructions) ஸ்டோரேஜ் யூனிட்டில்(storage unit) சேமிக்கப்படுகிறது.
02:18 டேடா விலிருந்து முடிவை உருவாக்கும் செயல்பாட்டை ஆதரிக்கும் யூனிட் அவுட்புட் யூனிட்(output unit) ஆகும்
02.26 மானிடர்(monitor) மற்றும் ப்ரின்டர்(printer) ஆகியவை சில வெளியீட்டு சாதனங்கள்.
02.33 பொதுவாக, ஒரு டெஸ்க்டாப் கணினியில் 4 முக்கிய பாகங்கள் இருக்கும்
02.38 மானிடர்(monitor)
02.39 சிபுயூ(CPU)
02.40 கீபோர்ட்(keyboard)
02.41 மற்றும் மெளஸ் (mouse)
02.43 கேமரா(camara), ப்ரிண்டர்(printer) அல்லது ஸ்கேனரையும்(scaner) கணினியுடன் இணைக்கலாம்.
02.50 இது மானிடர்(monitor) அல்லது கணினி திரை எனப்படும்.
02:55 இது ஒரு தொலைக்காட்சி திரை போன்று இருக்கும்
02.57 இது கணினியின் ஒரு காட்சி பிரிவு ஆகும்.
03.02 இது கணினியின் பயனர் இடைமுகத்தைக் காட்டுகிறது
03.05 *வெவ்வேறு ப்ரோகிராம்களை(program) திறந்து... கீபோர்ட் மற்றும் மெளஸை பயன்படுத்தி கணினியுடன் தொடர்பு கொள்ள முடியும்.
03.13 கீபோர்ட் என்பது டெக்ஸ்ட்(Text), கேரக்டர்கள்(characters) மற்றும் மற்ற கமேண்டுகளை(commands) கணினியினுள் உள்ளிட வடிவமைக்கப்பட்டது
03.21 இதுதான் கணினி மெளஸ்.
03.24 பொதுவாக, இதில் அழுத்தக்கூடிய இரு பட்டன்களும் ஒரு ஸ்க்ரால் பட்டன்(scroll button) இடையிலும் இருக்கும்.
03.31 இடது மெளஸ் பட்டனை அழுத்துவது பெரும்பாலான செயல்களை செயல்படுத்துகிறது.
03.35 வலது மெளஸ் பட்டனை அழுத்துவது, ஷார்டகட்ஸ்(shortcuts) போன்ற நிலையில்லாத பல செயல்பாடுகளை செயல்படுத்துகிறது.
03.43 ஸ்ரால் பட்டனை உருட்டுவதன் மூலம் மேலும் கீழும் ஸ்க்ரால் செய்ய மெளஸ் வீல் (mouse wheel) பயன்படுகிறது
03.49 கீபோர்ட் தவிர கணினியுடன் தொடர்புகொள்ள மற்றொரு வழி கணினி மெளஸ் ஆகும்
03.57 இப்போது சிபுயூ(CPU) வின் பல்வேறு பகுதிகளைக் காண்போம்
04:02 சிபியூவின் முன்பக்கம் உள்ள முக்கியமான பட்டன் பவர் ஆன்(Power on) ஸ்விட்ச் (switch) ஆகும்.
04:08 கணினியை இயக்க இந்த ஸ்விட்சை (switch) அழுத்த வேண்டும்.
04.14 தேவையெனில் கணினியை மீள்துவக்க 'ரீசெட்(reset) பட்டனும் நமக்கு உதவுகிறது.
04.21 மேலும் முன்பக்கம் 2 அல்லது அதற்குமேற்பட்ட USB போர்ட்டுகள் மற்றும் ஒரு DVD/CD-ROM ரீடர்-ரைட்டர்(reader-writer) ஆகியவையும் உள்ளன
04.30 கணினியுடன் பென்ட்ரைவ்களை இணைக்க USB போர்ட்டுகள் உதவுகின்றன
04.35 ஒரு CD அல்லது DVD ஐ ரீட் அல்லது ரைட் (read or write) செய்ய DVD/CD-ROM ரீடர்-ரைட்டர்(reader-writer) பயன்படுகிறது
04.43 இப்போது கணினியின் பின் புறத்தைக் காண்போம்
04.48 பின் புறத்தில் இருக்கும் போர்ட்டுகள்(ports), கணினியின் மற்ற சாதனங்களுடன் சிபுயூ(CPU)வை இணைக்க பயன்படுகிறது
04.55 இது கேபிள்களை(cables) பயன்படுத்தி செய்யப்படுகிறது
04.58 சிபியூ(CPU) வின் உள்ளே பல பாகங்கள் உள்ளன
05:02 கணினி செயலில் இருக்கும்போது, இந்த அனைத்து பாகங்களும் வேலைசெய்து வெப்பத்தை உண்டாக்கும்.
05:08 பின்னால் இருக்கும் மின்விசிறி... பாகங்களின் வெப்பத்தைத் தணிக்க தேவையான காற்றோட்டத்தைத் தருகிறது.
05.14 மற்றபடி, அதிகமான வெப்பம் சிபியூவை(CPU) சேதப்படுத்தலாம். சிலசமயம் டேடாவை(data) இழக்கவும் நேரிடலாம்.
05:21 இதுதான் குளிர்விக்கும் மின்விசிறியின் பெட்டி
05:23 இது சிபியூ(CPU) வின் வெப்பத்தை சாதாரண நிலையில் வைத்து அதிக வெப்பமாதலை தடுக்கிறது.


05:30 பவர் சப்ளே யூனிட்(Power Supply Unit), பிஎஸ்யூ(PSU) எனவும் அழைக்கப்படும் இது கணினிக்கு மின்சாரத்தை வழங்குகிறது.
05:37 இப்போது, வெவ்வேறு பாகங்களை சிபியூவுக்கு(CPU) எவ்வாறு இணைப்பது என கற்போம்
05.42 காட்டப்படுவது போல அனைத்து பாகங்களையும் மேசை மீது வைக்கவும்.
05:46 காட்டப்படுவது போல அனைத்து கேபிள்களையும் மேசைமீது வைக்கவும்.
05:51 முதலில், மானிட்டரை(monitor) சிபியூ(CPU) உடன் இணைக்கலாம்
05:55 காட்டப்படுவதுபோல பவர் கேபிளை(power cable) மானிட்டருடன் இணைக்கவும்.
06.00 இப்போது மற்றொரு முனையை பவர் சப்ளை சாக்கெட்டுடன்(power supply socket) இணைக்கவும்.
06.04 இதுதான் சிபியூ(CPU)வின் பவர் கேபிள்(power cable).
06.08 காட்டப்படுவது போல இதை சிபியூ(CPU) உடன் இணைக்கவும்.
06.11 பின் இதை ஒரு பவர் சப்ளை சாக்கெட்டுடன்(power supply socket) இணைக்கவும்
06.14 அடுத்து காட்டப்படுவதுபோல கீபோர்ட் கேபிளை(keyboard cable) சிபியூ(CPU) உடன் இணைப்போம்.
06.19 கீபோர்டின் போர்ட் பொதுவாக ஊதா நிறத்தில் இருக்கும்.
06.23 பச்சை நிறத்தில் இருக்கும் போர்ட்டுடன் மெளஸை இணைக்கலாம்.
06.28 மாற்றாக USB கீபோர்ட் மற்றும் மெளஸை ஏதேனும் USB போர்ட்டுகளுடனும் இணைக்கலாம்
06.35 மீதமுள்ள USB போர்ட்டுகளை பென் ட்ரைவ்(pen drive), ஹார்ட் டிஸ்க்(hard disk) போன்றவற்றை இணைக்கவும் பயன்படுத்தலாம்.
06.42 இது ஒரு LAN கேபிள்.
06.44 இது ஒரு LAN போர்ட்.
06.46 கணினியை இணையத்துடன் இணைக்க அணுமதிக்கும் இது ஒரு ஒயர்டு கனெக்ஷன்
06.52 LAN கேபிளின் மற்றொரு முனை ஒரு மோடம்(modem) அல்லது ஒரு wi-fi ரெளட்டருடன்(router) இணைக்கப்படுகிறது
06.58 wi-fi இணைப்பை கட்டமைப்பது குறித்து மற்றொரு டுடோரியலில் கற்பீர்கள்.
07.03 LAN போர்ட் செயல்பட்டு செயல்பாட்டை பெறும்போது LED விளக்கு ஒளிரும்.
07.10 சிபியூவில்(CPU) மற்ற பல தொடர் போர்ட்டுகள் இருப்பதைக் காணலாம்
07.15 இவை PDAகள், மோடம்(modem) அல்லது மற்ற தொடர் சாதனங்களை இணைக்கப் பயன்படுகின்றன
07.21 சிபியூவில்(CPU) சில இணை போர்ட்டுகள் இருப்பதையும் காணலாம்
07.25 இவை ப்ரிண்டர்(printer), ஸ்கேனர்(scaner) போன்ற மற்ற சாதனங்களை இணைக்கப் பயன்படுகின்றன.
07.31 இப்போது ஆடியோ ஜேக்களை(audio jacks) காண்போம்
07.34 இளஞ்சிவப்பு நிற போர்ட் ஒரு மைக்ரோபோனை(micro phone) இணைக்க உதவுகிறது
07.38 நீலநிற போர்ட்' லைன் இன்னை(line in), இணைக்க உதவுகிறது. உதாரணமாக- ஒரு ரேடியோ(radio) அல்லது டேப்(tap player) ப்ளேயரில் இருந்து.
07.45 பச்சை நிற போர்ட் ஹெட்போன்/ஸ்பீக்கர்(head phone/speaker)' அல்லது லைன் அவுட்டை(line out) இணைக்கப்ப பயன்படுகிறது
07.51 இப்போது நம் அனைத்து சாதனங்களையும் இணைத்துவிட்டோம் , கணினியை இயக்கலாம்.
07.57 முதலில், மானிடர்(monitor) மற்றும் சிபியூ(CPU) வின் பவர் சப்ளே பட்டனை (power supply button) இயக்கலாம்
08.03 இப்போது மானிட்டரின்(monitor) பவர் ஆன் பட்டனை(power on button) அழுத்தவும்
08.07 பின் சிபியூ(CPU) வின் முன் உள்ள பவர் ஆன் பட்டனை (power on button) அழுத்தவும்
08.12 பொதுவாக, உங்கள் கணினி இயங்க துவங்கும் போது கருப்புத் திரையில் சில வார்த்தைகளை காணலாம்.
08.18 இது BIOS சிஸ்டம்(system). இது காட்டுவது
08.22 கணினியின் சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் (central processing unit) பற்றிய தகவல்
08.25 கணினியின் மெமரி(memory) பற்றிய தகவல்
08.28 ஹார்ட் டிஸ்க் ட்ரைவ்கள்(hard disk drives) மற்றும் ஃப்ளாப்பி டிஸ்க் ட்ரைவ்கள்(floppy disk drives) பற்றிய தகவல்'.
08.33 கணினி இயங்க ஆரம்பித்தவுடன் சிபியூவுக்கு(CPU) அதன் முதல் கட்டளையை தரும் மென்பொருள் BIOS ஆகும்
08.41 இயங்குதளத்தை ஏற்றும் மொத்த செயல்முறை... கணினியை பூட் (boot) செய்தல் எனப்படும்
08.48 அனைத்து முக்கிய சோதனைகளும் முடிந்தவுடன், இயங்குதளத்தின் இடைமுகத்தைக் காணலாம்
08.54 நீங்கள் உபுண்டு லினக்ஸ்(Ubuntu Linux) பயனராக இருந்தால், இந்த திரையைக் காண்பீர்கள்.
08.58 விண்டோஸ்(windows) பயனராக இருந்தால், இந்த திரையைக் காண்பீர்கள்
09.02 இப்போது சுருக்கமாக ஒரு லேப்டாப்(laptop) பற்றி காண்போம்
09.06 லேப்டாப்கள்(laptops) கையடக்கமான மற்றும் கச்சிதமான கணினிகள் ஆகும்
09.09 ஒருவரின் மடி மீது வைத்து பயன்படுத்தக்கூடிய அளவிற்கு ஒரு லேப்டாப் சிறியதும் சுமைகுறைந்ததும் ஆகும்.
09.16 எனவேதான் இது 'லேப்டாப் அல்லது மடிகணினி எனப்படுகிறது
09.18 டெஸ்க்டாப் கணினி போன்றே பெரும்பாலும் ஒரே மாதிரியான பாகங்கள் இதிலும் உள்ளன. பின்வருவன உட்பட
09.23 ஒரு டிஸ்ப்ளே(display),
09.24 ஒரு கீபோர்ட்(keyboard),
09.25 சாதனத்தை சுட்டிக்காட்டவும் வழிசெலுத்தவும் உதவும் ஒரு டச்பேட்(touchpad)
09.29 ஒரு CD/DVD ரீடர்-ரைட்டர் மற்றும்
09.32 ஒரே யூனிட்டினுள் உள்ளமைக்கப்பட்டுள்ள மைக்(mic) மற்றும் ஸ்பீக்கர்கள்(speaker)
09.36 இதிலும் ஒரு LAN போர்ட் மற்றும் USB போர்ட்டுகள் உள்ளன
09.40 ப்ரொஜக்டரை' லேப்டாப் உடன் இணைக்க உதவும் ஒரு வீடியோ போர்ட்டும் உள்ளது
09.46 சுலபமாக கண்டுபிடிக்கக்கூடிய வகையில் மைக் மற்றும் ஹெட்ஃபோன்களுக்கு முறையான ஐகான்களுடன் கூடிய ஆடியோ ஜேக்ஸ் உள்ளன.
09.53 இது லேப்டாப்பில் உள்ளடங்கிய குளிர்விக்கும் மின்விசிறி
09.57 இது லேப்டாப்பை அதிக வெப்பமாதலில் இருந்து பாதுகாக்கிறது.
10.01 லேப்டாப் ஒரு AC அடாப்டர்(adapte)r வழியே மின்சாரத்தைப் பெறுகிறது. இதில் ஒரு ரீசார்சபிள் பேட்டரி (rechargable battery) உள்ளது
10.09 அதனால் இது தூக்கிச்செல்லக்கூடியதும் மின்சாரம் இல்லாமல் பயன்படுத்தக்கூடியதும் ஆகும்.
10.16 சுருங்க சொல்ல இந்த டுடோரியலில்
10.20 டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப்பின் வெவ்வேறு பாகங்கள் பற்றியும்
10.23 டெஸ்க்டாப்பின் வெவ்வேறு பாகங்களை எவ்வாறு இணைப்பது பற்றியும் கற்றோம்
10.28 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
10.31 இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது
10.34 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
10.37 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
10.42 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
10.46 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
10.52 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
10.56 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
11.01 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும்
11.06 இந்த டுடோரியலுக்கு அனிமேஷன் மற்றும் 3D மாடலிங் ஆர்த்தி
11.11 தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst, Ranjana